Monday, April 18, 2011

வெளிச்சம்

அதிகாலை சூரியக் கதிர்கள் கார் கண்ணாடியில் பட்டு தெறித்த அழகை ரசித்தவண்ணம் வந்த தூக்கத்தை விரட்டி விட்டு, கார் ஊருக்குள் நுழைந்து விட்டதை ஆனந்தத்துடன் வேடிக்கை பார்த்தாள் ஆயிஷா. வருடம் ஒரு முறை ஊருக்கு வருவதும் ஊரோடு ஒன்றிப் போய்விடுவதும் தவறாமல் நடப்பது தான் என்றாலும், இந்த முறை நிச்சயம் ஏதாவது நம் ஊரில் தெருவில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நினைவு வேகமாக மனதில் சுழன்றது.

ஊர் பார்ப்பதற்கு பழைய மாதிரி குப்பையாக இல்லாமல் ஓரளவு சுத்தமாகப் பட்டது. ஆங்காங்கு குப்பை தொட்டிகள் இருந்தாலும் கீழே போடுபவர்கள் போட்டுக் கொண்டுத் தான் இருக்கிறார்கள், வெளிநாடுகள் போல் குப்பைகளைக் கீழே போடக்கூடாது என்று நம்மூரிலும் சட்டம் வந்தால் எவ்வளவு சுத்தமாக இருக்கும், என்று நினைக்க மட்டும் தான் முடியும். நம்மூரில் அதனை சாத்தியப்படுத்த முடியுமோ!

குறுக்கே நெடுக்கே போகும் சைக்கிளும், மோட்டார் பைக்கும், ஆட்டோவின் சத்தமும் கேட்டு ஊருக்குள் கார் நுழைவதை உணர்த்தியது. அதிகாலை சுபூஹ் தொழுது விட்டு பள்ளிவாயிலை விட்டு சுறுசுறுப்பாக வெளியே வந்த ஆண்கள் எதிரே வரவும், டீக்கடையில் ஒரு கூட்டம் டீ, வடை, புட்டு, ஆப்பம், ரொட்டியை ருசி பார்த்து சாப்பிடும் அழகையும் கண்டு, இந்த காட்சியை அமீரகத்தில் காணமுடியுமா? என்று மனதில் எண்ணியபடி பிள்ளைகளை எழுப்பினாள், ஆயிஷா.

“ஊர் வந்திடுச்சு எழுந்திருங்க” என்றவுடன், விமான நிலயத்திலிருந்து இருந்து வரும் வழி முழுவதும் தூங்கிய குழந்தைகள், புத்துணர்ச்சியுடன் எழுந்தனர். ஆயிஷா எப்பவும் திருவனந்தபுரம் விமான நிலயத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் வரை தூங்குவதேயில்லை. வரும் வழி முழுவதும் கிடைக்கும் அந்த சுகமான சொந்த நாட்டுக்காற்றை சுவாசித்த வண்ணம் வேடிக்கை பார்த்து வருவதே விருப்பம்.

கார் தெருவிற்குள் நுழையவும், வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பெண்கள் எல்லாம், கையை ஆட்டி சந்தோஷமாக வரவேற்றதைக் கண்டு மனசு பூரிப்படைந்தது.

வாசலில் நின்று கொண்டிருந்த கச்சாமா மட்டும் காரை நிறுத்தி நலம் விசாரித்தது நட்பின் ஆழத்தையும் தாண்டி எதையோ உணர்த்துவது போல் இருந்தது. அவளின் முகம் சந்தோஷமாகவும், “நிச்சயம் இந்த முறை உன்னை பார்க்க வருவேன்” என்றதும், அதற்கு ஆயிஷா “நீ வராவிட்டால் நானே வந்திடுவேன்” என்றும் பதிலளித்தாள்.

கச்சாமா நெடுநெடுவென்று வளர்ந்த அழகான தோழி, அவளின் கரும் சுருள் முடியும், வெள்ளையாய் சிரிக்கும் அழகும், வழியில் பார்த்தால், “ யா, ஐசாமா, எங்களாப் போறே?” என்று தயங்காமல் உரிமையோடு விசாரிக்கும் விதமே அவள் ஆயிஷா மீது கொண்டிருக்கும் பற்றை விளக்குமே!

வீடு வரவும் எல்லோரும் இறங்கினர். அனைவரையும் ஆவலோடு எதிர்பார்த்து வீடு முழுவதும் அந்த பகல் வெளிச்சத்திலும் அனைத்து விளக்கையும் போட்டு வைத்திருந்தது பெருநாள் போல் காட்சியளித்தது, மாமாவும், மாமியும், மைனியும் பிள்ளைகளும் ஆவலோடு தழுவிக்கொண்டனர், எப்பவும் வீட்டில் நுழையும் பொழுது ஏற்படும் உணர்ச்சிக் களிப்பை கட்டுப்படுத்த முடியாமல் விழியோரம் கசிந்த நீரை துடைத்துக்கொண்டாள் ஆயிஷா.

சமையற்காரர் தந்த சூடான டீயை பருகிவிட்டு அப்படியே வளவில் இருக்கும் அந்த ஒற்றை தென்னையின் காற்றில் வந்தமர்ந்தாள் ஆயிஷா. கச்சாமா முகத்தில் தெரிந்த அந்த அளவிடமுடியாத சந்தோஷத்திற்கு என்ன காரணமோ தெரியவில்லை என்று நினைத்த ஆயிஷா பழைய நினைவில் மூழ்கிப் போனாள்.

ஆயிஷா அப்பொழுது கல்லூரி விடுமுறையில் ஊர் வந்திருந்த சமயம், அறிவொளி இயக்கத்திற்காக அந்த விடுமுறையில் ஒரு திட்டம் கொடுத்திருந்தார்கள், ஒவ்வொருவரும் நான்கு பேருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே!

தெருவில் கணக்கு பார்த்தால் தொண்ணூறு சதவீதம் பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், எல்லோருமே கைநாட்டு தான். ஆண்கள் நெசவு செய்து சம்பாதித்தனர். அது அவர்கள் வாழ்க்கையை ஓட்டப் போதாததால் பெண்கள் பீடி சுற்றி அதில் வரும் வருமானத்தில் வீட்டு செலவிற்கு ஈடு கொடுத்து வந்தனர். ஊரில் பீடித்தொழிலால் தான் நிறைய வீட்டில் உலையே கொதித்தது.

ஆயிஷாவின் பக்கத்து வீட்டில் ஒரு கூட்டமாக குமரிப்பெண்கள் இருந்து போட்டிப் போட்டு பீடி சுற்றுவது வழக்கம். ஒவ்வொருவரும் கிட்ட தட்ட 1500- 2000 ஆயிரம் பீடி தினமும் சுற்றி வருபவர்கள். ஆயிஷா மதியம் அவர்களுடன் அமர்ந்து உதவியாக, இலை வெட்டி கொடுப்பது, பீடிக்கு வாய் அமுக்குவது என்று முதலில் கற்றுக் கொண்டு, பின்பு மெதுவாக பீடியும் சுற்ற கற்றுக் கொண்டதும் அவர்களோடு போட்டி போட முடியாவிட்டாலும் அவர்கள் இலை நனைத்து வெட்டி வைத்திருந்தால் அதனை எடுத்து அவர்களோடு இருந்து பொழுது போக்காக 20 கட்டு பீடி சுற்றி கொடுப்பதும் அவர்கள் தரும் காசை கைச் செலவிற்கு வைத்துக் கொள்வதும் உண்டு.

வாரம் ஒரு முறை எல்லோரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கி உண்பதும், பனியம் சுட்டுத் திண்பதும், மீதியை பங்கு வைத்து அவரவர் வீட்டிற்கு எடுத்து செல்வதும் வழக்கம், “படிச்ச பிள்ளையின்னா பெருமையா, யார் கிட்டேயும் பழக பேசமாட்டான்னு நினைச்சோம், ஆனா, நீ மட்டும் ரொம்ப மாத்தம் தான், எங்களோடு கிடந்து விளையாடுறியே” என்று எல்லோரும் சொல்வதும், அதோடு மட்டுமல்லாமல் ஆயிஷா மீது அளவிலா அன்பும் கொண்டிருந்தார்கள்.

பக்கத்தில் கூடும் இந்த கூட்டத்தோடு மதிய நேர பொழுதைக் கழிப்பது வழக்கம். ஊருக்குள்ளேயே சம்பந்தம் அதிகம் செய்வதால் கல்யாணமான பெண்கள் மதிய வேளையில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து அவரவர் வீட்டிற்கு போய்விட்டு மாலை நேரம் மஹ்ரிப் தொழுது விட்டு திரும்பி வருவது தான் ஊர் பழக்கம். ஆயிஷாவின் மைனிமார்கள் அவரவர் வீடு செல்லவும், அந்த நேரம் இவர்களோடு பொழுது போக்குவது அவளுக்கு வாடிக்கை.

இந்த முறை இந்தப் பிள்ளைகளுக்கு எப்படியும் எழுதப் படிக்கக் கற்று கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு அவர்களிடம் கேட்டதில் யாருக்கும் விருப்பம் இல்லாததை கண்டு ஆயிஷாவிற்கு வருத்தமே. என்றாலும் ஆயிஷாவின் அண்ணன், தான் புத்தகச் செலவை ஏற்றுக் கொள்வதாயும், காலியாகக் கிடந்த ஒரு வீட்டை திறந்து அதனை அவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க பயன்படுத்தும் படியும் ஊக்குவித்ததால், ஆயிஷாவிற்கும் மகிழ்ச்சியானது.

எல்லோரையும் தினமும் ஒரு மணி நேரம் வந்தால் போதும், ஒரு மாதத்திற்குள் எழுத வாசிக்க கற்று கொள்ளலாம் என ஆயிஷா கூறவும், “ஒரு மாசமா?, நாங்க ஒரு மணி நேரத்தில் பத்து கெட்டு பீடி சுற்றி விடுவோமே” என்று எல்லோரும் தயங்கவும், “சரி உங்க பெயரை மட்டும் கையெழுத்துப் போட கற்றுத் தருகிறேன்,” என்று சொன்னாள் ஆயிஷா. எல்லோரும் தன் கையெழுத்தைக் கற்றுக் கொள்ளும் ஆசையில் வரச் சம்மதம் தெரிவித்தனர். எழுத படிக்க சொல்லிக் கொடுத்த மாதிரியுமாச்சு, கல்லூரி அறிவொளி இயக்கத் திட்டமும் நிறைவேறும் என்ற திருப்தியில் ஆயிஷாவிற்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி.

பத்து விருப்பமுள்ள பெண் பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் புத்தகம், நோட்டுக்களை அண்ணன் உதவியோடு வாங்கி கொடுத்து வகுப்பு ஆரம்பித்தாயிற்று, தன் வயதையொத்த 16 வயது தொடங்கி இருபது வயது வரை உள்ள மாணவிகளுக்கு ஆயிஷா ஆசிரியை ஆகி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். முதல் நாள் படிப்பின் அவசியம், வெளியுலகத் தொடர்பு பற்றியும் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தாள். டவுண், ஜங்ஷன் கூட பார்த்தறியாத அந்தப் பிள்ளைகளுக்கு ஆயிஷாவின் வழிக்காட்டல் ரொம்ப ஆறுதலாக இருந்தது, இரண்டாவது நாள் அவர்களுக்கு எழுத படிக்க தெரிந்தால் என்னவெல்லாம் நன்மை என்பதை எடுத்துக் கூறவும், எல்லோர் முகத்திலும் நம்பிக்கை வெளிச்சம் பிறந்தது.

அவர்களுக்கு சொல்லி கொடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை, என்றாலும் ஆயிஷாவின் நம்பிக்கை வீண்போகவில்லை. எல்லாப் பிள்ளைகளும் ஒரு வாரத்தில் அவரவர் பெயர் எழுத கற்று கொண்டதும், அதுவே பெரிய சாதனையாகத் தெரிந்தது ஆயிஷாவிற்கு. ஒரு சிலர் கையெழுத்துப் போட கற்றுக் கொண்டதும் “எங்கும்மா பேசுறா ஐசாமா, பீடி சுற்றுவது குறைபடுது” என்று படிப்பதை நிறுத்திக் கொண்டனர். என்றாலும் கையெழுத்துப் போடத் தெரிந்துவிட்டது என்ற பெருமிதம் அவர்களுக்கு இருந்தது.

ஆனால் கச்சாமா மற்றும் மூன்று மாணவிகள் மட்டும் அந்த ஒரு மாதத்தில் ஆர்வமாக எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்தது ஆயிஷாவிற்கு ஆறுதல் தான்.

“ஐசாமா..”, என்று கூப்பிடும் சத்தம் கேட்டு நினைவிலிருந்து விடுபட்டு எட்டிப் பார்த்தவளுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கச்சாமா தான் வாசலில் நின்று கொண்டு அழைத்தவாறு இருந்தாள். “என்ன கச்சாமா?” என்று வந்த ஆயிஷாவிடம், “எம்மொவா இந்த வருஷம் பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சி ஜங்ஷன்ல ஒரு கம்பெனியில் வேலை செய்றா, உன்கிட்ட நீ வந்தவுடனே முதலில் சொல்லனும்னு ஓடி வந்தேன்”, என்றாள்.

ஆயிஷாவிற்கு, தான் இருபது வருடங்களுக்கு முன்பு போட்ட விதை வளர்ந்து பயன் தரும் மரமானதை நினைத்து மனம் பூரிப்பானது. பேங்க்கில், தானே கையெழுத்துப் போட்டு பணம் எடுப்பதாயும், பெருமையாக சொன்ன கச்சாமாவை மகிழ்ச்சியோடு பார்த்தாள். ஆயிஷா, “நான் தான் பீடிசுற்றி கஷ்டப்பட்டேன், என் பிள்ளை படிச்சி வேலைக்குப் போவுது, நீ சொல்வியே, மகளையும் படிக்க வைன்னு வாய்க்கு வாய் என்னால் மறக்க முடியாதுளா, அதான் ஓடி வந்தேன்” என்ற கச்சாமாவின் பூரிப்பு கண்டு ஆயிஷாவிற்கு அளவிலா சந்தோஷம்.

கச்சாமாவின் கையைப் பிடித்து அன்போடு குலுக்கினாள் ஆயிஷா. கச்சாமாவைப் பொறுத்தவரை இது பெரும் விடியல் தான்.

--ஆசியா உமர்..

40 comments:

FOOD said...

நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

எழுத்தறிவித்தவன் இறைவன்…. – கல்வியின் பெருமையை உணர்த்தும்படி இருந்தது உங்கள் கதை. நல்ல பகிர்வு சகோ…

அமைதிச்சாரல் said...

அருமையான கதை ஆசியா..

athira said...

அருமையாக நகர்த்தி முடிச்சிருக்கிறீங்க கதையை... ஏதோ ஊருக்குப் போய் நாம் மட்டும் சந்தோஷத்தை அனுபவித்துவிட்டு வராமல், நாலு நல்ல விஷயமும் செய்தால் அனைவருக்கும் நல்லதே.

நல்ல எடுத்துக்காட்டான கதை ஆசியா.

எம் அப்துல் காதர் said...

வாழ்க ஆயிஷா!! நல்லதொரு அருமையான வெளிச்ச வெளி!!

ஸாதிகா said...

கதையில் உயிரோட்டம் மிளிர்கின்றது.மிகவும் அனுபவித்து எழுதி இருப்பதுபோல் உள்ளது.வரவர கதைகள் மெருகு கூடிக்கொண்டே போகின்றது ஆசியா.வாழ்த்துக்கள்.

savitha ramesh said...

super a irukku,first paragraph e.Full a padichittu solren.

asiya omar said...

ஃபுட் முதல் கருத்திற்கு மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் கருத்திற்கு நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

asiya omar said...

ஆமாம் அதிரா,சமுதாயம் முன்னேற நம்மால் சின்ன அளவிலாவது உதவ முடியுமான்னு பார்க்க வேண்டும்.

சகோ.அப்துல் காதர் வருகைக்கு நன்றி.

asiya omar said...

ஸாதிகா ஊரும், உறவும்,நட்பும் மனதில் இருப்பதால் அதைச் சுற்றி பின்னப்பட்ட கதை..

சவிதா கதையை முழுதாக வாசித்து இருப்பீங்க,கருத்திற்கு மிக்க நன்றி..

Chitra said...

சொந்த அனுபவம் போல, அருமையான எழுத்து நடை. நல்லா இருக்குதுங்க.

asiya omar said...

சித்ரா,நடந்த சம்பவத்தின் ஒரு இழையை வைத்து கற்பனையுடன் பின்னப்பட்ட கதை தான் இதுவும்...

vanathy said...

நல்ல எழுத்து நடை. அருமையான கதை.

Kanchana Radhakrishnan said...

நல்ல கதை ஆசியா.

GEETHA ACHAL said...

அருமையான கதை..

நாம் அடுத்தவருக்கு இது மாதிரி கல்வியினை கற்று கொடுக்க உதவ வேண்டும்...நல்ல உயிரோட்டம் உள்ள சிலர் வாழ்வில் நடக்கும் கதை...

பதிவுலகில் பாபு said...

ரொம்ப அருமையா இருக்கு கதை.. படிச்சு முடிச்சவுடன் மனசுல ஒரு நிறைவு.. இது உண்மைக் கதையாக இருந்தால்.. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

சசிகுமார் said...

அடுத்த தமிழ்மண விருதிற்கு கதை ரெடியாகி விட்டது அருமை அக்கா.

நாடோடி said...

உண‌ர்வு பூர்வ‌மாக‌ எழுதிய‌க்‌ க‌தை, ரெம்ப‌ ந‌ல்லா வ‌ந்திருக்கு ச‌கோ...

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா,,
மிகுந்த இயல்பான உயிரோட்டமுள்ள,எளிமையான நடைகொண்ட கதை.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..

அத்துடன் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்ஸ்

அன்புடன்
ரஜின்

S.Menaga said...

நல்லா அனுபவித்து எழுதிருக்கிங்க...நல்லாயிருக்கு அக்கா.ஆயிஷாவாக உங்களைதான் கற்பனை செய்து படித்தேன்.

ஆயிஷா அபுல். said...

அருமையான கதை.நடந்த சம்பவம் போல் இருக்கு.வாழ்த்துக்கள்.

R.Gopi said...

அட.....

கல்வியின் மேன்மையை எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க....

எழுத்தறிவித்தவன் இறைவனன்றோ!!

//இந்த முறை நிச்சயம் ஏதாவது நம் ஊரில் தெருவில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் //

//வெளிநாடுகள் போல் குப்பைகளைக் கீழே போடக்கூடாது என்று நம்மூரிலும் சட்டம் வந்தால் எவ்வளவு சுத்தமாக இருக்கும்//

//இந்த காட்சியை அமீரகத்தில் காணமுடியுமா? என்று மனதில் எண்ணியபடி //

//வரும் வழி முழுவதும் கிடைக்கும் அந்த சுகமான சொந்த நாட்டுக்காற்றை சுவாசித்த வண்ணம் //

//அந்த பகல் வெளிச்சத்திலும் அனைத்து விளக்கையும் போட்டு வைத்திருந்தது பெருநாள் போல் காட்சியளித்தது,//

//ஒவ்வொருவரும் நான்கு பேருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே!//

//எழுத படிக்க சொல்லிக் கொடுத்த மாதிரியுமாச்சு, கல்லூரி அறிவொளி இயக்கத் திட்டமும் நிறைவேறும்//

//“எம்மொவா இந்த வருஷம் பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சி ஜங்ஷன்ல ஒரு கம்பெனியில் வேலை செய்றா,//

//கச்சாமாவைப் பொறுத்தவரை இது பெரும் சாதனை தான்.//

அசத்தல்... இது போல் கதை முழுதுமாய் பரவி கிடக்கும் அருமையான சொல்லாடல்கள், பதிவை அழகூட்டியது... இது நிஜ நிகழ்வே என்று நம்புகிறேன்...

வாழ்த்துகள் ஆசியா உமர்...

zumaras said...

ஸலாம்
அடுத்தவர்களுக்கு உதவியது போன்று மனநிறைவு .கதையில் வரும் ஆய்ஷா யார்?ஆசியாவா?கதை அருமை.

ஹேமா said...

வெளிச்சம் இயல்பா நம்ம வீட்டுக்குள்ளயும் வருது.ஆசியா.அருமை !

கோவை2தில்லி said...

கதையும், அதில் வரும் பேச்சுவழக்கும் ரொம்ப அழகா இருந்தது. பகிர்வுக்கு நன்றிங்க.

Priya said...

அழகான எழுத்து நடை, நல்லா எழுதி இருக்கிங்க!

மகி said...

சூப்பர் ஆசியாக்கா!
//அதிகாலை சூரியக் கதிர்கள் கார் கண்ணாடியில் பட்டு தெறித்த அழகை ரசித்தவண்ணம்//கதை டைட்டிலுக்கு ஏத்த மாதிரி அருமையான தொடக்க வரிகள்.ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு!

நல்லதொரு கருத்தை சொல்லும் கதை.பாராட்டுக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

விடியலும் வெளிச்சமும் அருமையாக விளக்கப்பட்டிருந்தன. பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா எழுதி இருக்கீங்க....

அந்நியன் 2 said...

//எம் அப்துல் காதர் said...
வாழ்க ஆயிஷா!! நல்லதொரு அருமையான வெளிச்ச வெளி!!//*


கண்டிப்பாக அண்ணனுக்கு மந்திரி பதவி கொடுக்கனும் அக்காள்.

அரசியலில் அண்ணன் பெரும் புள்ளியாக வருவதர்க்கு சான்ஸ் இருக்கு.

கதை அருமை வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

அனுபவக் கதை. அருமையான கதை.

இதில் கிடைத்த நன்மை அனைத்தும் ஆயிஷாவுக்கு போய் சேரும் :)

நம்மூரை பத்தி படிக்கும் போது எம்புட்டு நல்லாருக்கு :)

Jaleela Kamal said...

அருமை,ஆசியா.

அவார்டு கொடுத்துள்ளேன், வந்து பெற்று கொள்லவும்.

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கதை + நிஜம் ஆசியா...குப்பைத்தொட்டியில் குப்பை போடும் சமாச்சாரம் எப்போதுமே நம் மனதை நெருடும் ஒன்றுதான்..

Lakshmi said...

உங்ககூடவே நாங்களும் வந்ததுபோலவே உணர வைத்த எழுத்து நடை. நானும் திருனெல் வெலிதான்.

asiya omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

அன்னு said...

அறிவொளி வந்த பின் தான் எங்க பாட்டியும் அவங்க கையெழுத்து போட்டு பழகினாங்க. தினத்தந்தியும் வாசிக்க பழகினாங்க. அதையொட்டிய ஞாபகங்கள வந்து போகுது. நல்ல கதை அக்கா :)))

ஆனந்தி.. said...

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

Jaleela Kamal said...

நல்ல கதை நம் ஊர் பேச்சு வழக்கு படி, எனக்கு கடந்த காலம் ஞாபகம் வந்துவிட்டது.
இத படிச்சதும் நான் என் தங்கையும் , ஒரு ஆசிரம்ம போய் சின்ன பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தது நினைவுக்கு வருது..

Anonymous said...

asiya akka , அருமையான கதை

இமா said...

கதை போலவே இல்லை ஆசியா. அருமையாக எழுதி இருக்கிறீங்க.