Saturday, April 30, 2011

ஓலன் & விருதுகள்

தேவையான பொருட்கள் ;

வெள்ளைப்பூசணி - ஒரு பெரிய கப்

சேப்பங்கிழங்கு - 3
தட்டைபயறு - 50கிராம்

பச்சை மிளகாய் -೩

சீரகத்தூள் - கால்டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் -ஒரு சிறிய கப்

இரண்டாம் பால் - ஒரு சிறிய கப்

கருவேப்பிலை - இரண்டு இணுக்கு

தேங்காய் எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

ஒரு பெரிய கப் அளவு வெள்ளைப்பூசணியை நறுக்கி குக்கரில் 2விசில் விட்டு எடுக்கவும். வெந்த பின்பு பாதியளவு ஆகிவிடும். அது போல் சேப்பங்கிழங்கையும் 2விசில் விட்டு எடுத்து ஆறவைத்து தோல் நீக்கி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். தட்டைபயறை 5மணி நேரம் ஊறவைத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து 3விசில் விட்டு எடுக்கவும். தண்ணீர் வடிகட்டி பயறை தனியாக எடுத்து வைக்கவும். அனைத்தையும் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவேண்டும்.

ஒரு சிலர் சேப்பங்கிழங்கு எப்படி இருக்கும்னு கேட்பாங்க,அவர்களுக்காக இந்த படம், பொதுவாக ஓலனில் சேப்பங்கிழங்கு சேர்ப்பதில்லை, ஆனால் எனக்கு சொல்லி தந்த கேரளத் தோழி ப்ரியா இந்தக்கிழங்கு சேர்த்தால் கூட்டு போல் ருசியும் அருமையாக இருக்கும் என்று சொன்னதால் சேர்த்து செய்து பார்த்தேன்,மிக அருமை..ஒரு கப் கெட்டி தேங்காய் பால் எடுத்து பின்பு இரண்டாம் பாலும் எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் (நான் மண் சட்டி உபயோகித்துள்ளேன்.) வேகவைத்த நறுக்கிய வெள்ளைப்பூசணி, வேக வைத்தை பயறு, வேக வைத்து நறுக்கிய சேப்பங்கிழங்கு ,நறுக்கிய பச்சை மிளகாய்,சீரகத்தூள் சிறிது உப்பு சேர்க்கவும்.

அத்துடன் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கலந்து ஒரு சேர வேக ೫ நிமிடம் கொதிக்க விடவும்.

வெந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்.கலந்து விடவும்.

முதல் கெட்டி பால் சேர்த்து உப்பு சரி பார்க்கவும்.

தேங்காய்ப்பால் நுரை கூடி வரும், இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.


சுவையான கேரள ஓலன் ரெடி. இதனை புளிசேரியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

இது ஓணம்,விஷு சத்யாவின் ஸ்பெஷல் அயிட்டமாகும்.


நீங்களும் செய்து ருசித்து பாருங்க, சூப்பராக இருக்கும்.

விருதுகள் வாங்கி நாட்களாகி விட்டது,அதனை உங்களோடு பகிர வேண்டாமா...


இந்த மூன்று விருதுகளும் அகிலாஸ்கிச்சன் இவெண்ட்டில் கலந்து கொண்டமைக்கு எனக்கு கிடைத்தது. மிக்க நன்றி அகிலா.


இந்த அருமையான அவார்டை தோழி ஜலீலா, தங்கை மேனகா இருவரும் எனக்கு தந்திருக்காங்க, அவர்களுக்கும் மிக்க நன்றி.


இந்த ஸ்பெஷல் அவார்டு தங்கை அப்சரா தந்தது, மிக்க நன்றி.இந்த பூங்கொத்து தங்கை மஹா விஜய் தந்தது.மிக்க நன்றி மஹா.


இந்த அழகான மலர்க்கொத்தை தோழி அதிரா தன் பொற்கரங்களால் வழங்கி இருக்காங்க. மிக்க நன்றி அதிரா.


இப்ப பதிவுலகில் தோழிகள் அனைவரும் விருது கொடுப்பதும் வாங்குவதும் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கு. எல்லாத்தையும் வாங்கிவிட்டு நான் எப்படி சும்மா இருப்பது ?மனசுக்குப் பிடிச்ச இந்த மஞ்சள் மலர்க்கொத்தை, விருதுகள் மலர்க்கொத்து வழங்கி சிறப்பித்தவர்களுக்கும், பார்வையிடும் அனைத்து அன்பான என் இனிய நட்புள்ளங்களுக்கும் வழங்குகிறேன்..மிக்க நன்றி.

--ஆசியா உமர்..

29 comments:

S.Menaga said...

உடனே செய்து சாப்பிடும் ஆசையை தூண்டிட்டிங்க...எனக்கு ரொமப் பிடிக்கும்.சேப்பங்கிழங்கு சேர்த்த்தில்லை..விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா!!

Anonymous said...

சொன்னபடி கேரளா சமையல் குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி..

வாழ்த்துகள்...

angelin said...

ஆஹா டேஸ்டி ரெசிபி .பகிர்வுக்கு நன்றி .

எல் கே said...

ஓலன் சாப்பிட்டு இருக்கேன். நான் முயற்சி பண்ண விரும்பலை. தங்கமணி ஊரில் இருந்து வரட்டும் .. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ

asiya omar said...

மேனகா மிக அருமையாக இருந்தது,எங்களுக்கு பிடிச்சிருந்தது,நிச்சயம் செய்து பாருங்க.மிக்க நன்றி.

asiya omar said...

மஹா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி,மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

எல்.கே. வருகைக்கு நன்றி.திவ்யாமா வந்தவுடன் செய்து பாருங்க சகோ, பிடிக்கும்னு நினைக்கிறேன்..

எம் அப்துல் காதர் said...

இது என்ன பேர் புதுசா இருக்கு. விருதுக்கு வாழ்த்துகள் சகோ!!

FOOD said...

விருது பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஓலன் இதுவரை சாப்பிட்டதில்லை.பகிர்வுக்கு நன்றி தோழி.விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கின்றது...சட்டியில் செய்து அசத்துட்டிங்க..உங்களுக்கு அங்கு சட்டி கிடைக்குமா..அல்லது இந்தியாவில் இருந்து எடுத்து சென்றிங்களா..

athira said...

ஓலன்!!!! பெயரே புதுஸா இருக்கு.... குறிப்பும் புதுஸா இருக்கு.. கறி பார்க்க சூப்பராக இருக்கு... மொத்தத்தில் சூப்பர்!!!!.

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

சும்மா ஒரு பதிவு போட்டுத்தான் பார்ப்போமே என எமக்காக ஒரு வலைப்பூ ஆரம்பித்தபோது..... கலியாணவீட்டுச் சந்தோஷம்போல இருந்துது, ஆனா இப்போ அது விருது, வாழ்த்து,தொடர்ப்பதிவு எனப் பெருத்துக்கொண்டே போகும்போது இன்னும் மகிழ்வாக இருக்கு.

என் பூங்கொத்தையும் எடுத்துவந்துபோட்டிருக்கிறீங்க பார்க்க சந்தோஷமாக இருக்கு நன்றி. இப்பூடிப் போடுவீங்க எனத் தெரிஞ்சிருந்தால்... கொஞ்சூண்டாவது பவுடர்... கிரீம் எல்லாம் போட்டுப்படமெடுத்திருப்பேனே(நான் பூவைச் சொல்லல்லே:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி தோழி,பிடிச்சிருந்தால் செய்து பாருங்க.

கீதா ஆச்சல் மிக்க நன்றி,சட்டி இங்கு கிடைக்கிறது.incredible india என்று stall போட்டிருந்தாங்க,மண் பானை,கூஜா,மண் தோசை கலம் இன்னும் ஏகத்திற்கு அடிக்கியிருந்தாங்க..

vanathy said...

நல்ல ரெசிப்பி. விருதுக்கு வாழ்த்துக்கள்!

asiya omar said...

அதிரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
ஆஹா,இத்தனை அழகான பூங்கொத்தை அதுவும் பிரித்தானிய நாட்டு மலர்களை மரத்திலிருந்து ஃப்ரெஷாக தந்த பிறகு எடுத்து வராமல் இருக்க முடியுமா?
அனைவர் தந்த விருதுகள்,பூங்கொத்துக்களை விருதுகள் பகுதியில் பத்திரமாக வைத்திருக்கிறேன்..

சே.குமார் said...

வாழ்த்துகள். வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.ஓலன் புது பேரா இருக்கு.

ஒரு டவுட்..குறிப்பில் இரண்டாம் பால் - ஒரு சிறிய கப் என இருக்கே அது என்ன? தேங்காய்ப்பால்-ன் 2 வது அரை பட்ட நிலை பாலா?

asiya omar said...

குமார் தம்பி வாங்க நலமா? மிக்க நன்றி.

செந்தில் குமார் முதல் பால் எடுத்த பின்பு, பிழிந்த தேங்காய்ப்பூவை திரும்ப இரண்டாவது பிழிந்து எடுப்பது தான்,இது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிழிவதால் தண்ணி போல் இருக்கும்.
வருகைக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

Nandini's Food said...

Olan is very tempting and awesome! Congrats on the awards!

நாடோடி said...

ஏக‌ப்ப‌ட்ட‌ அவார்டு வாங்கியிருக்கீங்க‌ போல... வாழ்த்துக்க‌ள்ள்ள்ள்ள்ள்ள்ள்.. :)

Kanchana Radhakrishnan said...

அருமை.விருதுக்கு வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

ரொம்பவே நல்லாருக்கும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. செஞ்சதில்லை..

பார்க்கவும் நல்லாருக்கு.

middleclassmadhavi said...

ஓலனுக்கு நன்றியும் விருதுகளுக்கு பாராட்டுகளும்.

Jay said...

congrats on all your well deserved awwesome awards dear...
recipe sounds very new n interesting..should be tasty too..
Tasty Appetite

சசிகுமார் said...

பகிர்விற்கு நன்றி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

ஓலன் இதுவரை சாப்பிட்டதில்லை. செய்து பார்க்க வேண்டும்.
விருதுகள் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

வெள்ளை வெளேருன்னுகாரம் இல்லாம நல்ல வந்து இருக்கு,
வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

என்னன்னு தெரியல
கிலிக் பண்ணா பதிவு மேலே கீழே போகுது,ம் இன்னும் இரண்டு பதிவு பார்க்க முடியல பிற்கு வரஏன்