Monday, April 4, 2011

மீன் பிரியாணி / Fish Biryani

பிரியாணியை பலவகையாக செய்யலாம், மீன் பிரியாணி செய்வது கொஞ்சம் சிரமம் தான்,கொஞ்சம் அதிகம் செய்யனும்னால் ரிஸ்க் தான்..வழக்கம் போல் அருமையாக அமைந்தது. இது மொத்த பிரியாணி.

12 நபர்களுக்கு.

தேவையான பொருட்கள்;
கிங் ஃபிஷ்(சீலா மீன்) - 20-24துண்டுகள்,
 பாசுமதி அரிசி - ஒன்னரை கிலோ,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 8டீஸ்பூன் குவியலாக,
வெங்காயம் - அரைக்கிலோ,
தக்காளி - அரைக்கிலோ,
மல்லி,புதினா -தலா ஒரு கப்,
 பச்சை மிளகாய் -8
பெரிய எலுமிச்சை -1
மிளகாய்த்தூள் -1+1டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா -2டீஸ்பூன்,
 மல்லித்தூள் - 4டீஸ்பூன்,
 மஞ்சள் தூள் - 1டீஸ்பூன்(மீனில் கழுவ)
சீரகத்தூள் - 1டீஸ்பூன்,
சோம்புத்தூள் -அரைடீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
தயிர் - 200மில்லி,
எண்ணெய் - 250மில்லி,
நெய் -100மில்லி,
எண்ணெய் மீன் பொரிக்க -100மில்லி,
பின்ச் ரெட் யெல்லோ கலர்,
உப்பு -தேவைக்கு.
நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து வைக்கவும், அரிசியை கழைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

  மீனை நன்கு கழுவி, மஞ்சள் தூள், உப்பு போட்டு பிரட்டி சிறிது நேரம் வைத்து ,மீண்டும் தண்ணீர் விட்டு கழுவி சுத்தமாக தண்ணீர் வடிகட்டவும்.

மீன் பொரிக்க மசாலா ரெடி செய்யவும், மிளகாயத்தூள் 1டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 2டீஸ்பூன், லைம் ஜூஸ், பின்ச் கலர், தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.


ரெடி செய்த மசாலாவை கையால் எடுத்து லேசாக ஒவ்வொரு துண்டாக தடவி வைக்கவும்.
பின்பு கொஞ்சமாக எண்ணெய் விட்டு முறுக பொரித்து எடுக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு நன்கு காயவும், புதினா இலையை போட்டு வெடிக்க விடவும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும், சிறிது உப்பு சேர்க்கவும், வதங்க விடவும்.
நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.பிரட்டி சிறிது மூடவும்.கரம் மசாலா,மல்லி,சீரக,சோம்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்,பிரட்டி விடவும்.

தயிர் சேர்க்கவும்,நன்கு பிரட்டி சிறிது மூடவும்.

இப்படி பிரியாணி மசாலா கூட்டு போல் ஆகும்.
ஊற வைத்த அரிசியை தாராளமாய் தண்ணீர்,நறுக்கிய மல்லி இலை ,உப்பு சேர்த்து, முக்கால் பதமாக சாதம் வெந்து வடிகட்டி வைக்கவும்.இது தான் கவனமாக செய்ய வேண்டிய பகுதி.

பிரியாணி மசாலாவில், பொரித்த மீன் தூண்டுகளை பாதி வைத்து,முக்கால் பதமாக வெந்த சாதத்தை பாதி பரப்பி விடவும்,மீண்டும் மீதியுள்ள மீன் தூண்டுகளை பரத்தி வைத்து மீதி சாதத்தையும் மீன் மேல் போடவும்.பரத்தி விட்டு பின்ச் ரெட் கலர் கரைசல், சாஃப்ரான் அல்லது பின்ச் யெல்லொ கலர் கரைசல் தெளிக்கவும்.அலுமினியம் ஃபாயில் போட்டு மூடியால் மூடவும்,சும்மாவும் மூடலாம்.
வடித்த கஞ்சியுள்ள பாத்திரத்தை பிரியாணி சட்டியின் மேல் வைத்து கீழே பழைய தோசைக்கல்லை பிரியாணி பாத்திரம் அடியில் வைத்து 15-20 நிமிடம் சிம்மில் தம் போடவும். அடுப்பை அணைக்கவும்.மீண்டும் 15நிமிடம் கழித்து திறந்து ஒரு போல் பிரட்டி சூடாக பரிமாறவும்.

சூப்பர் சுவையுள்ள சூடான மீன் பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, தால்ச்சா, ஸ்வீட் உடன் பரிமாறவும்.

நான் கொஞ்சமாக செய்த கிங் ஃபிஷ் பிரியாணியைக் காண இங்கு கிளிக்கவும்.


--ஆசியா உமர்.




38 comments:

Chitra said...

King Fish பிரியாணி என்று இப்போதான் கேள்விப்படுறேன். புதுசா இருக்குது.... இறால் பிரியாணி தான் சாப்பிட்டு இருக்கிறேன். இருந்தாலும், மட்டன் பிரியாணி....மட்டன் பிரயாணி தான். ஹி,ஹி,ஹி,ஹி....

சி.பி.செந்தில்குமார் said...

வாரத்தின் முத நாளே அசைவமா?

அன்னு said...

hmm....paaka paaka aasaiyaathen irukku. aanaa paartheengilla, sipleaana biriyaniye enakku sariya vara maattenguthu. irunthaalum kajini maathiri try pannip paakkaren, insha allah appuram follow up seyyaren. :)

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Asiya,

You made me sad this time too. You are not showing justice to veggies :-)) However I am reading these posts to my collegue who is a perfect nair. He extended his complete wishes.

Regards

Pranavam Ravikumar

சசிகுமார் said...

akka super

எல் கே said...

:)

Nandini said...

Biryani is superb that too with King fish! Will surely try one day!

athira said...

ஸ்ஸ் ஆஆ சூப்பர். இப்படியெல்லாம் மினக்கெட்டுச் சமைப்பீங்களோ? ஒரே மீன் வாரமாக இருக்கே..

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியாக்கா. மீன் பிரியாணி நானும் ஃபோட்டோ எடுத்து ரெடியாக வைத்துள்ளேன் போடுவதற்கு :-) இன்று உங்க மீன் பிரியாணியைப் பார்த்தவுடன் உங்க மெதட் எப்படின்னு பார்க்க வந்தேன் :) உங்களுடையதும் அருமையா இருக்கு. நான் போட்டபிறகு வந்துபார்த்து மறக்காம கருத்து சொல்லுங்க ஆசியாக்கா.

FOOD said...

நாவில் நிலைத்திடும் ருசி.

GEETHA ACHAL said...

ஆஹா,,,கலக்கிட்டிங்க..
ரொம்ப நாளாக செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த பிரியாணி...

அருமையான தெளிவான படங்கள்...

ஜிஜி said...

பார்க்கவே சூப்பரா இருக்குங்க.மீன் பிரியாணி இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கணும்.இதை குக்கரில் செய்யமுடியாதா?தம் கட்டி செய்ய கொஞ்சம் பயமா இருக்கு.நல்லா வருமோ,சரியா வேகுமொனு

செ.சரவணக்குமார் said...

சூப்பர் டிஷ்.. என்னோட பேவரிட் இது. ஆனா செய்றதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம். நொச்சுப் பிடிச்ச வேலைன்னு சொல்வாங்க வீட்ல. அதனால ஹோட்டல் மெனுவுல இந்த டிஷ் பார்த்தா உடனே ஆர்டர் பண்ணிடுவேன். வீட்லயே செஞ்சுபாக்கணும்னு ரொம்ப நாளா நெனைச்சுட்டு இருந்தேன். நீங்கதான் சூப்பரா பாடம் நடத்திருக்கீங்களே. கத்துக்கிறேன் சகோதரி. நன்றி.

முஹம்மத் ஆஷிக் said...

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.ஆசியா உமர்.

//மீன் பிரியாணி செய்வது கொஞ்சம் சிரமம் தான்//--விளக்கமாக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். கச்சிதம்.

//சீலா மீன்// & //பாசுமதி அரிசி//--இந்த செலக்ஷன் நிச்சயமாக வெற்றிக்கூட்டணிதான்.

//மீண்டும் தண்ணீர் விட்டு கழுவி சுத்தமாக தண்ணீர் வடிகட்டவும்.//---நிச்சயமாக...! சுத்தமாக மீன் கவுச்சு இருக்காது என்று சொல்வார்கள்.

vanathy said...

மட்டன், கோழி தவிர வேறு எந்த பிரியாணியும் சாப்பிட்டதில்லை. நல்ல மீன் கிடைக்கும் போது செய்து பார்க்க வேண்டும்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நான் ஒரு முறை சாப்ட்ருக்கேன் பக்குவமா செஞ்சா செம டேஸ்ட்

S.Menaga said...

சூப்பரா இருக்குக்கா...நான் ஒருமுறை செய்தேன்,சரியா வரல..இந்த மீனை தவிர வேறு என்ன மீன் பயன்படுத்தலாம்...

angelin said...

பார்க்க பார்க்க பசிய தூண்டும் பிரியாணி .
சூப்பர் .செய்முறையும் படங்களும் சூப்பர் ஒ சூப்பர்.

Mahi said...

ப்ரெசென்ட் ஆசியாக்கா! ;)

asiya omar said...

சித்ரா வருகைக்கு மகிழ்ச்சி,ஆமாமாம் மட்டன் பிரியாணி மட்டன் பிரியாணி தான்..

சிபி செந்தில் குமார் வருகைக்கு நன்றி.ஃபைலில் இருந்ததை எடுத்து போட்டாச்சு.

asiya omar said...

அன்னு கருத்திற்கு நன்றி.

கொச்சு ரவி மிக்க நன்றி.

சசிகுமார் மிக்க நன்றி.

எல்கே மிக்க நன்றி.

நந்தினி மிக்க நன்றி.

asiya omar said...

அதிரா விருந்தினர்கள் வரும் சமயம் சமைத்து அசத்திவிடுவது தான்,மற்ற நேரம் நார்மல் குக்கிங் தான்.

அஸ்மா வருகைக்கு மகிழ்ச்சி.நிச்சயம் சமையல் என்றால் எப்படியும் வந்து விடுவேன்,புதுமுறையாக இருந்தால் நிச்சயம் செய்தும் பார்ப்பேன்..

asiya omar said...

ஃபுட் வருகைக்கு மகிழ்ச்சி.

கீதா ஆச்சல் கருத்திற்கு நன்றி.முறையை மாற்றி மாற்றி செய்து பார்ப்பது தான்..

ஜிஜி ஃபிஷ் பிரியாணி குக்கரில் செய்ய முடியாது,செய்து பாருங்க ஈசியாகத்தான் இருக்கும்.கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

சரவணக்குமார் மிக்க நன்றி.

முஹம்மது ஆஷிக் மிக்க நன்றி.

சதீஷ்குமார் மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சுவனப்பிரியன் said...

சிறந்த பதிவு! படங்களும் அருமை!

Jaleela Kamal said...

ம்ம் உங்கள் அக்காவின் கை மணமும் அருமை ஆசியா

ஊரில் இருந்து வந்துட்டேன்

asiya omar said...

சுவனப்பிரியன் மிக்க நன்றி.

ஜலீலா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

ஹேமா said...

அடுத்த வாரமே சமைச்சிடணும் !

நாடோடி said...

ரெம்ப‌ நாளைக்கு பிற‌கு, க‌ட‌ந்த‌ வார‌ம் தான் கிங் பிஷ் பிரியாணி ஹோட்ட‌லில் சாப்பிட்டேன்.. :)

ப‌ட‌த்தோட‌ ரெம்ப‌ விரிவா எழுதியிருக்கீங்க‌..

சிநேகிதன் அக்பர் said...

நானும் ஒரு தடவை செய்து பார்த்திருக்கிறேன்.

மக்கள்லாம் சாப்பிட்டு நல்லாயிருக்கு என்றார்கள்.

மட்டனை விட இது ஈசிதான்னு நினைக்கிறேன்.

mahavijay said...

சேமியா பிரியாணி உங்க செய்முறையை பார்த்து செய்தேன் நல்லா வந்தது. இந்த பிரியாணியும் செய்து பார்க்கிறேன்.

prabhadamu said...

எல்லாமே சூப்பரா தான் இருக்கு. இங்கையும் கொஞ்சம் பார்சல் அனுப்புனா நல்லா இருக்கும்.


வீட்டில் நீங்கள் குழந்தைகள் நலமா அக்கா?

asiya omar said...

ஹேமா மிக்க நன்றி.

ஸ்டீபன் மிக்க நன்றி.

அக்பர் மிக்க நன்றி.

மஹாவிஜய் மிக்க நன்றி.

ப்ரபாதாமு மிக்க நன்றி.மிக்க நலம்,வருகைக்கு மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

வீட்ல ஊருக்கு போறாங்க. நாம தான் கிச்சன்ல நின்னு இத பாத்து பாத்து சமைக்கணும் போல...ம்ம்ம்ம் அருமையா இருக்கு!!

Alina said...

Akka thanks thanks ... 1000 times.
We had a home party last sunday. I did search your archive and found fish briyani, jus followed the given steps ... wow delicious. ROMBA HAPPY!!!
Sorry enakku tamil typing avvalava nalla varala.
Again, thanks!!!

Asiya Omar said...

மிக்க நன்றி அலினா.உங்களுடைய சந்தோஷம் என்னையும் தொற்றி கொண்டது.மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

அலினா ஆங்கில ப்ளாக்கில் நீங்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க டெம்ப்லேட் மாற்றி விட்டேன்.கவனித்தீர்களா?

பானு said...

Today tried this method and turned out very well..i had little time to prepare and this method suits well for such emergencies...simply delicious.. thanks for the recipe akka.