Tuesday, April 26, 2011

வெரைட்டி ஃப்ரைட் ரைஸ் / Variety Fried Rice

மிக்ஸ்ட் ஃப்ரைட் ரைஸ்/ MIXED FRIED RICE
தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி - 300கிராம்
சிக்கன் - அரைகப்
இறால்(Shrimphs) -அரைகப்
நறுக்கிய காய்கறிகள் -ஒருகப்
ஸ்பிரிங் ஆனியன் -2
சோயா சாஸ் -2டீஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்து ஃப்ரிட்ஜில் முன்பே வைத்து கொண்டால் ஃப்ரைட் ரைஸ் செய்யும் பொழுது உபயோகித்து கொள்ளலாம்.


சிறிய துண்டாக நறுக்கிய சிக்கனை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்,இறாலையும் சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடிகட்டவும்,சிக்கன்,இறால் இரண்டிலும் தலா அரைடீஸ்பூன் திக் சோயா சாஸ் அல்லது ஆயிஸ்டர் சாஸ் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு ஸ்பிரிங் ஆனியனில் அடிப்பகுதியை நறுக்கி தாளிக்க பயன்படுத்தவும்,மேற்பகுதியை அலங்கரிக்க பயன் படுத்தலாம்.


பின்பு ஊறிய சிக்கன்,இறாலை சேர்க்கவும்.சிறிது உப்பு, பின்ச் சர்க்கரை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.


நறுக்கிய கேரட்,கொடைமிளகாய்,முட்டை கோஸ்,பீஸ்,கார்ன் கலந்து ஒரு கப் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.சிறிது மூடி போடவும்,காய்கள்,சிக்கன்,இறால் வெந்து விடும்.


எல்லாம் வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கவும்.கலந்து விடவும்.

வடித்த சாதம் சேர்த்து பிரட்டி உப்பு சரி பார்த்து நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

சுவையான மிக்ஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி..


சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

ஒரு கிலோ அரிசி அளவிற்கு சிக்கன் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.சின்ன பார்ட்டி என்றால் நாமே செய்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்;

சிக்கன் ப்ரெஸ்ட் பீஸ் - ஒரு கிலோ

முட்டை - 1

இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்

கார்ன்ஃப்லோர்- 2டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் -1டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பாசுமதி அரிசி - ஒரு கிலோ

காய்கறிகள் -

பெரிய வெங்காயம்- 1

கொடைமிளகாய் -3

கேரட் -3

நறுக்கியமுட்டை கோஸ் - ஒரு பெரிய கப்

சோயா சாஸ்-3டேபிள்ஸ்பூன்

ஆயிஸ்டர் சாஸ்- 1டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)

அஜினோமோட்டோ - விரும்பினால் 1டீஸ்பூன்
ஸ்ப்ரிங் ஆனியன் - 5எண்ணம்(அலங்கரிக்க)

எண்ணெய் - 100மில்லி



சிக்கனை சிறிய துண்டாக நறுக்கி நன்கு அலசி தண்ணீர் வடியவைத்து,அத்துடன் முட்டை,கார்ன்ஃப்லோர்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.


கடாயில் குறிப்பிட்டதில் பாதி எண்ணெய் விட்டு காயவும் ரெடி செய்த சிக்கனை சேர்த்து பிரட்டி வேக வைக்கவும்.நன்கு வெந்து சாஃப்டாக பொரிந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

அரிசியை ஊற வைத்து உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போடவும், வதக்கவும், நறுக்கிய காய்கறிகளை போடவும்,சிறிது வேக விடவும். அடுத்து ரெடி செய்து வேக வைத்த சிக்கனை போடவும், விரும்பினால் அஜினோமோட்டோ சேர்க்கவும் அல்லது ஒரு டீஸ்பூன் சர்க்கரை தேவைக்கு உப்பு சேர்க்கவும்.சோயா சாஸ்,ஆய்ஸ்டர் சாஸ் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.


வடித்த ஆறிய ரைஸ் சேர்த்து கிளரவும்,விரும்பினால் சிறிது மிளகுத்தூள் தூவிக் கொள்ளவும்.கலந்து பரிமாறாவும்.

சுவையான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ரெடி.ரெஸ்டாரண்ட் சுவையை விட பிரமாதமாக இருக்கும்..

வெஜ் & எக் ஃப்ரைட் ரைஸ் ;

தேவையான பொருட்கள் ;

பாசுமதி அரிசி -கால் கிலோ

நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப்

முட்டை - ஒன்று

சோயா சாஸ்- 1டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
சூப் கியூப் - 1

அஜினோமோட்டோ விரும்பினால் - கால் ஸ்பூன்

ஸ்பிரிங் ஆனியன் - சிறிது

எண்ணெய் - 2டேபிஸ்பூன்

பட்டர் அல்லது நெய் - 1டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு








கடாயில் எண்ணெய் நெய் விட்டு,நறுக்கிய ஸ்பிரிங் ஆனியனில் வெள்ளைப்பகுதியை போட்டு, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்,விரும்பினால் ஒரு சூப் கியூப் பொடித்து போடவும்.

முட்டையை அடித்து கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஸ்கிராம்பிள் செய்து தனியாக வைக்கவும்.


காய்கறிகள் வதங்கியதும் சோயா சாஸ் சேர்க்கவும்.கிளறவும்..

வடித்து வைத்த ஆறிய சாதம் கலந்து விடவும். உப்பு சரி பார்க்கவும்.எக் சேர்க்காமல் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்,மிளகுத்தூள் சேர்த்து கிளறினால் வெஜ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.

அதனோடு ஃப்ரை செய்த எக் சேர்த்து பிரட்டினால்

சுவையான எக் ஃப்ரைட் ரைஸ் ரெடி.



ஆஹா அப்புறம் என்ன, குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான வெரைட்டி ஃப்ரைட் ரைஸ் ரெடி...

-ஆசியா உமர்

49 comments:

ஸாதிகா said...

நான் ஸீ ஃபுட் ரைஸ் என்று குட்டி குட்டியாக பொரித்த வஞ்சிர மீன் துண்டங்கள்.இறால்,ஸ்குயிட் ரிங்க்ஸ்,மற்றும் முட்டை சேர்த்து செய்வோம்.சுவை அபாரமாக இருக்கும்க்.

asiya omar said...

உங்க ஸீ ஃபுட் ரைஸ் செய்து பார்த்து விட்டால் போச்சு,தோழி நீங்க ரெசிப்பி கொடுத்தால் உங்களிடம் இருந்தும் நிறைய தெரிந்து கொள்ளலாம்...நானெல்லாம் சும்மா படம் காட்டுவது தான்..

S.Menaga said...

வெரைட்டி ரைஸ் செய்து அசத்திட்டீங்க...எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் சேர்த்து செய்திருந்தால் இன்னும் சூப்பராயிருக்கும் அக்கா..

asiya omar said...

மேனகா கருத்திற்கு நன்றி,வெஜ் ஃப்ரைட் ரைஸ்க்கு வெண்ணெய் அல்லது நெய் சேர்ப்பதுண்டு.நான் கொடுத்திருக்கிறேனே,பார்க்கவில்லையா?ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி செய்வது தான் மேனகா..

அமைதிச்சாரல் said...

விதவிதமா ஃப்ரைடு ரைஸ்.. பசங்களுடைய ஃபேவரிட். ஒவ்வொண்ணா செய்யணும்.

சசிகுமார் said...

டிப்ஸ்க்கு நன்றி ஆசியா அக்கா

அனாமிகா துவாரகன் said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பசில இருக்கும் போது இதெல்லாம் கூட போட்டு வயிற்றெரிச்சல் படுத்துவதற்கு கண்டனங்கள். ஹி ஹி. எப்படி சாதத்தை இப்படி ஒன்றொன்றாக சமைக்கிறீர்கள். அதுக்கு நிறைய ஊற வைத்து, வறுத்து செய்ய எனக்கு பொறுமை இல்லை. இலகுவாக எப்படி செய்வது. பட்டர் / எண்ணெய் போட்டாலும் உதிர் உதிராக வருவதில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

வெஜ்? எப்போ>?

GEETHA ACHAL said...

ஆஹா...கலக்குறிங்க ஆசியா அக்கா..

ஒரே பதிவில் இப்படி நிறைய குறிப்புகளை போட்டு அனைத்துமே செய்து சாப்பிட செய்து இருக்கின்றிங்க..

கடைசி படம் ரொம்ப சூப்பர்ப்..

தெளிவான விளக்கம் அருமை...

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.செய்து பாருங்க..

சசிகுமார் வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

அனாமிகா உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.சாதம் வடிக்கும் பொழுது நிறைய தண்ணீர் வைத்து உதிரியாக வடித்து ஆற வைத்து பின்பு ஃப்ரைட் ரைஸ் செய்ய வேண்டும்.மற்றபடி நான் ஸ்பெஷலாக எதுவும் செய்வதில்லை..கருத்திற்கு நன்றி.

asiya omar said...

செந்தில் குமார் வெஜ் ரெசிப்பி தானே போட்டு விட்டால் போச்சு,ஏற்கனவே நிறைய குறிப்பு கொடுத்திருக்கிறேனே !

asiya omar said...

கீதா ஆச்சல் நிறைய ரெசிப்பி செய்து ஃபைலில் இருக்கு,இது எப்பவோ செய்தது,அதனால் தான் இப்படி கொடுத்து விட்டேன்...ஃப்ரைட் ரைஸ் தான் நிறைய வெரைட்டி செய்யலாமே !இப்பல்லாம் தினமும் பதிவு போட நேரம் கிடைப்பதே சிரமமாக இருக்கு.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

angelin said...

எல்லாமே சூப்பர் ரெசிபி .கலர் கலரா பார்க்கவே அருமையா இருக்கு.
அடுத்த வாரம் உறவினர்கள் வராங்க எனக்கு மிகவும் உபயோகமா இருக்கும்
எல்லா ரெசிபிக்கும் நன்றி நன்றி .

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சிக்கன்..இறால் காம்பிநேசனா சூப்பர்

பாச மலர் / Paasa Malar said...

வண்ணக் கலவையுடன் சுவையின் கலவை...பார்க்கவே சாபிடத் தோன்றுகிறது ஆசியா..

சௌந்தர் said...

அட சூப்பரா இருக்கும் போல ...

savitha ramesh said...

orey post la ellathaayum pottu veruppethareenga.arumai..fridge idea ku nandri.

Nandini said...

Wow! Superb! Appade hotel style fried rice! Yummy!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எல்லாத்துலயும் ரெண்டு ஸ்பூன் எடுத்து என் ப்ளேட்டில் போடுங்க ஆசியா..:)

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
வெஜ்? எப்போ>?//
முட்டையை வெஜ் ஆக்கி ரொம்ப நாளாச்சு சார்.
நல்ல பகிர்வு, சகோ.

ரமா said...

ஆசியா மன்னிக்கவும். நான் நீண்ண்ட நாட்களாக உங்க ப்ளாக்கிற்கு வரமுடியவில்லை.காரணம் விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்றுவருகிறேன்.

athira said...

சொல்லவே தேவையில்லை.. சுப்பேர்ப்...!!!!!

சிநேகிதன் அக்பர் said...

செம டேஸ்ட்டான சாப்பாடு. அடுத்த குக்கிங் லிஸ்டில் சேர்க்க வேண்டியதுதான்.

Mahi said...

பெரிய விருந்தே வைச்சுட்டீங்க! கலர்ஃபுல்லா இருக்கு எல்லா ஃப்ரைட் ரைஸும்!

நாடோடி said...

ந‌ல்ல‌ விருந்து தான்... சாப்பிட‌ வ‌ந்திடுறேன்.... :)

zumaras said...

ஸலாம்
இந்த மாதிரி கலர்ஃபுல் ஃப்ரைட் ரைஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.பகிர்விற்கு நன்றி.அத்தோடு ஃப்ரைட் ரைஸ்க்கு பொருத்தமான சைட் டிஷ் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

வெரைட்டி ரைஸ் செய்து அசத்திட்டீங்க அக்கா அருமை...

//எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் சேர்த்து செய்திருந்தால் இன்னும் சூப்பராயிருக்கும் அக்கா//

நாங்க வெண்ணை சேர்த்து செய்வோம் மேனகா..




முகவரியை தொலைக்கத் துடிக்கும் மொட்டுக்கள்..
http://niroodai.blogspot.com/2011/04/blog-post_27.html

அனாமிகா துவாரகன் said...

நான் ரைஸ் குக்கர் பாவிக்கிறேன். மற்ற குக்கரில் சாதம் சமைத்தால் கொடுமையாக வரும். அவற்றில் எனக்கு சாதம் வைக்க வாரவே வராது =(( ஒரு முறை ட்ரை பண்ணிய போது சாதம் கொழகொழா என்று இருந்தது. =(( அளவுகள் கொஞ்சம் சொல்வீர்களா? அம்மா பிரஷர் குக்கர் பாவிக்க சொல்லுவார். எனக்கு அந்த விசில் சத்தம் நெஞ்சுவலி கொடுக்கும். (ஹி ஹி பயத்தை எப்படி மழுப்புறேன் பாருங்க). அம்மா விசில் வைத்தால் நான் நாலு வீடு தள்ளி இருப்பேன். அவ்வளவு துணிவு.

asiya omar said...

ஏஞ்சலின் மிக்க நன்றி.

சதீஷ்குமார் மிக்க நன்றி.

பாசமலர் மிக்க நன்றி.

சௌந்தர் மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

நந்தினி மிக்க நன்றி.

தேனக்கா தந்துவிட்டால் போச்சு,வருகைக்கு நன்றி.

ஃபுட் மிக்க நன்றி.

asiya omar said...

ரமா வருகைக்கு மகிழ்ச்சி,இப்ப நலமா?விரைவில் குணமடைய பிரார்த்தனை..

அதிரா மிக்க நன்றி.

அக்பர் மிக்க நன்றி.

மகி மிக்க மகிழ்ச்சி.

ஸ்டீபன் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

zumaras வருகைக்கு மகிழ்ச்சி.ஃப்ரைட் ரைஸ்க்கு கிரில் சிக்கன்,மஞ்சூரியன் வகை,ஃப்ரை அயிட்டம்ஸ்,பனீர், சிக்கன் கிரேவியும் பொருத்தமாக இருக்கும். நம்ம இஷ்டம் தான்..

மலிக்கா வருகைக்கு நன்றி.

asiya omar said...

அனாமிகா ரைஸ் குக்கரில் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு அடுப்பு ஆஃப் ஆனவுடன் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆற ஃப்ரைட் ரைஸ் செய்யவும்.அரிசி ஊற வைக்க வேண்டாம்.

ப்ரஷர் குக்கர் என்றாலும் அரிசி ஊற வைக்காமல் அரிசி ஒரு கப்பிற்கு இரண்டு கப் தண்ணீர் வைத்து இரண்டு விசில் விட்டு எடுத்தால் உதிரியாக இருக்கும்..

வருகைக்கு நன்றி.

ஹேமா said...

அப்பாடி...எத்தனை விதம்.வாசிக்கும்போதே சுவையும் வாசனையும் வருகிறது ஆசியா !

அந்நியன் 2 said...

ஹலோ...இது என்ன வலை தலம்தானே?

ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்த மாதுரி இருந்துச்சு அதான் கேட்டேன்.

வ..ஆழ்.......த்...து..க்..க..ள்.

நாக்கிலே எச்சில் ஊருது அதான்...வாழ்த்துக்கள்னு சொல்ல முடியலை.

Now Serving said...

Fried rice ellam romba nejamey asathieenga :)

asiya omar said...

ஹேமா மிக்க நன்றி.

அந்நியன் வருகைக்கு நன்றி.ஃபைலில் இருந்த குறிப்பை ஒவ்வொன்றாக கொடுக்க சோம்பல் பட்டு மூன்றையும் ஒன்றாக கொடுத்து விட்டேன்,வேறொன்றுமில்லை.

now seving உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தளிகா said...

soopper asiyakka.nalathamayandhi

vanathy said...

சூப்பரா இருக்கு ரெசிப்பி & படங்கள். என் அம்மா தான் ப்ரைட் ரைஸ் செய்வார்கள். எனக்கு அவ்வளவு நல்லா வருவதில்லை.

asiya omar said...

என்ன ஆச்சரியம்! வந்திருக்கிறது தளிகாவா? மிக்க மகிழ்ச்சி.உங்க ப்ளாக்கில் தொடர்ந்து குறிப்பு கொடுங்க.

வானதி நீங்கள் தான் மிக நேர்த்தியாக சமைப்பீங்களே! செய்து பாருங்க,அம்மாவை விட அருமையாக வரும்.

எல் கே said...

present

nithya said...

akka...
neeeenda natgalaki vittathu. kal vali saroyagaththaal irandu natgalukku munnar varuda vidumuraiyai satru munnathaga vangi vanthu vittean.... ippa KARAIKUDIYIL irukkirean... oyvil irukkum podhu ellam padikkirean... ithu romba nalla irukku...

asiya omar said...

சகோ.எல்.கே மிக்க நன்றி.

நித்யா நீங்க யாருன்னு தெரியலையே! உங்கள் முதல் வருகைக்கு நன்றி.தப்பாக புரிந்து கொள்ளாதீங்க,நானும் யோசித்து பார்க்கிறேன்,நினைவிற்கு வரலை..நேரம் கிடைக்கும் பொழுது ப்ளாக் பாருங்க,உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்க.

mahavijay said...

எல்லாமே கலர்புல்லா இருக்கு..

சே.குமார் said...

Akka naan manasu kumar... ungalukku comment idumpodhu thavaruthalaga en manaiyiyin idyil irunthu vanthullathu... athan....
ungal thambi S.kumarthaan.

asiya omar said...

மஹா விஜய் மிக்க நன்றி.

தம்பி குமார் நலமா?நீங்க நம்பமாட்டீங்க,நேற்றும்,காலையும் தம்பி குமார் பக்கம் போய் பார்க்கணும் ஆளையே கானோமேன்னு நினைச்சேன்,நீங்களே வந்திட்டீங்க,இதை எங்க வீட்டில் சொன்னால் சிரிப்பாங்க,நீங்க நினைச்சால் அவங்க வந்திடுவாங்கன்னு,உண்மை தான்.கால் வலி பரவாயில்லையா?மனைவி மக்களோடு சந்தோஷமாக இருந்து விட்டு வர வாழ்த்துக்கள் தம்பி.

Jaleela Kamal said...

நல்ல இருக்கு வெரைடியா இருக்கு , எல்லாத்தையும் ஒன்னா போட்டுட்டீங்க,

நானும் அடிக்கடி செயவது எல்லா வ்கைகளும், வாரம் ஒரு முறை ஃப்ரைட் ரைஸ் தான் ,.

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி ஜலீலா..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஆசியா என்னை தொடர்பு கொள்ள முடியுமா.. honeylaksh@gmail.com .. இன்றுக்குள் .. முடிந்தவரை சீக்கிரம்..:))