Wednesday, May 11, 2011

கொஞ்சம் பிஸி...!


//விரைவில் சந்திப்போம்...//

-- ஆசியா உமர்.Monday, May 9, 2011

Nellai Mutton Briyani / வீடியோ சமையல்

நெல்லை மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள், செய்முறையை வீடியோவில் பார்க்கவும். பிரியாணி செய்யும் பொழுது வீடீயோ எடுத்து ப்ளாக்கில் போட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது. இந்த தடவை மகன் விடுமுறையில் இருந்ததால் அவரும் மகனும் உதவினர். இது ப்ரொஃபஷனலாக எடுத்த வீடியோ இல்லை. எதார்த்தமாக எடுத்தது.

எங்க ஊரில் மட்டன் பிரியாணி எப்படி செய்வோமோ, அப்படியே கொடுத்திருக்கிறேன். சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்களை
வைத்து எளிமையாக செய்யக்கூடியது தான்.

பொதுவாக எல்லோரும் பிரியாணி மசாலா, மட்டனுடன் அரிசி அளவிற்கு தகுந்த படி தண்ணீர் அளந்து வைத்து செய்வது வழக்கம், அது தான் இலகுவாக இருக்கும். ஆனால் நான் எப்பவும் முக்கால் வேக்காட்டில் சோறு வடித்து பிரியாணிக்கு ரெடி செய்த மசாலாவில் இருபது நிமிடம் சிறிய தீயில் தம் செய்து எடுத்து தான் பிரியாணி செய்வேன். இந்த பிரியாணி முறையை நான் அறுசுவை சமையற் தளத்தில் மூன்று வருடங்கள் முன்பே சிறிய மாற்றத்துடன் பகிர்ந்திருக்கிறேன்.

நீங்கள் உங்களுக்கு பிடித்த முறையில் மசாலா சேர்த்து இம்முறையில் செய்தாலும் அருமையாக வரும். நான் செய்யும் முறையை படம் எடுத்து போட்டுள்ளேன். உங்கள் டேஸ்டிற்கு நீங்க செய்து பாருங்க. மறக்காமல் கருத்து சொல்லுங்க.

மே மாதம் பத்தாம் தேதி எங்கள் திருமணநாள். அதனை சிறப்பிக்கவே இந்த வீடீயோ சமையல். ஸ்வீட் எடுத்துக்கோங்க...என்னுடைய முதல் வீடியோ சமையல் ப்ரான் மஞ்சூரியன் பார்க்க இங்கு கிளிக்கவும்.--ஆசியா உமர்.

Sunday, May 8, 2011

அம்மாப்பிள்ளை“சாப்பிட வாடா கண்ணா, எவ்வளவு நேரம் நானும் உனக்காக காத்திருப்பது, தூக்கம் வருதுடா,” என்ற மீனாட்சியின் பேச்சை சிறிதும் காது கொடுத்தும் கேளாமல் கணினியில் அமர்ந்திருந்தான், கார்த்தி.


இது தினமும் நடப்பது தான், மகன் பின்னாடியே மீனாட்சி அலைவதும் கார்த்தி அவளை சிறிதும் மதிக்காததும் வேணுவிற்கு உறுத்தலாக இருந்தது.

எப்படியாவது மகனின் மனதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார் வேணு.


வேணுவின் அம்மா சாதம் பிசைந்து சாப்பிட உட்கார்ந்தது கண்ணில் பட்டது, இது தான் தருணம் என்று
“அம்மா, அம்மா ... என்று முன் கிடக்கும் பொருட்களைக் கூட பார்க்காமல் தாவித் தாவி ஓடி வந்தார் வேணு.


“ டேய் பார்த்துடா பொடியா, என்று தன் அருகில் அமர்ந்த மகனுக்கு, தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாதத்தில் ஒரு பிடியை எடுத்து ஊட்டினாள் சாந்தா.


“அம்மா, என்னதான் இருந்தாலும் உன் கையால் ஒரு பிடி சாதம் சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்மா.” என்றார் வேணு..


அம்மாவின் மடியில் தலை சாய்த்து படுப்பதும், அம்மா பிசைந்து ஊட்டும் சாதத்தை சாப்பிடவும் எப்பவும் சலித்ததில்லை வேணுவிற்கு.”ஆமாம், ஏண்டா, ஐந்து வயதாடா உனக்கு, ஐம்பது வயதாவுது, இன்னமும் ஊட்டிவிடச் சொல்லிகிட்டு ” என்று பெருமிதமாக மகனை ஏறிட்டு பார்த்தாள் சாந்தா.


“வயசு என்னம்மா வயசு, எந்த வயதிலும் அம்மா அம்மா தான்” என்று கொஞ்சம் உரக்கவே மகனுக்கு கேட்கும் படி சொன்னார் வேணு.

பாட்டி அப்பாவின் கொஞ்சல் காதில் விழ, பொறுக்கமாட்டாமல், “அம்மா எனக்கும் சாதம் போட்டு ஊட்டி விடுமா.” என்றான் கார்த்தி.


“ஏண்டா, இப்ப தான் சாப்பாடு வேண்டாமின்னு சொன்னே, அதற்குள் பசி வந்திடுச்சா என்ன? ” என்றாள் மீனாட்சி, நமட்டுச்சிரிப்புடன் தன் கணவரைப் பார்த்தபடி..

--ஆசியா உமர்..

அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

Friday, May 6, 2011

பேக்ட் வெஜ் & சிக்கன் சீஸ் பாஸ்தா

இந்த பாஸ்தா ரெசிப்பியை Shama's Fast Food Event -Pasta, Snekithi's Party Snacks Event அனுப்புகிறேன்.பேக்ட் வெஜ் சீஸ் பாஸ்தா

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - 300கிராம்( உப்பு சேர்த்து வேக வைத்து வடித்து வைக்கவும்.)

வெஜிடபிள் மிக்ஸ் - ஒரு கப்
செடார் சீஸ் -200கிராம்
வெங்காயம் - 1

தக்காளி -1

அல்லது கறிமசாலாத்தூள் - 1டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்

கரம் மசாலா - கால்டீஸ்பூன்

எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு அல்லது சூப் கியூப் -1


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கி,நறுக்கிய தக்காளி சேர்த்து மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் அல்லது கறிமசால் பொடி சேர்த்து வதக்கவும்,சிறிது தண்ணீர் சேர்க்கவும், பின்பு நறுக்கிய காய்கறி சேர்க்கவும்,பிரட்டி மூடி வேக விடவும்.உப்பு சரி பார்க்கவும்,சூப் கியுப் சேர்த்தால் உப்பு சேர்க்க தேவையில்லை.


காய்கறியுடன் வேகவைத்து வடித்த மக்ரோனி சேர்த்து பிரட்டி இறக்கவும்.


உங்களுக்கு செடார் சீஸ் எப்படி கிடைக்குதே அப்படி வாங்கிக் கொள்ளவும்,நான் kraft cheddar cheeseஉபயோகித்துள்ளேன்.


ரெடி செய்த மக்ரோனி வெஜ் கலவையில் பாதியை ஒரு ஓவன் ப்ரூஃப் பவுலில் வைத்து சீஸ் சிறியதாக துருவியோ அல்லது கட் செய்தோ போடவும்,மீண்டும் மீதியிருக்கும் மக்ரோனி வெஜ் கலவையை வைத்து அதன் மீண்டும் சீஸ் போட்டு ரெடி செய்யவும்.


ரெடி செய்த பவுலை முற்சூடு செய்த ஓவனில் 200டிகிரி வெப்பம் செட் செய்து இருபது நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.விரும்பினால் அலுமினியம் ஃபாயில் போட்டு கவர் செய்து வைக்கவும்.இருபது நிமிடம் கழித்து ஓவனை ஆஃப் செய்து சிறிது வைத்து கவனமாக எடுத்து பரிமாறவும்.மக்ரோனி, வெஜிடபிள்,சீஸ் எல்லாம் சேர்ந்து வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். சீஸ் டேஸ்ட் பிடிப்பவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்..


சுவையான பேக்ட் வெஜ் சீஸ் பாஸ்தா ரெடி..

அப்படியே ஸ்பூன் ஃபோர்க் போட்டு பரிமாறவும். bechamal mix இருந்தால் அதனை பாலில் கலந்து அடுப்பில் வைத்தால் திக்காக சாஸ் போல் வரும்,அதனை வெஜ் மக்ரோனி கலவையில் சேர்த்து பின்பு சீஸ் சேர்த்து பின்பு பேக் செய்தும் எடுக்கலாம்,நான் இந்த முறையில் பீச்சமல் மிக்ஸ் சேர்க்கலை..


பேக்ட் சிக்கன் சீஸ் பாஸ்தா:

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - 300கிராம்
போன்லெஸ் சிக்கன் - 300கிராம்

வெங்காய்ம் -1

தக்காளி -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1டீஸ்பூன்

கரம் மசாலா - கால்ஸ்பூன்

கறிமசாலா - 1டீஸ்பூன்

சூப் கியூப் -1

knorr bechamal mix - 75கிராம் பாக்கெட்

செடார் சீஸ் - 200கிராம்

எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு


முதலில் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கி,தக்காளி சேர்க்கவும்,கறிமசாலா, சூப் கியூப் சேர்க்கவும்.பின்பு சுத்தம் செய்து ரெடி செய்து வைத்த சிக்கன் சேர்த்து பிரட்டி மூடவும்,சிக்கன் வெந்தவுடன்,வேக வைத்து வடித்து வைத்த மக்ரோனி சேர்த்து வதக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

பீச்சமல் மிக்ஸ் ரெடி செய்ய 75கிராம் பேக்கை அரை லிட்டர் பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிக்ஸ் செய்தால் சாஸ் போல் திக்காகும்.அடுப்பை அணைக்கவும்.பைரக்ஸ் போன்ற ஓவன் ஃப்ரூப் பவுலில் முதலில் வேக வைத்த மக்ரோனி வைத்து பின்பு ரெடி செய்த பீச்சமல் மிக்ஸ் ஸ்பூன் கொண்டு பரத்தி வைத்து பின்பு சிறியதாக கட் செய்த அல்லது துருவிய செடார் சீஸ் சேர்க்கவும்.


பின்பு மீண்டும் அதே பவுலில் மக்ரோனி கலவையை வைக்கவும்.


பின்பு மக்ரோனி மேல் திரும்ப பீச்சமல் மிக்ஸ் வைத்து அதன் மேல் கட் செய்த செடார் சீஸ் வைத்து ரெடி செய்யவும்.அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி வைக்கவும்.


ரெடி செய்த மக்ரோனி பவுலை முற்சூடு செய்த அவனில் 200டிகிரி வெப்பம் செட் செய்து 20-30நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.


எடுத்தால் இப்படி இருக்கும்,நான் வந்து படம் பிடிக்கும் முன்பு பிள்ளைகள் எடுத்து சாப்பிட்டு பார்த்தாச்சு,மவுத் லிக்கரிங்காக அருமையாக இருக்கும்.எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது.


சுவையான பேக்ட் சிக்கன் சீஸி பாஸ்தா ரெடி.உங்களுக்கு பிடிக்கும் என்றால் செய்து பார்க்கவும்.எங்க வீட்டு மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது..

குறிப்பு:
இந்த இரண்டு வெரைடியும் பார்ட்டியில் பரிமாற சூப்பராக இருக்கும்.குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க.

--ஆசியா உமர்.

Thursday, May 5, 2011

நீராகாரம் & ஜிஞ்சர் மிண்ட் லெமன் ஜூஸ்தேவையான பொருட்கள்;

சாதம் - ஒரு அன்னக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

பச்சைமிளகாய் பாதி

மல்லிகருவேப்பிலை சிறிது

தயிர் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவைக்கு
தண்ணீர் ஊற்றிய சாதத்தில் சிறிது உப்பு போட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ளவும்.


அத்துடன் நறுக்கிய வெங்காயம்,மல்லி கருவேப்பிலை,பச்சை மிள்காய் தயிர் சேர்த்து கையால் கலந்து விடவும்.

கலவை திக்காக இருக்கும்.
தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்க்கவும்.சுவையான ஆரோக்கியமான நீராகாரம் ரெடி. இதனை வெயில் நேரத்தில் குடிக்கும் பொழுது வயிறு குளிர்ந்து நம்மிடம் காணும் ஆயாசம், களைப்பு எல்லாம் பரந்து போய்விடும்..


ஜிஞ்சர் மிண்ட் லெமன் ஜூஸ்;

தேவையான பொருட்கள்;

சிறிய எலுமிச்சைப் பழம் -1
இஞ்சி - ஒரு துண்டு

புதினா - 5இலைகள்

சர்க்கரை - 4டேபிள்ஸ்பூன்

உப்பு - பின்ச்

தண்ணீர் - அரை லிட்டர்
இஞ்சி புதினாவை தட்டி கொள்ளவும்.


தட்டிய இஞ்சி புதினாவை தண்ணீரில் சேர்த்து எலுமிச்சையை பிழிந்து சர்க்கரை சேர்த்து கரைத்து விரும்பினால் பின்ச் உப்பு சேர்த்து கலந்து வடிகட்டினால் ஜூஸ் ரெடி.


சுவையான ஆரோக்கியமான ஜிஞ்சர் மிண்ட் லைம் ஜூஸ் ரெடி.


ரெடியான ஜூஸை டம்ளரில் விட்டு ஸ்ட்ரா போட்டு மெல்லிய எலுமிச்சை துண்டு கட் செய்து போட்டு புதினா இலை போட்டு அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.


--ஆசியா உமர்.

Tuesday, May 3, 2011

மஷ்ரூம் ரைஸ் / Mushroom Rice

தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி - 300கிராம்
காளான் - 200கிராம்
வெங்காயம் - 1
கொடைமிளகாய் நறுக்கியது- ஒருகப்
முட்டை கோஸ் நறுக்கியது- ஒருகப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மல்லி,புதினா நறுக்கியது - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி பழம்
உப்பு - தேவைக்கு

காளானை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்,
சின்னதாக நறுக்கவும்.
கொடைமிளகாய், முட்டை கோஸ்,வெங்காயம்,மல்லி,புதினா நறுக்கி வைக்கவும்.அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் அலசி ஊறவைத்து சாதம் உதிரி உதிரியாக வெந்த பின்பு வடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு,காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்க்கவும், மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.


பின்பு நறுக்கிய காளான்,கோஸ், கொடைமிளகாய் சேர்த்து சிறிது உப்பு தேவைக்கு சேர்த்து வதக்கவும்.காய்கள் வெந்த பின்பு வடித்த சாதம் போட்டு நன்கு பிரட்டி விடவும்.பாதி எலுமிச்சை பழம் பிழியவும், உப்பு சரி பார்த்து மீண்டும் பிரட்டி விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து 5நிமிடம் கழித்து மூடி திறக்கவும்.

சுவையான மஷ்ரூம் ரைஸ் ரெடி. டேஸ்ட் செமையாக இருக்கும்.சிப்ஸ், ஏதாவது ஃப்ரை அயிட்டத்துடன் பரிமாறவும்..

--ஆசியா உமர்.