Thursday, May 5, 2011

நீராகாரம் & ஜிஞ்சர் மிண்ட் லெமன் ஜூஸ்தேவையான பொருட்கள்;

சாதம் - ஒரு அன்னக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

பச்சைமிளகாய் பாதி

மல்லிகருவேப்பிலை சிறிது

தயிர் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவைக்கு
தண்ணீர் ஊற்றிய சாதத்தில் சிறிது உப்பு போட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ளவும்.


அத்துடன் நறுக்கிய வெங்காயம்,மல்லி கருவேப்பிலை,பச்சை மிள்காய் தயிர் சேர்த்து கையால் கலந்து விடவும்.

கலவை திக்காக இருக்கும்.
தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்க்கவும்.சுவையான ஆரோக்கியமான நீராகாரம் ரெடி. இதனை வெயில் நேரத்தில் குடிக்கும் பொழுது வயிறு குளிர்ந்து நம்மிடம் காணும் ஆயாசம், களைப்பு எல்லாம் பரந்து போய்விடும்..


ஜிஞ்சர் மிண்ட் லெமன் ஜூஸ்;

தேவையான பொருட்கள்;

சிறிய எலுமிச்சைப் பழம் -1
இஞ்சி - ஒரு துண்டு

புதினா - 5இலைகள்

சர்க்கரை - 4டேபிள்ஸ்பூன்

உப்பு - பின்ச்

தண்ணீர் - அரை லிட்டர்
இஞ்சி புதினாவை தட்டி கொள்ளவும்.


தட்டிய இஞ்சி புதினாவை தண்ணீரில் சேர்த்து எலுமிச்சையை பிழிந்து சர்க்கரை சேர்த்து கரைத்து விரும்பினால் பின்ச் உப்பு சேர்த்து கலந்து வடிகட்டினால் ஜூஸ் ரெடி.


சுவையான ஆரோக்கியமான ஜிஞ்சர் மிண்ட் லைம் ஜூஸ் ரெடி.


ரெடியான ஜூஸை டம்ளரில் விட்டு ஸ்ட்ரா போட்டு மெல்லிய எலுமிச்சை துண்டு கட் செய்து போட்டு புதினா இலை போட்டு அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.


--ஆசியா உமர்.

26 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Two worthful recepie.its summer time here.so i can try it with my friends.....

middleclassmadhavi said...

படிக்கும்போதே ஜில்லுனு இருக்கு!

சாருஸ்ரீராஜ் said...

அடிக்கிற வெயிலுக்கு ரெண்டுமே சூப்பரா இருக்கும்.

S.Menaga said...

அடிக்கிற வெயிலுக்கு சூப்பர்ர் அக்கா..நீராகாரம் குடித்து ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நாளாச்சு...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா கலவை திக்கா இருக்கும்னு அக்கா சொல்றாங்க.. ஆனா ஃபோட்டோல தின்னா தான் இருக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

athira said...

இரண்டும் சூப்பர்.

முதலாவது எனக்கு மிகவும் பிடிக்கும்... குடித்ததில்லை ரைஸ் போட்டு.

இரண்டாவது ப்ச்சைப் புதினா சேர்த்திருக்கிறீங்க, எனக்கு கஸ்டமாக இருக்கும் குடிக்க:((.

GEETHA ACHAL said...

நீராகாரம் சூப்பர்ப்...சாதம் ஒரு அன்னக்கரண்டி...ரொம்ப நாள் கழித்து அம்மா , வீட்டில் சொல்வது ஞாபகம் வருக்கின்றது...

சூப்பர்ப்...ஜிஞ்சர் மிண்ட் ஜுஸ் நல்லா இருக்கின்றது...

savitha ramesh said...

manasum jillu nu aagiduchi madam,super.

vanathy said...

நல்ல குறிப்பு & அழகான படங்கள்.

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...

ஆஹா அருமை புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இயற்கையின் புன்னகை . அப்படியே எனக்கு ஒரு கப் . !?

எல் கே said...

கோடை காலத்திற்கு தேவை

asiya omar said...

ஓ.வ.நா முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மாதவி மிக்க நன்றி.

சாருஸ்ரீ மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.செந்தில் குமார் இது போட்டிக்கு இல்லை,சம்மர் இவெண்ட் அவ்வளவு தான்,தயிர் கலந்த பின்பு உள்ள படத்தை பாருங்க திக்காக இருக்கும்,திக்காக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

அதிரா மிக்க நன்றி,புதினா சிறிது மணத்திற்கு தான்.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

பனித்துளி சங்கர் மிக்க நன்றி,

எல்.கே.மிக்க நன்றி.

angelin said...

//சாதம் ஒரு அன்னக்கரண்டி...ரொம்ப நாள் கழித்து அம்மா , வீட்டில் சொல்வது ஞாபகம் வருக்கின்றது//

எனக்கும் அதே FEELINGS .எங்க அம்மாவும் அன்னக்கரண்டி என்று தான் சொல்வாங்க . இப்ப இங்கே ரொம்ப வெய்யில் .அதனால் நாளைக்கே செஞ்சு சாப்பிடுவேன் .
நன்றி ஆசியா .

சிநேகிதன் அக்பர் said...

வெயிலுக்கேத்த பானம். அருமை.

FOOD said...

கோடைக்கேற்ற பானங்கள். நிச்சயம் அனைவர் மனதைக் கவரும். வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html

Chitra said...

refreshing!!!!

வெங்கட் நாகராஜ் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். இரண்டுமே இந்த கடும் வெயிலுக்கு இதமாய் இருக்கும்....

அமைதிச்சாரல் said...

வெய்யிலுக்கேத்த உணவுகள்..

ஸாதிகா said...

இங்கே கொளுத்தும் வெயிலுக்கு ரெண்டுமே சூப்பர் தோழி.வெயிலைப்பார்த்தால் மயக்கமே வருகின்றது.பகல் பொழுது முழுக்க வீட்டினுள்ளே முடங்கிக்கிடக்க வேண்டியுள்ளது.சூப்பர் பானங்கள் ரெசிப்பி தந்திருக்கீங்க.

கோவை2தில்லி said...

கோடைக்கேற்ற ரெசிபிக்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

கோடைக்கு ஏற்ற குறிப்புகள். அதுவும் நீராகாரம் ஆஹான்னு இருக்கும்:)! நன்று ஆசியா.

கோவை நேரம் said...

பதிவுக்கு நன்றி ...புதிய மொந்தையில் பழைய கள்ளு......ஒரு காலத்துல நாங்கலாம் பழைய சாதம் இப்படிதான் சாப்பிடுவோம்..மலரும் நினைவுகள்