Friday, May 6, 2011

பேக்ட் வெஜ் & சிக்கன் சீஸ் பாஸ்தா

இந்த பாஸ்தா ரெசிப்பியை Shama's Fast Food Event -Pasta, Snekithi's Party Snacks Event அனுப்புகிறேன்.



பேக்ட் வெஜ் சீஸ் பாஸ்தா

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - 300கிராம்( உப்பு சேர்த்து வேக வைத்து வடித்து வைக்கவும்.)

வெஜிடபிள் மிக்ஸ் - ஒரு கப்
செடார் சீஸ் -200கிராம்
வெங்காயம் - 1

தக்காளி -1

அல்லது கறிமசாலாத்தூள் - 1டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்

கரம் மசாலா - கால்டீஸ்பூன்

எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு அல்லது சூப் கியூப் -1


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கி,நறுக்கிய தக்காளி சேர்த்து மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் அல்லது கறிமசால் பொடி சேர்த்து வதக்கவும்,சிறிது தண்ணீர் சேர்க்கவும், பின்பு நறுக்கிய காய்கறி சேர்க்கவும்,பிரட்டி மூடி வேக விடவும்.உப்பு சரி பார்க்கவும்,சூப் கியுப் சேர்த்தால் உப்பு சேர்க்க தேவையில்லை.


காய்கறியுடன் வேகவைத்து வடித்த மக்ரோனி சேர்த்து பிரட்டி இறக்கவும்.


உங்களுக்கு செடார் சீஸ் எப்படி கிடைக்குதே அப்படி வாங்கிக் கொள்ளவும்,நான் kraft cheddar cheeseஉபயோகித்துள்ளேன்.


ரெடி செய்த மக்ரோனி வெஜ் கலவையில் பாதியை ஒரு ஓவன் ப்ரூஃப் பவுலில் வைத்து சீஸ் சிறியதாக துருவியோ அல்லது கட் செய்தோ போடவும்,மீண்டும் மீதியிருக்கும் மக்ரோனி வெஜ் கலவையை வைத்து அதன் மீண்டும் சீஸ் போட்டு ரெடி செய்யவும்.


ரெடி செய்த பவுலை முற்சூடு செய்த ஓவனில் 200டிகிரி வெப்பம் செட் செய்து இருபது நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.விரும்பினால் அலுமினியம் ஃபாயில் போட்டு கவர் செய்து வைக்கவும்.இருபது நிமிடம் கழித்து ஓவனை ஆஃப் செய்து சிறிது வைத்து கவனமாக எடுத்து பரிமாறவும்.மக்ரோனி, வெஜிடபிள்,சீஸ் எல்லாம் சேர்ந்து வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். சீஸ் டேஸ்ட் பிடிப்பவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்..


சுவையான பேக்ட் வெஜ் சீஸ் பாஸ்தா ரெடி..

அப்படியே ஸ்பூன் ஃபோர்க் போட்டு பரிமாறவும். bechamal mix இருந்தால் அதனை பாலில் கலந்து அடுப்பில் வைத்தால் திக்காக சாஸ் போல் வரும்,அதனை வெஜ் மக்ரோனி கலவையில் சேர்த்து பின்பு சீஸ் சேர்த்து பின்பு பேக் செய்தும் எடுக்கலாம்,நான் இந்த முறையில் பீச்சமல் மிக்ஸ் சேர்க்கலை..


பேக்ட் சிக்கன் சீஸ் பாஸ்தா:

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - 300கிராம்
போன்லெஸ் சிக்கன் - 300கிராம்

வெங்காய்ம் -1

தக்காளி -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1டீஸ்பூன்

கரம் மசாலா - கால்ஸ்பூன்

கறிமசாலா - 1டீஸ்பூன்

சூப் கியூப் -1

knorr bechamal mix - 75கிராம் பாக்கெட்

செடார் சீஸ் - 200கிராம்

எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு


முதலில் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கி,தக்காளி சேர்க்கவும்,கறிமசாலா, சூப் கியூப் சேர்க்கவும்.பின்பு சுத்தம் செய்து ரெடி செய்து வைத்த சிக்கன் சேர்த்து பிரட்டி மூடவும்,சிக்கன் வெந்தவுடன்,வேக வைத்து வடித்து வைத்த மக்ரோனி சேர்த்து வதக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

பீச்சமல் மிக்ஸ் ரெடி செய்ய 75கிராம் பேக்கை அரை லிட்டர் பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிக்ஸ் செய்தால் சாஸ் போல் திக்காகும்.அடுப்பை அணைக்கவும்.



பைரக்ஸ் போன்ற ஓவன் ஃப்ரூப் பவுலில் முதலில் வேக வைத்த மக்ரோனி வைத்து பின்பு ரெடி செய்த பீச்சமல் மிக்ஸ் ஸ்பூன் கொண்டு பரத்தி வைத்து பின்பு சிறியதாக கட் செய்த அல்லது துருவிய செடார் சீஸ் சேர்க்கவும்.


பின்பு மீண்டும் அதே பவுலில் மக்ரோனி கலவையை வைக்கவும்.


பின்பு மக்ரோனி மேல் திரும்ப பீச்சமல் மிக்ஸ் வைத்து அதன் மேல் கட் செய்த செடார் சீஸ் வைத்து ரெடி செய்யவும்.அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி வைக்கவும்.


ரெடி செய்த மக்ரோனி பவுலை முற்சூடு செய்த அவனில் 200டிகிரி வெப்பம் செட் செய்து 20-30நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.


எடுத்தால் இப்படி இருக்கும்,நான் வந்து படம் பிடிக்கும் முன்பு பிள்ளைகள் எடுத்து சாப்பிட்டு பார்த்தாச்சு,மவுத் லிக்கரிங்காக அருமையாக இருக்கும்.எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது.


சுவையான பேக்ட் சிக்கன் சீஸி பாஸ்தா ரெடி.உங்களுக்கு பிடிக்கும் என்றால் செய்து பார்க்கவும்.எங்க வீட்டு மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது..

குறிப்பு:
இந்த இரண்டு வெரைடியும் பார்ட்டியில் பரிமாற சூப்பராக இருக்கும்.குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க.

--ஆசியா உமர்.

17 comments:

Saras said...

yummy treat for chicken lovers, perfect one pot meal..

நிரூபன் said...

சகோ, அதிலாலையிலே பாஸ்தாவா..
ஆனாலும் நம்ம ஊரில் இதெல்லாம் கடையில் கிடைக்காதே,
பாரினில் இருந்து பார்சலில் எடுத்து தான் சமைக்க வேண்டும் போல இருக்கே.

Jay said...

wow...soooooo good n inviting...I wanna try this now..:)
Tasty Appetite

எல் கே said...

இதுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்கர்தா இலை. திவ்யாம்மா ஊரில் இருந்து வந்தப் பிறகு முயற்சி பண்ண சொல்றேன்

Mahi said...

சூப்பர் பாஸ்தா ஆசியாக்கா. எனக்கு சீஸ் அவ்வளவா பிடிக்காது..கொஞ்சமா சீஸ் போட்டு செஞ்சுகுடுங்க!;)

FOOD said...

//சுவையான பேக்ட் சிக்கன் சீஸி பாஸ்தா ரெடி.உங்களுக்கு பிடிக்கும் என்றால் செய்து பார்க்கவும்.எங்க வீட்டு மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.. //
யாருக்குத்தான் பிடிக்காது!

சிநேகிதி said...

சீஸ், சிக்கன் ... அசத்தலான பாஸ்தா... சூப்பர்

சசிகுமார் said...

இன்ட்லில இணைக்க வில்லையா அக்கா

நாடோடி said...

ரெடியா இருக்கு போல‌... ச‌ரியா சாப்பிட‌ வ‌ந்திடுறேன் ச‌கோ.. :)

S.Menaga said...

அக்கா,அசத்தல்..எனக்கும் இந்த மாதிரி சீஸ் போட்டு பேக் செய்வது ரொம்ப பிடிக்கும்...

Kurinji said...

ippadi seithu asathareengale...poramaiya irukkuthu. Superb.
kurinjikathambam, Event: HRH-Healthy Summer, Roundup: HRH-Puffed Rice

asiya omar said...

சரஸ் மிக்க நன்றி.

நீருபன் மிக்க நன்றி.

ஜெ மிக்க நன்றி.

எல்.கே மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி,நான் அதிகமாக சீஸ் போட்டு செய்தாலும் ருசியாக இருக்கும்,செய்து தர்றேன் மகி..

asiya omar said...

ஃபுட் மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

சசிகுமார் நெட் கனெக்‌ஷன் ப்ராப்ளம்,என்னால் 5 நிமிடம்ப்ளாக் ஒழுங்காக பார்வையிடமுடியலை,
அதனால் இப்ப தான் இண்ட்லி இணைக்க முடிந்தது.

asiya omar said...

ஸ்டீபன் மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி..

ChitraKrishna said...

அருமை ஆசியா அக்கா! (உங்களை நான் அக்கான்னு கூப்பிடலாம் தானே?)

asiya omar said...

சித்ராகிருஷ்ணா உங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,அக்கான்னு தாராளமாய் கூப்பிடலாம்,என்னை உங்களுக்கு முன்பே தெரியுமா,சித்ரா.

ChitraKrishna said...

நன்றி ஆசியாகா. நீண்ட நாட்களாகவே உங்கள் வலைப்பூவை படித்து கொண்டிருகிறேன் . ஆனாலும் கமெண்ட் எழுத ஏனோ தயக்கம். சமீபத்தில் தான் பின் தொடர ஆரம்பித்தேன்.