Sunday, May 8, 2011

அம்மாப்பிள்ளை“சாப்பிட வாடா கண்ணா, எவ்வளவு நேரம் நானும் உனக்காக காத்திருப்பது, தூக்கம் வருதுடா,” என்ற மீனாட்சியின் பேச்சை சிறிதும் காது கொடுத்தும் கேளாமல் கணினியில் அமர்ந்திருந்தான், கார்த்தி.


இது தினமும் நடப்பது தான், மகன் பின்னாடியே மீனாட்சி அலைவதும் கார்த்தி அவளை சிறிதும் மதிக்காததும் வேணுவிற்கு உறுத்தலாக இருந்தது.

எப்படியாவது மகனின் மனதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார் வேணு.


வேணுவின் அம்மா சாதம் பிசைந்து சாப்பிட உட்கார்ந்தது கண்ணில் பட்டது, இது தான் தருணம் என்று
“அம்மா, அம்மா ... என்று முன் கிடக்கும் பொருட்களைக் கூட பார்க்காமல் தாவித் தாவி ஓடி வந்தார் வேணு.


“ டேய் பார்த்துடா பொடியா, என்று தன் அருகில் அமர்ந்த மகனுக்கு, தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாதத்தில் ஒரு பிடியை எடுத்து ஊட்டினாள் சாந்தா.


“அம்மா, என்னதான் இருந்தாலும் உன் கையால் ஒரு பிடி சாதம் சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்மா.” என்றார் வேணு..


அம்மாவின் மடியில் தலை சாய்த்து படுப்பதும், அம்மா பிசைந்து ஊட்டும் சாதத்தை சாப்பிடவும் எப்பவும் சலித்ததில்லை வேணுவிற்கு.”ஆமாம், ஏண்டா, ஐந்து வயதாடா உனக்கு, ஐம்பது வயதாவுது, இன்னமும் ஊட்டிவிடச் சொல்லிகிட்டு ” என்று பெருமிதமாக மகனை ஏறிட்டு பார்த்தாள் சாந்தா.


“வயசு என்னம்மா வயசு, எந்த வயதிலும் அம்மா அம்மா தான்” என்று கொஞ்சம் உரக்கவே மகனுக்கு கேட்கும் படி சொன்னார் வேணு.

பாட்டி அப்பாவின் கொஞ்சல் காதில் விழ, பொறுக்கமாட்டாமல், “அம்மா எனக்கும் சாதம் போட்டு ஊட்டி விடுமா.” என்றான் கார்த்தி.


“ஏண்டா, இப்ப தான் சாப்பாடு வேண்டாமின்னு சொன்னே, அதற்குள் பசி வந்திடுச்சா என்ன? ” என்றாள் மீனாட்சி, நமட்டுச்சிரிப்புடன் தன் கணவரைப் பார்த்தபடி..

--ஆசியா உமர்..

அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

25 comments:

சிநேகிதி said...

தாய் பாச கதை அழகு.. ;-))
அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எத்தனை வயசானாலும் நமக்கு அம்மா, அம்மாதான் என்பதை அழகாக எடுத்துக் கூறியது உங்கள் கதை! அருமையாக எழுதிய உங்களுக்க்கு வாழ்த்துக்கள்!!

Lali said...

அழகாய் அன்பை சொல்லும் கதை.. :)
அன்னையர் தின வாழ்த்துக்கள்! :)

http://karadipommai.blogspot.com/

Nandini said...

A very beautiful story! Happy Mother's Day!

Kurinji said...

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

middleclassmadhavi said...

சூப்பரோ சூப்பர்! 'என் அம்மாவை நான் கொஞ்சறேன், நீ உன் அம்மாவை கொஞ்சிக்கோ' என்பது என் மகன்களிடம் பேசும் ஃபேமஸ் டயலாக்!!

சிநேகிதன் அக்பர் said...

அம்மா கையால சோறு. அருமை.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

RAZIN ABDUL RAHMAN said...

அன்பின் அன்னையர் அனைவருக்கும்,,அன்னையர் தின வாழ்த்துக்கள்...

கதை அருமை ஆசியாக்கா..

அன்புடன்
ரஜின்

athira said...

அன்னையர் தினத்தில் அழகான கதை.

//ஆமாம், ஏண்டா, ஐந்து வயதாடா உனக்கு, ஐம்பது வயதாவுது, இன்னமும் ஊட்டிவிடச் சொல்லிகிட்டு ” என்று பெருமிதமாக மகனை ஏறிட்டு பார்த்தாள் சாந்தா//

நானும் 5 வயதுதான் என எண்ணியே படித்தேன்... இதைப்படித்ததும்:)...

என் கணவருக்கும் சிலவேளை மாமி, ஒருவாய் ஊட்டுவா அப்போ எனக்கும் சேர்த்து ஊட்டிவிடுவா.. ஞாபகம் வந்திட்டுது....

அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.

athira said...

நேற்று இங்கு வந்தேன் ஓபின் ஆகவில்லை... போய்விட்டேன். எப்பவாவது இப்படி ஆவதுண்டு.

Lakshmi said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்.
தாய்ப்பாசத்தை ஒரு கதை மூலமாக
அழகாக சொல்லி இருக்கீங்க.

எம் அப்துல் காதர் said...

அன்னை கையால் சாப்பிடுவது அமிர்தமல்லவா!! அன்னையர் (அனைவர்களுக்கும்) தின வாழ்த்துகள்.

Anonymous said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

ChitraKrishna said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் ஆசியாக்கா.

நாடோடி said...

அன்னைய‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ..

ராமலக்ஷ்மி said...

நன்று ஆசியா:)! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

FOOD said...

அன்னையர் தினத்தில் அருமையான கதை. அம்மாவின் அன்பு, அரவணைப்பு ஐந்திலும் இனிக்கும், ஐம்பதிலும் இனிக்கும்.

FOOD said...

அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை சகோ. அனைத்து அன்னையர்களுக்கும், இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

அஹமது இர்ஷாத் said...

அருமையான‌ ந‌டை க‌தையில் :)

ம‌ன‌மார்ந்த‌ அன்னைய‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள்..

ந‌லமா..

எல் கே said...

சகோ, இந்த மாதிரி கதையை போட்டு என் அம்மாவை நினைத்து ஏங்க வைத்து விட்டீர்கள்

அன்புடன் மலிக்கா said...

மிக அருமையான கதை
அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

நீட் ஸ்டோரி

S.Menaga said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்!! கதை அருமை அக்கா..

asiya omar said...

கருத்துக்களையும்,வாழ்த்துக்களையும் பகிர்ந்த அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.