Monday, May 9, 2011

Nellai Mutton Briyani / வீடியோ சமையல்

நெல்லை மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள், செய்முறையை வீடியோவில் பார்க்கவும். பிரியாணி செய்யும் பொழுது வீடீயோ எடுத்து ப்ளாக்கில் போட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது. இந்த தடவை மகன் விடுமுறையில் இருந்ததால் அவரும் மகனும் உதவினர். இது ப்ரொஃபஷனலாக எடுத்த வீடியோ இல்லை. எதார்த்தமாக எடுத்தது.

எங்க ஊரில் மட்டன் பிரியாணி எப்படி செய்வோமோ, அப்படியே கொடுத்திருக்கிறேன். சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்களை
வைத்து எளிமையாக செய்யக்கூடியது தான்.

பொதுவாக எல்லோரும் பிரியாணி மசாலா, மட்டனுடன் அரிசி அளவிற்கு தகுந்த படி தண்ணீர் அளந்து வைத்து செய்வது வழக்கம், அது தான் இலகுவாக இருக்கும். ஆனால் நான் எப்பவும் முக்கால் வேக்காட்டில் சோறு வடித்து பிரியாணிக்கு ரெடி செய்த மசாலாவில் இருபது நிமிடம் சிறிய தீயில் தம் செய்து எடுத்து தான் பிரியாணி செய்வேன். இந்த பிரியாணி முறையை நான் அறுசுவை சமையற் தளத்தில் மூன்று வருடங்கள் முன்பே சிறிய மாற்றத்துடன் பகிர்ந்திருக்கிறேன்.

நீங்கள் உங்களுக்கு பிடித்த முறையில் மசாலா சேர்த்து இம்முறையில் செய்தாலும் அருமையாக வரும். நான் செய்யும் முறையை படம் எடுத்து போட்டுள்ளேன். உங்கள் டேஸ்டிற்கு நீங்க செய்து பாருங்க. மறக்காமல் கருத்து சொல்லுங்க.

மே மாதம் பத்தாம் தேதி எங்கள் திருமணநாள். அதனை சிறப்பிக்கவே இந்த வீடீயோ சமையல். ஸ்வீட் எடுத்துக்கோங்க...என்னுடைய முதல் வீடியோ சமையல் ப்ரான் மஞ்சூரியன் பார்க்க இங்கு கிளிக்கவும்.--ஆசியா உமர்.

51 comments:

சிநேகிதி said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா..
விடியோ இன்னும் முழுசா பார்க்கவில்லை... இருப்பினும் நம்ம ஊர் பிரியாணி ருசிதானுங்க

athira said...

ஐ... பிரியாணி முளுவதும் எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்.

மிக அருமையாக செய்து காட்டியிருக்கிறீங்க ஆசியா, சூப்பராக இருக்கு.

தம் போடுவதை இப்போதான் நேரில் பார்க்கிறேன்.

athira said...

நாளைய திருமண நாளிற்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.

நீங்களும் குட்டிக் குட்டிக்:) குலாப் ஜாஆஆஆஆஆமூனோடு எங்களை எல்லாம் ஏமாத்திட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:)

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஆசியா.பிரியாணி சாப்பாடும் தந்தீங்க.நன்றி !

Chitra said...

Super! Super ! Super!

HAPPY ANNIVERSARY!!! Thank you for the visual treat! :-)

Anonymous said...

Wow. You can do cookery shows acca. Happy Anniversary too. =))

Samayalsuvaikal said...

super biriyani akka

Yasmin

nellai ram said...

happy birthday sister!

mothu said...

I feel hungry!!

எல் கே said...

திருமண நாள் வாழ்த்துக்கள் ஆசியா

vanathy said...

சூப்பரா இருக்கு. கடைசியில் இருக்கும் ஸ்வீட் எல்லாமே எனக்குத் தான்.

Jay said...

awesome presentation...lipsmacking recipe dear..
Tasty Appetite

FOOD said...

மணநாள் வாழ்த்துக்கள் சகோ!

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் ஆசியா:)!

Nandini said...

Happy Wedding anniversary dear!!!
Fantastic biriyani! Thanks for sharing:)

Kurinji said...

Happy Wedding Anniversary Asiya! Yummy biriyani and jamun.
kurinjikathambam, Event: HRH-Healthy Summer, Roundup: HRH-Puffed Rice

இமா said...

அன்பு ஆசியாவுக்கு இமாவிடமிருந்து மணநாள் வாழ்த்துக்கள். @}->--

Jaleela Kamal said...

ரொம்ப அருமையா இருக்கு ஆசியா.
இனிய திருமண நாள் வாழ்த்துகக்ள் ஆசியா.
ஆஹா கிரில் சிக்கன், மட்டன் பிரியாணி , அழகான குலோப் ஜாமூன் கலக்குது.

Aruna Manikandan said...

Happy wedding anniversary dear :)

ChitraKrishna said...

மிக அருமை ஆசியாக்கா.... வேற என்ன சொல்ல!
திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

புதிய முயற்சி சூப்பர்.. திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

S.Menaga said...

கமகம பிரியாணி சூப்பர்...இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா!!

மங்குனி அமைச்சர் said...

ஹி,ஹி,ஹி....... நான் தலைப்ப பாத்துட்டு ..... வீடியோவ கூட சமைக்க முடியுமான்னு ஒரே கன்பியுஸ் ஆகிட்டேன் மேடம் ........

நல்ல ஐடியா மேடம்

athira said...

vanathy said...
சூப்பரா இருக்கு. கடைசியில் இருக்கும் ஸ்வீட் எல்லாமே எனக்குத் தான்.
///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடேஏஏஏஏசியா வந்திட்டு எல்லாமே தனக்காம்... ஹையோ ஹையோ... தட்டைக் கழுவி வச்சிட்டுப் போகச் சொல்லுங்க ஆசியா.....

அதாரது ரெண்டு எழுத்துக்காரர் வாழ்த்துச் சொல்லியிருக்கினம்ம்ம்ம்ம்ம்:)))))

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா...

பாரக்கல்லாஹ்...இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..எத்தனையாவது திருமணநாள் என சொல்லவில்லையே..

எல்லா நலவளங்களை தந்து,கண்ணியமும்,நிம்மதியும் நிறைந்த வாழ்வை அருள அல்லாஹ் போதுமானவன்..

ஒரு ஜாமுன் எடுத்துக்கிட்டேன்..

பிரியாணி செய்முறையும் அருமை..எப்போதும் போல்..

அன்புடன்
ரஜின்

GEETHA ACHAL said...

அக்கா...சூப்பர்ப்...பகிர்வுக்கு ரொம்ப நன்றி...உங்க பையனுக்கு நன்றி..

இனிய திருமணநாள் வாழ்த்துகள்...குலாப் ஜாமூன் சூப்பர்ப்..

பிரியாணி கலக்கலோ கலக்கல்.நீங்க தான் Briyani Specialist ஆச்சே...

Melvin said...

அன்புள்ள அக்கா, மட்டன் தல்சா செய்வது எப்படி என்று சொல்லிதாருங்கள்.

asiya omar said...

இனிமை பொங்கும் சந்தோஷமான திருமணநாள் நல்வாழ்த்துகள். சூப்பர் பிரியாணி. புதுமையா வீடியோவில் செய்து அசத்தி இருக்கீங்க! நீங்க அசத்துங்க சிஸ். மீண்டும் ஒருமுறை திருமணதின வாழ்த்துகள்.

-இது சகோ.அப்துல் காதர் அனுப்பிய கருத்து.மிக்க நன்றி.

asiya omar said...

வாழ்த்துக்களும்,கருத்துக்களும் தெரிவித்த அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

என் ப்ளாக் தீடிரென்று இரண்டு மணி நேரம் நேற்று முன்னிரவு காணாமல் போய் அப்புறம் கூகிள்க்கு மெயில் செய்து மீட்டு வந்தாச்சு,அவர்கள் டிடெக்ட் செய்து வைத்திருந்தார்கள்,
ஹேக்காகியிருக்கும் நான் விடாமல் சென்று ப்ளாக் கைக்கு
கிடைத்தது.வெரிஃபிகேஷன் கோட் மூலம் திரும்ப கிடைத்தது.கொஞ்ச காலமாகவே என்னால் பிறருக்கு கருத்துக்கள் இடுவது கருத்துக்களை பார்வையிடுவது சிரமமாக இருந்தது,ஆனாலும் போராடி திரும்ப திரும்ப முயற்சித்து வந்தேன்.என்ன பிரச்சனை என்று தெரியலை.இப்பமும் நிறைய பேர் என் ப்ளாக் பார்வையிட முடியலைன்னு மெயில் மூலம் சொல்றாங்க.கவலையாகத்தான் இருக்கு.எல்லாரும் அவரவர் ப்ளாக்கை பத்திரமாக பார்த்துக்கோங்க.நேற்று ப்ளாக் காணாமல் போய் நான் பதட்டப்பட்டது
எனக்கே தெரியும்.

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி, சாரி பார் தி டிலே வாழ்த்து மேடம்........

"திருமண நாள் வாழ்த்துக்கள்"

இப்படிக்கு

ஆவ்வ்வ்வ் ......... தூக்க கலக்கத்தில் வாழ்த்துசொல்ல மறந்துவிட்டு பின் அசடுவழிந்து வாழ்த்துவோர் சங்கம்

RAZIN ABDUL RAHMAN said...

அக்கா,,,

ப்ளாக் காணாமல் போனதையும்,அதை தாங்கள் எப்படி மீட்டீர்கள் என்பதையும்,விரிவாக சொன்னால்,நாங்களும் தெரிந்துகொள்வோமே..

ஏன்னா..சர்ச்சைகள் இல்லாமல் இருக்கும் உங்களின் வலைகே இந்த நிலையானால்,அப்போ...நாங்கள்ளாம் ஜாக்கிரதையாத்தான இருக்கனும்...
----------------------
இதுக்கு இன்னோறு வழியும் இருக்கு.நீங்க குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது ஒவ்வொரு பதிவுக்கு பிறகும்,ப்ளாக்கை ஒரு பேகப் செய்து கொண்டால்..ஒருவேலை கிடைக்காமல் போனாலும்,பதிவுகளை மீட்டு வேரொறு வலை உறுவாக்கிக் கொள்ளலாமே..
---------
dashboard - settings - basic - export blog.

அன்புடன்
ரஜின்

Vijiskitchencreations said...

திருமண நாள் வாழ்த்துக்கள்.
நல்ல ஐடியா தொடருங்க வீடியோ ரெசிப்பிஸ்.
தம் போடுவதை நானும் சொல்லி தான் கேட்டிருக்கேன். இங்கு தான் நன்றாக பார்க்க முடிந்தது.

thoppae kuduva said...

Ms. Asiya,
Congratulations on your successful blogging.
It was delightful to see someone cook live biryani traditinally. It sure looks tasty. I have a few queries.
How long did you keep in dum?
Did you add salt to rice?
How much water did you add to mutton?
There is no whole spice added to biryani, is that nellai special?
Thanks for the wonderful presentation.
Hearty wishes for your anniversary.

asiya omar said...

thoppae kuduva நீங்க யாருன்னு தெரியலை என்றாலும் கருத்திற்கு நன்றி.
ஏற்கனவே நான் இது ப்ரபஷனல் வீடியோ இல்லைன்னு சொல்லியிருக்கேன்,20 நிமிடம் தம் போடனும்னு எழுதியிருக்கேன்,சோறு உப்பு போட்டு தான் வடிக்க வேண்டும்,மட்டனில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்,அதிலே தண்ணீர் ஊறும்.நான் ஸ்பைசஸ் தூள் செய்து தான் போடுவேன், வாயில் அகப்படாது,தூக்கி போடவும் வேண்டாம்.நான் ஏற்கனவே உங்க டேஸ்டிற்கு மசாலா சேர்த்து இந்த முறையில் செய்யலாம் என்பதனை தெரிவித்து இருக்கிறேன்.நான் எளிய முறையில் செய்யும் முறையை தெரிவித்து இருக்கிறேன்.ப்ளாக்கில் மற்ற பிரியாணி ரெசிப்பிக்களும் கொடுத்துள்ளேன்..

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

மகி said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்த்துக்கள் ஆசியாக்கா! குலாப் ஜாமூன் ச்ச்சூப்பர்ர்ர்ர்ர்ரா இருக்கு. :P :P :P

வீடியோ நல்லா இருக்கு.கலக்குங்க!

மாதேவி said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஆசியா.

நாடோடி said...

திரும‌ண‌ நாள் வாழ்த்துக்க‌ள் ச‌கோ...

angelin said...

HAPPY ANNIVERSARY ASIYA.
THANKS FOR THE RECIPES .

ஹர்ஷினி அம்மா said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.

video super...

சுந்தரா said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஆசியா!

பிரியாணியும் ஸ்வீட்டுமா அசத்திட்டீங்க :)

புதிய முயற்சிக்கும் வாழ்த்துக்கள்!

zumaras said...

ஸலாம்
தங்களின் வீடியோ சமையல் எனக்கு மிகவும் பயனுளிக்குது.ந்ன்றி.

ஒ.நூருல் அமீன் said...

உங்கள் வீடியோ வர்ணனைகளுடன் கூடிய சமையல் கிளாஸ் சூப்பர்.
-நிஷா நூருல் அமீன்
-துபாய்

Sangeetha Nambi said...

First time to ur space. Wondered on checking all ur recipes. Happy to follow u :)

-S
http://recipe-excavator.blogspot.com

Sumi said...

romba nalla solli irukeenga..chickenum ippadi samikalam, naanum ithae methhodla try panuren.Unga blog romba nalla iruku..

Mano Saminathan said...

பிரியாணி செய்யும் விதத்தை வீடியோவில் நன்றாக விளக்கியிருக்கிறீர்கள் ஆசியா! அதற்கும் திருமண‌ நாளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Ali Ahmed said...

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா ,அலுமினியம் பேப்பரை திறந்தவுடன் கமகம பிரியாணியின் வாசனை ஜிட்டாஹ் வரைக்கும் பரவியது நல்ல வீடியோ ,சூப்பர்.

sathya r said...

Hi pls tell how many grams of ginger and garlic used for preparing gg paste

Asiya Omar said...

Minimum use 50 gm ginger and 50 gm garlic for paste.