Tuesday, May 3, 2011

மஷ்ரூம் ரைஸ் / Mushroom Rice

தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி - 300கிராம்
காளான் - 200கிராம்
வெங்காயம் - 1
கொடைமிளகாய் நறுக்கியது- ஒருகப்
முட்டை கோஸ் நறுக்கியது- ஒருகப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மல்லி,புதினா நறுக்கியது - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி பழம்
உப்பு - தேவைக்கு

காளானை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்,
சின்னதாக நறுக்கவும்.
கொடைமிளகாய், முட்டை கோஸ்,வெங்காயம்,மல்லி,புதினா நறுக்கி வைக்கவும்.அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் அலசி ஊறவைத்து சாதம் உதிரி உதிரியாக வெந்த பின்பு வடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு,காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்க்கவும், மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.


பின்பு நறுக்கிய காளான்,கோஸ், கொடைமிளகாய் சேர்த்து சிறிது உப்பு தேவைக்கு சேர்த்து வதக்கவும்.காய்கள் வெந்த பின்பு வடித்த சாதம் போட்டு நன்கு பிரட்டி விடவும்.பாதி எலுமிச்சை பழம் பிழியவும், உப்பு சரி பார்த்து மீண்டும் பிரட்டி விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து 5நிமிடம் கழித்து மூடி திறக்கவும்.

சுவையான மஷ்ரூம் ரைஸ் ரெடி. டேஸ்ட் செமையாக இருக்கும்.சிப்ஸ், ஏதாவது ஃப்ரை அயிட்டத்துடன் பரிமாறவும்..

--ஆசியா உமர்.

34 comments:

அன்புடன் மலிக்கா said...

அருமையான ரெசிபிக்கா. போட்டோக்களும் அருமை..

நிரூபன் said...

ரெசிப்பியினைப் படித்து, செய்யத் தூண்டும் வகையிலும், நா ஊறச் செய்யும் வண்னமும் போட்டோக்கள் அழகு சேர்க்கின்றன, நம்ம ஊரிலை மஷ்ரூம் பயிர மாட்டார்கள். மஷ்ரூம் வாங்க வேண்டும் என்றால் நகர்ப்புற மார்க்கட்டுக்கு தான் போக வேண்டும்,

ஆனாலும் அம்மா கிட்ட சொல்லி ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

asiya omar said...

மலிக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

நிரூபன் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.

Priya Sreeram said...

love this yummy looking rice!

vanathy said...

சூப்பர் ரெசிப்பி. அழகான படங்கள்.

எம் அப்துல் காதர் said...

இதுவரை மஷ்ரூம் சாப்பிட்டதில்லை. உங்களின் இந்த மெனுவை பார்த்து செய்து சாப்பிடனும், டேஸ்ட் எப்படி இருக்கோ தெரியல. சாப்பிட்டுட்டு எழுதுறேன்!!

S.Menaga said...

சூப்பரா இருக்குக்கா...

சசிகுமார் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா.

சிநேகிதி said...

வாவ்... ரொம்ப சூப்பராக இருக்கு... செய்துபார்க்க...தூண்டும் படங்கள்... அருமை

asiya omar said...

ப்ரியா ஸ்ரீராம் மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு மிக்க நன்றி.செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலையே! குழைந்தைகள் டேஸ்டுக்கு என் சமையல் இருக்கும்..

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.

சசிகுமார் மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

Saras said...

Super recipe!!!

Mahi said...

நல்லா இருக்கு ஆசியாக்கா! மஷ்ரூம்-வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து..ஹெல்த்தி ரெசிப்பி!

savitha ramesh said...

Sila nerathula,oru madhiri vasanai adikkum mushroom.adhai eppadi avoid panradhu.

எல் கே said...

பர்சென்ட்

அனாமிகா துவாரகன் said...

காளான் எனக்கு மிகவும் பிடித்தமானது. இங்கே டின்களில் துண்டு போட்டு வருபவற்றை வாங்கி நிறைய வெங்காயம் போட்டு வதக்கி, பால்விட்டு அது சுண்டும் வரை நான் போட்டு வரட்டுவதில் காளான் சிலவேளைகளில் காணாமல் போகும். ஹி ஹி. அதை சாதத்தில் பிரட்டி காளான் பிரியாணி என்று பொய் சொல்லி கொடுப்பேன். காய்க்றிகள் போட்டு செய்ததில்லை. இன்று இரவு செய்தால் போச்சு. =)) காளான் வாடை போக என்ன செய்ய வேண்டும் என்று யாருக்காவது தெரியுமா? அதற்காகத் தான் பால், நிறைய மசாலா எல்லாம் போட்டு செய்கிறேன். தேங்காய்ப் பால் கொழுப்பு மிக்கது. சாப்பிடும் போது கொஞ்சம் யோசனையாகவே இருக்கும்.=((

அமைதிச்சாரல் said...

நிச்சயம் நல்லாவே இருக்கும்.

asiya omar said...

சரஸ் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

சவிதா நான் வாங்கும் காளானில் எந்த வாடையும் இருந்ததில்லை,வெந்நீரில் சிறிது நேரம் போட்டு நன்கு அலசி சமைப்பேன்...கருத்திற்கு நன்றி.

asiya omar said...

எல்.கே.வருகைக்கு நன்றி..

அநாமிகா வருகைக்கு மகிழ்ச்சி.காளானில் எந்த வாடையும் தெரிந்ததில்லை,நான் சூப்பில் கூட அடிக்கடி சேர்ப்பதுண்டு,என் மகனுக்கு மஷ்ரூம் மிகவும் பிடிக்கும்,அதனால் அடிக்கடி சமைத்து வருகிறேன்,ஃப்ரெஷாக இங்கு கிடைக்கிறது..என்னோட கல்லூரியில் வில்லேஜ் ஸ்டே ப்ரோக்கிராம் அப்ப மஷ்ரூம் கல்டிவேட் கூட செய்திருக்கிறேன்.விவசாயிகளுக்கு நாங்கள் டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டினோம்,அது ஒரு காலம்..

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.ஒரு சிலருக்கு காளான் டேஸ்ட் பிடித்து போகும்,செய்து பாருங்க..

Kurinji said...

so tempting rice Asiya. Thanks for sharing.
kurinjikathambam, Event: HRH-Healthy Summer, Roundup: HRH-Puffedrcie

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா.. அக்கா சைவத்துக்கு மாறிட்டாங்க..

நாடோடி said...

ம‌ஷ்ரூம் நான் வீட்டில் சாப்பிட்ட‌து இல்லை.. ஹோட்ட‌லில் தான் ச‌ப்பிட்டு இருக்கிறேன்.. இந்த‌ ரெசிபியை ட்ரை ப‌ண்ணுறேன்.

ROBERT CLIVE said...

we tried it today nice thankyou

jagadeesh said...

Akka very good.

FOOD said...

நல்ல நல்ல பகிர்வுகள். நன்றி சகோ!

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.

சி.பி. செந்தில் குமார் மிக்க நன்றி.

நாடோடி மிக்க நன்றி.

ராபர்ட் கிலைவ் மிக்க நன்றி.

ஜெகதீஸ் மிக்க நன்றி.

ஃபுட் மிக்க நன்றி.

சாகம்பரி said...

எந்த வகை மஸ்ரூம் என்று கேட்கத்தேவையே இல்லாமல் உங்கள் படங்கள் அசத்துகின்றன. அருமையான ரெசிபி. Thank you Madam.

அப்பாவி தங்கமணி said...

Fridge ல மஷ்ரூம் இருக்கு... இன்னிக்கி evening இதை தான் செய்யலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்... உங்க ஸ்டைல் try பண்ணி பாத்துடறேன்... தேங்க்ஸ் ஆசியா...:))

GEETHA ACHAL said...

Love the mushroom rice...Thanks for sharing..

Jaleela Kamal said...

மஷ்ரூம் நான் சாப்பிட மாட்டேன்
பெரியவனுக்கு ரொம்ப பிடிக்கும், எப்பாவாவது தான் கிரேவி பிரை செய்வது.

நல்ல இருக்கு

asiya omar said...

சாகம்பரி மிக்க நன்றி.

அப்பாவி மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

poorni sri said...

super