Monday, September 12, 2011

சப்பாத்தி கல்

இந்த சப்பாத்திகல் எனக்கு பரிசாக வந்தது. எங்கள் ஊரைச் சார்ந்த இங்கு நீண்ட நாட்கள் வேலை பார்த்து சென்ற இஞ்சினியர் அவர்கள் பரிசாக தந்தது. எனக்கு ரொம்ப பிடித்தமானது. வீடு கட்டும் கட்டுமான கம்பெனியில் வேலை பார்த்ததால் அங்கு உள்ள மீதமான துண்டு மார்பிளில் அழகாக வடிவமைத்து தந்தது. அதனை நானும் பலவருடங்களாக பாதுகாத்து வருகிறேன். பாத்திரங்கள் என் உபகரணங்கள் பகுதிக்கு எழுதி நாளாச்சு. விடுமுறைக்கு சென்றதால் இரண்டு மாதமாக சப்பாத்தி சுடுற வேலையே இல்லாமல் போச்சு. சுகமாக கையை அலம்பிட்டு நேரத்திற்கு சாப்பிட்டதில் சமையலே கொஞ்சம் மறந்து போச்சு. ஒரு வழியாக செட் ஆகி சமைக்க ஆரம்பிச்சாச்சு.


பொதுவாக என் பிள்ளைகளுக்கு கோதுமை மாவும் மைதாவும் சரிசமமாக கலந்து சுடுற பரோட்டோ போன்ற ரொட்டி தான் ரொம்பவும் பிடிக்கும்.


அதை தான் இப்ப இங்கு சுட்டு இருக்கிறேன். நீங்களும் கலந்து பரோட்டா சுட்டு பாருங்க. அருமையாக சாஃப்டாக இருக்கும், நிறைய எண்ணெய் தேவைப்படாது.

வீடு கட்டும் பொழுது மிச்சமாகும், கிரானைட், மார்பிள் அல்லது டைல்ஸில் அழகாக வசதியாக இதைப்போல ஒரு சப்பாத்தி கல் செய்து வாங்கிக்கோங்க. உபயோகமாக இருக்கும்.--ஆசியா உமர்.

34 comments:

Jaleela Kamal said...

சப்பாத்தி கல் பார்க்கவே சூப்பராக இருக்கு

ஆனால் இங்கு பழைய முன்பு கொண்டு வந்த மரக்கல் தான் அதில் செய்தால் தான் சரியாவரும்

இது போல் மார்பிலும் நல்ல வரும்

இதற்கு முன் கிச்சன் திண்டில் திரட்டுவேன் சூப்பரா வரும் இத பார்த்ததும் அப்படி தான் இருக்கு

கண்டிப்பா வீடு கட்டுபவர்களிட்ம் சொல்லனும்

asiya omar said...

வருகைக்கு மகிழ்ச்சி.ஆமாம் ஜலீ,கிச்சன் திண்டு எல்லாம் இப்ப நல்ல பள பளன்னு கல்லில் போடுவதால் அத்னை சுத்தம் செய்து போட்டால் சூப்பராக இருக்கும்,எங்க வீட்டு சமையற்காரர் அதில் தான் பரத்தி சுடுவார்.அருமையாக வரும்.

துளசி கோபால் said...

இங்கே பேஸ்ட்ட்ரி ரோலரும் கல்லும் மார்பிளில் கிடைச்சதுங்க ஒரு காலத்தில். நான் ஒரு கருமி கல்லு மட்டும் வாங்கினேன். அது சின்ன வட்டக்கல்லின் மேல் பெரிய வட்டக்கல்லா டபுளா இருக்கு. நாம் சப்பாத்தி தேய்க்கும்போது தானே சுத்திச்சுத்திப்போகும். நாம் எடுத்துத் திருப்பிப்போட்டு பரத்த வேணாம். லேஸி சூஸன் மாதிரின்னு வச்சுக்குங்க.

அதுலே தாஜ்மஹாலை வச்சுருந்தேன். யாரும் தொடாம பீடத்தைச் சுத்திப்பார்க்கலாம். இப்போதைக்கு அது புள்ளையார் உக்காரும் மணையா இருக்கு நம்ம ஃபோயரில்.

அப்பச் சப்பாத்தி எதுலே தேய்க்கிறேன்னு கேட்டா கிச்சன் கவுண்டர் டாப் ஒர்க் பெஞ்சில்தான்:-)

இப்போதான் மார்பிள் ரோலர் ஒன்னு வாங்கிக்கலாமுன்னு தேடறேன். இந்த மாடல் கிடைக்கலை. இந்த சாக்குலே அப்பப்ப ஷாப்பிங் போகணும்:-)))))

Kousalya said...

ஹாய் தோழி நலமா?

சப்பாத்தி கல் பார்க்க அழகா இருக்கு. டைல்ஸ் உபயோகபடுத்தியது போக மீதம் இருந்ததை நான் இப்ப பயன்படுத்துறேன்.மரத்தை விட எண்ணெய் தடவி சப்பாத்தி செய்யணும் என்றால் இதுபோல் மார்பிள், டைல்ஸ் நல்லா இருக்கும்.

சப்பாத்தி, சைடு டிஷ் இரண்டும் சூப்பர்

ஸாதிகா said...

ஆசியா,இங்கும் கடைகளில் இதே மார்பிளில் சப்பாத்தி தேய்க்கும் கல் கிடைக்கின்றது.அழகாக மூன்று பக்கமும் கால்கள் வைத்து.ஆனால் நான் உபயோகப்படுத்துவது துபை லூலூவில் வாங்கி வந்த மரத்திலானான சப்பாத்திக்கட்டை.இது லைட் வெயிட் ஆக வசதியாக உள்ளது.பரோட்டாவும்,கறி ஆனமும் சூப்பர்!

அமுதா கிருஷ்ணா said...

வீடு கட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அருமையான ஐடியா.நன்றி..

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

asiya omar said...

துளசி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

கௌசல்யா வாங்க,மிக்க நலம்.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா வருகைக்கும் மகிழ்ச்சி.மரத்தில் லைட் வெயிட்டாக சப்பாத்தி கட்டையும் சூப்பர் தான்,ஆனால் இது ஸ்பெஷலாக வந்தது ஆகையால் இதனை உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன்.எப்பவும் எங்க வீட்டில் பரோட்டாவிற்கு மட்டன் போன் சூப் தான் சூப்பர் காம்பினேஷன்.

அமைதிச்சாரல் said...

இங்கே எங்கூட்ல ஃபர்னிச்சர் வேலைகள் செய்யும்போது மிச்சமான பலகையும் சன்மைக்காவும் கொண்டு, அந்தப் பையனே அருமையானதொரு சப்பாத்திப் பலகை செஞ்சு கொடுத்தான்,(மேட்ச்சிங் :-)) கல்லு மாதிரி அப்டியே இருக்குது.

பரோட்டா பார்க்க அசத்தல் :-)

asiya omar said...

அமுதா வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி,ஒன்றில்லை, இரண்டு கூட செய்து வைத்து கொள்ளலாம்.நான் கல் பெரிதாக இருப்பதால் இந்த கல்லில் சின்னதாக ஆறு பூரி தேய்த்து விட்டு அப்படியே வரிசையாக சூடாக போட்டு கொடுக்க வசதியாகவும் இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

சப்பாத்திக்கல் ரொம்பவும் அழகு ஆசியா! நான் தபோது காய் வெட்டும் கண்ணாடிப் பலகையிலேயே சப்பாத்தி செய்து கொள்கிறேன். நானும் கோதுமை மாவுடன் சிறிது மைதா சேர்த்து சப்பாத்தி செய்வதுன்டு. சப்பாத்தி மிகவும் மென்மையாக இருக்கும்.

athira said...

சப்பாத்திக் கல்லும் சூப்பர், பரோட்டாவும் சூப்பர்... ஆனால் பரோட்டாவை எப்படிச் சுத்தினனீங்க எனக் காட்டியிருக்கலாமே...

அதேபோல சமோசா எப்படி மடிப்பது என்பதுக்கும் ஆராவது ஸ்டெப் பை ஸ்டெப்பாக பதிவு போட்டால் மிகவும் சந்தோசப்படுவேன்.

ஜலீலாக்கா இங்கயா இருக்கிறீங்க:))), இருங்க வாறேன்:))

கோவை2தில்லி said...

சப்பாத்திக் கல் பார்க்கவே நல்லாயிருக்குங்க.

நான் சப்பாத்தி செய்வதாய் இருந்தால் மரத்தால் ஆன சப்பாத்திக் கல்லிலும், ஸ்டஃப் பண்ணி பராட்டா செய்வதாய் இருந்தால் மார்பிள் கல்லால் ஆன சப்பாத்திக் கல்லிலும் செய்வதுண்டு. ஒட்டாமல் வரும்.

வெங்கட் நாகராஜ் said...

சப்பாத்திக் கல் அழகாய் இருக்கிறது சகோ..

தில்லியின் பதினோறு வருட பிரம்மச்சாரி வாழ்க்கையில் தினம் தினம் சப்பாத்தி செய்து பழகியதால் நமக்கு மரத்திலோ, மார்பிள் கல்லோ, அல்லது கிச்சன் டாப்-ஓ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. :)))

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நலமா? பரோட்டாவும்,கறி சால்னாவும் சூப்பர்!


//ஸாதிகா said...

ஆசியா,இங்கும் கடைகளில் இதே மார்பிளில் சப்பாத்தி தேய்க்கும் கல் கிடைக்கின்றது.//

வரும் போது ஒன்னு வாங்கிட்டு வரவும்.

angelin said...

//இரண்டு மாதமாக சப்பாத்தி சுடுற வேலையே இல்லாமல் போச்சு//
ஊர்ல சென்றும் பொண்ணு என்னை சப்பாத்தி சுட வச்சா .
கல் அழகா இருக்கு ஆசியா ,ரெண்டு வருஷம் முன் ஐஸ் எக்சிபிஷன்ல ஒரு
சப்பாத்தி மேக்கர் வாங்கினேன் இங்கே வந்து சுவிச் எல்லாம் மாத்தி போட்டு பாத்தா .வீட்ல FUSE போய்டுச்சு .அவ்வ்வ்வவ் நான் வாங்கி வந்தது
அமெரிக்க நாட்டு பயன்பாட்டுக்கு .120 VOLT.அதில் இருந்து கட்டை தான் .

vanathy said...

சப்பாத்திக் கல் அழகா இருக்கு. நானும் 2 மாவும் மிக்ஸ் செய்து தான் சப்பாத்தி செய்வதுண்டு.

ராமலக்ஷ்மி said...

இங்கே ஒரு மார்பிள் கடையில் இப்படி தேடி வருகிறார்கள் என ரெடியா செய்தே விற்கிறார்கள்.

நல்ல பகிர்வு.

இராஜராஜேஸ்வரி said...

"சப்பாத்தி கல்" அழகான பயனுள்ள பொருள்.பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Kanchana Radhakrishnan said...

சப்பாத்தி கல் பார்க்கவே சூப்பராக இருக்கு.

GEETHA ACHAL said...

Chapathi kal looks so nice...It a good way to make like this..

எம் அப்துல் காதர் said...

// கோதுமை மாவும் மைதாவும் சரிசமமாக கலந்து சுடுற பரோட்டோ//

இந்த ஐடியா சூப்பரா இருக்கே!! செய்து பார்க்கச் சொல்வோம்.

எம் அப்துல் காதர் said...

athira said...

//ஆனால் பரோட்டாவை எப்படிச் சுத்தினனீங்க எனக் காட்டியிருக் கலாமே அதேபோல சமோசா எப்படி மடிப்பது என்பதுக்கும் ஆராவது ஸ்டெப் பை ஸ்டெப்பாக பதிவு போட்டால் மிகவும் சந்தோசப் படுவேன்.//

ஸ்டெப் பை ஸ்டெப்பாக.... பூஸ் ம்ம்ம்ம் வெளங்கிரும்..

Lakshmi said...

மார்பிள் போலவே க்ரேனைட்டிலும் இதுபோல சப்பாத்திக்கல் கிடைக்குது நான் அது தான் யூஸ்பண்ணுரேன்.

ஆமினா said...

4 பேர் கொண்ட பேமிலிக்கு 1 சப்பாத்தி சுட்டா போதும் போல :-)

தெய்வசுகந்தி said...

கல் அழகு!!! நமக்கு கிச்சன் கவுண்டர் டாப்தான் வசதி!!

பித்தனின் வாக்கு said...

nalla tips

சப்பாத்தி கல் பார்க்கவே சூப்பராக இருக்கு

annal kulavithan melisa irukku. paravayillai unka pathivai kindal seythal adi konjam than kidaikkum.


sari sari sappathi kallai neenga vaichukonga. parathavai nan eduthuk kondu oodi vidarengo

பித்தனின் வாக்கு said...

சப்பாத்திக் கல்லும் சூப்பர், பரோட்டாவும் சூப்பர்... ஆனால் பரோட்டாவை எப்படிச் சுத்தினனீங்க எனக் காட்டியிருக்கலாமே...

அதேபோல சமோசா எப்படி மடிப்பது என்பதுக்கும் ஆராவது ஸ்டெப் பை ஸ்டெப்பாக பதிவு போட்டால் மிகவும் சந்தோசப்படுவேன்.


athira kelvi romba correct. eppadi pannuvathu enru step step pa solli seythu enakku tharungal.

eppadi sappiduvathu enru step step ah nan solli therukinren.

hi hi

ippadiki
sappattu raman

asiya omar said...

ரத்னவேல் சார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஆஹா அமைதிச்சாரல் இதுவும் நல்ல ஐடியா தான்.மகிழ்ச்சி.

asiya omar said...

மனோ அக்கா வாங்க,மிக்க மகிழ்ச்சி.

அதிரா இது ஒரு பெரிய விஷயமில்லை,ஸ்டெப் பை ஸ்டெப் போட்டுவிட்டால் போச்சு.வருகைக்கு மகிழ்ச்சி.

கோவை2தில்லி,வெங்கட் சகோ இருவரும் தம்பதி சகிதமாய் வந்து கருத்து சொன்னமைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ஆயிஷா அபுல் மிக்க நன்றி.

ஏஞ்சல் வருகைக்கு நன்றி.

வானதி நன்றி.

ராமலஷ்மி நன்றி.

ராஜேஸ்வரி நன்றி.

காஞ்சனா நன்றி.

கீதா ஆச்சல் நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர்

லஷ்மிமா

ஆமினா

தெய்வசுகந்தி

பித்தனின் வாக்கு

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அப்பாவி தங்கமணி said...

நல்ல creativeவான விசயமா இருக்கே.... நல்ல உபயோகமான பரிசு தான்

Padhu said...

Very nice gift!