Friday, September 16, 2011

கேப்ஸிகம் சிக்கன் / capsicum chicken

தேவையான பொருட்கள் ;
சிக்கன் - 300கிராம்
கொடைமிளகாய் - 100கிராம்
வெங்காயம் -100கிராம்
தக்காளி - 100கிராம்
இஞ்சிபூண்டு விழுது -1டீஸ்பூன்
கரம்மசாலா - கால்டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1டீஸ்பூன்
தயிர் - 1டீஸ்பூன்
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


சிக்கன் சுத்தம் செய்து துண்டுகளை கழுவி தண்ணீர் வடித்து எடுக்கவும். எலும்பில்லாமல் இருந்தால் அருமையாக இருக்கும்.


சிக்கனோடு சில்லி பவுடர், இஞ்சிபூண்டு பேஸ்ட், கரம் மசாலா, தயிர், உப்பு சேர்த்து க்லந்து வைக்கவும்.


ரெடி செய்த சிக்கனை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்க்காமல் 3விசில் வைத்து எடுக்கவும்.தண்ணீர் ஊறியிருந்தால் வற்ற வைக்கவும்.
பக்குவமாக வெந்து எடுக்கவும்.


மீடியம் சைஸ் கொடைமிளகாய், வெங்காயம், தக்காளி மூன்றையும் விரும்பிய வண்ணம் நீளவாக்கிலோ சதுரமாகவோ கட் செய்து கொள்ளவும்.


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும் வெங்காயம் கொடைமிளகாய் சேர்த்து சிறிது வதக்கி பின்பு தக்காளி சேர்க்கவும்.


தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். சிக்கனில் உப்பு சேர்த்து இருப்பதால் அளவாக சேர்க்கவும்.


கொடைமிளகாய், வெங்காயம் தக்காளி சிறிது வதங்கியதும் வேகவைத்த சிக்கனை சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும், மணம் சூப்பராக வரும்.

சிக்கன் கொடைமிளகாய் வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்ந்து பார்க்கவே சூப்பராக இருக்கும்.
சுவையான கேப்ஸிகம் சிக்கன் ரெடி. வாவ் ! செமையாக இருக்கும்.

செய்து டேஸ்ட் பாருங்க. இது என் தங்கை நாச்சியாவோட ரெசிப்பி.

--ஆசியா உமர்.

21 comments:

Samantha said...

am hungry...yummy yummy

asiya omar said...

thanks samantha for your first visit.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

எத்தனை அழகானப் புகைப்படங்களுடன் கூடிய சமையல் பதிவு . பார்க்கும்பொழுதே சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது . தெளிவான செய்முறை விளக்கம் .பகிர்ந்தமைக்கு நன்றி

athira said...

அடடா சூப்பர் ஆசியா... இதேபோல சைனீஸ் புஃபே யில் இருக்கும், ஆனா அது உறைக்காது, சோஸ் சேர்த்திருப்பார்கள்.

நல்ல குறிப்ப்ப்ப்ப்ப்ப் ஆசியா.

பித்தனின் வாக்கு said...

looking good.

S.Menaga said...

சூப்பர்ர் காம்பினேஷன்...

GEETHA ACHAL said...

வாவ்...ரொம்ப சூப்பராக இருக்கின்றது...

சே.குமார் said...

Wow... arumaiyana kurippu akka.

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

ஸாதிகா said...

வித்த்யாசமாக உள்ளது ஆசியா,காரமே இல்லாமல் பிள்ளைகளுக்கு உகந்தது.

asiya omar said...

பனித்துளி சங்கர் வருகைக்கும் அழகிய கருத்திற்கும் மகிழ்ச்சி.

அதிரா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி, இதுவும் உறைக்காது.

பித்தனின் தங்களின் தொடர் வருகைக்கு நன்றி.

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி மேனகா.

கீதா மிக்க மகிழ்ச்சி,நன்றி.

தம்பி குமார் மிக்க நன்றி.

asiya omar said...

மாய உலகம் வருகைக்கும் அறிமுகத்திற்கும் மகிழ்ச்சி நன்றி.

ஆமாம் தோழி ஸாதிகா,மிக்க மகிழ்ச்சி.செய்து கொடுங்க பேரனுக்கு.

Jaleela Kamal said...

நல்ல இருக்கு ஆசியா, உங்கள் தங்கை நாச்சியாவுக்கு வாழ்த்துக்கள்.
கேப்ப்சிகம் சேர்த்தாலே சுவை அபாரம் தான்

ChitraKrishna said...

அருமை ஆசியாக்கா. இந்த மாதம்(புரட்டாசி) முழுவதும் பெருமாளுக்கு விரதம். அடுத்த மாதம் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

asiya omar said...

ஜலீலா கருத்திற்கு மகிழ்ச்சி,ஆமாம் கேப்ஸிகம் எதனோடு சேர்த்தாலும் அது ஒரு தனி சுவையைத் தரும்.

சித்ரா வாங்க,புரட்டாசியா? வெரைட்டியாக வெஜ் செய்து அசத்துவீங்க.கருத்திற்கு நன்றி.

சிநேகிதி said...

ம்ம்.. அசத்தலாக இருக்கு

மனோ சாமிநாதன் said...

காப்ஸிகம் சிக்கன் சுலமாகச் செய்யக்கூடியதாய் இருக்கிறது ஆசியா! விளக்கப்படங்களும் வழக்கம்போல தெளிவாகவும் அருமையாகவும் இருக்கிறது!

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi,this is my first time here in this luvly blog and luv ur Capsicum Chicken curry very much.Glad to know a fellow Tamilian Blogger.Happy to follow U.

Kannan said...

சூப்பர் சமையல்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

MyKitchen Flavors-BonAppetit!. said...

Naziya's Capsicum Chicken recipe is luking super-delicious Asiya. Supergood infact.Thanks for dropping in and the add.