Tuesday, September 6, 2011

கார்லிக் க்ரீன் சில்லி சிக்கன் / garlic green chilli chicken

தேவையான பொருட்கள் ;
சிக்கன் துண்டுகள் -1கிலோ
முழு பூண்டு -1
பச்சை மிளகாய் - 12
கொத்தமல்லி இலை -ஒருகையளவு
அஜினோமோட்டோ - கால்டீஸ்பூன்(விரும்பினால்)
சோயா சாஸ் - 2டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -4டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

6-8 நபர்களுக்கு

செய்முறை:

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி வடிகட்டி வைக்கவும்.


பச்சைமிள்காய், மல்லி இலையை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.


பூண்டுப்பல்லை இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.


முதலில் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.


பூண்டு சிறிது வதங்கியவுடன் அரைத்த மிளகாய் கொத்தமல்லி கலவை போட்டு சிறிது வதக்கவும்.


சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேகவிடவும், விரும்பினால் அஜினோமோட்டோ சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்கவேண்டாம், சிறிது தேவைக்கு உப்பு சேர்க்கவும், சிக்கனிலேயே தண்ணீர் ஊறும்.கால்மணி நேரத்தில் சிக்கன் வெந்துவிடும்.


சிக்கன் வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது சோயாசாஸ் ஊற்றி பிரட்டி விடவும். அடுத்து அரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்லோரை விட்டு பிரட்டி விடவும். சிக்கனில் கார்ன்ஃப்லோர் கோட் ஆகி எண்ணெய் தெளிந்து வரும். அடுப்பை அணைக்கவும்.


சுவையான கார்லிக் கீரீன் சில்லி சிக்கன் ரெடி.

செய்து பாருங்க சுவை அபாரமாக இருக்கும்.

வெங்காயம், தக்காளி, தயிர், இஞ்சி, கரம்மசாலா எதுவும் கிடையாது,

ஆனாலும் ருசியாக இருக்கும், பூண்டு பிடிக்கவில்லை என்றால் கூட சேர்க்காமல் செய்தாலும் சூப்பராக இருக்கும்.காரம் தேவைப்படுவோர் இன்னும் மிளகாய் தேவைக்கு சேர்த்து கொள்ளலாம்.

இது சைட் டிஷ் ஆக ரைஸ் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

-ஆசியா உமர்.


22 comments:

ஸாதிகா said...

பச்சை நிறத்தில் பார்க்கவும் வித்தியாசமாக உள்ளது தோழி!

Saras said...

New and different dish, Thanks for sharing..

Yuvana's Favourites said...

thanks for this simple and different recipe. bookmarked

அமைதிச்சாரல் said...

வித்தியாசமா இருக்கு.

nishakhaja said...

UR RECIPE FNE MY DEAR.........

nishakhaja said...

hei i lve dis taste my dear

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

சரஸ் மிக்க நன்றி.

யுவனா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

asiya omar said...

நிஷாக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.செய்து பாருங்க.இது பெங்களூர் பெரிய மைனியோட ஸ்பெஷல் ரெசிப்பி,நான் பூண்டு மட்டும் அடிஷனலாக சேர்த்து செய்து இருக்கிறேன்.எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போனது.

jagadeesh said...

hi akka.hw r u? long time no see.hope u fine. New dish again, thanks

angelin said...

நான் இந்த ரெசிப்பி செய்ய இதனை நாள் தேடி கொண்டிருந்தேன் ஆசியா ..
பகிர்வுக்கு மிக்க நன்றி

athira said...

சூப்பர் ஆசியா, ஒரு நாளைக்கு செய்து பார்க்க வேண்டும்.

மஞ்சுபாஷிணி said...

அருமையான சமையல் பக்குவத்தில் பகிர்ந்த கார்லிக் சிக்கன் குறிப்பு சிறப்பு தோழி....

நானும் செய்து பார்க்கிறேன்பா..

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

ஆமினா said...

ஆ.............

பாக்கவே ............

பசிக்குது :-))))))

savitha ramesh said...

seekiram seyyanum aasaya irukku.try pannitu solren.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப நல்லாருக்கு...என் ப்ளாக்கில் மீண்டும் ஒருமுறை ஃபாலோயராக இணைந்துகொள்ளவும்

Jaleela Kamal said...

ஆசியா எப்படி இருக்கீங்கஸாதிகா அக்காவுக்கு பிறகு இரண்டாவதா நான் கமெண்ட்ட் போட்டேன் கானுமே
நானும் கிரீன் சிக்கன் செய்து இருக்கேன்.
தக்காளி தயிர் இலலதா நல்ல ரெசிபி, கலரே பார்க்க அழகா இருக்கு.
பச்சமிளகாய் 12 ஆ. ஒரு கிலோவுக்கு , இல்லை குறைத்து கொள்ளலாமா,இது கூட்டு அதிகம் வராது இல்ல.

asiya omar said...

ஜெகதீஸ் மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

மஞ்சு மிக்க நன்றி.

ஆமினா மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

asiya omar said...

சதீஸ்குமார் வருகைக்கு நன்றி.

ஜலீலா கருத்திற்கு மகிழ்ச்சி.இது கார்ன்ஃப்லோர் சேர்ப்பதால் கூட்டு இருக்கும்,இந்த முறையில் 12 மிளகாய் சேர்த்தாலும் காரம் தெரியாது.செய்து பாருங்க.

ChitraKrishna said...

super asiya akka. going to try this weekend.

அஹமது இர்ஷாத் said...

சிக்க‌ன் என் வாழ்க்கையில் ரொம்ப‌வும் ப‌ங்கு போட்ட‌ ஒன்று.. இந்த‌ டிஷ் பார்க்க‌ வித்தியாச‌மா இருக்கு.. வாழ்த்துக்க‌ள்..

எப்ப‌டி இருக்கீங்க‌..?

asiya omar said...

சித்ரா கிருஷ்ணா செய்து பாருங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.


மிக்க நலம்.அஹமது இர்ஷாத் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

இது சாப்ஸ் மட்டனில் இது போல் செய்துபார்த்தேன், மசாலாக்கள் மட்டும் சாப்பஸுக்கு போடும் மசாலா போட்டு கொண்டேன். நல்ல இருந்த்து,
ஆபிஸுக்கு கட்டி கொடுத்ததால் போட்டோ எடுக்க முடியாம போச்சு