Sunday, September 4, 2011

உம் அலி - UMM ALIதேவையான பொருட்கள் ;

குரோசண்ட் -5

ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 250மில்லி

ஃப்ரெஷ் கிரீம் -100கிராம்

காய்ந்த தேங்காய் துருவல் - 2டேபிள்ஸ்பூன்

கிஸ்மிஸ் - 2டேபிள்ஸ்பூன்

பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு - தலா 3டேபிள்ஸ்பூன்

(சிறியதாக நறுக்கி கொள்ளவும்)

வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்(விரும்பினால்)

குரோசண்ட்டை சிறிய சிறியதாக பிய்த்து ஒரு பேக்கிங் பவுலில் எடுத்து கொள்ளவும்.


குரோசண்ட்டுடன் பாதாம் பிஸ்தா முந்திரி கிஸ்மிஸ் உலர்ந்த தேங்காய் துருவல் கலந்து வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க்குடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடுபடுத்தவும்.ரெடி செய்த கண்டென்ஸ்ட் மில்க்கை தயாராக இருக்கும் குரோசண்ட் நட்ஸ் மிக்ஸில் சேர்த்து விரும்பினால் வெனிலா எசென்ஸ் சேர்த்து சிறிது ஊற வைக்கவும்.


ரெடி செய்த குரோசண்ட் மிக்ஸில் ஃப்ரெஷ் கிரீமை பரத்தி ஊற்றி விடவும்.எலெக்ட்ரிக் அவனில் 150டிகிரி செட் செய்து 20நிமிடம் வைத்து எடுக்கவும்.


சுவையான தித்திப்பான உம் அலி ரெடி.

சூடாக சாப்பிட சூப்பராக இருக்கும். தயாரான உம் அலியை ஆறியவுடன் ப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பரிமாறலாம்.இது எகிப்து நாட்டின் பிரசித்தமான உணவாகும்.
இங்கு புஃபே பார்ட்டிக்கு போகும் பொழுதெல்லாம்

இந்த உம் அலி டெஸ்சர்ட் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும்.

நாமும் செய்து பார்ப்போமேன்னு இங்கே அங்கே கேட்டு செய்து அசத்தியாச்சு. நீங்களும் செய்து பாருங்க, குரோசண்ட் ரெடிமேடாக கிடைக்காதவங்க பஃப் பாஸ்ட்ரியை உபயோகிக்கலாம். ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் பதில், பால் தேவைக்கு சீனி சேர்த்து கெட்டியாக காய்ச்சியும் உபயோகிக்கலாம்.

இந்த வருட ரமலான் ஸ்பெஷலாக முயற்சி செய்த ரெசிப்பி..

--ஆசியா உமர்.

20 comments:

boohoo said...

Time in the oven is 20 minutes?? not clear

சே.குமார் said...

புதிய வகை சமையல் அறிமுகம்.
கலக்கல் ரகம் அக்கா.

எம் அப்துல் காதர் said...

ஆஹா ....!!

asiya omar said...

boohoo அதில் என்ன சந்தேகம்.

சே.குமார் தம்பி வருகைக்கு மகிழ்ச்சி.

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றி.

athira said...

வாங்கோ ஆசியா...
வந்த வேகத்திலேயே புதுவிதமான ஒரு குறிப்புப் போட்டிட்டீங்களே, சூப்பர்... பெயரே புதுமையாக இருக்கு.

தலைப்பைப் பார்த்ததும், ஆரோரையோ பற்றி எழுதப்போறீங்களாக்கும் என நினைச்சுட்டேன்:)).

asiya omar said...

வாங்க அதி,நலமா? மிக்க மகிழ்ச்சி.

எல் கே said...

விடுமுறை நல்லபடியா முடிந்ததா?? புது ஐட்டம் குறிப்பு குடுத்து இருக்கீங்க. நன்றி

asiya omar said...

எல்.கே வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா said...

ஹப்பாடா..ஆசியா வந்துவிட்டீர்களா?

குரோசண்ட் ஐ சும்மாவே சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.இத்தனை சுவையூட்டிகளையும் சேர்த்து செய்தால் கேட்கவா வேண்டும்.

Kalpana Sareesh said...

super rrr very innovative ... yummy..

சாருஸ்ரீராஜ் said...

புது ரெசிபி , பார்கவே சூப்பரா இருக்கு.

இமா said...

பிடிச்சிருக்கு. கலோரிதான்... ஹும்! ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏதேதோ புதுப்புது பதார்த்தங்களாக செய்வதற்கு அழகான செய்முறைகள் கொடுத்து அசத்துகிறீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

[என் வலைப்பூவுக்கு வந்து, என் பழைய இடுகை ஒன்றுக்கு நேற்று பாராட்டுத் தெரிவித்துள்ளதற்கு மிக்க நன்றி. அங்கும் தங்கள் பின்னூட்டத்திற்கு யோசித்து இன்றே பதில் கொடுக்க உள்ளேன். அன்புடன் vgk]

வை.கோபாலகிருஷ்ணன் said...

asiya omar said...

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html
“உணவே வா! ... உயிரே போ!!”

//மிக அருமையான பகிர்வு.முதலில் மனோ அக்காவிற்கு நன்றி சொல்லவேண்டும்.//

மிக்க நன்றி. நானும் அவர்களுக்குத் தான், நன்றி சொல்ல வேண்டியவன். தொடர்பதிவாக எழுத என்னை வற்புருத்தி அழைத்ததே அவர்கள் தான்.

//உணவில் நான் ருசிக்க சமைக்க வேண்டியது எவ்வளவோ உள்ளதுன்னு உங்க பதிவு மூலம் தெரிஞ்சிகிட்டேன்,அவசரப்பட்டு என் வலைப்பூவிற்கு சமைத்து அசத்தலாம்னு பெயர் வைத்துவிட்டேனோ?சமைக்க ஆரம்பிக்கலாம்னு வைத்திருக்கனும்.//

அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாதுங்க. நீங்க எழுதும் புதுப்புது சமாசாரங்கள் தான் இந்த நவீன காலத்திற்கு ஒத்துவரும்.

நான் சொன்னதெல்லாம் பொதுவாக தமிழ்நாட்டு ஐயர் வீடுகளில் செய்யும் உணவுப் பதார்த்தங்களேயாகும். அவற்றில் புதுமை ஏதும் கிடையாது.


//நீடித்த ஆயுளுடன்,ஆரோக்கியமாக உங்கள் மனம் போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

//சார் ஒரு சிறிய வேண்டுகோள்,அப்ப அப்ப உங்களைக்கவர்ந்த உங்க வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போட்டால் அது பெரிய பொக்கிஷமாக இருக்கும்.//

என்னைக்கவந்த எங்கள் வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போடலாம் தான். ஆனால் அதில் ஒருசில சிக்கல்கள் உள்ளனவே!

நன்றாக ருசியாக சமைக்கத் தெரிந்த என் வீட்டு நபர்களுக்கு, எப்படி சமைத்தோம், என்னென்ன பொருட்கள் எவ்வளவு அளவு போட்டோம், எப்படி இவ்வளவு ருசியாகச் செய்தோம், என Sequence-wise ஆக அழகாக ஒன்றுவிடாமல் எடுத்துச்சொல்ல வராது.

நானே அருகில் நின்று கவனித்தால் அவர்களுக்கு வேலையும் ஓடாது, சமையலும் சரிவர ருசியாக அமையாமல் போய்விடும்.

தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிப்பதும் நான் இன்றுள்ள நிலைமையில் சரிப்பட்டு வராத காரியம்.

எனவே எனக்கு நீங்கள் சொல்வது போல பதிவிட மிகவும் ஆசையிருந்தும், அதிர்ஷ்டம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

ருசியாக சாப்பிடவாவது தொடர்ந்து அதிர்ஷ்டம் இருந்தால் சரியே, என நினைக்கிறேன்.

அன்புடன்
vgk

September 5, 2011 3:07 AM

கோவை2தில்லி said...

நல்ல ரெசிபி. வித்தியாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

தெய்வசுகந்தி said...

Super!!!!1

asiya omar said...

ஸாதிகா
கல்பனா
சாரு
இமா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

வை.கோ சார் பதிலுக்கு மிக்க நன்றி.

கோவை2தில்லி மிக்க நன்றி.

தெய்வசுகந்தி மிக்க நன்றி.

Rafeek said...

Sister ku belates RAMZAN wishes..!! Nice recipe!! :)

மஞ்சுபாஷிணி said...

பார்க்கும்போதே அழகாக இருக்கிறதுப்பா..

கண்டிப்பாக செய்து பார்த்துடவேண்டியது தான்.. இனி சாக்லேட் க்ரோசண்ட் வேண்டும்னு பிள்ளை அடம்பிடிக்கமாட்டான் உன் அலி செய்து கொடுத்தால்...

அன்பு நன்றிகள் ஆசியா பகிர்வுக்கு...

உங்க பகிர்வில் ஒரு ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?

நான் ரசித்தது....

நீங்க சமைக்க சமைக்க படங்களோடு அப்டியே அந்த ஒரிஜினாலெட்டி மாறாம தரீங்க... இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா.. இதுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்...