Thursday, October 27, 2011

முடியலை ஆனால் முடியும்...(சவால் சிறுகதை - 2011)

வராண்டாவில் திடு திடுவென்று ஓடும் சத்தம் கேட்டு, எதற்கும் பயப்படாத ரம்யா கூட அதிர்ந்து விட்டாள்.

படபடக்கும் நெஞ்சை பிடித்து கொண்டு கதவில் பொருத்திய லென்ஸ் வழியாக உற்று நோக்கினாள். வெளியே நிசப்தத்தை தவிர எதையும் பார்க்க முடியவில்லை.

மெதுவாக கதவை திறந்து பார்க்கலாமா என்று யோசித்தவள் தாழ்ப்பாளில் கைவைக்க தானாகவே திறந்து கொண்டது. மூடிய கதவு எப்படி திறந்தது ? என்று குழப்பத்துடன் பக்கத்து படுக்கையை பார்க்க காலியாக இருந்தது, ஏதோ விபரீதம் என்பதை மட்டும் புரிந்து கொண்டாள். தோழி சுதாவையும் காணவில்லை. இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியொன்றில் இருவருக்கும் வேலையாதலால் இருவரும் ஒரே ரூமில் தங்கி வேலைக்கு போய் வருகிறார்கள்.

தன்னிடம் கூட சொல்லாமல் இந்த சுதா அர்த்த ராத்திரியில் எங்கே போயிருப்பாள் என்ற கவலை ஆட்டி படைக்க திறந்திருந்த கதவை மூடிவிட்டு செல்போனை எடுத்தாள். சுதாவின் நம்பருக்கு டயல் செய்ய, போனை எடுத்தது ஒரு கனத்த குரல். சுதா தன்னுடன் இருப்பதாகவும், இதைப்பற்றி மூச்சு விட்டால் உன் கதி அதோகதி தான் என்றது, பயத்தில் ரம்யாவிற்கு வியர்த்துக் கொட்டியது.

அந்த மர்ம நபர் வேறு ஒரு நம்பரை கொடுத்து இனி அதற்கு போன் செய்யும் படியும் சுதாவின் நம்பரை தான் செயல் இழக்கச் செய்யப் போவதாகவும் சொல்லி போனை வைத்து விட்டான். இதில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்தாள் ரம்யா.

இந்த செய்தியை எப்படி யாரிடமும் பகிராமல் இருப்பது, ஊரில் இருக்கும் சுதாவின் பெற்றோர் இவளிடம் கேட்டால் என்ன சொல்வது என்று உடனே தன் கார்டியனான எஸ்.பி கோகுலிற்கு செய்தியை தெரிவித்து ரகசியமாக சுதாவை தேடித்தரும்படி தெரிவித்தாள்.

காலையில் விழித்து தன் வேலைகளைப் பார்க்க முடியாமல் தவித்த ரம்யாவிற்கு நிம்மதியே போய்விட்டது.

எஸ்.பி. கோகுலிற்கு போன் செய்து விபரம் கேட்ட பொழுது இரண்டு நாட்களில் எப்படியும் கண்டு பிடித்து விடுவதாகச் சொன்னார்.

ரம்யாவிற்கு தன் மீது உயிரையே வைத்திருக்கும் விஷ்ணுவின் நினைவு வர அவனை தொடர்பு கொண்டு, நடந்த விபரங்களை சொன்னாள். விஷ்ணு படித்துக் கொண்டே போலீஸ் இன்பார்மராகவும் வேலை செய்து வருகிறான், எஸ்.பி. கோகுல் மூலமாத்தான் ரம்யாவிற்கு அறிமுகம், படிப்பு முடிந்தவுடன் ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தான்.

தன் காதலன் விஷ்ணுவிடமும் பொறுப்பை ஒப்புக்கொடுத்து விட்டதால் நிம்மதியாக ஆபிஸ் போய் வந்து கொண்டிருந்தாள், கேட்பவர்களிடம் எல்லாம் சுதா சொந்த ஊர் சென்று இருப்பதாக சொல்லி சமாளித்து வந்தாள்.

விஷ்ணு அடிக்கடி எஸ்.பி. கோகுலை கேஸ் விஷ்யமாக சந்திப்பது வழக்கம், ஆனால் விஷ்ணு எஸ்.பியை எங்கு தேடியும் காணாமல் ஸ்டேஷனில் கேட்க, அவர் லீவில் இருப்பதாக தெரிய வந்தது. இன்பார்மர் வேலை ஆபத்தானது என்றாலும் அவனுக்கு அதில் ஒரு திரில் இருந்தது.

விஷ்ணுவிற்கு தானே துப்பறிந்தால் என்ன என்ற எண்ணம் வர, தனியாக இறங்குவதை விட, தன்னுடைய நண்பர் கிரைம் ப்ரான்ச் ஆபிஸர் குமாரிடம் விபரம் சொல்லி அவருடன் சேர்ந்து தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தான்.

விஷ்ணு ரம்யாவை, மீண்டும் மர்ம நபரின் மொபைலுக்கு அழைக்கும் படி சொல்ல, அந்த மர்ம நபர் கொடுத்த நம்பருக்கு டயல் செய்தாள்.

போனை எடுத்த அந்த மர்ம நபர், இன்னும் இரண்டு நாளில் சுதாவை விடுவித்து விடுவதாகவும் அதுவரை போலீஸ் பக்கம் எட்டிப் பார்த்தால் சுதாவை தீர்த்து விடுவேன் என்ற மிரட்டலோடு போனை துண்டித்து விட்டான்.சுதாவை அந்த மர்ம நபர் எதற்காக கடத்த வேண்டும்,என் சுதாவிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே, என்று கண்ணீர் மல்க விஷ்ணுவிற்கு போன் செய்தாள் ரம்யா.

விஷ்ணு தன் விசாரணையை ரம்யாவிடமிருந்தே ஆரம்பித்தான், இருவரிடமும் நெருக்கமாக பழகியவர்களைப் பற்றி விசாரித்தான்.ரம்யா சென்னை வந்து கொஞ்ச நாட்களே ஆனதால் தூரத்து சொந்தமான எஸ்.பி.கோகுலையும் ஆபிஸில் வேலை பார்க்கும் ஒரு சிலர் மட்டுமே தங்களுக்கு பழக்கம் என்றும் தெரிவித்தாள்.

எஸ்.பி. கோகுலுக்கு இதில் தொடர்பு இருப்பதாக படவே, அவரைப் பற்றி துப்பு துலக்கலாம் என்ற பொழுது அவர் ஊரில் இல்லாதது நினைவில் வர அவருக்கு போன் செய்து விசாரித்தான்,அவர் அவசரப்பட வேண்டாம், ரம்யா இது விஷயமாக தன்னிடம் சொன்னதாகவும். இன்னும் இரண்டு நாள் பொறுக்கும் படியும் சொன்னார். விஷ்ணுவிற்கு எஸ்.பி. கோகுல் மீது சிறு சந்தேகப் பொறி தட்டியது.ஆனால் ஒரு சூப்ரெண்டெண்ட் ஆப் போலீஸ் எப்படி இதில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற குழப்பமும் இருந்தது.மர்ம மனிதனும் எஸ்.பியும் ஒரே போல் இரண்டு நாள் என்று சொல்ல சந்தேகம் வலுத்தது.முதலில் யார் மீது சந்தேகம் ஏற்படுகிறதோ அது என்றுமே விஷ்ணுவை பொறுத்தவரை தவறுவதில்லை.

ரம்யாவிற்கு அந்த மர்ம நபரிடம் இருந்து கால் வர அச்சத்துடன் எடுத்தவளுக்கு, இந்த விஷயமாக இன்ஃபார்மர் விஷ்ணுவுடன் ரம்யா கொண்டிருக்கும் தொடர்பு தனக்கு தெரியும் என்றும், தன் சொல்படி கேட்டால் சுதாவை உயிருடன் மீட்கலாம் என்றும், விஷ்ணுவை குழப்ப தான் சொல்லும் சுதா இருக்கும் இடம் பற்றிய கோர்ட் வேர்டை தெரிவிக்கும் படி சொல்ல, அதனை குறித்துக் கொண்டவள் உடனே விஷ்ணுவிற்கு சொல்லி, அவனை பொறுமையாய் இருக்கும் படியும் வேண்டிக் கொண்டாள்.

இந்த கோர்ட் வேர்டெல்லாம் கண் துடைப்பு என்று விஷ்ணுவிற்கு தெரியும், எனவே சந்தேகம் ஊர்ஜிதமானது, காயை எப்படி நகர்த்தி,எஸ்.பிக்கு தொடர்பு இருக்கிற உண்மையை வெளிக் கொண்டு வருவது என்று யோசிக்க ஆரம்பித்தான். ஒன்றும் அறியாதது போல் ரம்யா தந்த கோர்ட் வேர்டை சிறிய திருத்தத்துடன் வேண்டுமென்றே எஸ்.பி. கோகுலிற்கும் போன் செய்து தெரிவித்தான்.
இன்பார்மர் விஷ்ணு, கிரைம் ப்ரான்ச் ஆபிஸர் குமாருக்கு, சார் எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறீயிட்டை தான் கொடுத்திருக்கிறேன்,கவலை வேண்டாம் என்ற ஒரு மெசேஜையும், எஸ்.பி. கோகுலிற்கு அனுப்பிய கோர்ட் வேர்ட் S W H2 6F நகலையும் உடன் அனுப்பினான்..

கிரைம் குமாருக்கும் எஸ்.பி. கோகுல் மீது ஒரு சந்தேகக்கண் இருந்தது, சுதா ரம்யா இருவருக்கும் நெருக்கமாக அவரைத் தானே தெரியும், அப்படியிருக்க விஷ்ணு ஏன் கோகுலிற்கு கோர்ட் வேர்டை அனுப்ப வேண்டும், எஸ்.பி. கோகுலை குழப்பவே, இந்த கோர்ட் வேர்டை தெரிவித்திருப்பதை போன் மூலம் தெரிவித்தான் இன்பார்மர் விஷ்ணு.

இதற்கிடையில் ரம்யாவும் தனக்கு மனசு சரியில்லை என்றும், ஊர் வரை சென்று வருகிறேன் என்று விஷ்ணுவிடம் சொல்லி விட்டு கிளம்பினாள். மிகவும் அசதியாக இருக்க விஷ்ணுவும் ஓய்வு எடுக்க தன் அறைக்கு சென்றான்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த விஷ்ணுவின் போன் அலற, போனில் கிரைம் குமார் தான் சொல்லும் இடத்திற்கு உடனே கிளம்பி வரும்படி சொல்லி விட்டு போனை துண்டித்து விட்டார்.

மனம் கொந்தளிக்க பைக்கை எடுத்துக் கொண்டு, குமார் சொன்ன இடத்திற்கு விரைந்தான் விஷ்ணு, கிரைம் குமார் ஒரு வீட்டின் முன் படபடப்புடன் காத்திருந்தார்.

வீட்டின் கேட் கதவு உட்புறமாக தாழிட்டு இருக்க, இருவரும் சத்தம் வராமல் ஏறி குதித்தனர்.வீட்டு வாயிலை அடைந்ததும் காலிங் பெல்லை அழுத்தலாமா என்று பார்வையாலேயே கேட்ட விஷ்ணுவிடம் சிறிது பொறுக்கும் படி சொன்னார் குமார். உள்ளே இரண்டு ஆண்குரலும் பெண்குரலும் கிசுகிசுப்பாக பேசுவது கேட்டது, ஆண்குரல் எஸ்.பி. தான், ஆனால் இந்த பெண் குரல்,மற்றும் இன்னொரு குரல் மர்ம நபராக இருக்குமோ என்று யோசித்து கொண்டிருக்கையிலேயே வாசல் கதவு திறக்கப்பட்டது, இருவரும் ஓடி சென்று உள்ளே நுழைந்து வெளியே வரவிருந்தவர்களை மீண்டும் உள்ளே தள்ளினர்.விஷ்ணுவிற்கு நம்ப முடியவில்லை, அவர்கள் யாரும் இல்லை, எஸ்.பி. கோகுலும், எஸ்.பியின் மகன் அரவிந்தும், காதலி ரம்யாவும் தான், உள்ளே முனகல் சத்தம் கேட்ட அறையை நோக்கி சென்ற விஷ்ணு ,சுதா மயக்கத்தில் இருப்பதை பார்த்து, குமார் சார், அரவிந்தை அரெஸ்ட் செய்யுங்கள், அவன் தான் குற்றவாளியாக இருக்க முடியும், என்றான்.

கிரைம் குமார் சிரித்த படி எனக்கு முன்பே ரம்யா, சுதாவை காப்பாற்ற முயற்சிப்பாள் என்ற சந்தேகம் இருந்தது, அவள் ஊர் செல்வதாக சொல்லவும் பின் தொடர்ந்தேன், என் கணிப்பு தவறவில்லை, அவள் இங்கு ஒரு பெட்டியுடன் வர, எஸ்.பி கோகுல் வந்து கதவை திறந்தார், உடனே தான் உனக்கு போன் செய்தேன்..

எஸ்.பி.மகன் அரவிந்தையும், ரம்யாவையும் விசாரிப்போம். உண்மையை கக்கி விடுவார்கள் என்றார் கிரைம் குமார் அசால்டாக..

ரம்யா தன் தோழி சுதாவை மீட்கவே இங்கு வந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பின் தொடர்ந்தான் விஷ்ணு.

--ஆசியா உமர்..

குறிப்பு:

சவால் சிறுகதை-2011 போட்டி பற்றிய விபரத்தைக் காண திரு.பரிசல்காரன்,திரு ஆதிமூலகிருஷ்ணன், யுடான்ஸ் ஆகியோரின் பதிவுகளைக் காணலாம்.

மேற்கண்ட படத்தை தந்து கதை எழுத அறிவிச்சிட்டாங்க, நாம என்ன பரம்பரை எழுத்தாளரா? சரி பார்டிசிபேஷன் சர்டிபிகேட்டாவது கிடைக்காதா என்ன? போன வருடமும் கலந்து,விபரம் தெரியாமல் சவால் வரிகளை அடுக்கி எழுதி அந்தக் கதை இப்ப எதுக்கு?

--ஆசியா உமர்..


32 comments:

angelin said...

நல்லா இருக்கு ஆசியா .போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

athira said...

அடடா... துப்பறியும் கதையா? சூப்பர்... எனக்கு துப்பறியும் கதை எல்லாம் எழுத வராது...

அழகாக எழுதியிருக்கிறீங்க ஆசியா... பரிசு கிடைக்கும்.

எனக்கு ஒரு ஆவிக்கதை எழுத ஆசை:)) பர்ப்போம், அப்போவாவது மியாவைப் பார்த்து ஆரும் பயப்பிடுகினமோ என:))))

MyKitchen Flavors-BonAppetit!. said...

Remba arumaiyai Interestinga Ezhuthi Irukeenga Asiya.Vazhthukkal

விச்சு said...

கதை நல்லா இருக்கு.. அந்த குறியீட்டைக் கொடுத்ததால துப்பறியும் கதைதான் எழுத முடியும்.. வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் .

இராஜராஜேஸ்வரி said...

பரிசு பெற வாழ்த்துக்கள்!

asksukumar said...

அருமையாக உள்ளது :)

விச்சு said...

உடான்ஸ்'ல 4 வது ஓட்டு போட்டாச்சு...

வெங்கட் நாகராஜ் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகோ....

சே.குமார் said...

//தன் கார்டியனான எஸ்.பி கோகுலிற்கு செய்தியை தெரிவித்து ரகசியமாக சுதாவை தேடித்தரும்படி தெரிவித்தாள்.மர்ம நபர் கொடுத்த நம்பரை எஸ்.பிக்கும்,விஷ்ணுவிற்கும் தெரிவித்தாள்.//
//ரம்யாவிற்கு தன் மீது உயிரையே வைத்திருக்கும் விஷ்ணுவின் நினைவு வர அவனை தொடர்பு கொண்டு, நடந்த விபரங்களை சொன்னாள்.//
அக்கா...
கதை சொல்லிய விதம் அருமையாக இருக்கிறது. மேலே இருக்கிற இரண்டு பாராவிலும் விஷ்ணுவிடம் ரம்யா விவரங்களை சொல்வதாக இருக்கிறது.... கோகுலிடம் நம்பரைக் கொடுக்கும் போது விஷ்ணுவிடமும் கொடுத்தாள் என்பதை நீக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ரெண்டாவது பாராவில் தன் மீது உயிரையே வைத்திருக்கும் விஷ்ணுவிடம் தெரிவித்தாள் என்று சொல்லியிருக்கிறீர்கள்... பாருங்கள்.
நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்... வெற்றி பெறுங்கள்.

asiya omar said...

ஏஞ்சலின்
அதிரா
மை கிச்சன் ஃப்லேவர்ஸ்
காஞ்சனா
இராஜராஜேஸ்வரி

அனைவரின் வாழ்த்திற்கு மகிழ்ச்சி,நன்றி.

asiya omar said...

விச்சு
asksukumar

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சகோ வெங்கட் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

தம்பி குமார் மிக்க நன்றி.
//கோகுலிடம் நம்பரைக் கொடுக்கும் போது விஷ்ணுவிடமும் கொடுத்தாள் என்பதை நீக்க வேண்டும் என்று நினைக்கிறேன். //
நீக்கி விட்டேன்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

சே.குமார் said...

பார்த்தேன்... இப்ப ஓகே....
யுடான்ஸ் 6வது ஓட்டு தம்பியோடது...

middleclassmadhavi said...

கதை நல்லாயிருக்கு! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

vanathy said...

சூப்பர் கதை, அக்கா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,தங்களுக்கு தெரியாததும்,செய்ய வராததும் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் அக்கா..ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.கதை எழுதுவதே பெரிய விஷயம்.அதிலும் தாங்கள் க்ரைம் கதை எழுதியிருப்பது ரொம்ப பெரிய விஷயம் அக்கா... அதிலும் நான் வல்லவள்ன்னு நிரூபிச்சிட்டீங்க....பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பல... பரிசுகள் நிச்சயம் உங்களை தேடி வரும்.

எனக்கு ஒரு ஆவிக்கதை எழுத ஆசை:))

ஆத்தி...ஏன் அதிரா..?ஏங்க இந்த கொலைவெறி...?நாங்கல்லாம் பாவம்...அதிராவுக்கு மற்றவர்களை சிரிக்கவச்சிதானே பழக்கம்...?

அன்புடன்,
அப்சரா.

suryajeeva said...

நல்லா நகர்த்தி இருக்கீங்க

நம்பிக்கைபாண்டியன் said...

கதை நன்றாக இருக்கிறது, கதையை முடித்த இடம் த்ஒடர்வது போல் உள்ளது.

ஸாதிகா said...

நான் அனுப்ப்பிய கமண்ட்டைக்காணும்?

asiya omar said...

மிடில் கிளாஸ் மாதவி
வானதி
அப்சரா இல்லம்
சூர்ய ஜீவா
நம்பிக்கை பாண்டியன்

மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

ஸாதிகா உங்கள் கமெண்ட் எதுவும் வரலையே,ஆவலாக எதிர் பார்த்து கொண்டிருந்தேன்..வந்தால் நிச்சயம் வந்திருக்குமே...

Madhavan Srinivasagopalan said...

Nice Detective story..All the best
-----
என்னோட முயற்சி இங்க வந்து பாத்துட்டுப் போங்க.

மனோ சாமிநாதன் said...

கதை நன்றாக இருக்கிறது ஆசியா! போட்டியில் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள்!!

சிநேகிதி said...

அருமையாக இருக்கு ,பரிசு பெற வாழ்த்துக்கள்!

வெண் புரவி said...

கதை அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..

http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

ஸாதிகா said...

அட துப்பறியும் கதைகள் கூட எழுதி அசத்துறீங்க தோழி.வெற்றி கிட்ட வாழ்த்துகக்ள்.கதை விறு விறுப்பாக நடத்தி சென்றுள்ளீர்கள்!

ஹேமா said...

நிச்சயம் கதை வெற்றி பெறும்.வெற்றிக்கு வாழ்த்துகள் !

மாய உலகம் said...

கதை அருமையாக இருக்கு... வெற்றிபெற வாழ்த்துக்கள்..

asiya omar said...

மாதவன் மிக்க நன்றி.

மனோ அக்கா மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

வெண்புரவி மிக்க நன்றி.

தோழி ஸாதிகா மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

மாய உலகம் மிக்க நன்றி..

எனக்கு ஓட்டளித்த அனைவருக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி..

அன்புடன் மலிக்கா said...

கதை அருமைக்கா.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி மலிக்கா.