Tuesday, October 11, 2011

நினைவெல்லாம் காவியம்...


நட்பு குறித்த தொடர் பதிவை எழுத இணையம் தந்த இலங்கைத் தோழி அதிரா அழைப்பு விடுத்திருந்தார். மிக்க நன்றி அதிரா.இவர் எனக்கு அறுசுவை சமையற்தளத்தில் அறிமுகமானவர், எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்ற பழமொழியோடு வலம் வரும் தோழி. அவரின் அன்பான அழைப்பிற்கிணங்கி இத்தொடரை எழுதுகிறேன். இணையத்தில் கடந்த நான்கு வருடமாக எனக்கு நல்ல நட்புகள் பலர் கிடைத்து இருக்கிறார்கள். எல்லோரையும் இத்தருணத்தில் அன்போடு நினைத்துப் பார்க்கிறேன். முடிந்தளவு சுருக்கமாக எழுதுகிறேன்.


என்னுடன் உண்மையான பிரியத்தோடு பழகிய அனைவருமே முக்கியமானவர்கள் தான். என்றாலும் எல்லோருக்கும் உயிர்த்தோழி என்று ஒருத்தர் நிச்சயமாக இருப்பாங்க . அவள் தான் எங்கள் ஊரில் பெண்களில் முதன் முதலாக பொறியியல் கல்லூரி சென்று படித்தவள். இப்ப அவள் பொறியாளராய் அரசாங்கத்துறையில் பணி புரிந்து வருகிறாள். இது நான் எப்பவும் நினைத்து நினைத்து பெருமிதப்படும் விஷயம்.
அந்த வகையில் நட்பு என்று நினைக்கும் பொழுது என் சின்னஞ்சிறு வயது முதல் இன்று வரை மாறா அன்புடன் என்னுடன் பழகி வரும் என் இனிய தோழி தான் முதலில் நினைவிற்கு வருகிறாள். நல்ல நட்பை வாய் விட்டு விவரிக்க முடியாது அதனை அனுபவித்தவர்களுக்கு தான் அருமை தெரியும். நான் அவளுக்கு அள்ளியும் கொடுக்கலை, நுள்ளியும் கொடுக்கலை ஆனாலும் அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போன்ற நட்பு எங்களோடது. இன்றைக்கும் என்னோட உயிர்தோழி யார் என்று கேட்டால் எங்கள் தெருவில் இலகுவாக யாரைக் கேட்டாலும் சொல்லிடுவாங்க. என்னைப் பொருத்தவரை எந்த சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்வது தான் நல்ல நட்புக்கு அறிகுறி.

என்னுடைய பள்ளிப்பருவத்த்தில் கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பகுதி. ஒன்பது முதல் ப்ளஸ் டூ வரை மறு பகுதி. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற பள்ளியில் சேர்த்தாங்க. எட்டாம் வகுப்பு வரை A செக்‌ஷன் தான். அதனால் அதே செக்‌ஷன் மாணவிகள் தான் தொடர்ந்து என்னோடு வருடாவருடம் எட்டு வருடமும் படிச்சாங்க, நீங்க நம்ப மாட்டீங்க, எனக்கென்று சொல்லிக்கொள்ளும் படி எட்டு வகுப்பிலும் நெருக்கமான தோழிகள் கிடையாது, நாங்க உறவினக் குழந்தைகள் ஒன்றாக மாட்டு வண்டியில் பள்ளிக்கு சென்று வந்தோம், வேறு வேறு செக்‌ஷனில் இருந்தாலும் சாப்பிடும் நேரம் நாங்களே ஒரு மரத்தடியில் ஒன்று கூடி சாப்பிட்டு விட்டு பிரிந்து சென்று விடுவோம். என் உயிர்த்தோழியும் அதே பள்ளி ஆதலால் அவள் மட்டுமே எனக்கு தோழியாக இருக்க வேண்டும் என்று நான் யாருடன் ஒட்டி பழகவில்லை போலும். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தாலும் நான் அவளுடன் தெருவிலும் வீட்டிலும் ஒன்று சேர்ந்து விளையாடுவது தான் வழக்கம். நான் அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் அவர்கள் வீட்டில் தான்.அவர்கள் வீட்டில் அனைவரும் பெண் குழந்தைகள் என்பதால் எங்க வாப்பாவும் அங்கே போக அனுமதிச்சாங்க. இப்படியிருந்த எங்கள் நட்பிற்கும் பிரிவு வந்தது.

எட்டாம் வகுப்பு முடித்த பிறகு என்னுடைய சகோதரருடன் திருச்சிக்கு சென்று அங்கு அவர் பணியாற்றிய கல்லூரி வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் படிப்பை தொடர்ந்தேன். அங்கு எனக்கு மூன்று தோழிகள் அமைந்தனர். நல்ல பழகினோம். மூவரும் செம லூட்டி. எங்கு பேச்சு போட்டி நடந்தாலும் அங்கெல்லாம் போய் பங்கு கொள்வது வழக்கம். அதில் ஒரு தோழியின் தந்தையார் மாரடைப்பால் எதிர்பாராமல் தவறியதால் படிப்பை பத்தாம் வகுப்பின் பாதியிலேயே நிறுத்தும் படியாகிவிட்டது. தந்தையார் நடத்திய ஊறுகாய் வியாபாரத்தை மூன்று பெண்களில் மூத்த பெண்ணான இவள் பொறுப்பெடுத்து செய்யும் படியாகிவிட்டது. தோழியின் குடும்பத்தினர் அந்நேரத்தில் பெற்ற துயரம் சொல்லி மாளாது. அவள் இன்னமும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளாள்.

ப்ளஸ் 2 வை மூன்று பள்ளிகளில் படித்தேன், அந்த அனுபவத்தை ஒரு தனி தொடராகவே எழுதலாம்.உடல் நலக் குறைவு, பள்ளிக் கூட மாற்றம் என்று கழிந்ததால் யாரிடமும் மிக நெருக்கமாக பழகவில்லை.

மருத்துவம் மற்றும் வேளாண்மைக்கும் சேர்த்து நுழைவுத்தேர்வு எழுதினேன். மருத்துவம் .06 மதிப்பெண் வித்தியாசத்தில் சீட் கைவிட்டுப்போனது. திருச்சியில் சீதாலஷ்மி ராமசாமி கல்லூரியில் சேர்ந்து சும்மா இருக்க வேண்டாம் என்று ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன், அங்கும் யாருடனும் நெருங்கி பழகவில்லை.ஒரு மாதத்தில் ஓப்பன் காம்பெட்டிஷனில் கோவை வேளாண் பலகலைக் கழகத்தில் இடம் கிடைத்தது. அங்கு என் மனதிற்கு நிறைவான நட்பு வட்டம் அமைந்தது.

எங்க செட்டில் அனைவருமே அன்புடன் பழகினோம். A,B,C & D என்று நான்கு பேட்ச். நான் பி பேட்ச். நாகர் கோவிலில் இருந்து வந்த பெண் சி பேட்சில், எனக்கு ஒரு நல்ல தோழியாக அமைந்தாள். அவளும் தற்சமயம் யு.ஏ.இயில் இருப்பதால் தொடர்பில் உள்ளோம்.

ரூம் மேட்ஸ் அனைவருடனுமே பிரியமாக பழகியதால் அனைவருமே தோழிகள் தான் என்றாலும் தோட்டக் கலைத்துறையை சேர்ந்த சேலத்து தோழி மெஸ்ஸில் பழகி தினமும் என்னை மெஸ் வந்து அழைத்து செல்வாள், அவளை எதிர்பார்த்து தான் மெஸ் செல்வேன். அவளின் ஒரே அண்ணன் திருமணத்திற்கு எங்க வீட்டில் அனுமதி வாங்கி சேலத்திற்கு அழைத்து சென்று, என்னை கவனித்த கவனிப்பு இருக்கிறதே, இன்றும் என்னால் மறக்க முடியாது.
அதன் பின்பு கல்லூரி இறுதியாண்டு முடிந்து ஊர் வந்த பின்பு அவள் தொடர்பு விட்டுப் போனது.


மதுரைக்கு TNPSC EXAM எழுத சென்றிருந்த பொழுது 1989 –தில் என் பேட்ச்மேட் சிலரை சந்தித்தேன், அத்துடன் சரி பின்பு யாரையும் பார்க்கவில்லை.

நான் 2000 ஆம் ஆண்டு துபாயில் இருந்த சமயம் தீடீரென்று போன், யாரென்று பார்த்தால் நாகர்கோவில் தோழி தான்.அவள் அபுதாபியில் பணிபுரிவதாயும் எங்கள் ஊர் தோழி ஒருவர் மூலம் நான் இங்கிருப்பது தெரியவந்தது எனவும் சொல்லி அந்த வார வெள்ளியே என்னை பார்க்க வருவதாய் தெரிவித்தாள். குடும்பத்துடன் வந்து என் கையால் சமைத்து சாப்பிட்டு, அந்த நெகிழ்வை சொல்லி முடியாது. இன்னமும் அந்த நட்பு அன்பாய் தொடர்கிறது.


ஆனால் நெருக்கமான சேலத்து தோழியோ என் திருமணத்திற்கும் கூட வரவில்லை. நானும் அப்ப அப்ப நினைப்பதோடு சரி,அப்படியே மறந்து விட்டேன், என் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்து என் வீட்டு அட்ரஸிக்கு கடிதம் வந்தது. அவள் என்னை பார்க்க விரும்புவதாயும், என் இருப்பிடத்தை தெரிவிக்கும் படியும் , நாங்கள் அப்பொழுது தூத்துக்குடியில் இருந்தோம், உடனே அங்கு வரும்படி எழுதினேன், கணவர் பெண் குழந்தையுடன் வந்த அவள் என்னுடன் மூன்று நாட்கள் தங்கி ஆனந்தமாக பழைய கதைகளை பேசி தீர்த்தோம். அதன் பின்பு இன்னமும் சந்திக்கவில்லை. அவள் திருச்சியில் இருப்பதாய் தெரிவித்தாள்,வீடு கட்டிக்கொண்டு இருப்பதாயும் வீடு முடிந்து புது அட்ரஸ் தருவதாய் சொன்னாள், பழைய அட்ரஸிற்கு கடிதம் எழுதினேன் பதில் இல்லை, நான் சந்திக்க விரும்பும் தோழி அவள் தான், என்றாவது ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்....

இந்த பாட்டை கேளுங்க, எனக்கு மிகவும் பிடித்த கல்லூரி நட்பை குறிக்கும் பாடல்.

மனசே மனசே மனசில் பாரம்


மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
(மனசே..)

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம்இது மட்டும்தானே
நட்பினை எதிர்ப்பார்க்குமே
(மனசே..)

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?
(மனசே..)

ஆறேழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன்
முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே..
(மனசே..)

என் வகுப்பு தோழ தோழியர்களை கடந்த 21 வருடங்களாக நான் எங்கும் யாரையும் சந்திக்கவில்லை. நாங்கள் பிரியும் பொழுது ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம், தமிழ் நாட்டில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையங்களில் பணி நிமித்தமாக எப்படியாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் பார்த்து கொள்ளலாம் என்று விடைபெற்றோம். நான் தான் பணிக்கே செல்லவில்லையே ! பிறகு எப்படி சந்திப்பதாம்.

கோவையில் பயின்ற அந்த நான்கு வருடம் என் வாழ்வில் வசந்த காலம் எனலாம். நான் யாரையும் மறக்கவில்லை, அது போலவே என்னையும் அவர்கள் நினைவு வைத்திருப்பார்களா? ....

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோன்னு இருக்கு.

--ஆசியா உமர்.

36 comments:

மாய உலகம் said...

நட்பு தொடரில் நட்பைப்பற்றி நல்ல விதமாக நல்ல நண்பர்களைப்பற்றி எங்களுடன் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்... நீங்கள் அனைவரும் மீண்டும் சந்திப்பதற்கு இறைவன் அருள்புரியட்டும்...

மாய உலகம் said...

நான் தான் பணிக்கே செல்லவில்லையே ! பிறகு எப்படி சந்திப்பதாம்.//

ஹா ஹா உங்கள் ஆதங்கம் சூப்பர்ர்ர்ர்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஒரு இனிய பகிர்வு. இளமைகால நினைவுகள் என்றும் மாறா. நல்ல சுவாரசியமாக எழுதியிருக்கீங்க ஆசியாக்கா. உங்களுடைய தோழிகளை விரைவில் காண என் வாழ்த்துகள்.

middleclassmadhavi said...

நட்பின் அருமை சொல்லி மாளுமோ?

நல்ல பகிர்வுக்கு நன்றி!

S.Menaga said...

பசுமையான நினைவலைகள்..அழகான எழுத்து நடை!! விரைவில் உங்கள் அனைத்து நட்புகளையும் சந்திக்க வாழ்த்துக்கள் அக்கா!!

மகி said...

நினைவுகளை அசைபோடும் நல்லதொரு பதிவு ஆசியாக்கா! விரைவில் உங்க நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கட்டும்!:)

athira said...

ஹையோ இதை நான் இப்பத்தானே பார்க்கிறேன், நில்லுங்க வெளியில் போகிறேன்... வந்து படிச்சுப் பின்னூட்டம் போடுவேன்...

ஸாதிகா said...

நினைவெல்லாம் காவியம் தகலைப்பைப்போகலவே நட்பு குறித்து நீங்கள் விவரித்து இருப்ப்பதும் அருமை ஆசியா.

asiya omar said...

மாய உலகம் உங்கள் முதல் வருகைக்கும் ஆர்வமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸ்டார்ஜன் சவூதி வந்தாச்சா? கருத்திற்கும்,வாழ்த்திற்கும் நன்றி சகோ.

asiya omar said...

மிடில்கிளாஸ் மாதவி, வாங்க ..கருத்திற்கு நன்றி.நிஜமாகவே சொல்லி முடியாதது தான்..

asiya omar said...

மேனகா வாழ்த்திற்கு நன்றி,அனைவரையும் சந்திக்க இனி தான் முயற்சி செய்ய வேண்டும்.பார்ப்போம்.

asiya omar said...

மகி சரியா சொல்லிட்டே..நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

அதிராவை காணோமென்று பார்த்தேன்,மகிழ்ச்சி.மெதுவாக வந்து கருத்தை சொல்லுங்க.

தோழி ஸாதிகா வருகைக்கும் அன்பான கருத்திற்கும் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

நேர்ல பார்க்காட்டியும் கண்டிப்பா மனசுல நினைக்காம இருக்க மாட்டாங்க.. இப்ப நீங்க நினைக்கிறீங்களே அது மாதிரி..

athira said...

ஆஆஆஆஆ ஆசியாவுக்கு முதலில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஏனெண்டால் எனக்கு முன்னர் இத்தலைப்புப் போட்டிருக்கிறீங்க ஆனா மேலே வந்தது 10 மணி நேரத்தின் பின்புதானே? நான் காலையில் பார்த்து மேலே வந்திருந்த தலைப்புக்கெல்லாம் ஒரு வரிப் பதில் மட்டும் போட்டுவிட்டுச் சென்றேன்.

இது தெரியவில்லை. ஓக்கை இப்போ அதுவா முக்கியம்...:)))

athira said...

ஆரம்பமே அட்டகாசமாக ஆரம்பித்திருக்கிறீங்க..”எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”:).

என் அழைப்பை ஏற்றுத் தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆசியா... அழைத்த நானே மறந்துபோயிருந்தேன்:)).

athira said...

நட்புக்களைப் பற்றி அழகாகச் சொல்லிட்டீங்க..

//என்னைப் பொருத்தவரை எந்த சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்வது தான் நல்ல நட்புக்கு அறிகுறி.//

உண்மையாகச் சொல்லிட்டீங்க... நட்பென ஒருவரை, நம்பிப் பழகத் தொடங்கிட்டால்... பின் எச்சூழலிலும் சந்தேகம் வரக்கூடாது, நல்ல புரிந்துணர்விருப்பின்.... எப் பிரச்சனை வந்தாலும் அதை தூசிபோல தட்டிப்போட்டுப் போய்விட வேண்டும்.

athira said...

உங்கள் நண்பியைத் தேடிக் கண்டுபிடிங்க

..... கிடைக்கும் எனில் கிடைக்காமல் போகாது, கிடைக்காதெனில் கிடைக்காது.....

இதுதான் தத்துவம்... சீயா மீயா.

sarav said...

ஆசியா,
எழுத்து நடை ரொம்ப அழகா இருக்கு
விரைவில் உங்கள் தோழிகளை சந்திப்பீங்க
அருமையான பதிவு

இமா said...

//என்னையும் அவர்கள் நினைவு வைத்திருப்பார்களா? ....// நிச்சயம்.

விரைவில் அவர்களைச் சந்திக்கும் சர்ந்தர்ப்பம் அமையட்டும் ஆசியா.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Friends patri arumaiyaka ezhuthi ulleerkal.Friendship kavithaiyum pidithullathu.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம். 21 வருசம் மிக நீண்ட இடைவெளி ..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு... நன்றி...

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

அதிரா,ஆமாம் முன் தினம் பதிவை எழுத ஆரம்பித்து நேற்று முடித்ததால் இடுகையிட முடியலை.சரியாச்சொன்னீங்க,மகிழ்ச்சி அதிரா.

சரவ் நிக்க நன்றி.

asiya omar said...

இமா வருகைக்கும் கருத்திற்கும்
மகிழ்ச்சி.

மை கிச்சன் ஃப்லேவர்ஸ் மிக்க நன்றி.

முத்துலெட்சுமி வருகைக்கு மகிழ்ச்சி.ஆமாம் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கு.பார்ப்போம்.


வெங்கட் நாகராஜ் கருத்திற்கு நன்றி.

கோவை2தில்லி said...

நிச்சயம் சந்திப்பீங்க.வாழ்த்துகள்.

என் கல்லூரி தோழிகளும் என் திருமணத்துக்கு வரவில்லை.இப்போது இவ்வளவு வருடங்கள் கழித்து சமீபத்தில் தொலைபேசி எண்ணை தெரிந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன்.

asiya omar said...

கோவை2தில்லி வாங்க,வாழ்த்திற்கு நன்றி.என் திருமணத்திற்கு எதிர்பார்க்காத தோழிகள் 11 பேர் வந்தது மிக்க மகிழ்ச்சியை தந்தது.அவர்களை வீடியோவில் போட்டோவில் பார்ப்பதோடு சரி,இனி தான் ஆட்டோகிராஃப் எடுத்து ஒவ்வொரு அட்ரஸாக முயற்சி செய்ய வேண்டும்..

Lakshmi said...

நான் போட்ட பின்னூட்டம் எங்க போச்சு? நீங்க நினைப்பதுபோல அவங்களும் உங்களை நினைப்பாங்க.

ChitraKrishna said...

இனிமையான பதிவு அக்கா.

asiya omar said...

லஷ்மிமா வாங்க,இநத பின்னூட்டம் தான் இருக்கு,வருகைக்கு மகிழ்ச்சிமா.

சித்ரா கருத்திற்கு மிக்க நன்றி.

மாதேவி said...

அருமையான நட்பின் நினைவலைகள்.

நட்புகள் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் ஆசியா.

Jay said...

lovely post...well said ..;)
Tasty Appetite

asiya omar said...

மாதேவி கருத்திற்கு மிக்க நன்றி.

ஜெ கருத்திற்கு மிக்க நன்றி.

Anonymous said...

enga umma pathi nalla eluthirukinga,unka frndsa thirumba parpinga by rashidh

asiya omar said...

hai rasidh! how are you? my kind regards and salams to all at home..you all read it..ah......o.k.good..