Tuesday, October 18, 2011

ஆட்டுக்கால் பிரியாணி

தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - அரைக் கிலோ
ஆட்டுக்கால் - 2 செட் ( 8 எண்ணிக்கை)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)- அரை -   1 டீஸ்பூன்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிள்காய் - 4
மல்லி,புதினா,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் -50 மில்லி
நெய் -50மில்லி
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் -அரை 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன் (விரும்பினால்)
தயிர் - 2 - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

முதலில் சுத்தம் செய்த ஆட்டுக்காலை குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் வேகவைத்து எடுக்கவும்.மூன்று விசில் வந்தவுடன் சிம்மில் வைத்து வேக வைக்கவும்.வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.நறுக்க வேண்டியவைகளை நறுக்கி வைக்கவும்.

பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் இரண்டு இணுக்கு கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். சிவற வதக்கவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து சிறிது வேக விடவும்.

நறுக்கிய தக்காளி, மல்லி, புதினா,மிளகாய் சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.

நன்கு மசிந்ததும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், மிளகு சீரகத்தூள் சேர்த்து
சிறிது வதக்கவும்.
வதங்கியவற்றுடன் தயிர் 2டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.

நன்றாக பிரட்டி விடவும்,எண்ணெய் தெளிந்து மேலே வரும்.

அரிசி அளவை பொருத்து ஒன்றுக்கு ஒன்றரை அல்லது இரண்டு அளவு தண்ணீர் சேர்க்கவும், வேக வைத்த ஆட்டுக்கலையும் சேர்க்கவும்.அதில் இருக்கும் தண்ணீரையும் கணக்கில் வைக்கவும்.

பிரியாணி மசாலா ,ஆட்டுக்கால் எல்லாம் சேர்ந்து கொதி வரவும், சுத்தம் செய்து கழுவிய அரிசியை சேர்க்கவும்.

உப்பு சரி பார்த்து மூடி விடவும்,தீயை மிதமாக வைக்கவும்,தண்ணீர் வற்றி வரும் பொழுது சிம்மில் வைக்கவும். நன்றாக அரிசி வெந்து பிரியாணி ரெடியானவுடன் அடுப்பை அணைக்கவும்.அடி பிடிக்காமல் இருக்க 10 நிமிடம் சிம்மில் அடுப்பை வைக்கும் பொழுது கீழே ஒரு பழைய தோசைக்கல்லை வைக்கலாம்.

சுவையான ஆட்டுக்கால் பிரியாணி ரெடி.



ஆட்டுக்கால் பிரியாணி செய்து படம் அனுப்பிய திருமதி.உமாமா கலந்தருக்கு மிக்க நன்றி.
ஆட்டுக்காலின் சுவையிடனும் பிசுபிசுப்புடனும் இருக்கும். புதினா துவையல் , சிப்ஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்.


20 comments:

MyKitchen Flavors-BonAppetit!. said...

Wow,Superbly done Biryani.Luv ur clicks too.Mouth-watering dish.

athira said...

ஆஆஅ... மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)).

athira said...

ஆஆ.. ஆசியா என்னை இப்படி வதை வதைன்னு வதைச்சுப்போட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).. பின்ன என்ன... இப்படி ஒரு பிர்ர்ர்ர்ராணி பண்ணி என்னை எங்கயோ கொண்டு போயிட்டீங்க... இப்போ சைவம் நான் அதனால அடடடக்கிட்டேன் நாவை.

athira said...

சூப்பர் ஆசியா... எனக்கு அசைவம்தான் பிடிக்க்க்க்கும்... அதிலயும் மட்டின்... அதிலயும் பிரியாணி எண்டால் சொல்லவே வாணாம்... சூப்பர் குறிப்பு... ஒருநாள் செய்வேன்.

Kavitha said...

சுவையான பிரியாணி

ஆமினா said...

ஆட்டுக்காலில் பிரியாணியா வித்தியாசமா இருக்கு

சே.குமார் said...

மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
மீன் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி
சாப்பிட்டாச்சுக்கா...

இது வித்தியாசமா ஆட்டுக்கால் போட்டு...
சரி இந்த வாரம் அறையில் செய்யச் சொல்லலாம்...

ஸாதிகா said...

ஆட்டுக்கால் பிரியாணியாஆஆஆஆஆஆஆ?
ரிஸ்கே வேண்டாம்.அல் ஐன் வர்ரேன்.சமைத்து தந்து விடுங்கள் தோழி.

asiya omar said...

my kitchen flavors மிக்க நன்றி.

அதிரா உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

கவிதா மிக்க நன்றி.

asiya omar said...

ஆமினா ஊரில் எங்க வீட்டில் செய்வதுண்டு.நானும் செய்து பார்த்தேன் நல்லாவந்தது.என்னோட இரண்டாவது மைனி சூப்பராக செய்வாங்க,அவங்க இப்ப இல்லை,இது நானாக யோசித்து செய்தது,இப்ப அவங்க இருந்தால் அவங்க கிட்ட கேட்டு செய்திருப்பேன்.
டேஸ்ட் எங்களுக்கு பிடிச்சிருந்தது.

asiya omar said...

குமார் தம்பி பக்குவமாக செய்யணும்,எசகு பிசகாச்சுன்னா இதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
கருத்திற்கு மிக்க நன்றி.

vanathy said...

இப்படியெல்லாம் குறிப்பு போட்டு... இது கொடுமை. நான் எங்கை போறது ஆட்டுக்காலுக்கு????
சூப்பர் ரெசிப்பி, அக்கா.

S.Menaga said...

ஆட்டுக்காலில் பிரியாணியா?? இப்பதான் கேள்விபடுகிறேன்.சூப்பரா இருக்கு...நீங்களே இந்த பிரியாணியை செய்து கொடுத்துடுங்கக்கா...

asiya omar said...

தோழி ஸாதிகா அல் ஐன் வாங்க,நிச்ச்யம் செய்து தருகிறேன்.டேஸ்ட் செய்து பார்த்த பின்பு சொல்லுங்க,கருத்திற்கு நன்றி.

மேனகா உங்களுக்குமா? ஓ.கே.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

ஆஹா வானதி, கிடைக்கும் பொழுது செய்து பாருங்க.வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

Mahi said...

present Asiya akka!

Jay said...

wow...sounds interesting...cant wait to giv a try now..;)
Tasty Appetite

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆட்டுக்காலில் பிரியாணியா
புதுசா இருக்கே . நான் இப்பதான் கேள்விபடுகிறேன்.

Jaleela Kamal said...

பகரா கானா பிரியாணி செய்து இருக்கோம்\
ஆட்டுகாலில் பிரியாணி செய்ததில்லை

Jaleela Kamal said...

வாசனை கம கமன்னு இருக்கு