Sunday, October 23, 2011

சிக்கன் ஃப்ரான்க்ஸ் மசாலா

தேவையான பொருட்கள்:

சிக்கன் ஃப்ரான்க்ஸ் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிள்காய் -1
மல்லி இலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
மிள்காய்த்தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

செய்முறை:


முதலில் சிக்கன் ஃப்ரான்க்ஸ் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் போட்டு வேகவைத்து வடித்து கொள்ளவும்.5 நிமிடத்தில் வெந்து விடும்.ஆறியவுடன் சிறிய வட்டமாக கட் செய்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிள்காய், மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா போட்டு வதக்கவும்.தக்காளி,நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு சேர்க்கவும்.நன்கு வதங்கட்டும்.

கட் செய்த சிக்கன் ஃப்ரான்க்சை சேர்க்கவும்.சிக்கன் ப்ரான்க்ஸில் உப்பு இருக்கும்,எனவே உப்பு பார்த்து சேர்க்கவும்.

மஞ்சள்,மிளகாய்,மிளகு,சீரகத் தூள்களை சேர்க்கவும்.பிரட்டி விடவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி போடவும்.

இப்படி பிரட்டியது போல் வரும். நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான சிக்கன் ப்ரான்க்ஸ் மசாலா ரெடி.

இதனை சாதம், குபூஸ், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

எங்க உறவின பேச்சிலர்ஸ் ரூமில் அவசரத்திற்கு இப்படி மசாலா செய்து சாப்பிடுவதாக சொன்னார்கள். நான் என் முறையில் செய்து பார்த்தேன்.பிடித்திருந்தது..சிக்கன் ப்ரான்க்ஸ் வாங்கும் பொழுது பிடித்த குறிப்பிட்ட ப்ராண்ட் வாங்க வேண்டும். நான் சாதியா சிக்கன் ஃப்ரான்க்ஸ் உபயோகித்து செய்திருக்கிறேன்..


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

--ஆசியா உமர்..

18 comments:

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi ,Luv this Sausage recipe.Luks yum..yum too.Luv it .Will try it soon

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சிக்கன் பிரான்க்ஸ் ரொம்ப நல்லாருக்க்கும். அருமையா செய்திருக்கீங்க ஆசியாக்கா.

ஸாதிகா said...

ஆஹா..சிக்கன் சாசேஜ் எந்த் ரூபத்தில் சாப்பிட்டாலும் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.நீங்கள் கிரேவியாக செய்து காட்டிவிட்டீர்கள் தோழி.பிரைட் ரைஸ் ,நூடுல்ஸ் ,சூப் இப்படி பலவற்றிலும் சேர்த்துக்கொள்வோம்.

asiya omar said...

my kitchen flavors மிக்க நன்றி.

ஸ்டார்ஜன் வருகைக்கு நன்றி.

asiya omar said...

தோழி ஸாதிகா கருத்திற்கு மகிழ்ச்சி. நானும் ஃப்ரைட் ரைஸ்,நூடுல்ஸ்,பாஸ்தா,சாண்ட்விச் எல்லாவற்றிலும் உபயோகிப்பதுண்டு.சும்மா அவித்ததை சிறிது எண்ணெயில் பிரட்டினால் அப்படியே பொங்கும்,கொஞ்சம் பெப்பர் பவுடர் தூவி சாப்பிட்டால் கூட சூப்பராக இருக்கும்.

ஹேமா said...

இங்கு மிகவும் மலிவானதொன்று இந்த சிக்கன் பிரான்க்ஸ்.இதுவரை பொரித்துமட்டுமே சாப்பிட்டு இருக்கிறேன்.இனி உங்கள் கைவண்ணத்திலும் !

♔ம.தி.சுதா♔ said...

அக்கா குறை நினைக்கக் கூடாது நாங்க இனி தை மாதத்திற்குப் பிறகு தான் மாமிசம் உண்ணலாம்..

அமைதிச்சாரல் said...

அடடா!!.. லஷ்மி பூஜைக் காலமாப் போச்சே :-))))

அமைதிச்சாரல் said...

பார்க்கவே ரொம்ப நல்லாருக்குது.

இளம் தூயவன் said...

அவசரத்திற்கு ஒரு கறி செய்வதற்கு சிறந்தது ,அருமையாக உள்ளது.

athira said...

நாங்கள் இங்கு இதை Hotdog என்போம், நீங்க வேறு பெயர் சொல்கிறீங்கள்... சும்மா பொரித்தாலே போதும் ... முடிந்துவிடும், நீங்க மினக்கெட்டு அழகாகச் செய்திருக்கிறீங்க.

Chitra said...

chicken sausage masala.... super, akka!

சே.குமார் said...

எங்கள் அறையில் அவசரத்துக்கு இதுதான். ஆனால் நாங்கள் அவிழ்த்து கட் செய்வதில்லை. இது புதுசு...

asiya omar said...

ஹேமா மிக்க நன்றி.

மதிசுதா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

இளம்தூயவன் மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

சே.குமார் மிக்க நன்றி.

Kavitha said...

ஆசியா
எளிமையாக இருக்கு
அவசியம் செய்து பார்க்கிறேன்

Kavitha said...

ஆசியா
எளிமையாக இருக்கு
அவசியம் செய்து பார்க்கிறேன்

Jaleela Kamal said...

எல்லா பிள்ளைகளுக்கும் சாசேஜ் என்றால் மிக பிரியம் சும்மா பொரிதாலே ஒரு நிமிஷம் எல்லாம் காலியாகிடு,
நான் சாண்ட்விச், பாஸ்தா இப்படிதான் செய்வது,
மசாலாவும் சூப்பரா இருக்கு ,

saleemyousuf said...

yummy!!!!!!!!!!!!!!