Monday, October 24, 2011

ஆதாமிண்ட மகன் அபு - என் பார்வையில்..

ஆதாமிண்ட மகன் அபு படத்தை பார்க்கவேண்டும் என்று கொஞ்ச நாட்களாக நினைத்து கொண்டிருந்தேன்,எனது சகோதரர் இந்தப்படத்தைப் பார் என்று அதன் டிவிடியை கொடுக்கும் பொழுது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும், படம் பார்க்கும் பொழுது மேலுள்ள புகைப்படத்தை கிளிக் செய்தேன். முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் இருப்பது போல் அமைந்த புகைப்படம் இது.

துபாயில் படத்தின் இயக்குனர் சலீம் அகமது அவர்களுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது எனது அண்ணன் இயக்குநருடன்.

ஆஸ்கார் விருதுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சார்பில் படங்களை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு மலையாள படமான 'ஆதாமிண்ட மகன் அபு' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'
ஆதாமிண்டே மகன் அபு' படத்தின் இயக்குனர் சலீம் அகமது. இப்படம் இந்த ஆண்டு 4 தேசிய விருதுகளை பெற்றது. ஆடுகளத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது நினைவிருக்கலாம்.

ஆதமிண்டே மகன் அபூ படத்தில் நாயகனாக நடித்த சலீம் குமார் சிறந்த தேசிய நடிகராக தேர்வு பெற்று, தனுஷுடன் சேர்த்து விருதளித்துக் கெளரவிக்கப்பட்டார்.இந்தப்படத்தின் இயக்குநர் இந்த கதைக்கான கரு பத்து வருடமாக தன் மனதில் உருபெற்று அது திரைபடமாக உருவானதாக தெரிவித்திருக்கிறார்.


படத்தில் அபூவாக மலையாள காமெடி நடிகர் சலீம் குமாரும்,ஆயிசும்மாவாக ஹிந்தி நடிகை ஸரீனா வஹாபும் நடித்துள்ளனர்.

அபூ,ஆயிசும்மா வயதான தம்பதியர்கள். அபூ அத்தர்(வாசனை திரவியம்) , இஸ்லாமிய புத்தகங்கள,கைமருந்துகளும் நடந்தே சென்று விற்றுவரும் வியாபாரி.ஆயிசும்மா மாடு கன்று வளர்த்தும், அதனின்று பாலைக்கறந்து விற்றும் பணம் ஈட்டி வருகிறார்.அவர்களுக்கு புனித ஹஜ்யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு பல வருடங்களாக பணம் சிறிது சிறிதாக சேமித்து வருகிறார்கள்.அபூவின் நண்பர்கள் உதவி செய்ய தயாராக இருந்தும், அபூ தம்பதியினர் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்கள் வருமானத்தில் சேமித்த பணத்தில் இருந்தே ஹஜ் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.அந்த முயற்சியே கதையாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை இயக்குனர் மிகவும் அழகாக சித்தரித்துள்ளார்.

படம் பாங்கு சத்தத்தோடு ஆரம்பித்து ஹஜ் பெருநாள் காலை தக்பீர் முழக்கத்துடனும், பாங்கு சத்தத்துடன் முடிகிறது.படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இனிமையானவை, இந்த மக்கா மதீனத்தில் பாடலை கேட்டுப்பாருங்க.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவும், இசையும் மிகவும் ரசிக்கும் படியிருக்கும்.

இந்த படத்தின் நாயகர் அபுவைப் போலவே உள்ள தோற்றத்துடன் எங்கள் ஊரில் அத்தர்,பத்தி விற்கும் ஒருவர் இன்னமும் இருந்து வருகிறார்.இந்தப் படத்தை பார்க்கும் பொழுது அவருடைய நினைவு வந்தது. தள்ளாத வயதிலும் நடந்து சென்று வியாபாரம் செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம் தான்..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவிருக்கும் என் சகோதரர் ஜனாப்.கலந்தர் குடும்பத்தினருக்கு எங்களின் துவாக்களும் வாழ்த்துக்களும்.

--ஆசியா உமர்.

நன்றி கூகிள்...14 comments:

athira said...

ஆஆ.. நில்லுங்க வடை எடுத்திட்டு வாறேன்ன்... ஆஆ... பச்சைமிளகாய்ச் சட்னியை ஆரோ தூக்கிப்போட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))

athira said...

மெக்கா... வீடியோக் காட்சி சூப்பராக இருக்கு.

//எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவிருக்கும் என் சகோதரர் ஜனாப்.கலந்தர் குடும்பத்தினருக்கு எங்களின் துவாக்களும் வாழ்த்துக்களும்.///

எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்க போயிருக்கிறீங்களோ ஆசியா?

asiya omar said...

அதிரா மிக்க நன்றி,youtube பாடல் இணைக்க சொல்லிதந்தமைக்கு.
நாங்கள் குடும்பத்துடன் ஒரு முறை சென்றிருக்கிரோம் உம்ரா செய்வதறகாக,இனி தான் ஹஜ் செய்ய வேண்டும்.இன்ஷா அல்லாஹ்!

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Chitra said...

நெகிழ வைக்கும் படம். அருமை. பகிர்வுக்கு நன்றி, அக்கா.

மாய உலகம் said...

//எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவிருக்கும் என் சகோதரர் ஜனாப்.கலந்தர் குடும்பத்தினருக்கு எங்களின் துவாக்களும் வாழ்த்துக்களும்.///

எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

சுவனப்பிரியன் said...

எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களுடைய விமர்சனம் கண்டு நானும் இந்த படத்தை இன்று பார்த்தேன். படம் ரொம்ப நல்லாருக்கு. நெகிழவைத்த கதை. சலீம் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார். இவரை பார்க்கும்போது கஷ்டப்படுகிறவர்களின் நாட்டத்தை இறைவன் கண்டிப்பாக நிறைவேற்றுவானாக. ஆமீன்

asiya omar said...

ரத்தினவேல் ஐயா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

மாயவுலகம் மிக்க நன்றி.

சுவனப்பிரியன் மிக்க நன்றி.

asiya omar said...

ஸ்டார்ஜன்,படத்தை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சகோ.மகிழ்ச்சி.

சே.குமார் said...

அக்கா... விமர்சனம் அருமை.


//எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவிருக்கும் என் சகோதரர் ஜனாப்.கலந்தர் குடும்பத்தினருக்கு எங்களின் துவாக்களும் வாழ்த்துக்களும்.///

எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸாதிகா said...

engaLutaiya thuaavum vaazththukkaLum ungkaL sakootharar kutumpaththukku

asiya omar said...

நன்றி தம்பி குமார். மிக்க மகிழ்ச்சி.

நன்றி தோழி ஸாதிகா.மிக்க மகிழ்ச்சி.

அனைவரின் வாழ்த்துக்களையும் துவாக்களையும் தெரிவித்து விடுகிறேன்.:)

ஹேமா said...

வாழ்த்துகள் தோழி.படம் பார்க்கணும்போல இருக்கு உங்க விமர்சனம்..நிச்சயம் பார்ப்பேன் !