Monday, October 10, 2011

ஃபிஷ் மஞ்சூரியன்/ fish manchurian

தேவையான பொருட்கள் ;

போன்லெஸ் ஃபிஷ் - 300கிராம்
சில்லி பவுடர் - அரை டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் - தேவைக்கு
வெங்காயம் - 1
கொடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பெரிய பல்
சிக்கன் சூப் கியூப் - 1
டொமட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்


நான் இங்கு ஃப்ரோசன் ஒயிட் ஃபிஷ் உபயோகித்து இருக்கிறேன். நன்கு கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும். மீனை துண்டுகளாக்கி கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம்,கொடைமிளகாயை சதுரமாகவோ நீள்மாகவோ நறுக்கி கொள்ளவும்.கார்ன்ஃப்லோரை கரைத்து ரெடி செய்து வைக்கவும்.

மீன் துண்டுடன் தேவைக்கு உப்பு,லைம் ஜூஸ், சில்லி பவுடர், மைதா மாவு,முட்டை வெள்ளைக்கரு சேர்த்து சிறிது ஊற வைக்கவும்.

ரெடி செய்த மீனை தேவைக்கு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய பூண்டு,இஞ்சி,பச்சை மிள்காய் ஒன்றன் பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.சிறிது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பின் கொடைமிளகாய் சேர்க்கவும்,சூப் கியூப் பொடித்து போடவும். சூப் கியூப்பில் உப்பு இருக்கும். எனவே உப்பு சேர்க்க வேண்டாம். பொரித்த மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.அடுத்து சோயா சாஸ் சேர்க்கவும்.

டொமட்டோ சாஸ் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும். கார்ன்ஃப்லோரை ஒரு கப் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்க விடவும். ரொம்ப திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு கிரேவி திக்கானவுடன் அடுப்பை அணைக்கவும். விரும்பினால் சில்லி கார்லிக் சாஸ் கூட சேர்க்க்லாம். நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

சுவையான ஃபிஷ் மஞ்சூரியன் ரெடி.
நான் எல்லாம் ரெடி செய்து பரிமாறுவதற்குள் சூடாக ரொட்டி சுடச் சுட வாவ் ! மக்கள் எல்லாம் சாப்பிட்டு முடிச்சாச்சு.

--ஆசியா உமர்.

26 comments:

S.Menaga said...

சூப்பரா இருக்குக்கா..

revathi said...

Super... akka asathureenga..:)
Reva

athira said...

ஆஆஆஆஆஅ... ஆசியா, பிஸ் மஞ்சூரியனா? சூப்பராக இருக்கு. இதே வைட் பிஸ், இங்கும் புரோசினாக கிடைக்குது, நானும் வாங்கி வந்து, நீங்க செய்திருப்பதைப்போல பொரிப்பேன், அதுக்கு மேல எதுவும் செய்வதில்லை:))).

athira said...

//நான் எல்லாம் ரெடி செய்து பரிமாறுவதற்குள் சூடாக ரொட்டி சுடச் சுட வாவ் ! மக்கள் எல்லாம் சாப்பிட்டு முடிச்சாச்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), நினைக்கவே ஆசையாக இருக்கு:)).

ஆமினா said...

இப்பட்டி செஞ்சா நல்லா இருக்குமான்னு நெனச்சு பார்த்தேன்... நீங்க செஞ்சே காமிச்சுடீங்க

ஆமினா said...

2 போட்டோ தானா? :-(

வாழ்த்துக்கள் ஆசியா

மேலும் மேலும் நிறைய குறிப்பு கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்

Kavitha said...

சுவையான குறிப்பு

ஸாதிகா said...

வாவ்..ஆசியா பார்க்கவே அருமையாக உள்ளது.அவசியம் செய்துவிடவேண்டும்,

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.

மிக்க மகிழ்ச்சி ரேவா.

asiya omar said...

அதிரா வாங்க, ஆமாம் பொரித்தவுடன் அப்படியே சாப்பிட,நான் சொன்ன மற்ற பொருட்களுடன் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஊறவைத்து மீனை பொரித்தால் சூப்பராக இருக்கும்.
நன்றி அதிரா.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஆமினா நாங்க இங்கு எப்பவாவது போகும் falcon restaurant -டில் இதனை ஆர்டர் செய்து நாணுடன் சாப்பிடுவதுண்டு,எனவே நாமே செய்து அசத்திவிடுவோம்னு செய்தது தான் இது.
ஆமாம் என்ன இரண்டு படம்,புரியவில்லை,ஐந்து படம் பகிர்ந்திருக்கிறேனே..
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

கவிதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா வாங்க,நிச்சயம் செய்து பாருங்க,சுறா,சீலா மீனில் கூட செய்து பார்க்கலாம்.மிக்க மகிழ்ச்சி.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சூப்பரா இருக்கு.செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Wow,remba nalla fish manchurian.Asathal recipe Akka.Luv it really.Nalla demo.

சே.குமார் said...

படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறுதுக்கா...

படங்களுடன் சூப்பரா இருக்குக்கா..

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கு
நானும் அடிக்கடி செய்வதுண்டு
என்னதான் பிரான் , பிஷ்,காலிபிளவர் மஞ்சூரியன் செய்தாலும் பிள்ளைகள் அதிகம் விரும்புவது சிக்கன் மஞ்சூரியன் தான்.

நானும் போன வாரம் இதே பிஷ் தான்/.

asiya omar said...

வாலைக்கும் ஸலாம் ஆயிஷா.கருத்திற்கு நன்றி.

மைகிச்சன் ஃப்லேவர்ஸ் மிக்க நன்றி.

asiya omar said...

தம்பி குமார் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி.

ஜலீலா வாங்க,மஞ்சூரியன் நான் அடிக்கடி செய்வதில்லை,எப்பவாவது தான். சாஃப்ட் சிக்கனாக இருந்தால் சிக்கன் மஞ்சூரியனும் அருமையாக இருக்கும்.கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

vanathy said...

Wow! super recipe.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...அருமை...

Jay said...

bookmarked right away...thanks for sharing this perfect recipe..:)
Tasty Appetite

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அட பார்க்கவே அழகா இருக்கு.ஆசியா சூப்பர். இதுநான் செய்தது இல்லை. சாப்பிட்டு இருக்கேன். ஆனா எனக்கு சிக்கன் மஞ்சூரியந்தான் பிடிக்கும்.:)

asiya omar said...

வானதி வாங்க நலமா?மிக்க நன்றி.

கீதா ஆச்சல் கருத்திற்கு மிக்க நன்றி.

ஜெ வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

தேனக்கா வாங்க,நலமா? வருகைக்கு மகிழ்ச்சி.

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

மாய உலகம் said...

வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்..