Tuesday, November 1, 2011

எங்க வீட்டு பத்மினியும் தோட்டமும்

இவ தாங்க எங்க வீட்டு பத்மினி.சில வருடங்கள் முன்பு கார் ஓட்டப் பழக ஒரு பழைய கார் வாங்கலாம்னு மார்க்கெட்டில் தேடிப்பிடித்து வாங்கி வந்தோம் இந்த ராணியை. ஆனால் அப்ப அப்ப அவ மக்கர் பண்ணத்தான் செய்வாள்..

ஆஹா பத்மினி என்ன அழகு! பாருங்களேன்...
காம்பவுண்ட் வெளியே வளர்க்க பெடிலாந்தஸ் அழகாக இருக்கும்,ஆடு, மாடு கூட தின்னாது.


அவளை விதம் விதமாக படம் எடுத்தோம்..

அவளை எப்படி படம் எடுத்தாலும் அழகாக இருப்பாள், அவளை அழைத்துக்கொண்டு குற்றாலம்,தூத்துக்குடி மற்றும் நெல்லையை வலம் வந்தது ஒரு காலம்.. ஏன் தாமிரபரணி ஆற்றங்கரை நெல்லை பாலத்திற்கு அடியில் கூட எங்க கூட வந்திருக்கா,அவளோட போட்டோக்கள் நிறைய இருக்கு அதை எல்லாம் போடனும் என்றால் அதற்கு இந்த இடுகை போதாது, உங்களுக்கும் போரடித்து விடும்..ஒரு சோகம்ங்க ,இப்ப அவ எங்க இருக்காளோ !

அப்படியே எங்க வீட்டில் உள்ள செடி கொடிகளைப் பாருங்க,இரண்டு வகையான கொடியை பின்னி எங்க வீட்டு போர்டிகோவின் மேல் உள்ள ஒப்பன் டெரஸில் வளர்த்து விட்டிருந்தேன்..மஞ்சளும் வெள்ளையுமாக அழகாக பூக்கும்..

இவள் மணமணக்கும் மல்லி.. அவளுக்கு கொடி கட்டி விட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைப்பேன்,அவள் கொடியாக இல்லாமல் என் சோம்பேறித்தனத்தால் செடியாகத்தான் இன்னும் இருக்கிறாள்...

ஆர்னமெண்டல் பாம், கிறிஸ்த்மஸ் மரம் இவங்க எல்லாம் ரொம்ப பெரிசாக இப்ப வளர்ந்துட்டாங்க..

பன்னீர் ரோஜா,பெடிலாந்தஸ்,பில்லர் காக்டெஸ் நான் கவனிக்காததால் இப்படி இருக்காங்க..

ஒரு பக்கமாக செம்பருத்தி,இலட்சக்கொட்டை மரம்,மாதுளை,கருவேப்பிலை,எலுமிச்சை,ஒற்றையாய் ஒரு தென்னை இவங்கள்ளாம் இருக்காங்க..
அப்படியே பின்னாடி வந்தால் எங்க வீட்டு மகராசி முருங்கை ,காய் ஒவ்வொன்றும் அவ்வளவு நீளம், வந்தவங்க எல்லாம் பறிச்சிட்டு போவாங்க.. ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.அத்தனை ருசி இந்தக்காயை மட்டன் சால்னாவில் போட்டால் என்ன ருசி தெரியுமா?

இந்த வேப்பங்கன்றுகள் எல்லாம் நான் தானமாக கொடுக்கவென்றே வளர்ப்பேன், யாருக்காவது வேண்டுமான்னு கேட்டு கேட்டு கொடுப்பேன்..இந்த அஸ்பராகஸ்,டைஃபென்பெக்கியா,ரோஸ் எல்லாம் என் செல்லங்கள்..இந்த டைபென்பெக்கியாவை எங்களோட ஃபேமிலி ப்லாண்ட் என்று எல்லோரிடமும் சொல்வதுண்டு,இதனை நாங்க தூத்துக்குடியில் இருந்து கொண்டு வந்து பின்பு மேலப்பாளையத்தில் வளர்த்து இப்ப இந்த வீட்டில் இருக்கு.இதற்கு என் மகனின் வயது...மேஜராயிட்டா..பத்திரமா இருக்கியாடா செல்லம் :(((( ?இந்த சின்ன லான் நாங்க மெயிண்டெயின் பண்ணாமல் இப்படி இருக்கு..கொரியன் கிராஸ் என்று சொல்லி நாகர்கோவிலில் இருந்து அதனை தருவித்து, நிலத்தை பதப்படுத்தி, நட்டு, பச்சை பிள்ளைக்கு பால் கொடுப்பது போல் அப்ப தண்ணீர் காட்டி வாடாமல் வதங்காமல் எட்டு வருடமாக வளர்த்த லான் தான் இப்ப பட்டுப்போய் பார்க்கவே பாவமாய்...

வந்ததே வந்திட்டீங்க அப்படியே வீட்டுக்குள் ஒரு நடை வாங்க...நிச்சயமா சமைத்து அச்த்துவேன்...
மாய உலகம் ராஜேஸ் அவருடைய இந்த பதிவில் பண்ணையாரும் பத்மினியும் என்ற குறும்படத்தை பகிர்ந்திருந்தார்.மிக்க நன்றி மாய உலகம்.என்னை அந்தப்படம் மிகவும் கவர்ந்தது. அதனை நீங்களும் ரசியுங்களேன்.

என் வீட்டுத் தோட்டம் பற்றிய கவிதை(கிளிக்கவும்).

--ஆசியா உமர்.


44 comments:

விச்சு said...

தோட்டம் அருமை. நல்ல ரசனை உங்களுக்கு.

HajasreeN said...

நல்ல இருக்கு, ரசனை உள்ளவங்க நீங்க..

suryajeeva said...

மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

எல் கே said...

படங்கள் அருமை

அஹமது இர்ஷாத் said...

அந்த‌ குறும்ப‌ட‌ம் முன்னே பார்த்திருக்கிறேன்..

ஆனாலும் நீங்க‌ ப‌கிர்ந்த‌ ப‌த்மினி வித் வீட்டோடு சூப்ப‌ர்..என்ன‌மோ தெரிய‌ல‌ என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு..அருமைங்க‌ :)

MyKitchen Flavors-BonAppetit!. said...

Thottam Arumai yaka maintain seithulleerkal.Remba pidithirukirarhu.Luv it

athira said...

அடடா சூப்பர்... கார்டின் பதிவை நான் அப்பவே தொடர் என சொல்லி பலரை அழைத்திருக்கலாமோ என தோணுது.

பத்மிதி ஹா..ஹா..ஹா.... எனக்கும் இப்போ வாகனத்துக்கும் பெயர் வைக்கலாமே எனத் தோணுது, நல்ல ஐடியா சூப்பர் எனக்கும் பத்மினியைப் பிடிச்சிருக்கு.

athira said...

வாசலில் குரங்குவால் பூமரம், கடதாசி ரோசா எல்லாமே அழகு. மொத்தத்தில் பச்சைப் பசேலென இருக்கு.

ஸாதிகா said...

தலைப்பைப்பார்த்ததும் யாரையோ ஒரு பெண்ணைப்பற்றி சொல்லப்போராங்க ஆசியா என்று பார்த்தேன்.ஆசியா,உங்கள் வீட்டு தோட்டம் கொள்ளை அழகு.இதைப்பார்க்கவேண்டியே ஒரு முறை மே.பா வரவேண்டும்.

Kalpana Sareesh said...

Awesome garden as well as ur queen is too good..

asiya omar said...

விச்சு மிக்க நன்றி.

ஹாஜாஷிரீன் மிக்க நன்றி.

சூர்யஜீவா மிக்க நன்றி.

எல்.கே படங்கள் என் கணவர் எடுத்தது,மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அஹமது இர்ஷாத் ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க,மிக்க மகிழ்ச்சி சகோ..

மைகிச்சன் ஃப்லேவர்ஸ் மிக்க நன்றி.

ஆமாம் அதிரா உங்க தோட்டம்,ஸாதிகா,இமாவோடது எல்லாமே அழகு,எனக்கும் ஆசையாக இருந்தது,எப்பவோ எடுத்த போட்டோவை பகிர்ந்து கொண்டேன்..மிக்க நன்றி.

asiya omar said...

தோழி ஸாதிகா மிக்க நன்றி,இந்த வீடு மே.பா வில் இல்லை,நெல்லை- 7 லில் உள்ளது, நிச்ச்யம் வாங்க..ஒவ்வொரு முறை ஊர் சென்ற பின்பும் இருக்கிற சிறிய தோட்டத்தை சரி செய்வது வழக்கம்..

கல்பனா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி..

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியாக்கா..

எல்லாமே அழகா இருக்கு, மாஷா அல்லாஹ்! நல்ல முறையில் வீடு அமைந்தால்தான் அழகிய முறையில் செடி, கொடிகளை வளர்க்க முடிகிறது. நாம வெளிநாட்டில் இருந்துக் கொண்டு யாரையும் நம்பி ஒப்படைத்தால் நம் கனவு இல்லம் நினைவில் வருவதில்லை :( சொன்னபடி செய்யாம‌ல் வீடு அமைப்பு மாறிவிட்டதால் ஒன்றிரண்டு செடிகள் மட்டுமே வைக்க முடிகிறது.

கறிவேப்பிலை துளிர்த்து கொஞ்ச நாளிலேயே மடிந்துவிடுகிறதே? தன்னால் விளைந்தால்தான் வளரும், நாம் பிடுங்கி வந்து நட்டி வைத்தால் அது வளராது என்கிறார்களே? அது நன்கு வளர டிப்ஸ் ஏதும் இருக்கா ஆசியாக்கா?

Jay said...

wow...beauuuuuuuutiful cliks...your garden is heavenly..;)
Tasty Appetite

athira said...

இதைப்பார்க்கவேண்டியே ஒரு முறை மே.பா வரவேண்டும்.///

என்னாது மேல்பாக்கமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))... ஹையோ நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசி....:)))

asiya omar said...

வஅலைக்கும் ஸலாம் அஸ்மா..
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

எங்கள் வீட்டு பின்புறத்தில் இரண்டு கருவேப்பிலை மரம் இருக்கு,ஒன்று நான், எங்க மாமா ஊரில் இருந்து பிடுங்கி தந்ததை நட்டேன்,தாய் மண்ணை அணைத்து செடியுடன் எடுத்து வரவேண்டும்,வேர் ஆழமாக இருக்கும்,அறுந்து விடாமல் எடுத்து வந்து நட்டு, பிள்ளையைப் போல கண்ணும் கருத்துமாக பாதுகாத்தால் நிச்சயம் நல்ல பலன் தரும்,நான் வரும் பொழுதேல்லாம் கருவேப்பிலையை பறித்து இங்கு கொண்டு வர தவறுவதில்லை..தானாக வந்த மரம் கூட மெதுவாகத்தான் வளர்ந்தது..ஆனால் ஒரு மரம் பெரிதாகிவிட்டால் அதன் பழங்கள் கீழே விழுந்து கீழே நிறைய கருவேப்பிலைச் செடிகள் வந்து கொண்டே இருக்கும்,அப்புறம் அவர்களை என்ன செய்வதுன்னு தான் தெரியாது...

கவனமாக வளர்த்து எடுங்க..

கோமதி அரசு said...

வீடு,கார், தோட்டம் எல்லாம் அழகு.

குறும் படம் பார்க்க முடியவில்லை பார்த்ததும் கருத்து சொல்கிறேன்.

ஹேமா said...

ஆசியா...உங்க சமையல் பக்குவம்போலவே வீட்டைச் சுற்றியும் பசுமைப் பக்குவம் அழகு.
பத்மினியம்மாவும்தான் !

angelin said...

உங்க வீட்டு பத்மினியும் உங்க மரம் செடி பிள்ளைகளும் ரொம்ப அழகா இருக்காங்க .

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

படங்கள் அருமை.மாஷா அல்லாஹ்...

ஸ்வர்ணரேக்கா said...

குறும்படம் அருமை.. பகிர்ந்ததுக்கு நன்றி ஆசியா..

மகி said...

அழகான வீடு & தோட்டம் ஆசியாக்கா! இந்த வீட்டை விட்டுட்டு வந்து இருப்பது ரொம்ப கஷ்டம்தான்! :-| வீட்டைப் பார்த்துக்க ஆள் இருக்காங்க தானே? எங்க வீடு வாடகைக்கு விட்டாச்சு, இந்தமுறை போனப்ப என்னவர் மட்டும் போய்ப்பார்த்துட்டு வந்தார். அந்த பெங்காலிப்பெண் வீட்டைப் பார்த்துப் பார்த்து வைச்சிருக்கு என்று சொன்னதும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது.

ப்ரிமியர் பத்மினி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அழகா இருக்காங்க,வீட்டைவிட்டு அனுப்பிட்டீங்களா என்ன? :)

middleclassmadhavi said...

பத்மினியும் செடிகொடிகளும் அழகோ அழகு!!

சிநேகிதி said...

மாஸாஅல்லாஹ் தோட்டம் மிகவும் அருமையாக இருக்கு

Rumaanah said...

Mummy ... I just saw the video ... it was hilarious .. awesome nd it was a nice short story ... !

S.Menaga said...

உங்க வீடும் தோட்டமும் ரொம்ப அழகா இருக்கு...

Rathnavel said...

அருமையான பதிவு
வாழ்த்துக்கள் அம்மா

Anonymous said...

ஒரு சோகம்ங்க ,இப்ப அவ எங்க இருக்காளோ !//

ஹா ஹா மாய உலகத்துல இருக்காங்கன்னு சொல்லலாமுன்னு நினைச்சேன்.. நீங்களே சொல்லிட்டீங்க மிக்க நன்றி...

Anonymous said...

செடிகொடிகள் வீட்டின் தோட்டத்தில் அழகாக இருக்கு.. அதை அருமையாக பகிர்ந்துருக்கீங்க... வாழ்த்துக்கள்.

Anonymous said...

வந்ததே வந்திட்டீங்க அப்படியே வீட்டுக்குள் ஒரு நடை வாங்க...நிச்சயமா சமைத்து அச்த்துவேன்...//

அசத்த வாழ்த்துக்கள் ;-)

asiya omar said...

JAY
கோமதி அரசு
ஹேமா
ஏஞ்சலின்
ஆயிஷா அபுல்
ஸ்வர்ணரேக்கா
மகி
மிடில்கிளாஸ் மாதவி
சிநேகிதி
ருமானா
மேனகா
ரத்னவேல் ஐயா

அனைவரின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் said...

தோட்டம் ரொம்ப அழகாருக்கு ஆசியா..
பத்மினியும் ஜூப்பரு :-)

asiya omar said...

மாய உலகம் எனக்கு அந்த குறும்படம் மிக பிடித்திருந்தது,பகிர்வுக்கு நன்றி.
எங்களிடம் இருந்த பத்மினி நினைவு வந்ததால் அதனை பகிர்ந்தாச்சு..பத்மினிக்கு நிறைய கமெண்ட்ஸ் வந்திருக்கு..
மிக்க மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, தோட்டம், கார், வீடு எல்லாமே அழகோ அழகு. இது இந்தியாவில் இருக்கும் உங்க வீடா???

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஆமாம் வானதி. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

அஸ்மா said...

கறிவேப்பிலை கன்றை வேரோடுதான் பிடுங்கி வருகிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் தாய்மண் அதிகமில்லாமல் கொஞ்சமாக இருக்கும். அடுத்த முறை அதையும் கவனத்தில் வைக்கிறேன். விளக்கத்திற்கு நன்றி ஆசியாக்கா :)

Jaleela Kamal said...

ரொம்ப அழகாக இருக்கு உங்க பத்மினி , வீடு தோட்டம் எல்லாம். மெயின் சிட்டியில் இருந்து கொண்டு இதுபோல் எல்லாம் நாங்க எதிர்பார்க்க முடியாது.

asiya omar said...

ஜலீலா பிஸியிலும் வந்து சென்றமைக்கு நன்றி.முக்கியமாக இந்தக் குறும்படத்தை பகிரவே இந்த இடுகை..

நாகா ராம் said...

உங்க தோட்டம் ரொம்ப. அழகா இருக்கு. நுழைவாயில்ல இருக்கற கொடி கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு

நாகா ராம் said...

இன்றுதான் இந்த படம் பார்த்தேன்.. பத்மினிய ரொம்ப பிடிச்சுபோச்சு :-) ஆசியாக்கா உங்களுக்கும்
மாய உலகம் ராஜேஸ்க்கும் மிக்க நன்றி... இது குறும்படமா??!! இல்லவே இல்ல.. சென்ட்டிமென்ட் சிகரம்ங்க :-) உங்க ரெண்டு பேருக்கும் மீண்டும் ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி :-)

Asiya Omar said...

மிக்க நன்றி நாகாராம்.

usman said...

its been a long time i read ur blogs, nice one asiya akka. Just while reading felt the cool breeze from the trees :-)

Asiya Omar said...

Thanks usman for the lovely comments,Hope you watch that short film.