Wednesday, November 9, 2011

கீரை பருப்பு

தேவையான பொருட்கள் ;
முருங்கைக்கீரை - 2 பெரிய கப்
துவரம் பருப்பு - இரண்டு கைப்பிடியளவு
வெங்காயம் - 2
பூண்டு - 6பல்
துருவிய தேங்காய் - 3டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
சீரகத்தூள் - கால்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
உப்பு - தேவைக்கு

கீரையை ஆய்ந்து கழுவி எடுத்து கொள்ளவும்.

பருப்பை கால்மணி நேரம் ஊறவிட்டு மஞ்ச சீரகத்தூள் சேர்த்து பூண்டு பல் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,மிளகாய் வற்றல் போட்டு வெடிக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சிறிது வெங்காயம் வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்,சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்,முருங்கைக்கீரை சிறிது மசிய வெந்தால் தான் சாப்பிட இலகுவாக ருசியாக இருக்கும்.

வெந்து வரும் கீரையுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.

கீரை பருப்பு கலந்து விட்டு உப்பு சேர்த்து சிறிது மூடி விடவும்.எல்லாம் சேர்ந்து வெந்து மணம் வரும்.

தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி விடவும்.

சுவையான சத்தான கீரை பருப்பு ரெடி..


பெருநாள் கொண்டாட்டம், விருந்தினர் வருகை,விஷேச சமையல் என்றும் மிச்சம் மீதியால் ஃப்ரிட்ஜ் நிரம்பி வழிந்தாலும் மனம் ஏனோ கீரை சாப்பிட வேண்டும் என்று ஏங்கியது.

சென்ற மாதம் அல் ஐனில் காற்றுடன் பெய்த மழையில் பக்கத்தில் இருந்த ஒரு முருங்கை மரமும் ஒடிந்து விழுந்தது.சரி இனி நாம் கீரை சாப்பிட்டது போல் தான் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

தற்செயலாக வாக்கிங் போனப்ப அந்த மரம் மீண்டும் துளிர்த்து பச்சை பசேல் என்று அழகாக இருந்தது,அதனை ஏக்கத்துடன் பார்த்து விட்டு வீடு வந்து கீரை கிடைத்தால் சமைக்கலாமேனு நினைச்சேன், காலிங் பெல் சத்தம்,தமிழ் பேசுகிற அந்த தம்பி வந்து, அக்கா முருங்கைக் கீரை வேண்டுமான்னு கேட்க அப்புறமென்ன மணக்க மணக்க கீரை சமையல் தான்..

--ஆசியா உமர்..
29 comments:

athira said...

சூப்பர் குறிப்பு.

இங்கு முருங்கை இலை கிடைக்காது. எனக்கு வறை செய்யப்பிடிக்கும். போனகிழமை சொல்லிவிட்டேன், எனக்கு பார்ஷலில் அனுப்பும்படி, இக்கிழமை வந்தாலும் வரலாம்.... செய்துபார்த்திடலாம்.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Super Good and healthy.Yum Yum Keerai Paruppu.Luv it.

மகி said...

சூப்பரா இருக்கு ஆசியாக்கா! முருங்கை கீரை வாங்க சைனா மார்க்கெட் போகணும். கீரை இருக்கா இல்லையான்னு தெரியாம, 20 மைல் போவதான்னு சோம்பேறித்தனம்தேன்!:)

தேங்காய்-பூண்டு போடாமல் சின்னவெங்காயம்-தக்காளி சேர்த்து செய்வோம் எங்க வீட்டில்.

middleclassmadhavi said...

சுவையான சத்தான கீரை பருப்பு!! thanks!

ஆமினா said...

சூப்பர்

ஸாதிகா said...

பருபு சேர்த்து முருங்கைக்கீரையா?நாங்கள் மற்ற கீரைவகைகளுக்குத்தான் பருப்பு சேர்ப்போம்.அவசியம் இம்முறையில் ஒரு முறை சமைத்து பார்த்து விடுகிறேன் தோழி!

சே.குமார் said...

சூப்பர் குறிப்பு ஆசியாக்கா.

asiya omar said...

அதிரா வருகைக்கு மகிழ்ச்சி,கிடைக்கும் பொழுது செய்து பாருங்க.

மைகிச்சன் கருத்திற்கு மகிழ்ச்சி.

மகி சின்னவெங்காயம் தக்காளி சேர்த்தும் மற்ற கீரை சமைத்ததுண்டு.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மிடில்கிளாஸ் மாதவி மிக்க நன்றி.

ஆமினா மிக்க நன்றி.

ஸாதிகா கருத்திற்கு மகிழ்ச்சி,செய்து பாருங்க தோழி.

மிக்க நன்றி தம்பி குமார்..

சிநேகிதி said...

அக்கா சுவையாக இருக்கு பருப்பு கீரை

Ramani said...

வாரம் ஒரு நாள் முருங்கைக் கீரை சேர்த்து விடுவோம்
ஆயினும் இலையை ஆய்வதற்குள் இடுப்புவலி சொல்லி மாளாது
சூப்பர் குறிப்பு
தொடர வாழ்த்துக்கள்

angelin said...

மிக்க நன்றி ஆசியா .இதுநாள் வரைக்கும் சமைததில்லை, இங்கே கிடைக்கவும் கிடைக்காது .இந்த வாரம் கடையில் இருந்தா செய்திட்டு சொல்றேன்

கக்கு - மாணிக்கம் said...

எங்கள் கம்பெனியின் பின் புற பகுதியில் ஒரு முருங்கை மரம் நிற்கும். பக்கத்தில் ஒரு தண்ணீர் குழாயும் இருப்பதால் மரம் எப்போதும் பசுமையுடன் இருக்கும். சில வேளைகளில் இனிமையான சப்தங்களுடன் சில குருவிகள் அமர்ந்து பேசிகொண்டிருக்கும். டி .ஐ .பி பகுதியில் இதுபோன்ற ஒரு சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் நிறைய உண்டுதான். முருங்கை மரத்தை எங்கு பார்க்க நேரிட்டாலும் அதன் மீது ஒரு வாஞ்சை வந்துவிடுகிறதே!

விச்சு said...

படத்தையும்,நீங்கள் சொன்ன குறிப்பும் அருமை. எங்க அம்மா சமையல் மாதிரி இருக்கு.

FOOD said...

சத்தான உணவு, சகோ.

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி சிநேகிதி.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.

கருத்திற்கு மிக்க நன்றி கக்கு மாணிக்கம்.

கருத்திற்கு மிக்க நன்றி விச்சு.

அமைதிச்சாரல் said...

உங்க குறிப்பு ஜூப்பரா இருக்கு. இங்கியும் முருங்கைக்கீரை கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். பக்கத்துல ரோட்டோரமா எனக்காகவே மரம் வெச்சு வளர்த்துட்டு இருந்தது இயற்கை. அந்த வழியா பயணம் போனா கீரை பறிச்சுட்டு வந்து விதவிதமா செய்யறது வழக்கம். இப்ப அந்த இடத்துல பில்டிங் வந்ததுல மரம் காணாமப் போச்சு..

angelin said...

தமிழ் ஷாப்ல முருங்க கீரை வாங்கி செய்தேன் சூப்பர் டேஸ்டா வந்தது ஆசியா .இந்த கீரைல வேற ஏதும் ரெசிப்பி இருக்கா ,வீட்ல ரெண்டு கட்டு இருக்கு .
அப்புறம் உங்க ரெசிப்பி மீன் மஞ்சுரியன் வஞ்சிரம் மீனில் முள் இல்லாம செய்தேன் அதுவும் ரொம்ப டேஸ்டியாக வந்தது .

vanathy said...

சூப்பர் & ஆரோக்கியமான ரெசிப்பி. நானும் பருப்பும் கீரையும் சேர்த்து சமைப்பதுண்டு. நல்ல சுவையாக இருக்கும்.

asiya omar said...

food வருகைக்கு மிக்க நன்றி சகோ.

அமைதிச்சாரமல் மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க மகிழ்ச்சி.ஃப்ரிட்ஜில் கீரையை வைத்து இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் சமைக்கலாம்.
இந்த லின்க் பாருங்க,முருங்கைக்கீரை சால்னா செய்யலாம்.செய்து பாருங்க,மிகவும் ருசியாக இருக்கும்.
http://asiyaomar.blogspot.com/2010/02/blog-post_23.html

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

angelin said...

நன்றி ஆசியா இன்னிக்கு சால்னாவும் செய்தேன் அப்படியும் நிறைய கீரை இருந்ததா சுறா பிட்டுடன் சேர்த்து சமைத்தேன் .இன்னொரு அக்கா சொன்னாங்க அடையுடன் வறுத்து வார்க்க .எல்லாமே நல்லா வந்தது

ஹேமா said...

ஆசியா....நீங்கள் சொன்ன இதே முறையில் பொன்னாங்காணிக் கீரையில் நான் சமைப்பதுண்டு !

asiya omar said...

நன்றி ஏஞ்சலின்,நானும் சுறா மிளகு ஆணத்துடன் முருங்கைக்கீரை சேர்ப்பதுண்டு.

கோமதி அரசு said...

நாங்கள் முருங்கை கீரை கூட்டு என்று சொல்வோம்.

தேங்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து விட்டு வெந்த துவரம் பருப்பு சேர்த்து செய்வோம்.

உங்கள் நினைப்புக்கு உடனே கீரை கிடைத்தது மகிழ்ச்சி.

asiya omar said...

ஹேமா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கோமதி அரசு வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.இது நான் சிம்பிளாக செய்த முறை.உங்கள் முறையில் அரைத்து விட்டும் செய்து பார்க்கிறேன்..குறிப்பிற்கு நன்றி.

Jaleela Kamal said...

முருக்ககீரை பருப்பு எனக்கு ரொமப் பிடிச்சது
இப்ப உட்னே சாப்பிட்னுபோல இருக்க்

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு.

asiya omar said...

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.