Wednesday, November 16, 2011

மெய்யாலுமே! இசையும் கதையும் -தொடர் பதிவு


அதிரா என்னை தொடர் பதிவிற்கு அழைத்திருக்காங்க.இசையும் கதையும் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா நடத்திய மிகவும் பிரசித்தமான நிகழ்ச்சியாம்.அவங்க எவ்வளவு அழகாக சொல்லியிருக்காங்க பாருங்க.

நானும் சின்னதாக ஒரு கதையை சொல்லி முடித்து விட்டேன்.

சுமதி கிராமத்தில் வளர்ந்த துறுதுறுப்பான குறும்பான பெண்.வயல் வெளியும் ஆறும் அருவியும் ஊர் மக்களும் அவள் நினைத்து நினைத்து பார்க்கும் விஷயங்கள்.அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று அந்த நினைவில் சிலாகித்து வாழ்பவள்.
ஏகப்பட்ட கனவுகளுடன் அவள வெளியூருக்கு படிக்க சென்றாள்.படித்து முடித்து வேலை தேட சென்னை சென்ற பொழுது அவளை வரவேற்று அவளுக்கு உதவ வந்த சொந்தக்கார பையன் சேகருடன் சுமதி அடித்த லூட்டி தான் இது

அவள் ஊர் திரும்பிய பின் அவனின் நினைவு மனதை விட்டு நீங்காமல் தவித்த அந்த உணர்விற்கு பெயர் தான் காதலோ! அவளின் தவிப்பு அந்த இறைவனுக்குப் பிடித்துப் போய் விட்டது போலும்.அதைத் தொடர்ந்து வீட்டிலும் சுமதிக்கும் சேகருக்கும் திருமணம் செய்தால் மிகவும் பொருத்தம் என்று பேசிக்கொண்டார்கள்.சேகர் வீட்டில் பெண் தருவதாய் சொன்ன பொழுது, படித்த வேலைக்குப் போகும் பெண் வேண்டாம் என்று சொல்லவே,வீட்டில் உள்ளவர்கள் வேலையை விட நல்ல வரனே முக்கியம் என்று சுமதியின் வேலைக்குச் செல்லும் ஆசைக்கு அணை போட்டனர்.நிச்சயதார்த்தமும் நடந்தது,ஆனால் திருமணத்திற்கு பல தடைகள் வந்து சில வருடங்கள் காத்திருக்கும் கட்டாயம். சுமதியின் வீட்டில் வேறு வரன் பார்க்கலாமா என்று யோசிக்கவே என்ன செய்வது என்று புரியாமல் அந்த இறைவன் மீதே பாரத்தை போட்டு விட்டு, சேகரை பார்த்து பேசிய தருணங்களை எண்ணிய படி காலத்தை கடத்தி வந்தாள் சுமதி.இதற்கிடையில் அவர்கள் இருவரும் கடிதங்களும், வாழ்த்து அட்டைகளும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இதனை எண்ணி கலங்கிய சுமதி மனதளவில் காதலித்து விட்டு எப்படி இன்னொருவருக்கு கழுத்தை நீட்டுவது என்று குழம்பி தைரியமாக தன் சகோதரர்களிடம் வேறொருவரை மணக்க முடியாது, எத்தனை வருடம் காத்திருந்தாலும் சேகரையே மணப்பேன் என்றும் சொன்னதால் வேறு வரன் பார்ப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.சேகரும் எந்த சூழ்நிலையிலும் அவளையே மணப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்ததால் நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

காலமும் கனிந்தது,எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இருவருக்கும் திருமணம் முடிந்து மனமொத்த தம்பதிகளாய் வாழ்க்கையை தொடர்கின்றனர்.

இசையும் கதையும் இனிமையாக இருந்ததா?

இதனை தொடர மகி, ஆமினாவை அழைக்கிறேன்.அழகாக கதை சொல்லும் திறம் படைத்தவர்கள் என்பதாலும், தொடரை தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையாலும்.

மெய்யாலுமே :) :)...

--ஆசியா உமர்.

பின் குறிப்பு :

பாடலை பார்க்க சிரமமாயிருந்தால் யுடியூபை கிளிக் செய்து பார்க்கவும்...


27 comments:

athira said...

aaaa... nijamava? isaiyum kathaiyum vanthidduthaamee? vadai enakkee enakkaa.... vareen... konjam late aakum..

MyKitchen Flavors-BonAppetit!. said...

Super post, meiyalume.

ஆமினா said...

//.அழகாக கதை சொல்லும் திறம் படைத்தவர்கள் என்பதாலும், //

மெய்யாலுமே பொய் சொல்வதில் ஆசியா திறம் படைத்தவர் ;-)

ஆனாலும் இந்த தொடர் ரொம்ப கஷ்ட்டமா இருக்கே.... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப யோசிக்கணும் போல ;-)

இருந்தாலும் உங்க நம்பிக்கைய காப்பாத்துறேன் ஆசியா காப்பாத்துறேன்.. ஹி..ஹி..ஹி..

என்னையும் நம்பி
தொடர்பதிவுக்கு அழைத்திட்டமைக்கு நன்றி தோழி

ஆமினா said...

ஒரு காதல் கதையை நேரடியாய் பார்த்த அனுபவம் போல் இருந்துச்சு ஆசியா

வாழ்த்துக்கள்

கோவை2தில்லி said...

இசையுடன் கதை ஒத்துப் போய் பிரமாதமாக இருந்ததுங்க. வாழ்த்துகள்.

சிநேகிதி said...

சூப்பர்

athira said...

ஆஹா... ஆசியா, காலையில் நேரம் போதவில்லை அதிலும் தமிழ் எழுத்து வேர்க் ஆகவில்லை, ரீ ஸ்ராட் பண்ண நேரம் இல்லை, அதனால் வடை எடுத்திட்டு ஓடிட்டேன். இபோ வந்திட்டேனே:))))

நில்லுங்க படிச்சு சுவைத்திட்டு வாறேன்:))

ஸாதிகா said...

அட..அசத்தல் ஆசியா.

athira said...

சோட் அண்ட் சுவீட்டாக சூப்பராக சொல்லிட்டீங்க ஆசியா... நன்றாக இருக்கு, அலட்டல் இல்லாமல் இருக்கு, போறிங் இல்லாமல் இருக்கு.

கதைக்கேற்ப பொருத்தமான பாட்டுக்கள்...

athira said...

//இசையும் கதையும் இனிமையாக இருந்ததா?//

இனிமையாக இருக்கு... மியாவும் நன்றி ஆசியா தொடர்ந்தமைக்கு...

athira said...

//இதனை தொடர மகி, ஆமினாவை அழைக்கிறேன்.அழகாக கதை சொல்லும் திறம் படைத்தவர்கள் என்பதாலும், தொடரை தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையாலும்.

மெய்யாலுமே :) :)...///

அடடா சூப்பர் மாட்டியா? என்னிடம் தப்பிய மகி:)), இப்போ அகப்பட்டுவிட்டா அவ்வ்வ்வ்வ்:)))..... கலக்குங்க மகி, ஆமினா... எதிர்பார்த்திருக்கிறோம்.

athira said...

அதுசரி எங்க எங்கட சென்னைக் குயின் ஸாதிகா அக்காவைக் காணவில்லையே:))...

ஒருவேளை பூஸைப்போல குப்புறக்கிடந்து இசையும் கதையும் எழுதுறாபோல....:)))

ஹா..ஹா..ஹா... நான் எல்லோருக்கும் ஹோம் வேர்க் கொடுத்திட்டேன்:))))...

உஸ் சத்தம் போடப்பிடாது, எழுதி முடிச்சிட்டு வருவாக்கும்... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்... சீயா மீயா ஆசியா.

angelin said...

//இசையும் கதையும் இனிமையாக இருந்ததா?//

சூப்பராக இருந்தது

asiya omar said...

அதிரா என்னை தொடர் பதிவு அழைத்தமைக்கு மிக்க நன்றி.உங்களைப்போல் என்னால் கற்பனை குதிரையை ஓட்ட முடியலை,அதனால் சுருக்கமாக சொல்லி முடித்து விட்டேன்.மகிழ்ச்சி.

asiya omar said...

மை கிச்சன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ஆமினா வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.இன்னும் சிலரையும் அழைக்க எண்ணியிருந்தேன்,
தொடர் தொடரும் பொழுது எல்லோரும் அழைக்கப்பட்டு விடுவார்கள் தானே!

கோவை2தில்லி மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

asiya omar said...

தோழி ஸாதிகா வாங்க,நீங்க எப்ப எழுதப் போறீங்க.கருத்திற்கு நன்றி.

ஏஞ்சலின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

தோழி ஸாதிகா வாங்க,நீங்க எப்ப எழுதப் போறீங்க.கருத்திற்கு நன்றி.

ஏஞ்சலின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

விச்சு said...

பொருத்தமான பாடல்கள் அருமை.

FOOD said...

இன்றைய சமையலும் இனிதாகவே இருந்தது சகோ.

அமைதிச்சாரல் said...

அசத்தலா இணைஞ்சு வருது கதையும் இசையும் :-)

மகி said...

Asia Akka, kathaiyum isaiyum super. Ennaiyum inaithathukku nanri. :)


Cabbage soup bowl azhakaa irunthathu. Athai Inge solrennu thittaatheengo! ;)

அன்புடன் மலிக்கா said...

கதை பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு..

asiya omar said...

விச்சு வருகைக்கு மிக்க நன்றி.

ஃபுட் வருகைக்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

மிக்க நன்றி மகி.மகிழ்ச்சி.

மலிக்கா மிக்க நன்றி.

vanathy said...

super, akka. Enjoyed reading it.

ஆமினா said...

தொடர்பதிவை எழுதுவிட்டேன் ஆசியா

நேரமிருக்கும் போது பாருங்க :-)

http://kuttisuvarkkam.blogspot.com/2011/12/blog-post_19.html

மகி said...

ஆசியாக்கா,தொடர்பதிவைத் தொடர்ந்துட்டேன், நீங்க பார்க்கலைன்னு நினைக்கிறேன்,நேரமிருக்கும்போது பாருங்க. :)

http://mahikitchen.blogspot.com/2011/12/blog-post_22.html

asiya omar said...

ஆமினா, மகி இருவருக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.