Saturday, November 19, 2011

புதினா அதிகமாகயிருந்தால்..

பொதுவாக புதினா வாங்கி சமையலுக்கு உபயோகித்து விட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய்விடும்.
என்னைப் போல் அன்றாடம் ஒரு சிலர் புதினாவை உபயோகிப்பதுண்டு. அவர்களுக்கு இந்த டிப்ஸ் பயன் தரும்.தேவைப்படும் பொழுது தான் நாம் புதினா வாங்குவோம்,எப்பவும் மற்ற உலர் பொருள் மாதிரி புதினாவையும் நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
சரி இப்ப உலர் புதினா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
புதினா நிறைய கிடைக்கும் பொழுது வாங்கி, பழுத்த,கருத்த இலைகளை நீக்கி விட்டு நல்ல இலைகளாக ஆய்ந்து சுத்தமாக கழுவி தண்ணீர் வடிகட்டவும்.


நன்றாக தண்ணீர் வடிந்த பின்பு ஒரு பேப்பரில் அல்லது கிச்சன் டவல் பயன்படுத்தி உலர வைக்கவும்.

சுத்தமாக ஈரத்தன்மை இல்லாமல் புதினா உலர்ந்த பிறகு ஒரு திறந்த டப்பாவில் எடுத்துக் கொள்ளவும்.

ஃப்ரிட்ஜில் அதனை மீடியம் டெம்பரேச்சரில் வைக்கவும். ஃப்ரிட்ஜ் டெம்பரேச்சர் அதிக ஜில்லுன்னு இருந்தால் புதினா கருத்து விடும்.டப்பா திறந்து இருக்க வேண்டும். மூன்று நான்கு நாட்கள் கழித்து எடுத்து பார்த்தால் காயந்த நிலையில் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.
அதனை நாம் பாட்டிலில் அடைத்து வைத்தால் எப்பவும் மணக்கும்
உலர் புதினா ரெடி.

இதனை நாம் தேவைக்கு எப்பொழுதும் போல சமையலில் குருமா,பிரியாணி,மட்டன் சிக்கன் சமையலில்,ப்ளாக் டீ போடும் பொழுது பயன் படுத்தினால் அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்.


25 comments:

athira said...

நல்ல குறிப்பு. நாம் புதினா எதுக்குமே சேர்ப்பதில்லை, ஆருக்கும் பிடிக்காது. எப்பவாவது வாங்கி உடனே சம்பல்/சட்னி செய்வேன் அவ்வளவுதான்.

ஆனா இந்த கறிவேப்பிலையை பத்திரப்படுத்த நான் படும் பாடு இருக்கே அப்பப்பா...... ஒரு மாதம் வரை வத்திருப்பேன், பின்பு கறுத்துவிடும் அவ்வ்வ்வ்வ்வ்:))))

athira said...

நான் நினைக்கிறேன் ...மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊ:))... ஹா..ஹா..ஹா.. நான் சிரிச்சிட்டுப் போறேன் என எல்லோருக்கும் சொல்லுங்க ஆசியா...:)))))

Aruna Manikandan said...

nice post :)

மகி said...

நல்ல ஐடியாதான்..நான் இதுவரை உலர் புதினா-உலர் கறிவேப்பிலையெல்லாம் பயன்படுத்தியதே இல்ல.கிடைச்சா ப்ரெஷ் இலைகள், இல்லன்னா இல்ல!;) இப்படி வாங்கி பதப்படுத்தும் வழக்கம்லாம் இன்னும் வரல.

சூப்பர் டிப்ஸ்!

தமிழ்வாசி - Prakash said...

பயனுள்ள தகவல்... வீட்டில் செய்ய சொல்கிறேன்... நன்றி


நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

asiya omar said...

அதிரா, மகி கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

எனக்கு என்னவோ புதினா அழுகி போறதை பார்த்தால் மனசு சங்கடமாக இருக்கும்.கொஞ்சம் புதினாவை கூட வேஸ்ட் செய்வதில்லை.உலர் புதினா கலந்து மிண்ட் சட்னி தயிரில் கலந்து செய்தால் ஆஹா தான்.

தினமும் எங்கள் வீட்டில் விரும்பி குடிக்கும் ப்ளாக் டீக்கு இது மிகவும் பயன்படுகிறது.கிரில் சிக்கனில் கொஞ்சம் கசூரி மேத்தி சேர்ப்பது போல இதனையும் பொடி செய்து போட்டால் சூப்பராக இருக்கும்.கருவேப்பிலை,கொத்தமல்லி ஃப்ரெஷாக உபயோகித்தால் தான் நல்ல மணமாக இருக்கும்.

கசூரி மேத்தி போல உலர் புதினாவும் சுவை தரும்.
இந்த பதப்படுத்தும் முறையை நான் தவறாமல் செய்து வருவதால் இந்த குறிப்பு.

asiya omar said...

Thanks Aruna for your loving visit and comments.

Jaleela Kamal said...

பயனுள்ள குறிப்பு ஆசியா,
மசாலா டீ தயாரிக்கா நானும் புதினாவை இப்படி தான் பதப்படுத்துவேன்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல பயனுள்ள குறிப்பு

MyKitchen Flavors-BonAppetit!. said...

Asiya Tips arumai.Luv it.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மிகவும் பயனுள்ள குறிப்பு. வீட்டில் இதேமாதிரி செய்ய சொல்லணும். நன்றி ஆசியாக்கா.

சிநேகிதி said...

பயனுள்ள குறிப்பு.. பகிர்வுக்கு நன்றி

ஸாதிகா said...

அருமையான டிப்ஸ் ஜலி.மல்லி இலை போல் புதினாவுக்கு பயன்பாடு குறைவு.நீங்கள் கொடுத்த டிப்ஸால் மீந்த புதினாவை இது போல் சேமித்துக்கொள்ளலாம்.பகிர்வுக்கு நன்றி

asiya omar said...

தமிழ்வாசி வருகைக்கு மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

ராஜபாட்டை ராஜ மிக்க நன்றி.

மைகிச்சன் மிக்க நன்றி.

ஸ்டார்ஜன் மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.
மறதியாக ஜலி என்று சோல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

angelin said...

அருமையான டிப்ஸ் .சிலநேரம் மூன்று கட்டு வாங்கி வீணாபோகும்.
இப்ப தெரிஞ்சுகிட்டேன் .

R.Gopi said...

புதினா பற்றிய குறிப்பு புதினாவின் மணம் போல் அருமையாக இருந்தது....

Chitra said...

First time here. pudhina info rombavea useful post.New to me. will be around :)

ஹேமா said...

நல்ல யோசனைதான் !

விச்சு said...

புதிய(னா) டிப்ஸ்...

Amina Khaleel said...

First time here... very informative post... thanks for sharing..

FOOD said...

நல்ல யோசனை

மனோ சாமிநாதன் said...

அருமையான, அசத்தலான குறிப்பு ஆசியா! எல்லோருக்கும் பயன் படும்!!

கோவை2தில்லி said...

நல்ல யோசனை. தகவலுக்கு நன்றிங்க.

Kanchana Radhakrishnan said...

சூப்பர் டிப்ஸ்.

மாதேவி said...

நல்ல தகவல்.

எப்போதாவது புதினா சட்னி, பிரியாணிக்குப் போடுவதுடன் சரி.