Tuesday, November 22, 2011

கிட்ஸ் போன்லெஸ் ஃபிஷ் ஃப்ரை



தேவையான பொருட்கள்;
முள்ளில்லாத சிறிய மீன் துண்டுகள் - 8
சிக்கன் 65 மசாலா -1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் -பாதி பழம்
கார்ன்ஃப்லோர் அல்லது அரிசிமாவு - அரைடீஸ்பூன்
கடலை மாவு - அரைடீஸ்பூன்
உப்பு - சிறிது தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


மீனை சுத்தம் செய்து கட் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிஎடுக்கவும், பின்பு மீனில் சிறிது உப்பு,லைம் ஜூஸ் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

சிக்கன் 65 மசாலா சேர்த்து பிரட்டி வைக்கவும்.உப்பு பார்த்து கவனமாக சேர்க்கவும்.

அடுத்து மீனில் மிளகுத்தூள், கார்ன்ஃப்லோர்அல்லது கடலை மாவு அல்லது அரிசிமாவு சேர்த்து மீன் துண்டில் நன்கு படும் படி விரவி வைக்கவும்.

ரெடி செய்து ஃப்ரிட்ஜில் அரைமணி அல்லது ஒரு மணிநேரம் வைத்து எடுத்து பொரித்தால் அருமையாக இருக்கும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காயவும், மீன் துண்டுகளைப் போட்டு
இரண்டு புறமும் திருப்பி பொரித்து எடுக்கவும்.

சுவையான கிட்ஸ் போன்லெஸ் ஃபிஷ் ஃப்ரை ரெடி.


14 comments:

சிநேகிதி said...

அக்கா படங்களை பார்க்கும் பொழுதே எடுத்து சாப்பிடும் போல இருக்கு...

எல் கே said...

:)

ஸாதிகா said...

அருமையாக பிரை பண்ணி காட்டி இருக்கீங்க ஆசியா.இந்த படத்தில் சமைத்து இருப்பது என்ன வகை மீன்?வஞ்சிரமா?

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்கு ஆசியா..

கீதா லட்சுமி said...

mouthwatering :)

Nandini said...

Wow! Arumai! It's very aromatic and delicious! I'm drooling and want to have a piece!

asiya omar said...

சிநேகிதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

எல்.கே. வாங்க,வந்து எட்டி பார்த்தமைக்கு மகிழ்ச்சி.

ஸாதிகா மிக்க நன்றி.நான் ஹமூர் மீனில் செய்திருக்கிறேன்,சீலா, சுறா(பஞ்சு மாதிரி இருக்கனும்)எந்த மீனாக இருந்தாலும் சரி,தோல் நீக்கி முள் நீக்கி கட் செய்து தந்தால் வாங்கி இந்த முறையில் செய்தால் அருமையாக இருக்கும்.

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

கீதாலட்சுமி மிக்க நன்றி.

நந்தினி மிக்க நன்றி.

athira said...

சூப்பர் ஃபிஸ் பிரை. இதே வைட் பிஸ்சில் நான் இதேபோல் செய்வேன் இடைக்கிடை.

ஆனா என்னிடம் அப்போது என்ன வகை மா இருக்கோ, அதைப் போட்டுப் பிரட்டி எடுப்பேன், சப்பாத்தி மாவும் போட்டிருக்கிறேன் சிலசமயம்:)))... அந்தர அவசரத்துக்குப் பாவமில்லைத்தானே:))

angelin said...

பார்க்கவே அருமையா இருக்கு .என் மகளுக்கு இப்படி செய்து தரணும் பகிர்வுக்கு நன்றி ஆசியா

asiya omar said...

அதிரா கருத்திற்கு நன்றி.நானும் அரிசி மாவு,கோதுமை மாவு இவற்றை மசாலாவுடன் முழுமீன் பொரிக்கும் பொழுது லேசாக பிரட்டி பொரித்திருக்கிறேன்.சுவை சூப்பராக இருக்கும்.

ஏஞ்சலின் மிக்க நன்றி.உங்க மகளுக்கு செய்து கொடுங்க,என் மகள் மீனே சாப்பிட மாட்டேன் என்று அடம்,அவளுக்கு தான் இப்படி செய்து சாப்பிட வைத்தேன்.

S.Menaga said...

நானும் இப்படி செய்வேன்,ரொம்ப நல்லாயிருக்கும்...படங்கள் சூப்பர்!!

FOOD said...

படமும் பகிர்வும் பசியை தூண்டுது சகோ.

asiya omar said...

மேனகா வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஃபுட் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.