Wednesday, November 23, 2011

ப்ரக்கோலி எக் ஸ்டிர் ஃப்ரை / Broccoli egg stir fry


தேவையான பொருட்கள்;
நறுக்கிய ப்ரக்கோலி -2கப்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1டீஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது - 1டீஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்
முட்டை -1
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
உப்பு - மிகச்சிறிது தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

செய்முறை:

இஞ்சி,பூண்டு,வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும், இதழாக பிரித்த ப்ரக்கோலி,மற்றும் இளந்தண்டை மெலிதாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய ப்ரக்கோலியை சுடுநீரில் போட்டு உடன் வடிகட்டி எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காயவும்,நறுக்கிய இஞ்சி,பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கவும்.பின்பு ப்ரக்கோலியை சேர்க்கவும்.

நன்கு வதக்கவும்,மிகச்சிறிது உப்பு சேர்க்கவும்.

பின்பு சோயாசாஸ்,மிளகுத்தூள் சேர்க்கவும்.முட்டை சேர்க்காமல் இப்படியே பிரட்டியும் சாப்பிடலாம்.

முட்டையை கலந்து விடவும்.பிரட்டி விடவும்.

விரும்பினால் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான ப்ரக்கோலி எக் ஸ்டிர் ஃப்ரை ரெடி.

இதனை ப்ரெட்டுடன் சாப்பிடலாம்.விரும்பியவற்றுடன் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.


பின் குறிப்பு :
முட்டைக் கோஸ் முட்டைப் பொரியல், (கிளிக்)
சுவை மிக அருமையாக இருக்கும்.சத்தானதும் கூட.சாதத்திற்கும் தொட்டு சாப்பிட மிகப் பொருத்தமாக இருக்கும்.

--ஆசியா உமர்..

13 comments:

Mahi said...

Super stir fry! Looks yumm!

athira said...

அடடா... அங்கின பிஸியா இருந்ததால வட போச்சே.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஃபோர் மகி:)).

நான் புரோக்கோலி அதிகம் அவித்து பிள்ளைகளுக்குக் கொடுப்பேன், அது ஒன்றுதான் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் காய்கறி என்பதால்.... இது புதுமுறையாக இருக்கு... முயன்று பார்க்கிறேன்....

அவர்களுக்கு பூ உடைந்திருக்கப்படாது, முழுசாக இருக்கோணும், அப்பத்தான் தூக்கித் தூக்கிச் சாப்பிடுவினம்.

angelin said...

பார்க்கவே அருமையா இருக்கு செய்திட்டு சொல்றேன் .
இது உடம்புக்கு ரொம்ப நல்லது இப்படி வெரைட்டியா செய்தா பிள்ளைகளுக்கும் பிடிக்கும்

ஹேமா said...

ம்ம்...நாளைக்கே செய்து பாக்கிறேன்.சுவையாவும் வாசனையாயிருக்கும்போல !

ஸாதிகா said...

நல்ல சத்து மிகு சைட் டிஷ்...

SANKARALINGAM said...

சத்துமிகு உணவு.

asiya omar said...

மிக்க நன்றி மகி.

அதிரா மிக்க மகிழ்சி.இப்படி சமைத்தாலும் சிறிய துண்டு துண்டாக இருக்கும்.எடுத்து சாப்பிடலாம்.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

ஹேமா செய்து விட்டு சொல்லுங்க.மிக்க நன்றி.

ஸாதிகா எல்லாவற்றிருக்கும் இந்த சைட் டிஷ் பொருத்தமாகவே இருக்கும்..மிக்க நன்றி தோழி..

சிநேகிதி said...

ஆஹா... அருமையான ப்ரை..

Jaleela Kamal said...

புரோக்கோலி அயர்ன் சத்து அதிகம் உள்ளது
ரொம்ப நல்ல இருக்கு ஆசியா
நீங்க வெங்கயாம் நருக்கி வதக்கிய போட்டோக்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்

அமைதிச்சாரல் said...

பார்க்க ரொம்ப நல்லா கலர்ஃபுல்லா இருக்கு.

asiya omar said...

சிநேகிதி மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.நிச்சயம் ப்ரக்கோலி கிடைத்தால் செய்து பாருங்க.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமையான சைட் டிஷ்.

பூங்குழலி said...

பாக்கவே அசத்தலா இருக்கு .நல்ல சுலபமான ரெசிபி