Saturday, November 26, 2011

ப்ரக்கோலி சூப் / Broccoli soup


தேவையான பொருட்கள்;
நறுக்கிய ப்ரக்கோலி - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்
சிக்கன் சூப் கியூப் - 1
டொமட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1டீஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 3 -4 டீஸ்பூன்
ப்ரெட் ஸ்லைஸ் - 2
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்

செய்முறை:
நறுக்கிய ப்ரக்கோலி, சூப் கியூப், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த பின்பு சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.

கார்ன் ஃப்லோரை சிறிது தண்ணீர்ல் கரைத்து விடவும்.சூப் கெட்டியாகி விடும்.

அத்துடன் சோயாசாஸ், டொமட்டோ சாஸ் சேர்க்கவும், மிளகுத்தூள் தூவி கலந்து விடவும்.உப்பு சரிபார்க்கவும்.
ப்ரெட் ஸ்லைசை சிறிய துண்டுகளாக்கி நெய் சேர்த்து அல்லது சும்மாவே மைக்ரோவேவில் ஒன்றரை நிமிடம் வைத்தால் ரஸ்க் போல் ஆகி விடும்.அல்லது ஒரு தோசைக்கலத்தில் கூட ப்ரெட் துண்டுகளை ரோஸ்ட் செய்து எடுக்கலாம்.
ரெடியான சூப்பில் ரோஸ்ட் செய்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.பரிமாறும் பொழுது தான் ரோஸ்டட் ப்ரெட் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

சுவையான ப்ரக்கோலி சூப் ரெடி.

--ஆசியா உமர்.

6 comments:

FOOD said...

சுவையான சூப் ரெடி.

ஸாதிகா said...

ம்ம்..அருமையான சூப் செய்து காட்டி இருக்கீங்க ஆசியா.

எம் அப்துல் காதர் said...

நல்ல பயனுள்ள ப்ரக்கோலி
சூப் தகவல் சகோ.

asiya omar said...

மிக்க நன்றி சங்கரலிங்கம் சார்.

மிக்க நன்றி தோழி ஸாதிகா.

மிக்க நன்றி சகோ.அப்துல் காதர்.

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்புக்கு நன்றி ஆசியா. அவசியம் செய்து பார்க்கிறேன்.

asiya omar said...

நிச்சயம் செய்து பாருங்க ராமலஷ்மி.மிக்க மகிழ்ச்சி.