Sunday, November 13, 2011

கேபேஜ் சூப் / Cabbage Soup

தேவையான பொருட்கள்:
முட்டை கோஸ் நறுக்கியது - 1கப்
தண்ணீர் - 4கப்
சூப் கியூப் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஒயிட் வினிகர் - 1டீஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - 2டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவைக்கு
முட்டை வெள்ளைக்கரு - 1 (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
சூப் வைக்கும் பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் சூப் கியூப் சேர்த்து சூடு படுத்தவும்.

நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்து வேக விடவும்.

கார்ன் ஃப்லோர் சிறிது தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.சூப் கெட்டியாகிவரும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இளஞ்சிவப்பாக வதக்கவும்.வதக்கிய வெங்காயத்தை கொதிக்கும் சூப்பில் சேர்த்து சோயாசாஸ்,வினிகர்,மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான கேபேஜ் சூப் ரெடி.
இது முட்டை வெள்ளைக்கரு சேர்க்காமல் செய்தது.


இப்ப எப்படி முட்டை வெள்ளைக்கரு சேர்ப்பதுன்னு பார்ப்போம்.

கார்ன் ப்லோர் கரைசல் சேர்த்து கொதிவரவும் அடித்து வைத்த முட்டை வெள்ளைக்கருவை கொடி போல் விட்டு கலந்து விடவும்.இப்படி காணப்படும்.

பின்பு சோயாசாஸ்,வினிகர்,தேவைக்கு மிளகுத்தூள்,தாளித்த வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். அடுப்பை அணைக்கவும்.சூடாக பரிமாறவும்.

சுவையான கேபேஜ் சூப் வித் எக் ஒயிட் ரெடி. செமையாக இருக்கும்.செய்து பாருங்க.

வெங்காயம் வதக்கி சேர்ப்பது தான் இந்த சூப்பிற்கு அதிக சுவையை கொடுக்கும்.சூப் கியூபில் உப்பு இருக்கும்,எனவே உப்பு சேர்க்க தேவையில்லை.தேவைப்பட்டால் உப்பு சிறிது சேர்த்து கொள்ளலாம்..நான் எந்த சூப் செய்தாலும் கேபேஜ் சேர்க்காமல் செய்வதில்லை.என் கணவருக்கு கேபேஜ் மிகவும் பிடிக்கும். மிகவும் சத்தானதும் கூட..


--ஆசியா உமர்..

22 comments:

ஸாதிகா said...

முட்டைக்கோஸ் மட்டும் சேர்த்து அழகான சூப் செய்து காட்டிவிட்டீர்கள் ஆசியா.

angelin said...

பகிர்வுக்கு நன்றி ஆசியா .செய்திட்டு சொல்கிறேன் .
கேபேஜ் உடலுக்கு மிகவும் நல்லது

விச்சு said...

ஷ்ஷ்ஷ்ஷ்...கேபேஜ் சூப்பை உறிஞ்சி குடிக்கிறேன்.

ஆமினா said...

நானும் ட்ரை பண்ரேன் ஆசியா

ராமலக்ஷ்மி said...

படங்களுடனான நல்ல குறிப்புக்கு நன்றி ஆசியா.

Kousalya said...

சத்தான சூப் செய்முறை விளக்கம், படங்களுடன் அருமை.

செய்து பார்க்கணும் என்று முடிவே பண்ணியாச்சு...

asiya omar said...

தோழி ஸாதிகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி..

ஏஞ்சலின் செய்து பார்த்திட்டு சொல்லுங்க,மகிழ்ச்சி.

விச்சு வருகைக்கு நன்றி.

ஆமினா ட்ரை பண்ணுங்க,மகிழ்ச்சி.

ராமலஷ்மி வருகைக்கு மிக்க நன்றி.

கௌசல்யா செய்து பாருங்க,வருகைக்கு நன்றி !..

சிநேகிதி said...

சூப் நல்ல சூடாக இருக்கு... சூடு ஆறும் முன்பே குடித்துவிடுகிறேன்...

அமைதிச்சாரல் said...

என் பையருக்கு ரொம்பவும் பிடிச்ச சூப் இது.. பகிர்வுக்கு நன்றி ஆசியா.

Jaleela Kamal said...

இப்ப குளி்ர் நேரததுக்கு ஏற்ப சத்தான சூப்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான எளிய குறிப்பு.

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****
.

asiya omar said...

சிநேகிதி மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

ஸ்டார்ஜன் மிக்க நன்றி.

middleclassmadhavi said...

பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

இந்த சூப் குடிச்சா உடம்பு மெலியுமாம்.சொன்னாங்க ஆசியா !

athira said...

சூப்பர் சூப் ஆசியா. மேலே கபேஜ் எனப் போட்டு, கீழே முட்டைக்கொஸ் எனப் போட்டு, என்னைக் கொயம்பித் தெளிய வைத்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

asiya omar said...

மாதவி வருகைக்கு மிக்க ந்ன்றி.

ஹேமா கருத்திற்கு மிக்க நன்றி.

ஆஹா அதிரா வந்தாச்சா?அடேடே கேபேஜ் சூப் என்ற பேச்சுவாக்கை தலைப்பாக போட்டுட்டேனா,நேற்று இரவு தூக்கத்தில் போஸ்டிங்,அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே!
மியாவிற்கு நன்றி.

Torviewtoronto said...

delicious meal looks wonderful

சி.கருணாகரசு said...

சத்தான ஒரு சூப் வகையை சொல்லியதற்கு... நன்றி...

FOOD said...

காலத்திற்கேற்ற பதிவு.

S.Menaga said...

மிகவும் சத்தான சூப்,குளிருக்கு மிகவும் இதமாக இருக்கும்...

நாகா ராம் said...

சத்தான சூப்.. என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும்.. செய்து பார்க்கிறேன்.