Tuesday, November 29, 2011

ப்லைன் நாண் /Plain Naan

தேவையான பொருட்கள்;
மைதா மாவு - 2 கப்
இன்ஸ்டண்ட் ஈஸ்ட் - அரை-முக்கால்டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - கால்டீஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 2 டேபிள்ஸ்பூன்
சீனி - 1டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
பட்டர் - 2 டீஸ்பூன்

முக்கால் டீஸ்பூன் ஈஸ்ட்டை அரைகப் வெதுவெதுப்பானபால் அல்லது நீரில் கரைத்து 10 நிமிடம் வைக்கவும்.

மாவுடன் பேக்கிங் பவுடர்,சீனி,உப்பு முதலில் கலந்து கொள்ளவும்.பின்பு புளிக்காத தயிர்,பால்  2டேபிள்ஸ்பூன், எண்ணெய்,ஈஸ்ட் கலந்த நீர் சேர்த்து கலந்து மாவை தளர்வாய் பிணைந்து கொள்ளவும்.மாவு சப்பாத்திக்கு போல் இல்லாமல் சிறிது தளர்வாய் குழைக்க வேண்டும்.
மாவு குழைக்கும் பொழுது ஈஸ்டில் கலக்க வெது வெதுப்பான நீருக்கு பதில் வெது வெதுப்பான பால் கூட சேர்த்து கொள்ளலாம்.விரும்பினால் அத்துடன் முட்டை கூட சேர்க்கலாம்.பின்பு மாவை மூடி 4 மணி நேரம் வைக்கவும்.

மாவு இப்படி பொங்கி இருமடங்காகி காணப்படும்.

நான் கேஸ் ஓவன் உபயோகித்து செய்தேன். எனவே பேக்கிங் ட்ரேயில் இவ்வாறு அலுமினியம் ஃபாயில் போட்டு எண்ணெய் அல்லது மாவு தடவி வைக்கவும்,நாண்ஸ்டிக் ட்ரே என்றால் அலுமினியம் ஃபாயில் வேண்டாம்.

மாவை உருண்டைகளாக பிரித்து சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.மாவை நீள்வட்டமாக மாவில் தோய்த்து பரத்தி கொள்ளவும்.

ஓவனை ப்ரீஹீட் செய்து வெப்பம் மேக்சிமம் செட் செய்து கொள்ளவும்.பரத்திய மாவை ட்ரேயில் வைக்கவும்.

நாண் இப்படி பொங்கி வரும்.உடன் திருப்பி போட்டு சிறிது நேரத்தில் எடுக்கவும்.5 நிமிடத்தில் ஆகிவிடும்.


சுவையான ப்லைன் நாண் ரெடி.விரும்பினால் சிறிது பட்டர் தடவி பரிமாறலாம்.இதனை நாம் சப்பாத்தி சுடுவது போல் தவாவிலும் சுடலாம்.நான் அடிக்கடி தவா நாண் தான் செய்வேன்,.

--ஆசியா உமர்..

24 comments:

ராமலக்ஷ்மி said...

படிப்படியாக படங்களுடன் தெளிவான விளக்கம். நன்றி ஆசியா.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். என் மனைவி தங்கள் தளத்தைப் பார்த்து அதில் உள்ளதைப் போன்று செய்து பார்ப்பார்கள். நன்றாக இருக்கும். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Aruna Manikandan said...

looks wonderful :)

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை பார்த்ததுமே பசி எடுக்குதே...!!!

ஸாதிகா said...

அட..ஓவனிலேயே நாண் செய்து காட்டி விட்டீர்களே ரொம்ப சிபிளா?இந்த நாந்தான் சரியாக வராமல் படாத பாடு படுத்தும்.கண்டிப்பாக செய்து பார்த்து விடுகிறேன் தோழி.

ஆமினா said...

வாவ்வ்.... அழகா செய்து காட்டியிருக்கீங்க!

வாழ்த்துக்கள் ஆசியா

கோவை2தில்லி said...

படங்களுடன் குறிப்பை அழகாக பகிர்ந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

asiya omar said...

ராமலஷ்மி
தனபாலன்
அருணா
நாஞ்சில் மனோ
ஸாதிகா
ஆமினா
கோவை2தில்லி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

athira said...

சூப்பர் ஆசியா, சிம்பிளாகவும் நல்லாவும் இருக்கு, ஒருதடவை செய்யோணும்.

Geetha6 said...

சூப்பர் !

ஹேமா said...

நீங்கள் செய்துகாட்டியபடி செய்து பார்க்கப்போகிறேன் !

S.Menaga said...

படிப்படியான சூப்பர்ர் விளக்கம் அக்கா..இதனுடன் சீஸ் சேர்த்து செய்தால் தனி ருசி தான்..

asiya omar said...

அதிரா
கீதா6
ஹேமா
மேனகா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

தெய்வசுகந்தி said...

Wow!!! I have to try this.. Looks easy & yummy

Mahi said...

நாண் நல்லா இருக்கு ஆசியாக்கா!

FOOD said...

படமும் பகிர்வும் பசி வரவழைக்கிறது, சகோ.

middleclassmadhavi said...

thanks!

நாகா ராம் said...

படங்களுடன் அழகா செய்து காட்டியிருக்கீங்க :-) வாழ்த்துக்கள்...

Lakshmi said...

படிப்படியாக படங்களுடன் தெளிவான விளக்கம். நன்றி

மாதேவி said...

ஆகா! அருமை.

Kanchana Radhakrishnan said...

அழகா செய்து காட்டியிருக்கீங்க.

angelin said...

சூப்பரா வந்திருக்கு ஆசியா .இது வரைக்கும் செய்ததே இல்லை .செய்து பார்க்கிறேன் .GAS ஓவன் 200 டிகிரியில் வைச்சா சரியா வருமா

Jaleela Kamal said...

நாண் ரொம்ப நல்ல இருக்கு.

நான் தவ்வாவ்லேயே செய்து விடுவது.

asiya omar said...

தெய்வ சுகந்தி
மகி
food சங்கரலிங்கம் சார்
மிடில் கிளாஸ் மாதவி
நாகாராம்
லஷ்மிமா
மாதேவி
காஞ்சனா
ஏஞ்சலின்
ஜலீலா

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.