Monday, December 12, 2011

சுலப புளியோதரை

தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு ப்லேட் நிறைய
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 +2
முழுமல்லி - 2டீஸ்பூன்
வெந்தயம் - அரைடீஸ்பூன்
பெருங்காயப்பொடி - கால்டீஸ்பூன்
மஞ்சப்பொடி - கால்டீஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1டீஸ்பூன்
வேர்க்கடலை- 1டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை- 2 இணுக்கு
உப்பு- தேவைக்கு.

புளிக்கரைசலை ரெடி செய்து கொள்ளவும். சாதம் பக்குவமாக வடித்து ஆற வைக்கவும்.

மல்லி,வெந்தயம்,2 மிளகாய் வற்றல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.மொத்தமாகக் கூட போட்டு வறுத்து எடுக்கலாம்.மணம் சூப்பராக இருக்கும்.


வறுத்தவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு ,கடலைப்பருப்பு,வேர்க்கடலை,வற்றல்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பெருங்காயப்பொடி,மஞ்சப்பொடி சேர்க்கவும்.

ரெடி செய்து வைத்த புளிக்கரைசலை உடன் விடவும். நன்கு கொதிக்கட்டும். சிறிது உப்பு சேர்க்கவும்.

அத்துடன் வறுத்து பொடி செய்த புளியோதரைப் பொடியை சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதித்து வற்றி வரட்டும்.


இப்படி எண்ணெய் தெளிந்து காணப்படும்.

வடித்து ஆற வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். மூடி வைக்கவும்.சாதம் செட் ஆகட்டும்.குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும்.

சூப்பர் சுவையுள்ள சுலப புளியோதரை ரெடி.
தொலைதூரப் பயணத்திற்கு கட்டி செல்ல இந்த முறை அருமையாக இருக்கும். தொட்டுக்கொள்ள உங்கள் இஷ்டத்திற்கு சைட் டிஷ் எடுத்து கொள்ளலாம்.
புளியோதரைப் பொடி செய்து வைத்துக் கொண்டால் அவசரத்திற்கு சாதம் மீதியாகும் பொழுது கூட செய்து அசத்தலாம்.

--ஆசியா உமர்.



24 comments:

மகி said...

ட்ரிப்ஸுக்கு பர்ஃபெக்ட் ரெசிப்பி!நல்லா இருக்கு ஆசியாக்கா!

asiya omar said...

வாங்க மகி,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

கோவை2தில்லி said...

நல்லா இருக்குங்க.படங்களும் அழகா வந்திருக்கு.

வறுக்கும் பொருட்களுடன் எள்ளும், சிறிதளவு மிளகும் சேர்த்து அரைப்பேன்.வாசனையும், சுவையும் தூக்கலாக இருக்கும்.

asiya omar said...

மிக்க மகிழ்ச்சி.கோவை2தில்லி.
புளியோதரையை பலமுறையாக செய்யலாம்.உங்க டிப்ஸ்க்கு நன்றி..இது கூட எனக்கு ஒரு மாமி தான் சொல்லிக் கொடுத்தாங்க.
நாங்க எங்கமுறையில் மல்லி,வெந்தயம்
எல்லாம் சேர்க்காமல்,உளுத்தம் பருப்பு,எள்ளு,வற்றல்,பெருங்காயம்,கருவேப்பிலை வறுத்து பொடி செய்து செய்வோம்.

ஸாதிகா said...

புளியோதரை அடிக்கடி செய்வதுதான்.இந்த பொடிவகைகள் சேர்ப்பதில்லை.நீங்கள் கொடுத்த குறிப்பின் படி சமைத்தால் கண்டிப்பாக மணம் ஊரைக்கூட்டும் போலும்:)

S.Menaga said...

ம்ம்ம்ம் இப்படி புளியோதரை செய்து ஆசையைக் கிளப்புகிறீங்களே அக்கா...பார்சல் அனுப்பிடுங்க!!

Rishvan said...

நல்லா இருக்குங்க..... please read my tamil kavithaigal in www.rishvan.com

எம் அப்துல் காதர் said...

நல்லா இருக்கு!!

asiya omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

மேனகா,இப்ப உங்க வாய்க்கு மிக ருசியாக இருக்கும்.பார்சல் அனுப்பிடறேன்.மிக்க மகிழ்ச்சி.

ரிஷ்வன் கருத்திற்கு மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றி.

athira said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆசியா சூப்பரோ சூப்பர்... எனக்கு அனைத்து சாதமுமே பிடிக்கும்...

இதே புளியோதரைப் பொடி விற்குது, நான் அதை வாங்கிச் செய்திருக்கிறேன்.

இம்முறை இதே முறையில் செய்யப்போகிறேன்.. என்ன பிரச்சனை என்றால் வீட்டில் ஒருவருக்கும் பிடிக்காது, நானே முக்கி முக்கிச் சாப்பிடோணும், அதனால்தான் மினக்கெடுவதில்லை, ஆனா எனக்கு சரியான விருப்பம்.

angelin said...

பார்க்க பார்க்க நாவூறுது .எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அம்மா இப்படிதான் செய்வாங்க //படத்தை பார்த்து சொல்கிறேன்//
இதோடு உருளை வறுவல் செம காம்பினேஷன் .THANKS FOR THE RECIPE

இமா said...

நானும் ட்ரை பண்ணப்போறேன் ஆசியா.

அதீஸ்.. பொடியை அரைச்சு வைச்சால் கொஞ்சமா செய்யலாம்.

asiya omar said...

ஆஹா! வாங்க வாங்க,அதிரா,ஏஞ்சலின்,இமா!:)...

நிச்சயம் செய்து பாருங்க.எளிமையாக அருமையாக இருக்கும்.என் கணவர் ஜப்பான் சென்ற பொழுது இந்த முறையில் ரைஸ் செய்து கொடுத்து அனுப்பினேன்.பொக்கிஷமாக 5 நாட்கள் வைத்து சாப்பிட்டாராம்.

வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நைஸ்..

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்விற்கு நன்றி சகோ!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

vanathy said...

சூப்பர் ரெசிப்பி. வெள்ளிக்கிழமை செய்து பார்க்க வேண்டும்.

asiya omar said...

ஸ்டார்ஜன் மிக்க நன்றி.

திண்டுக்கல தனபாலன் மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.

அமைதிச்சாரல் said...

ஜூப்பர்.. எத்தனைதான் ரெடிமேட் பொடிகள் வந்தாலும் நாமே செஞ்சு சாப்பிடறப்ப அதன் ருசியே தனி.. ரொம்ப நல்ல குறிப்பு.

கொஞ்சூண்டு எள்ளை வறுத்துச் சேர்த்தா அதன் மணம் இன்னும் தூக்கும்.

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்.வருகைக்கு மகிழ்ச்சி.

சுவனப்பிரியன் said...

சிறந்த பகிர்வு!

ஹேமா said...

எனக்குப் பிடித்த உணவு.நிச்சயம் செய்வேன் !

கோமதி அரசு said...

சுலப புளியோதரையில் நீங்கள் வறுத்து திரிக்க சொன்ன சாமான்களோடு கொஞ்சம் எள்ளும் வறுத்து பொடி செய்து போடுவேன்.

படங்கள் அருமை.

asiya omar said...

சுவனப்பிரியன்
ஹேமா
கோமதியக்கா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தளிகா said...

Superbbb Asiyakka.I' m drooling all over.5 naal kooda vaikkalaama asiyakka.