Wednesday, December 14, 2011

வெஜ் குருமா

சப்பாத்திக்கு வெஜ் குருமா இதை எதாலும் அடிச்சிக்க முடியாது.என் மெனுவில் மாதம் ஒரு முறை வெஜ் குருமா உண்டு,ஒவ்வொரு முறையும் ஒரு விதமாக செய்வேன்.ரொம்ப கவனம் எடுத்துக்காமல் செய்த குருமா இது.நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்;
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பச்சை பட்டாணி - ஒரு கையளவு
பச்சை மிள்காய் - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
மல்லி புதினா - சிறிது
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரைடீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2டீஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
உப்பு - தேவைக்கு.
வெங்காயம்,தக்காளி,கேரட்,உருளை,மல்லி புதினா நறுக்கி கொள்ளவும்.தேங்காய் முந்திரி பருப்பு அரைத்து கொள்ளவும்.

ப்ரஷர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை சோம்பு போடவும்.

நறுக்கிய வெங்காயம் போடவும், வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்.வெங்காயம் சிவற வேண்டாம். நன்கு வதக்கவும்.

நறுக்கிய மல்லி புதினா,தக்காளி சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

கீறிய பச்சை மிள்காய், மல்லி சீரகதூள்களை சேர்க்கவும். பிரட்டி விடவும்.

தேவைக்கு காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

ப்ரஷர் பேனை மூடி இரண்டு விசில் வரட்டும்.அடுப்பை அணைக்கவும்.

ஆவி அடங்கியபின் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட்டை சேர்க்கவும்.


நன்கு கொதித்து தேங்காய் வாடை அடங்கட்டும். அடுப்பை சிம்மில் வைத்து அணைக்கவும்.


சுவையான வெஜ் குருமா ரெடி.


சப்பாத்தியுடன் பரிமாறவும்.ஏன் இட்லி,தோசை,ஆப்பம்,பரோட்டா,நாண்,கீ ரைஸ் உடன் கூட பரிமாறலாம்.இதில் மஞ்சள்,மிளகாய்த்தூள்,கரம் மசாலா,தயிர் சேர்க்க வில்லை.ஆனாலும் ருசி பிரமாதமாக இருக்கும்.நீங்க விரும்பிய காய்கறிகளை சேர்த்து செய்யலாம்.

--ஆசியா உமர்.

21 comments:

ராமலக்ஷ்மி said...

மல்லி சீரகத் தூள் சேர்த்து செய்ததில்லை. நன்றி.

/ஒவ்வொரு முறையும் ஒரு விதமாக/

நானும்:)!

Jaleela Kamal said...

வெஜ் குருமா அருமை ஆசியா
நானும் மாதம் ஒரு முறை எல்லா காயையும் அல்லது இருக்கும் காயை போட்டு ஓவ்வொரு விதமா செய்து விடுவது

கடை டிசைன் இதில் தனியாக போட்டுட்டாலாமுன்னு போட்டு இருக்கேன். புது டிசைன் வர வர இதிலேயே ஆட் பண்ணுவேன், உங்களுக்கு தெரிந்தவங்களுகு எல்லாம் லின்க் அனுப்புங்க ஆசியா/.

http://chennaiplazaik.blogspot.com/

மகி said...

சூப்பர் குருமா ஆசியாக்கா! நானும் கிட்டத்தட்ட இது போலதான் செய்வேன்,ஆனா குக்கரில வைச்சதில்லை. சும்மாவே வேக வைச்சிருவேன். :)

Kalpana Sareesh said...

smell inga varaikkum varudhu .. too good

athira said...

உஸ்ஸ்ஸ் வெஜ் குருமா சூப்பர்...

எனக்கு இந்த இட்டலிப் பைத்தியம்போல, குருமாக் கறிகளும் ஒரு பைத்தியம்... ஆனா கடையில் வாங்கும் சுவையில், வீட்டில் செய்தால் வருகுதில்லை எனக்கு...:(.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப அருமையா செய்திருக்கீங்க ஆசியாக்கா.

angelin said...

ஸ்க்ரீன் வழியாகவே எடுத்துட்டு ஓடிவிடுவேன் பார்க்கவே யம்மியா இருக்கு .
எனக்கு வெஜ் குருமா ரொம்ப பிடிக்கும் .இது புது ரெசிப்பி .செய்து விடுகிறேன் .

அப்புறம் ஆசியா உங்களுக்கு அந்த decoupage card tutorial போட்டிருக்கிறேன்
நேரமிருக்கும்போது வந்து பாருங்க

ஸாதிகா said...

அருமையான வெஜ் குருமா.அழகாக செய்து சப்பாத்தியுடன் பறிமாறி இருப்பது அருமை

கோவை2தில்லி said...

குருமா இதுவரை செய்ததில்லை. இது ரொம்ப சுலமாக இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

jagadeesh said...

thanks ka.

S.Menaga said...

குக்கரில் காய்களை வேகவைத்து செய்வது ரொம்ப ஈசி,நானும் இதுப்போல் செய்வேன்..அடுத்தமுறை சீரகப்பொடி சேர்த்து செய்கிறேன்.

asiya omar said...

ராமலஷ்மி
ஜலீலா
மகி
கல்பனா
அதிரா
ஸ்டார்ஜன்
ஏஞ்சலின்
ஸாதிகா
கோவை2தில்லி
ஜெகதீஸ்
மேன்கா

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.செய்து பாருங்க.

அமைதிச்சாரல் said...

ஆயிரம் சைடிஷ் இருந்தாலும் சப்பாத்திக்கு குருமாதான் ஜூப்பர் பெட்டர் ஹாப் :-)

நானும் கிட்டத்தட்ட இதே முறையில்தான் செய்வேன். தேங்காயை லேசா வறுத்து அரைச்சு சேர்த்தா மணம் இன்னும் தூக்கும்.

Mangayar Ulagam said...

வணக்கம்

உங்களின் வலைப்பூவில் மங்கையர் உலகம் இணைப்பினை இணைத்தமைக்கு நன்றி

நாகா ராம் said...

2 நாளா இந்த குருமாதான் தேடினேன். ஞாயிற்றுகிழமை இந்த குருமாதான் செய்யபோறேன். :-) குறிப்புக்கு நன்றி

asiya omar said...

அமைதிச்சாரல் கருத்திற்கு மிக்க நன்றி.

நாகாராம் கருத்திற்கு மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

அருமை ஆசியா.

கோமதி அரசு said...

வெஜ் குருமா நானும் சமைத்து அசத்தி விடுகிறேன்.

படங்கள் எல்லாம் பசியை தூண்டுகிறது.

அன்புடன் மலிக்கா said...

வெஜ் குருமா இது எங்க மச்சான் செய்யும்போது இன்னும் வாசனை தூக்கலாக இருக்கும் [நான் செய்வதைக்காட்டிலும்] போட்டூக்கள் அசத்தல்..

மனம் மணக்கும் திருமறை மனனம்.
http://niroodai.blogspot.com/2011/12/blog-post_22.html நீரோடையில்..

asiya omar said...

காஞ்சனா மிக்க நன்றி.

கோமதியக்கா மிக்க நன்றி.

மலிக்கா மிக்க நன்றி.விதவிதமாக வெஜ் குருமா செய்யலாம்.உங்க மச்சான குக்கிங் எக்ஸ்பர்ட் ஆச்சே.அந்த முறையை பகிர்ந்தால் நாங்களும் செய்து அசத்துவோம்.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது ஆசியா.