Sunday, December 25, 2011

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் என் இனிய அன்பான நட்புள்ளங்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

என் கணவரின் நண்பர் ,அவரின் மனைவி எனது இனிய தோழி அவர்கள் வீட்டில் எங்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து.மிகச் சுவையான அருமையான விருந்து.அதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.ஆசியாமா நீங்க கெஸ்ட் இல்லை,ஹோஸ்ட் சீக்கிரமே வந்திடுங்கன்னு அன்பா அழைச்சாங்க.அல் ஐனில் இருந்து அபுதாபிக்கு கிளம்பி சென்று வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ரொம்ப ரிலாக்ஸ்டான அன்பான விருந்து. நல்லதொரு ஃபேமிலி கெட்டுகெதர். அனைவரும் மனம்விட்டு பேசி,சிரித்து மகிழ்ந்தது ஒரு நல்ல அனுபவம்.


விருந்தின் சூப்பர்மெனு
அரபிக் மந்தி லஹம், வெஜ் ஃப்ரைட் ரைஸ்,வெஜ் நூடுல்ஸ்,சிக்கன் லாலி பாப்,வெஜ் ஸ்பிரிங் ரோல்ஸ்,சப்பாத்தி,பரோட்டா,மலாய் கோஃப்தா,காளிப்ளவர் ட்ரை மஞ்சூரியன்,தால் ஃப்ரை,தயிர் சாதம்,இறால் கிரேவி, ஹமூர் ஃபிஷ் ஃப்ரை,வெஜ் சாலட்,ஃப்ரூட் சாலட்,குலோப் ஜாமுன் என்று ஏகப்பட்ட ரெசிப்பி.

கிறிஸ்துமஸ் என்றால் கேக் நிச்சயம் இருக்கும், ஆனால் இங்கு அரபிக்ஸ்டைலில் முழு ஆட்டையையே ஆட்டை போட்ட அருமையான பிரியாணி. கேக் கட் செய்து சாப்பிடுவது போல் ஆளாளுக்கு சாஃப்டான கறியோடு ரைஸ் சாப்பிட செம டேஸ்ட். இன்னமும் சுடச்சுட அதன் சுவை மனதிலும் நாவிலும் இருக்கு.

தொடர்ந்து பிறக்கப் போகும் இனிய புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.

--ஆசியா உமர்..


6 comments:

Ramani said...

மெனுவுடன் படங்களையும் பார்க்க
ஒரு ஏக்கப் பெருமுச்சு வருவதை
தவிர்க்க இயலவில்லை
தங்களுக்கும் தங்கள் கணவரின் நண்பர் குடும்பத்திற்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

இத்தனை அயிட்டஙக்ளா.

athira said...

ஹையோ... மட்டின் பிர்ராஆணி படம் போட்டுக் காட்டி... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல்ல... ஆசியா... நானும் செய்தேன் சிக்கின் பிர்ர்ர்ர்ராணி...:).

asiya omar said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.மகிழ்ச்சி.

ஸ்டார்ஜன் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஜலீலா வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன்.பிரியாணியை பிர்ராணியாக்கிட்டீங்களே!சூப்பர்.மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.