Tuesday, December 27, 2011

வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2 ( பெரியதாக)
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
காம்புப்பகுதியையும், விளிம்புப்பகுதியையும் நறுக்கி கொள்ளவும்.

இப்படி தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.

வட்டவடிவமாக நறுக்கி கொள்ளவும்.ரொம்ப மெல்லியதாக இல்லாமல் நடுத்தரமாக நறுக்கி கொள்ளவும்.அதனோடு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,சோம்புத்தூள்,இஞ்சி பூண்டு விழுது, உப்பு,ஒரு டீஸ்பூன் எண்ணெய் கலந்து பிசறி ஒரு அரை மணி நேரமாவது வைக்கவும்.


நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு காயவும் ரெடி செய்த வாழைக்காயை போட்டு பிரட்டி வேக விடவும்.சிறிது வெந்தவுடன் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.திரும்ப ஒரு முறை தண்ணீர் தெளித்து பிரட்டி வேக விடவும்.

இந்த வறுவல் சாஃப்டாக இருக்கும்.

நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.

சோம்பு,இஞ்சி பூண்டு சேர்ப்பதால் வயிற்றை தொந்திரவு செய்யாது. இதனை சாம்பார்,ரசம்,தயிர் மற்றும் எல்லாவகையான குழம்பு சாதத்திற்கும் வெரைட்டி ரைஸிற்கும் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.எண்ணெயும் குறைவாகவே உபயோகிப்பதால் சூப்பராக இருக்கும்.

--ஆசியா உமர்.

13 comments:

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் தெளிவான செய்முறை விளக்கம்.

/சோம்பு,இஞ்சி பூண்டு சேர்ப்பதால் வயிற்றை தொந்திரவு செய்யாது. /

முக்கியமான குறிப்பு. நன்றி.

FOOD NELLAI said...

//சோம்பு,இஞ்சி பூண்டு சேர்ப்பதால் வயிற்றை தொந்திரவு செய்யாது.//
இதுதான் இதுல முக்கியமான விஷயம்.

Mahi said...

Looks yummy asiyakkaa! :P

அமைதிச்சாரல் said...

ருசியானதொரு குறிப்பு .. பகிர்வுக்கு நன்றி ஆசியா :-)

asiya omar said...

கருத்திற்கும் வருகைக்கும்

மிக்க நன்றி ராமலஷ்மி.

food nellai- சங்கரலிங்கம் சார் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

athira said...

அடடா வாழைக்காயை எப்படிப் பொரித்தாலும் உள்ளே போயிடும்:) அதிலும் இப்படி மினக்கெட்டால் சொல்லவே வேண்டாம்.

நாங்களும் இப்படித்தான் பொரிப்போம், ஆனா இஞ்சி உள்ளி சேர்ப்பதில்லை.

Jaleela Kamal said...

வாழக்காய் வறுவல் தயிர் சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷ்ன்

கோமதி அரசு said...

இஞ்சி, பூண்டு, சோம்பு போடாமல் நான் செய்வேன்.

இஞ்சி, பூண்டு ,சோம்பு போட்டு செய்துப் பார்க்கிறேன் ஆசியா.

S.Menaga said...

வாழைக்காயை இப்படி வறுப்பதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

வெங்கட் நாகராஜ் said...

தனித்தனியாக பார்க்கவே நன்றாக இருக்கிறது சகோ... செய்து பார்த்துடுவோம்.....

நல்லதோர் பகிர்வுக்கு நன்றி.

asiya omar said...

அதிரா கருத்திற்கு மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

கோமதியக்கா செய்து பாருங்க.மகிழ்ச்சி.

மேனகா மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.செய்து பாருங்க சகோ.

இமா said...

அடடா வாழைக்காயை எப்படிப் பொரித்தாலும் உள்ளே போயிடும்:) அதிலும் இப்படி மினக்கெட்டால் சொல்லவே வேண்டாம்.

நாங்களும் இப்படித்தான் பொரிப்போம், ஆனா இஞ்சி உள்ளி சேர்ப்பதில்லை.

pari mala said...

Nice. Thanks