Friday, December 23, 2011

சிக்கன் நக்கட்ஸ் /Chicken Nuggets (baked & fried)

தேவையான பொருட்கள்;
டெண்டர் சிக்கன் ப்ரெஸ்ட் - 300கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரைடீஸ்பூன்
பெப்பர் பவுடர் - கால்டீஸ்பூன்
மஞ்ச்ள் தூள் - 2 பின்ச்
கெட்டி தயிர் - 1டீஸ்பூன்
ப்ரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
மைதா மாவு - 2டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
முட்டை - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு.

நன்கு சுத்தம் செய்த எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை சிறிய சதுர மெல்லிய துண்டுளாக கட் செய்து அலசி தண்ணீர் வடித்து கொள்ளவும்.

துண்டு செய்த ஒரு டெண்டர் சிக்கன் ப்ரெஸ்டோடு இஞ்சி பூண்டு பேஸ்ட்,சில்லி பவுடர்,மஞ்சள் தூள், மிளகுத்தூள்,தயிர்,உப்பு சேர்த்து கலந்து நன்கு ஒரு மணி நேரமாவது ஊறவைக்கவும்.மசாலாவை உங்க டேஸ்ட்க்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.எதுவும் சிறிய சிரத்தையோடு செய்தால் அருமையாக வரும்.


முட்டை தனியாக கலந்து ஒரு பவுலில் வைக்கவும். ப்ரெட் கிரம்ஸ் ,மைதா,சிறிது உப்பு கலந்து ஒரு ப்லேட்டில் வைக்கவும்.

ஊறிய சிக்கன் துண்டுகளை கலக்கிய முட்டையில் டிப் செய்து, ப்ரெட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து ஃப்ரிட்ஜ் சில்லரில் அரை மணி நேரம் வைக்கவும்.நன்கு செட் ஆகிவிடும்.
பின்பு ஒரு தவாவில் எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு ரெடி செய்த நக்கட்ஸ் போட்டு நெருப்பை மீடியமாக குறைத்து அருகில் நின்று பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
குட்டீஸ்க்கு இப்படி ஃப்ரை செய்து கொடுக்கவும். சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி.சிக்கன் பேஸ்ட் எல்லாம் செய்யாமல் சிக்கன் பொரிப்பது போலவே செய்து இருந்தாலும் நக்கட்ஸ் டேஸ்ட் சூப்பராக , வெளியே கிரிஸ்பியாக உள்ளே ஜூஸியாக இருந்தது.ரெடிமேட் அயிட்டங்களை தவிர்ப்பது நல்லது.

சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி.

விரும்பினால் முற்சூடு செய்த எலெக்ட்ரிக் ஓவனில் 200 டிகிரி செட் செய்து இரண்டு பக்கமும் ப்லேம் செட் செய்து எண்ணெய் தடவிய அலுமியம் ஃபாயில் விரித்த ட்ரேயில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கலாம்.ஒரு பக்கம் சிவந்தவுடன் மறுபக்கம் திருப்பி வைக்கவும்.பேக்கானவுடன் எடுத்து பரிமாறவும்.


இநத ஹெல்தியான பேக்ட் சிக்கன் நக்கட்ஸ் நமக்கு.


--ஆசியா உமர்.


10 comments:

athira said...

சூப்பர் ஆசியா....ரெடிமேட் நக்கட்ஸ் போலவே இருக்கே...

அமைதிச்சாரல் said...

பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு..

Kurinji said...

Mouthwatering recipe Asia....

S.Menaga said...

கடையில் விற்பது போலவே இருக்கு.பார்ட்டிகளுக்கு ஏற்ற சூப்பர்ர் ரெசிபி!!

FOOD NELLAI said...

நல்ல பகிர்வு.பசியைத் தூண்டிடும் சகோ.

FOOD NELLAI said...

நல்ல பகிர்வு.பசியைத் தூண்டிடும் சகோ.

asiya omar said...

மிக்க நன்றி அதிரா.

மிக்க நன்றி அமைதிச்சாரல்.

மிக்க நன்றி குறிஞ்சி.

மிக்க நன்றி மேனகா.

food nellai (sankaralingam sir) மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே அருமை!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

asiya omar said...

திண்டுக்கல் தனபாலன் கருத்திற்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

இரண்டு முறையும் நல்ல இருக்கு
பிள்லைகளுக்கு அதிஅக்மாக பிடித்தது நக்கெட்ஸ் தான்
நான் இதை அடிக்கடி மீனில் செய்வதுண்டு.