Thursday, December 29, 2011

சிக்கன் ஸ்ட்ரைப்ஸ் / Chicken Stripes

தேவையான பொருட்கள்:
சிக்கன் ப்ரெஸ்ட் - 300கிராம்
knorrஆல் இன் ஒன் பேக் அல்லது சிக்கன் 65 மசாலா - 1டீஸ்பூன்
கார்ன் ப்லேக்ஸ் - 1 கப்
கார்ன் ஃப்லோர் அல்லது மைதா- அரை கப்
முட்டை வெள்ளைக்கரு - 1
எண்ணெய் - தேவைக்கு
உப்பு- தேவைக்கு
சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டிய சிக்கன் ப்ரெஸ்ட்டை இப்படி நீளவாக்கில் துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.

அதனோடு ஆல் இன் ஒன் மசாலா பேக் அல்லது விருப்பமான சிக்கன் மசாலாவுடன் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.துண்டுகள் மெல்லியதாக இருக்க வேண்டும்.மசாலாவில் உப்பு இருக்கும்.உப்பு பார்த்து சேர்க்கவும்.நன்கு ஊற வேண்டியது அவசியம்.

கார்ன் ஃப்லோர்அல்லது மைதா,பொடித்த கார்ன் ஃப்லேக்ஸ்,முட்டை வெள்ளைக்கரு ரெடி செய்து கொள்ளவும்.
சிக்கன் ஸ்ட்ரைப்ஸ் நல்ல காரமாக வேண்டுமானால் இப்படி சிக்கன் 65 மசாலா சேர்த்தும் கலந்து வைக்கலாம்.விரும்பினால் சிக்கன் துண்டுகளை பாதி வேக்காடு வெந்தும் பின் வருமாறு ரெடி செய்யலாம்.ஒரு பேனில் போட்டு சிக்கனில் ஊறும் தண்ணீரிலேயே வேக வைத்து ஆற வைத்து செய்யலாம்.

ரெடி செய்த சிக்கன் ஸ்ட்ரைப்ஸை மைதா அல்லது கார்ன்ஃப்லோரில் பிரட்டி எடுக்கவும்.

பின்பு கார்ன் ஃப்லோரில் பிரட்டிய சிக்கனை முட்டை வெள்ளைக்கருவில் டிப் செய்து எடுக்கவும்.

நொறுக்கிய அல்லது மிக்ஸியில் பொடித்து எடுத்த கார்ன் ப்லேக்ஸில் பிரட்டி எடுக்கவும்.இப்படியே அனைத்து சிக்கன் துண்டுகளையும் ரெடி செய்து கொள்ளவும்.கார்ன் ஃப்லேக்ஸை மிக்ஸியில் கரகரப்பாக ப்ரெட் கிரம்ஸ் போல் பொடித்தும் உபயோகிக்கலாம்.



கடாயில் எண்ணெய் விட்டு நன்கு சூடானவுடன் சிக்கன் ஸ்டரைப்ஸ் போட்டு நெருப்பை மீடியமாக வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


சுவையான கிரிஸ்பியான சிக்கன் ஸ்ட்ரைப்ஸ் ரெடி.


இதனை ப்ரெட் டோஸ்ட்,டொமட்டோ சாஸ், ஃபிங்கர் சிப்ஸ்,சாலட்ஸ் உடன் பரிமாறவும்.குட்டீஸ்க்கு கொண்டாட்டமாக இருக்கும்.

பார்ட்டியில் ஸ்டார்டர்ஸ் ஆகவும் பரிமாறலாம்.ரெடிமேட் சிக்கன் நக்கட்ஸ்,ஸ்ட்ரைப்ஸ் தவிர்ப்பது நல்லது.

--ஆசியா உமர்.


15 comments:

Kurinji said...

Delicious and yummy recipe.

Mahi said...

present! ;)

S.Menaga said...

சூப்பரா இருக்குக்கா...

vanathy said...

கடையில் சாப்பிடுவது போல சூப்பரா இருக்கு.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.

ஆஹா மகி,வந்து பார்த்தமைக்கு மகிழ்ச்சி.

மேனகா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

angelin said...

என் மகளுக்கு செய்து தருகிறேன் .கார்ன் ஃப்லேக்சுக்கு பதில் ப்ரெட் கிரம்ஸ்
பயன்படுத்தலாமா .பகிர்வுக்கு நன்றி
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

asiya omar said...

ஏஞ்சலின் வருகைக்கு நன்றி.நான் எப்ப்பவும் ப்ரெட் கிரம்ஸ் தான் உபயோகிப்பேன்,மாறுதலுக்காக கார்ன் ஃப்லேக்ஸ் உபயோகித்து செய்து பார்த்தேன்.கிரிஸ்பாக இருந்தது.

athira said...

சூப்பர் ஆசியா நானும் அடிக்கடி செய்வதுண்டு.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அமைதி அப்பா said...

புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

விச்சு said...

பார்க்கவே செம சூப்பரா இருக்கு.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

asiya omar said...

அதிரா மிக்க நன்றி.

அமைதி அப்பா
மாதேவி
தங்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

விச்சு மிக்க நன்றி.உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்னு said...

as salamu alaykum asiya sis,

ungaludaiya intha recipe - jujju vin lunch boxukkum evening snack-ukkum rombave uthavuthu :). Ibrahim=ukkum tharuvathaal naan corn flakes serppathillai, athae pola inga ellaarukkum white colorthaan pidippathaal, med-low la vechu, brown aagamalae nalla vega vittu eduthukkuven, crispy white nuggets.... super doopar hit.... thanks kka :))

Asiya Omar said...

அன்னு வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.கார்ன் ஃப்லேக்ஸ் ரோல் செய்யாமல், முட்டையில் டிப் செய்ததை மீண்டும் மைதாவில் ரோல் செய்து பொரித்தாலும் அருமையாக இருக்கும்.