Friday, December 2, 2011

தம் ஆலுகோபி / Dum AlooGobi

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - 200கிராம்
காளிப்ளவர் - 200 கிராம்
எண்ணெய் - 4-6 டேபிள்ஸ்பூன்

மசாலா மிக்ஸ் செய்து கொள்ள:

புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்தூள்- கால்டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்


தாளிக்க :
மிளகு, சீரகம், சோம்பு -சிறிது
கிராம்பு - 2
பட்டை - 1
பிரியாணி இலை -1
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மல்லி இலை - சிறிது அலங்கரிக்க.

நான்கு நபர்களுக்கு..

செய்முறை:


உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். காளிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து கொதிக்கும் நீரில் போட்டு வடிகெட்டி எடுத்து வைக்கவும்.

ஒரு பவுலில் தயிருடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை கலந்து வைக்கவும்.


ஒரு சாலோ நான்ஸ்டிக் ப்ரை பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி உருளைக்கிழங்கு,காளிப்ளவர் போட்டு,சிறிது உப்பு தூவி பொரித்து எடுக்கவும்.



பொரித்த பிறகு இருக்கும் எண்ணெய் தாளிக்க பயன்படுத்தலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு காயவும் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தயிருடன் கலந்து வைத்த மசாலா மிக்ஸை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.

பொரித்த உருளை காளிப்ளவர் சேர்த்து பிரட்டவும். ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

மூடி போட்டு 5 நிமிடம் மசாலாவுடன் சேர்ந்து வேகவிடவும். உப்பு சரி பார்க்கவும்.

கிரேவி கெட்டியாகி கமகமவென்ற மணத்துடன் இருக்கும்.அடுப்பை அணைக்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான தம் ஆலு கோபி ரெடி.இதனை சப்பாதி,நாண்,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.
கிரேவியாக வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கலாம்.
அவரவர் தேவைக்கு மசாலா கூட்டி, குறைத்து கெட்டித்தனமைக்கு தகுந்தபடி வைத்துக் கொள்ளலாம்.

--ஆசியா உமர்.

18 comments:

athira said...

மீ...மீ... மீ த 1ஸ்ட்டூஊஊஊஊ:))

athira said...

சூப்பர் பார்க்கவே ஆசையாக இருக்கு... ஹொலிபிளவரையும் நன்கு பொரிக்க வேண்டுமோ? அது பொரிபடாதெல்லோ... எண்ணெயை உறிஞ்சியதுபொல இருக்காதா?... மாவில் தோய்த்துத்தான் பொரித்திருக்கிறேன், சும்மா பொரித்துப் பார்த்ததில்லை....

டிஸ் பார்க்கவே சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

மகி said...

போட்டோஸ் சூப்பரா இருக்கு ஆசியாக்கா! இப்படி தனியா காய்களை பொரித்து செய்ததில்லை.சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.

ஹேமா said...

எங்க வீட்ல உருளைக்கிழங்கு ஆசாமி ஒண்ணு இருக்கு.கண்டிப்பா செய்து கொடுக்கணும் அடுத்த வாரம் !

விச்சு said...

ஐயோ! யாராவது உடனே இத சமைத்து கொடுங்களேன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு, படங்களுடன். முயன்று பார்க்கிறேன். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

தம் ஆலு சாப்பிட்டிருக்கிறேன். தம் ஆலு-கோபி இது புதுசு... :)

செய்து பார்த்துடுவோம்!

asiya omar said...

அதிரா மிக்க நன்றி.காளிப்ளவரை பொரித்தால் அருமையாக வரும்.எண்ணெய் வடித்து விட்டு எடுக்க வேண்டும்.செய்து பாருங்க.

asiya omar said...

மகி கருத்திற்கு மிக்க நன்றி.

ஹேமா கருத்திற்கு மிக்க நன்றி.

விச்சு கருத்திற்கு மிக்க நன்றி.

ராமலஷ்மி கருத்திற்கு மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் கருத்திற்கு மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் said...

இது நல்லா இருக்கும் தானே ஆசியாக்கா. நீங்க சொன்னா நல்லா தான் இருக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

இது கூட மும்பை சப்பாத்தி வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்...!!!

ஸாதிகா said...

காலிபிளவருடன் உருளையை சேர்த்து சமைத்து அசத்தி விட்டீர்கள் ஆசியா.டிரை பண்ணத்தோன்றும் ரெஸிப்பி.

asiya omar said...

சகோ.அப்துல்காதர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

நாஞ்சில் மனோ கருத்திற்கு மிக்க நன்றி.மும்பை சப்பாத்தி பெயர் புதுசாக இருக்கே:)!

தோழி ஸாதிகா, மிக்க நன்றி,மகிழ்ச்சி.

ஆமினா said...

கடைசி படத்துக்கு முந்தைய படத்தை (கடாயில் இருக்கும் தம் ஆலு கோபி ) பார்க்கும் போது இப்பவே சாப்பிடும்படி தூண்டுது. கலரும் ஓரத்தில் வடியும் எண்ணையும் பார்த்து பசி எகிறுது

வாழ்த்துக்கள் ஆசியா

தொடர்பதிவு எழுதிவிட்டேன். சரியான பாடல்கள் தான் கிடைக்கவில்லை. கூடிய விரைவில் வெளியிடுகிறேன் ஆசியா கோச்சுக்காதீங்கோ ;-)

asiya omar said...

ஆமினா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தொடர்பதிவிற்கு அவசரமில்லை.உங்களால் முடியும் பொழுது பதிவிடுங்கள்.

கோவை2தில்லி said...

தம் ஆலு கோபி பார்க்கவே நல்லா இருக்குங்க. செய்து பார்க்கிறேன்.

asiya omar said...

செய்து பாருங்க ஆதி.கருத்திற்கு மகிழ்ச்சி.

நாகா ராம் said...

ஆஹா இனிமே இந்த பக்கமே வரக்கூடாது போல இருக்கே.. இன்னும் சாப்பிடல ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பசிக்குது :-(