Monday, December 5, 2011

கொள்ளு சட்னி / Horsegram dip

தேவையான பொருட்கள்;
கொள்ளு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4 - 6
வெங்காயம் -1
தக்காளி -1
பூண்டு - 5 பல்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிது தேவைக்கு
உப்பு - தேவைக்கு
கொள்ளுபயறை மணம் வருமாறு வறுத்து இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் தேவைக்கு தண்ணீர் வைத்து நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பூண்டு நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டு மிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.மிளகாய் அவரவர் தேவைக்கு கூட்டி குறைத்து கொள்ளலாம்.

அத்துடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.சிறிது புளி,வேக வைத்த கொள்ளு,கருவேப்பிலை,மல்லி இலை சேர்க்கவும்.கலந்து கொள்ளவும்.தேவைப்பட்டால் கொள்ளு வேக வைத்த தண்ணீர் அரைக்கும் பொழுது சேர்க்கவும்.

வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தேவைக்கு உப்பும் சேர்த்து சட்னி பதத்தில் அரைத்து எடுக்கவும்.


சுவையான சத்தான கொள்ளு சட்னி ரெடி.

விரும்பினால் தாளிப்பு கர்ண்டியில் சிறிது நல்லெண்ணெய் காயவைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கலாம்.

இதனை இட்லி,தோசையுடன் பரிமாறலாம்.
விரும்பினால் சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.கொள்ளு வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளு ரசம் தயாரிக்கலாம்.

--ஆசியா உமர்.

30 comments:

அஹமது இர்ஷாத் said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்,

எப்ப‌டி இருக்கீங்க‌...ந‌ல‌மா..

கொள்ளு ச‌ட்னி..இப்ப‌த்தான் கேள்விப்ப‌டுறேன்..வீட்டில் செய்ய‌ சொல்ல‌னும்..ம்..

MyKitchen Flavors-BonAppetit!. said...

Healthy and yumm Chutney Dear.So far heard of Horsegram Rasam/soup only.Thanks for sharing

athira said...

அவ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூ இல்லை கர்ர்ர்ர்:)))

Vetrimagal said...

Thanks. A wonderul idea for Chutney. Good for health too.
I liked the tip about boiling the Kollu

Have a nice day.

ராமலக்ஷ்மி said...

இதுவரை செய்ததில்லை. குறிப்புக்கு நன்றி ஆசியா.

கோவை2தில்லி said...

கொள்ளு சட்னி வித்தியாசமா இருக்குங்க. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

கொள்ளு வறுத்து பொடி பண்ணி வைத்து இருக்கிறேன் ப்ரீசரில். வண்டு வராமல் இருக்க. அதை பயன்படுத்தலாமா?

asiya omar said...

அஹமது இர்ஷாத் வருகைக்கு மகிழ்ச்சி.மிக்க நலம்.கொள்ளு டேஸ்ட் பிடித்தால் ஒ.கே.:)

asiya omar said...

மைகிச்சன் வருகைக்கு மிக்க நன்றி.

அதிரா வருகைக்கு நன்றி.மகிழ்ச்சி..

வெற்றிமகள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ராமலஷ்மி கருத்திற்கு மிக்க நன்றி.

கோவை2தில்லி வருகைக்கு மகிழ்ச்சி.
கொள்ளு வறுத்து பொடி பண்ணினாலே வண்டு வராது,ப்ரீசரில் எப்படி வண்டு வரும்? சும்மா ஜோக்.
நான் கொள்ளு வேகவைத்தேன்,சட்னி செய்து பார்த்தேன்,பொடியை வைத்து செய்ததில்லையே.

Kalpana Sareesh said...

hv not tried this mehtod this looks more yumm than wat i make..

ஸாதிகா said...

அசத்தலான கொள்ளுசட்னி.தோசையுடன் பரிமாறி இருப்பது சூப்பர்.உண்மையில் தலைப்பினைப்போல் சமைத்து அசத்த்தி விடுகின்றீர்கள் தோழி.

மகி said...

கண்டு புடிச்சுட்டேன், புளி சேர்த்து கொள்ளு பருப்பு செய்து மிக்ஸில அரைச்சுட்டீங்க..:)))) புது ஐடியாவா இருக்கு ஆசியாக்கா! நல்லா இருக்கு!

athira said...

ஹையோ ஆசியா நான் நேற்று ஒரே நேரத்தில நித்திரை தூங்கி தூங்கி 2 பதிவு போட்டேனே.. 2வதைக் காணவில்லையே கிடைக்கவில்லையோ அவ்வ்வ்வ்வ்?

athira said...

திரும்பவும் பின்னூட்டம் அனுப்புகிறேன்.

கொள்ளுசட்னி சூப்பர், வித்தியாசமாக இருக்கு. சட்னியாக அரைக்காமல் கறிபோலவும் சாப்பிடலாம்போல இருக்கு.

asiya omar said...

கலபனா மிக்க நன்றி.செய்து பாருங்க.

ஸாதிகா கருத்திற்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.எங்க வீட்டில் கேட்டால் தான் தெரியும்.பொழுது போகாமல் சும்மா நான் படம் காட்டுவதோடு சரி.அவரோட கமெண்ட் எப்பவும் not bad தான்.

asiya omar said...

மகி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
கொள்ளு ஒரு அரைக்கிலோ வாங்கி அப்படியே இருக்கு.நீங்கள் எல்லாம் பொடி,தோசை,இட்லி என்று கொள்ளுவில் செய்து அசத்துவதால் இது ஒரு சின்ன முயற்சி.

asiya omar said...

அதிரா. நானும் நேரம் கிடைக்கும் பொழுது இரவில் தான் பதிவிடுவதுண்டு.என்றாலும் கருத்திற்கு மீண்டும் மகிழ்ச்சியே.போட்ட கருத்து எங்கே போச்சு?
அவ்வ்வ்வ்..நானும் ஜிமெயிலில் தேடிப்பார்க்கிறேன்.

சிநேகிதி said...

கண்டிப்பாக செய்து பார்க்கனும்...

MANO நாஞ்சில் மனோ said...

கொள்ளு சட்னி பிரிப்பேர் சூப்பர்...!!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சுவையான குறிப்பு நல்ல பதிவு நன்றி
இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.

Jay said...

my mil used to prepare this ...love it..:)
Tasty Appetite

ஹேமா said...

கொள்ளுச் சட்னியா...விழுவிழுப்பா இருக்கதா ஆசியா.புதுசா இப்பத்தான் கேள்விப்படறேன் !

கோமதி அரசு said...

நான் வேறு மாதிரி கொள்ளு சட்னி(கொள்ளு வறுத்து) செய்வேன். நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்து விடுகிறேன்.

நன்றி ஆசியா.

மங்கையர் உலகம் said...

புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

http://ithu-mangayarulagam.blogspot.com

asiya omar said...

சிநேகிதி செய்து பாருங்க.மிக்க நன்றி.

நாஞ்சில் மனோ மிக்க நன்றி.

ராஜபாட்டை ராஜா மிக்க நன்றி.

ஜெ மிக்க நன்றி.

ஹேமா ரொம்ப விழுவிழுப்பாக இருக்காது.வெங்காய தக்காளியின் விழு விழுப்பு தான் இருக்கும்.கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

கோமதியரசு வாங்க,உங்க முறைப்படியும் செய்ய ஆசை.கருத்திற்கு மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

குறிப்புக்கு நன்றி ஆசியா.

Lakshmi said...

நானும் கொள்ளு வறுத்துதான் சட்னி செய்திருக்கேன் வெந்து சட்னி செய்ததில்லே உங்க குறிப்புப்படி செய்து பாக்கரேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வழக்கமாக கொள்ளு பயறை வேக வைத்து, பொடியாக்கி, அதை சாதத்தில் நல்லெண்ணையை ஊற்றி சாப்பிடுவோம். இது கொஞ்சம் வித்தியாசமாய் உள்ளது. செய்ய சொல்லிருவோம். நன்றி சகோ!

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

asiya omar said...

காஞ்சனா மிக்க நன்றி.

லஷ்மிமா நீங்களும் குறிப்பு கொடுங்களேன்.வருகைக்கு மகிழ்ச்சி.

திண்டுக்கல தனபாலன் கருத்திற்கு நன்றி.
எங்க வீட்டில் கொள்ளுவெல்லாம் சமையலில் சேர்ப்பதில்லை,நான் இப்ப தான் முயற்சி செய்து பார்க்கிறேன்.