Sunday, December 4, 2011

உருளைக்கிழங்கு சிப்ஸ்/ Potato Chips

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
(மீடியம் சைஸ் )
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரைடீஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவைக்கு.

 4 -6 நபர்களுக்கு,
உருளைகிழங்கை நன்கு கழுவி துடைத்து எடுக்கவும்.
இப்படி மெலிதாக சீவி வைக்கவும்.


அடுப்பில் வாணலி வைத்து தேவைக்கு எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.

மிளகாய்த்தூள் ,உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீவிய உருளைக்கிழங்கை போட்டு பக்குவமாக பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.
சூட்டுடனேயே ரெடி செய்த பொடியைத் தேவைக்குத் தூவி குலுக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி.

இதனை பிஸிபேலாபாத், தயிர் சாதம்,எலுமிச்சை சாதம்,புளியோதரை, தக்காளி சாதம்,புதினா சாதம்,வெஜிடபிள் பிரியாணி இப்படிசொல்லிட்டே போகலாம், வெரட்டி ரைஸ் உடன் சாப்பிடலாம். ஏன் சும்மாவே சாப்பிடலாம். வாயு தொந்திரவு உள்ளவர்கள் கவனம்.


--ஆசியா உமர்.

12 comments:

athira said...

ஆஆஆஆ.. இம்முறையும் மீ தான் ஃபெஸ்ட்டூஊஊஊஊஊ:))..

ஆசியா.. இது பார்க்க சூப்பராக இருக்கு, ஆனா கடையில் வாங்குவதுபோல மொறுமொறு என இருக்குமோ? அல்லது இளகலாகத்தான் இருக்குமோ?

Mahi said...

சூப்பரா இருக்கு ஆசியாக்கா!

asiya omar said...

அதிரா உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
நிதானமாக எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் கிழ்ங்கை போட்டு கிழங்கு மேலெழும்பி வரும் பொழுது நெருப்பை மீடியமாக வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.கடையில் உள்ளதை விட ஆரோக்கியமானது.சீவிய உருளைக்கிழங்கில் நீர்த்தனமை இருக்கக்கூடாது.எப்பவாவது இப்படி செய்து கொடுக்கலாம்.

asiya omar said...

மகி,இது அருமையாக இருக்கும்,பொரிக்க பொரிக்க சாப்பிடத்தூண்டும்.கருத்திற்கு மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு சுலபமா? நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

Aruna Manikandan said...

parkave supera irruku...

Jaleela Kamal said...

அடிகடி செய்வது ்தான் கட்டு சாதம்னா பிள்ளைக்ளுக்கு ஹோம் மேட் சிப்ஸ் தான்

நமக்கே சாப்பிட்டு கொண்டே இருகன்குன் போல இருக்கும் பிள்ள்ைளைகலுக்கு கேட்கவே வேண்ட்ாம்

அமைதிச்சாரல் said...

பார்க்கவே டேஸ்ட்டியா இருக்கு :-)

ஸாதிகா said...

இதெல்லாம் எங்கே செய்கிறது?எல்லாம் ரெடிமேட்தான்.நன்றாகவே மெனக்கெடுகின்றீர்கள் தோழி.

asiya omar said...

திண்டுக்கல் தனபாலன் கருத்திற்கு மிக்க நன்றி.

அருணா கருத்திற்கு மிக்க நன்றி.

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் கருத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா சிப்ஸ் எல்லாம் வெளியில் தான் வாங்குவது என்றாலும் முயற்சி செய்து பார்ப்பது தான்.கருத்திற்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமை ஆசியா:). அளவான உப்பு காரத்துடன் வீட்டிலேயே மொறு மொறு சிப்ஸ். நன்றி.

கோமதி அரசு said...

எனக்கு பிடித்த சிப்ஸ். வீட்டில் செய்தால் உடலுக்கு நல்லது.

நன்றி.