Saturday, April 30, 2011

ஓலன் & விருதுகள்

தேவையான பொருட்கள் ;

வெள்ளைப்பூசணி - ஒரு பெரிய கப்

சேப்பங்கிழங்கு - 3
தட்டைபயறு - 50கிராம்

பச்சை மிளகாய் -೩

சீரகத்தூள் - கால்டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் -ஒரு சிறிய கப்

இரண்டாம் பால் - ஒரு சிறிய கப்

கருவேப்பிலை - இரண்டு இணுக்கு

தேங்காய் எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

ஒரு பெரிய கப் அளவு வெள்ளைப்பூசணியை நறுக்கி குக்கரில் 2விசில் விட்டு எடுக்கவும். வெந்த பின்பு பாதியளவு ஆகிவிடும். அது போல் சேப்பங்கிழங்கையும் 2விசில் விட்டு எடுத்து ஆறவைத்து தோல் நீக்கி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். தட்டைபயறை 5மணி நேரம் ஊறவைத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து 3விசில் விட்டு எடுக்கவும். தண்ணீர் வடிகட்டி பயறை தனியாக எடுத்து வைக்கவும். அனைத்தையும் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவேண்டும்.

ஒரு சிலர் சேப்பங்கிழங்கு எப்படி இருக்கும்னு கேட்பாங்க,அவர்களுக்காக இந்த படம், பொதுவாக ஓலனில் சேப்பங்கிழங்கு சேர்ப்பதில்லை, ஆனால் எனக்கு சொல்லி தந்த கேரளத் தோழி ப்ரியா இந்தக்கிழங்கு சேர்த்தால் கூட்டு போல் ருசியும் அருமையாக இருக்கும் என்று சொன்னதால் சேர்த்து செய்து பார்த்தேன்,மிக அருமை..ஒரு கப் கெட்டி தேங்காய் பால் எடுத்து பின்பு இரண்டாம் பாலும் எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் (நான் மண் சட்டி உபயோகித்துள்ளேன்.) வேகவைத்த நறுக்கிய வெள்ளைப்பூசணி, வேக வைத்தை பயறு, வேக வைத்து நறுக்கிய சேப்பங்கிழங்கு ,நறுக்கிய பச்சை மிளகாய்,சீரகத்தூள் சிறிது உப்பு சேர்க்கவும்.

அத்துடன் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கலந்து ஒரு சேர வேக ೫ நிமிடம் கொதிக்க விடவும்.

வெந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்.கலந்து விடவும்.

முதல் கெட்டி பால் சேர்த்து உப்பு சரி பார்க்கவும்.

தேங்காய்ப்பால் நுரை கூடி வரும், இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.


சுவையான கேரள ஓலன் ரெடி. இதனை புளிசேரியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

இது ஓணம்,விஷு சத்யாவின் ஸ்பெஷல் அயிட்டமாகும்.


நீங்களும் செய்து ருசித்து பாருங்க, சூப்பராக இருக்கும்.

விருதுகள் வாங்கி நாட்களாகி விட்டது,அதனை உங்களோடு பகிர வேண்டாமா...






இந்த மூன்று விருதுகளும் அகிலாஸ்கிச்சன் இவெண்ட்டில் கலந்து கொண்டமைக்கு எனக்கு கிடைத்தது. மிக்க நன்றி அகிலா.


இந்த அருமையான அவார்டை தோழி ஜலீலா, தங்கை மேனகா இருவரும் எனக்கு தந்திருக்காங்க, அவர்களுக்கும் மிக்க நன்றி.


இந்த ஸ்பெஷல் அவார்டு தங்கை அப்சரா தந்தது, மிக்க நன்றி.



இந்த பூங்கொத்து தங்கை மஹா விஜய் தந்தது.மிக்க நன்றி மஹா.


இந்த அழகான மலர்க்கொத்தை தோழி அதிரா தன் பொற்கரங்களால் வழங்கி இருக்காங்க. மிக்க நன்றி அதிரா.


இப்ப பதிவுலகில் தோழிகள் அனைவரும் விருது கொடுப்பதும் வாங்குவதும் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கு. எல்லாத்தையும் வாங்கிவிட்டு நான் எப்படி சும்மா இருப்பது ?மனசுக்குப் பிடிச்ச இந்த மஞ்சள் மலர்க்கொத்தை, விருதுகள் மலர்க்கொத்து வழங்கி சிறப்பித்தவர்களுக்கும், பார்வையிடும் அனைத்து அன்பான என் இனிய நட்புள்ளங்களுக்கும் வழங்குகிறேன்..மிக்க நன்றி.

--ஆசியா உமர்..

Tuesday, April 26, 2011

வெரைட்டி ஃப்ரைட் ரைஸ் / Variety Fried Rice

மிக்ஸ்ட் ஃப்ரைட் ரைஸ்/ MIXED FRIED RICE
தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி - 300கிராம்
சிக்கன் - அரைகப்
இறால்(Shrimphs) -அரைகப்
நறுக்கிய காய்கறிகள் -ஒருகப்
ஸ்பிரிங் ஆனியன் -2
சோயா சாஸ் -2டீஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்து ஃப்ரிட்ஜில் முன்பே வைத்து கொண்டால் ஃப்ரைட் ரைஸ் செய்யும் பொழுது உபயோகித்து கொள்ளலாம்.


சிறிய துண்டாக நறுக்கிய சிக்கனை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்,இறாலையும் சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடிகட்டவும்,சிக்கன்,இறால் இரண்டிலும் தலா அரைடீஸ்பூன் திக் சோயா சாஸ் அல்லது ஆயிஸ்டர் சாஸ் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு ஸ்பிரிங் ஆனியனில் அடிப்பகுதியை நறுக்கி தாளிக்க பயன்படுத்தவும்,மேற்பகுதியை அலங்கரிக்க பயன் படுத்தலாம்.


பின்பு ஊறிய சிக்கன்,இறாலை சேர்க்கவும்.சிறிது உப்பு, பின்ச் சர்க்கரை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.


நறுக்கிய கேரட்,கொடைமிளகாய்,முட்டை கோஸ்,பீஸ்,கார்ன் கலந்து ஒரு கப் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.சிறிது மூடி போடவும்,காய்கள்,சிக்கன்,இறால் வெந்து விடும்.


எல்லாம் வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கவும்.கலந்து விடவும்.

வடித்த சாதம் சேர்த்து பிரட்டி உப்பு சரி பார்த்து நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

சுவையான மிக்ஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி..


சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

ஒரு கிலோ அரிசி அளவிற்கு சிக்கன் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.சின்ன பார்ட்டி என்றால் நாமே செய்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்;

சிக்கன் ப்ரெஸ்ட் பீஸ் - ஒரு கிலோ

முட்டை - 1

இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்

கார்ன்ஃப்லோர்- 2டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் -1டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பாசுமதி அரிசி - ஒரு கிலோ

காய்கறிகள் -

பெரிய வெங்காயம்- 1

கொடைமிளகாய் -3

கேரட் -3

நறுக்கியமுட்டை கோஸ் - ஒரு பெரிய கப்

சோயா சாஸ்-3டேபிள்ஸ்பூன்

ஆயிஸ்டர் சாஸ்- 1டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)

அஜினோமோட்டோ - விரும்பினால் 1டீஸ்பூன்
ஸ்ப்ரிங் ஆனியன் - 5எண்ணம்(அலங்கரிக்க)

எண்ணெய் - 100மில்லி



சிக்கனை சிறிய துண்டாக நறுக்கி நன்கு அலசி தண்ணீர் வடியவைத்து,அத்துடன் முட்டை,கார்ன்ஃப்லோர்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.


கடாயில் குறிப்பிட்டதில் பாதி எண்ணெய் விட்டு காயவும் ரெடி செய்த சிக்கனை சேர்த்து பிரட்டி வேக வைக்கவும்.நன்கு வெந்து சாஃப்டாக பொரிந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

அரிசியை ஊற வைத்து உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போடவும், வதக்கவும், நறுக்கிய காய்கறிகளை போடவும்,சிறிது வேக விடவும். அடுத்து ரெடி செய்து வேக வைத்த சிக்கனை போடவும், விரும்பினால் அஜினோமோட்டோ சேர்க்கவும் அல்லது ஒரு டீஸ்பூன் சர்க்கரை தேவைக்கு உப்பு சேர்க்கவும்.சோயா சாஸ்,ஆய்ஸ்டர் சாஸ் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.


வடித்த ஆறிய ரைஸ் சேர்த்து கிளரவும்,விரும்பினால் சிறிது மிளகுத்தூள் தூவிக் கொள்ளவும்.கலந்து பரிமாறாவும்.

சுவையான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ரெடி.ரெஸ்டாரண்ட் சுவையை விட பிரமாதமாக இருக்கும்..

வெஜ் & எக் ஃப்ரைட் ரைஸ் ;

தேவையான பொருட்கள் ;

பாசுமதி அரிசி -கால் கிலோ

நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப்

முட்டை - ஒன்று

சோயா சாஸ்- 1டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
சூப் கியூப் - 1

அஜினோமோட்டோ விரும்பினால் - கால் ஸ்பூன்

ஸ்பிரிங் ஆனியன் - சிறிது

எண்ணெய் - 2டேபிஸ்பூன்

பட்டர் அல்லது நெய் - 1டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு








கடாயில் எண்ணெய் நெய் விட்டு,நறுக்கிய ஸ்பிரிங் ஆனியனில் வெள்ளைப்பகுதியை போட்டு, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்,விரும்பினால் ஒரு சூப் கியூப் பொடித்து போடவும்.

முட்டையை அடித்து கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஸ்கிராம்பிள் செய்து தனியாக வைக்கவும்.


காய்கறிகள் வதங்கியதும் சோயா சாஸ் சேர்க்கவும்.கிளறவும்..

வடித்து வைத்த ஆறிய சாதம் கலந்து விடவும். உப்பு சரி பார்க்கவும்.எக் சேர்க்காமல் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்,மிளகுத்தூள் சேர்த்து கிளறினால் வெஜ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.

அதனோடு ஃப்ரை செய்த எக் சேர்த்து பிரட்டினால்

சுவையான எக் ஃப்ரைட் ரைஸ் ரெடி.



ஆஹா அப்புறம் என்ன, குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான வெரைட்டி ஃப்ரைட் ரைஸ் ரெடி...

-ஆசியா உமர்

Sunday, April 24, 2011

சுட்ட முழு மீன் / Baked Whole Fish



சுட்ட முழு மீன் (பேக்ட் ஃபிஷ்) தயாரான பின்பு இப்படி தான் இருக்கும்.

தேவையான பொருட்கள்;

முழு மீன் - ஒரு கிலோ

மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

ஆலிவ் ஆயில் - 3டேபிள்ஸ்பூன்

உருளைக்கிழங்கு - பெரியது ஒன்று

தக்காளி - பெரியது ஒன்று

வெங்காயம் - பெரியது ஒன்று

மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை+ அரைடீஸ்பூன்

பூண்டு பல் தட்டிக்கொள்ள -6பல்

எலுமிச்சைச்சாறு - ஒரு பழம்

விரும்பினால்

ரோஸ்மேரி - 1டீஸ்பூன்

பேசில் - 1டீஸ்பூன்

ஒரிகானோ - 1டீஸ்பூன்



நான் விளைமீன் உபயோகித்திருக்கிறேன், உங்களுக்கு பிடித்த மீனை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஒரு கிலோ மீன் தான் என்றில்லை,சிறிய மீனையும் சுட்டு எடுக்கலாம். மசாலா உங்கள் விருப்பம் தான், வெறும் உப்பு,மஞ்சள்,மிளகு,எலுமிச்சை சாறு மட்டும் உபயோகித்தாலும் சூப்பராக இருக்கும்.

முதலில் மீனை செதில் நீக்கி, தலையில் இருக்கும் செவுள் எல்லாம் எடுத்து, வயிற்றுப்பகுதியை சுத்தம் செய்து நன்றாக ஐந்து தண்ணீர் விட்டு அலசி எடுக்கவும். சுத்தம் செய்த மீனை ஆங்காங்கு கீறி விட்டு கொள்ளவும். பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு தடவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.


மஞ்சள்,உப்பில் ஊறிய மீனை அலசி எடுத்து தண்ணீர் வடிகட்டவும்.

இப்படி தூக்கி பார்த்தால் ஒரு சொட்டு தண்ணீர் வடியக்கூடாது.தண்ணீர் பதமிருந்தால் டிஸ்யூ பேப்பர் வைத்து ஒற்றி எடுக்கவும்.


பேக் செய்ய அலுமினியம் ஃபாயில் பேப்பரில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை தடவி தயார் செய்து கொள்ளவும்.


இனி மீனில் தடவ மசாலா தயார் செய்ய வேண்டும்.ஒரு பவுலில் எண்ணெய்,மஞ்சள்,மிளகு,மிளகாய், உப்பு தூள்கள்,தட்டிய பூண்டு,ரோஸ்மேரி,பேசில்,எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்.


அவற்றை நன்கு கலந்து வைக்கவும்.எலுமிச்சை சாறு எடுத்து விட்டு பழத்தோலை வைத்து கொள்ளவும்.



ரெடி செய்த எண்ணெய் தடவிய அலுமினியம் ஃபாயிலில் சுத்தம் செய்த மீனை வைக்கவும். வயிற்றுப் பகுதியில் எலுமிச்சைத் தோலை வைக்கவும்.

தயார் செய்த மசாலாவை மீன் முழுவதும் தடவி வைக்கவும்.




மசாலா தடவிய மீனை ஃப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 4மணிநேரம் ஊறட்டும். மசாலா மீனில் நன்கு சார்ந்து விடும்.


ஃப்ரிட்ஜிலிருந்து மீனை எடுத்து நறுக்கிய உருளை அடியில் வைத்து, வெங்காயம் தக்காளி மேல் வைக்கவும்.சிறிது வெங்காயம் தக்காளி மேல் உப்பு,மிளகுத்தூள் தூவவும்.


முற்சூடு செய்த குக்கிங் ரேஞ்ச்சில்( கேஸ் ஓவன்) 250டிகிரி வெப்பம் செட் செய்து 20நிமிடம் மீனை வைத்து எடுக்கவும், மீனை திருப்பி பத்து நிமிடம் வைத்து எடுக்கவும், கரிந்து விடாமல் பார்த்து எடுக்கவும்.


சுவையான ஆரோக்கியமான சுட்ட முழு மீன் ரெடி.

தயாரான சுட்ட மீனை விரும்பியபடி பரிமாறலாம்.



என் இனிய கிறிஸ்தவ நட்புள்ளங்களுக்கு அன்பான ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

--ஆசியா உமர்.