Thursday, December 29, 2011

சிக்கன் ஸ்ட்ரைப்ஸ் / Chicken Stripes

தேவையான பொருட்கள்:
சிக்கன் ப்ரெஸ்ட் - 300கிராம்
knorrஆல் இன் ஒன் பேக் அல்லது சிக்கன் 65 மசாலா - 1டீஸ்பூன்
கார்ன் ப்லேக்ஸ் - 1 கப்
கார்ன் ஃப்லோர் அல்லது மைதா- அரை கப்
முட்டை வெள்ளைக்கரு - 1
எண்ணெய் - தேவைக்கு
உப்பு- தேவைக்கு
சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டிய சிக்கன் ப்ரெஸ்ட்டை இப்படி நீளவாக்கில் துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.

அதனோடு ஆல் இன் ஒன் மசாலா பேக் அல்லது விருப்பமான சிக்கன் மசாலாவுடன் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.துண்டுகள் மெல்லியதாக இருக்க வேண்டும்.மசாலாவில் உப்பு இருக்கும்.உப்பு பார்த்து சேர்க்கவும்.நன்கு ஊற வேண்டியது அவசியம்.

கார்ன் ஃப்லோர்அல்லது மைதா,பொடித்த கார்ன் ஃப்லேக்ஸ்,முட்டை வெள்ளைக்கரு ரெடி செய்து கொள்ளவும்.
சிக்கன் ஸ்ட்ரைப்ஸ் நல்ல காரமாக வேண்டுமானால் இப்படி சிக்கன் 65 மசாலா சேர்த்தும் கலந்து வைக்கலாம்.விரும்பினால் சிக்கன் துண்டுகளை பாதி வேக்காடு வெந்தும் பின் வருமாறு ரெடி செய்யலாம்.ஒரு பேனில் போட்டு சிக்கனில் ஊறும் தண்ணீரிலேயே வேக வைத்து ஆற வைத்து செய்யலாம்.

ரெடி செய்த சிக்கன் ஸ்ட்ரைப்ஸை மைதா அல்லது கார்ன்ஃப்லோரில் பிரட்டி எடுக்கவும்.

பின்பு கார்ன் ஃப்லோரில் பிரட்டிய சிக்கனை முட்டை வெள்ளைக்கருவில் டிப் செய்து எடுக்கவும்.

நொறுக்கிய அல்லது மிக்ஸியில் பொடித்து எடுத்த கார்ன் ப்லேக்ஸில் பிரட்டி எடுக்கவும்.இப்படியே அனைத்து சிக்கன் துண்டுகளையும் ரெடி செய்து கொள்ளவும்.கார்ன் ஃப்லேக்ஸை மிக்ஸியில் கரகரப்பாக ப்ரெட் கிரம்ஸ் போல் பொடித்தும் உபயோகிக்கலாம்.



கடாயில் எண்ணெய் விட்டு நன்கு சூடானவுடன் சிக்கன் ஸ்டரைப்ஸ் போட்டு நெருப்பை மீடியமாக வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


சுவையான கிரிஸ்பியான சிக்கன் ஸ்ட்ரைப்ஸ் ரெடி.


இதனை ப்ரெட் டோஸ்ட்,டொமட்டோ சாஸ், ஃபிங்கர் சிப்ஸ்,சாலட்ஸ் உடன் பரிமாறவும்.குட்டீஸ்க்கு கொண்டாட்டமாக இருக்கும்.

பார்ட்டியில் ஸ்டார்டர்ஸ் ஆகவும் பரிமாறலாம்.ரெடிமேட் சிக்கன் நக்கட்ஸ்,ஸ்ட்ரைப்ஸ் தவிர்ப்பது நல்லது.

--ஆசியா உமர்.


Tuesday, December 27, 2011

வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2 ( பெரியதாக)
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
காம்புப்பகுதியையும், விளிம்புப்பகுதியையும் நறுக்கி கொள்ளவும்.

இப்படி தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.

வட்டவடிவமாக நறுக்கி கொள்ளவும்.ரொம்ப மெல்லியதாக இல்லாமல் நடுத்தரமாக நறுக்கி கொள்ளவும்.அதனோடு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,சோம்புத்தூள்,இஞ்சி பூண்டு விழுது, உப்பு,ஒரு டீஸ்பூன் எண்ணெய் கலந்து பிசறி ஒரு அரை மணி நேரமாவது வைக்கவும்.


நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு காயவும் ரெடி செய்த வாழைக்காயை போட்டு பிரட்டி வேக விடவும்.சிறிது வெந்தவுடன் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.திரும்ப ஒரு முறை தண்ணீர் தெளித்து பிரட்டி வேக விடவும்.

இந்த வறுவல் சாஃப்டாக இருக்கும்.

நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.

சோம்பு,இஞ்சி பூண்டு சேர்ப்பதால் வயிற்றை தொந்திரவு செய்யாது. இதனை சாம்பார்,ரசம்,தயிர் மற்றும் எல்லாவகையான குழம்பு சாதத்திற்கும் வெரைட்டி ரைஸிற்கும் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.எண்ணெயும் குறைவாகவே உபயோகிப்பதால் சூப்பராக இருக்கும்.

--ஆசியா உமர்.

Sunday, December 25, 2011

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் என் இனிய அன்பான நட்புள்ளங்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

என் கணவரின் நண்பர் ,அவரின் மனைவி எனது இனிய தோழி அவர்கள் வீட்டில் எங்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து.மிகச் சுவையான அருமையான விருந்து.அதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.ஆசியாமா நீங்க கெஸ்ட் இல்லை,ஹோஸ்ட் சீக்கிரமே வந்திடுங்கன்னு அன்பா அழைச்சாங்க.அல் ஐனில் இருந்து அபுதாபிக்கு கிளம்பி சென்று வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ரொம்ப ரிலாக்ஸ்டான அன்பான விருந்து. நல்லதொரு ஃபேமிலி கெட்டுகெதர். அனைவரும் மனம்விட்டு பேசி,சிரித்து மகிழ்ந்தது ஒரு நல்ல அனுபவம்.


விருந்தின் சூப்பர்மெனு
அரபிக் மந்தி லஹம், வெஜ் ஃப்ரைட் ரைஸ்,வெஜ் நூடுல்ஸ்,சிக்கன் லாலி பாப்,வெஜ் ஸ்பிரிங் ரோல்ஸ்,சப்பாத்தி,பரோட்டா,மலாய் கோஃப்தா,காளிப்ளவர் ட்ரை மஞ்சூரியன்,தால் ஃப்ரை,தயிர் சாதம்,இறால் கிரேவி, ஹமூர் ஃபிஷ் ஃப்ரை,வெஜ் சாலட்,ஃப்ரூட் சாலட்,குலோப் ஜாமுன் என்று ஏகப்பட்ட ரெசிப்பி.

கிறிஸ்துமஸ் என்றால் கேக் நிச்சயம் இருக்கும், ஆனால் இங்கு அரபிக்ஸ்டைலில் முழு ஆட்டையையே ஆட்டை போட்ட அருமையான பிரியாணி. கேக் கட் செய்து சாப்பிடுவது போல் ஆளாளுக்கு சாஃப்டான கறியோடு ரைஸ் சாப்பிட செம டேஸ்ட். இன்னமும் சுடச்சுட அதன் சுவை மனதிலும் நாவிலும் இருக்கு.

தொடர்ந்து பிறக்கப் போகும் இனிய புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.

--ஆசியா உமர்..


Friday, December 23, 2011

சிக்கன் நக்கட்ஸ் /Chicken Nuggets (baked & fried)

தேவையான பொருட்கள்;
டெண்டர் சிக்கன் ப்ரெஸ்ட் - 300கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரைடீஸ்பூன்
பெப்பர் பவுடர் - கால்டீஸ்பூன்
மஞ்ச்ள் தூள் - 2 பின்ச்
கெட்டி தயிர் - 1டீஸ்பூன்
ப்ரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
மைதா மாவு - 2டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
முட்டை - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு.

நன்கு சுத்தம் செய்த எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை சிறிய சதுர மெல்லிய துண்டுளாக கட் செய்து அலசி தண்ணீர் வடித்து கொள்ளவும்.

துண்டு செய்த ஒரு டெண்டர் சிக்கன் ப்ரெஸ்டோடு இஞ்சி பூண்டு பேஸ்ட்,சில்லி பவுடர்,மஞ்சள் தூள், மிளகுத்தூள்,தயிர்,உப்பு சேர்த்து கலந்து நன்கு ஒரு மணி நேரமாவது ஊறவைக்கவும்.மசாலாவை உங்க டேஸ்ட்க்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.எதுவும் சிறிய சிரத்தையோடு செய்தால் அருமையாக வரும்.


முட்டை தனியாக கலந்து ஒரு பவுலில் வைக்கவும். ப்ரெட் கிரம்ஸ் ,மைதா,சிறிது உப்பு கலந்து ஒரு ப்லேட்டில் வைக்கவும்.

ஊறிய சிக்கன் துண்டுகளை கலக்கிய முட்டையில் டிப் செய்து, ப்ரெட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து ஃப்ரிட்ஜ் சில்லரில் அரை மணி நேரம் வைக்கவும்.நன்கு செட் ஆகிவிடும்.
பின்பு ஒரு தவாவில் எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு ரெடி செய்த நக்கட்ஸ் போட்டு நெருப்பை மீடியமாக குறைத்து அருகில் நின்று பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
குட்டீஸ்க்கு இப்படி ஃப்ரை செய்து கொடுக்கவும். சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி.சிக்கன் பேஸ்ட் எல்லாம் செய்யாமல் சிக்கன் பொரிப்பது போலவே செய்து இருந்தாலும் நக்கட்ஸ் டேஸ்ட் சூப்பராக , வெளியே கிரிஸ்பியாக உள்ளே ஜூஸியாக இருந்தது.ரெடிமேட் அயிட்டங்களை தவிர்ப்பது நல்லது.

சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி.

விரும்பினால் முற்சூடு செய்த எலெக்ட்ரிக் ஓவனில் 200 டிகிரி செட் செய்து இரண்டு பக்கமும் ப்லேம் செட் செய்து எண்ணெய் தடவிய அலுமியம் ஃபாயில் விரித்த ட்ரேயில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கலாம்.ஒரு பக்கம் சிவந்தவுடன் மறுபக்கம் திருப்பி வைக்கவும்.பேக்கானவுடன் எடுத்து பரிமாறவும்.


இநத ஹெல்தியான பேக்ட் சிக்கன் நக்கட்ஸ் நமக்கு.


--ஆசியா உமர்.


Wednesday, December 14, 2011

வெஜ் குருமா

சப்பாத்திக்கு வெஜ் குருமா இதை எதாலும் அடிச்சிக்க முடியாது.என் மெனுவில் மாதம் ஒரு முறை வெஜ் குருமா உண்டு,ஒவ்வொரு முறையும் ஒரு விதமாக செய்வேன்.ரொம்ப கவனம் எடுத்துக்காமல் செய்த குருமா இது.நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்;
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பச்சை பட்டாணி - ஒரு கையளவு
பச்சை மிள்காய் - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
மல்லி புதினா - சிறிது
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரைடீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2டீஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
உப்பு - தேவைக்கு.
வெங்காயம்,தக்காளி,கேரட்,உருளை,மல்லி புதினா நறுக்கி கொள்ளவும்.தேங்காய் முந்திரி பருப்பு அரைத்து கொள்ளவும்.

ப்ரஷர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை சோம்பு போடவும்.

நறுக்கிய வெங்காயம் போடவும், வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்.வெங்காயம் சிவற வேண்டாம். நன்கு வதக்கவும்.

நறுக்கிய மல்லி புதினா,தக்காளி சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

கீறிய பச்சை மிள்காய், மல்லி சீரகதூள்களை சேர்க்கவும். பிரட்டி விடவும்.

தேவைக்கு காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

ப்ரஷர் பேனை மூடி இரண்டு விசில் வரட்டும்.அடுப்பை அணைக்கவும்.

ஆவி அடங்கியபின் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட்டை சேர்க்கவும்.


நன்கு கொதித்து தேங்காய் வாடை அடங்கட்டும். அடுப்பை சிம்மில் வைத்து அணைக்கவும்.


சுவையான வெஜ் குருமா ரெடி.


சப்பாத்தியுடன் பரிமாறவும்.ஏன் இட்லி,தோசை,ஆப்பம்,பரோட்டா,நாண்,கீ ரைஸ் உடன் கூட பரிமாறலாம்.இதில் மஞ்சள்,மிளகாய்த்தூள்,கரம் மசாலா,தயிர் சேர்க்க வில்லை.ஆனாலும் ருசி பிரமாதமாக இருக்கும்.நீங்க விரும்பிய காய்கறிகளை சேர்த்து செய்யலாம்.

--ஆசியா உமர்.