Monday, January 9, 2012

நேந்திரங்காய் சிப்ஸ்

தேவையான பொருட்கள்:
நேந்திரன் வாழைக்காய் - 2
எண்ணெய் - கால் லிட்டர்
மஞ்ச்ள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்

நேந்திரம் பழமாக எடுக்கக் கூடாது. காய்வெட்டாக இருக்க வேண்டும்.தோல் சீவி இப்படி மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.

விரும்பினால் மஞ்சப் பொடி,உப்பு இப்படி சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் (edible coconut oil) மட்டும் கூட உபயோகிக்கலாம்.நான் இங்கு தேங்காய் எண்ணெய் + சன்பிளவர் ஆயில் கலந்து உபயோகித்துள்ளேன்.வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் சீவி வைத்த நேந்திரங்காயை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.போட்டவுடன் எண்ணெய் வெள்ளை நிறமாக நுரையோடு பொங்கும் பயப்படாமல் கண் அகப்பை கொண்டு பிரட்டி பிரட்டி விடவும்.சீவிய காய் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.முடியுமானால் காயை எண்ணெயிலேயே நேரடியாக சீவினால் சூப்பராக வரும். எண்ணெயில் போட்ட சிப்ஸ் க்லகலன்னு பொரிந்து வரும் .

சிப்ஸ் பொரிந்து வரும் பொழுது மஞ்ச்ள் உப்பு நீரை சிறிது தெளிக்கவும். மஞ்ச்ள் உப்பு நீர் தெளிக்க பிரியப்படாதவர்கள் வெறும் உப்பை தேவைக்கு எண்ணெயில் சிறிது போட்டு விடலாம்.சிப்ஸில் உப்பு பிடித்து விடும்.

சிப்ஸ் பொரிந்து இப்படி பிரட்டும் பொழுது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலகலன்னு இருக்கும்.

ஆஹா மணக்க மண்க்க நேந்திரம் சிப்ஸ் ரெடியாயிடுச்சு.

பொரிந்த சிப்ஸை எண்ணெய் வடிகட்டி எடுத்து வைக்கவும்.

சுவையான நேந்திரங்காய் சிப்ஸ் ரெடி.
என்னாலேயே நம்ப முடியலை,அப்படியே கடையில் வாங்குவது போலவே இருந்தது.ஆறியவுடன் எடுத்து பாட்டிலில் போட்டு மூடி வைத்து தேவைக்கு எடுத்து சாப்பிடலாம்.

-ஆசியா உமர்.

23 comments:

சிநேகிதி said...

ஆஹா மணக்க மணக்க நேந்திரம் சிப்ஸ் மொரு மொரு சுவையுடன் நல்லா இருக்கு..காலையில் டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் அக்கா

மகி said...

சூப்பரா இருக்கு ஆசியாக்கா. ஆனா எனக்கு காயை விட நேந்திரம்பழ ஸ்வீட் சிப்ஸ்தான் பிடிக்கும்.;) :P

Kalpana Sareesh said...

wow very good .. the only part i am worried is sprinkling turmeric water.. neenga romba superahh sengi irukeenga..

asiya omar said...

சிநேகிதி கருத்திற்கு மிக்க நன்றி.

மகி சுவீட் சிப்ஸ் சூப்பராக இருக்கும்,எனக்கும் பிடிக்கும்.

கலபனா சரீஸ் வருகைகக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஜெய்லானி said...

நேத்துதான் ஒரு மலையாளிகிட்டே எப்படின்னு கேட்டுகிட்டு இருந்தேன் .இன்னைக்கி இங்கே நீங்களே போட்டுட்டீங்க :-)))

FOOD NELLAI said...

நேந்திரங்காய் சிப்ஸ் நெஞ்சமெல்லாம் நிலைக்கும் சகோ.

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் அருமையாக விளக்கியுள்ளீர்கள். பிடித்தமான சிப்ஸ்.

S.Menaga said...

எனக்கு ரொம்ப பிடிச்ச சிப்ஸ்,விளக்கபடங்களுடன் அருமை!!

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு.

asiya omar said...

சகோ.ஜெய்லானி கருத்திற்கு மிக்க நன்றி.

சங்கரலிங்கம் சார் மிக்க நன்றி.

ராமலஷ்மி மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.

athira said...

அடடா இதுதான் நேத்திரங்காயோ? அவ்வ்வ்வ்வ்வ்:)) வாழைக்காய் என ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் நான் கண்டு பிடித்திருப்பேனே.. இங்கும் இது பேம்மஸ்ஸ்... சில ஸ்பெஷல் கடைகளில் கிடைக்குது.. நானும் வாங்குவதுண்டு, பெரிதாக பிடிக்காது.

ஆனா ஆசியா செய்ததுபோல செய்தால் சூப்பர்தான்... கடையில் சுவீட்தான் கிடைக்கும்:(.

ஸாதிகா said...

அழகாக செய்து காட்டி இருக்கீங்க தோழி.என் கேரளத்து தோழி ஒருவர் நேத்திரங்காயை குளிர்ந்த நீரில் ஊற வைத்து நீளவாக்கில் தோலில் கத்தியால் கீறி மற்ற பாகக்ங்களை விரலால் உரித்து எடுத்து விட்டு சூடான் எண்ணெயில் நேரடியாக சிப்ச் கட்டரின் மூலம் சீவி வறுப்பார் .நல்ல டேஸ்டாக அருமையாக இருக்கும்.ஒரு கிலோ காயை மிக சுருங்கிய நேரத்தில் வறுத்து விடுவார்.

asiya omar said...

அதிரா கருத்திற்கு மிக்க நன்றி.வாழையில் நிறைய வகை இருக்கு,செவ்வாழை,மலைவாழை,மொந்தன்,பச்சைவாழை,ரஸ்தாளி,நேந்திரன் இப்படி சொல்லிட்டே போக்லாம்,ஆனால் இந்த நேந்திரனில் பொரிக்கும் சிப்ஸ் செம டேஸ்டாக இருக்கும்,இந்த சிப்ஸ் கேரளாவில் பிரசித்தம்.இதனை ஏத்தங்காய் சிப்ஸ் என்றும் சொல்வதுண்டு.

asiya omar said...

ஸாதிகா நலமா?விடுமுறை அருமையாக கழிந்து கொண்டிருக்கும்.
உங்க டிப்ஸ்க்கு மிக்க நன்றி.இனி அப்படியும் செய்து பார்க்கிறேன்.
வருகைக்கு மகிழ்ச்சி.

Chitra said...

Love it...... love it.....love it....

HAPPY NEW YEAR!!!! :-)

மனோ சாமிநாதன் said...

நேந்திரம் சிப்ஸ் செய்முறை ரொம்பவும் அருமை ஆசியா!

vanathy said...

சூப்பர் சிப்ஸ். முன்பு அடிக்கடி வாங்குவதுண்டு. இப்ப பொரியல் ஐட்டங்கள் பெரிதாக சாப்பிடுவது குறைவு. இதைப் பார்த்ததும் மீண்டும் சாப்பிட வேணும் போல இருக்கே.

Jaleela Kamal said...

சிப்ஸ் சூப்ப்ர்
எங்க வீட்டில் இரண்டு பையன்கள், என் ஹஸ் எல்ல்லோருடைய பேவரைட்,
நான் எல்லா சிப்ஸ் வகைகளையும் நேரடியாக எண்ணையிலேயே வைத்து தான் சீவி பொரிப்பது...

Asiya Omar said...

சித்ரா

வானதி

மனோ அக்கா

ஜலீலா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கோவை2தில்லி said...

நேந்திரங்காய் உப்பேரி சூப்பராக இருந்தது.
என் மாமியார் சீசனில் கிடைக்கும் போதெல்லாம் செய்வார். நேரடியாக எண்ணெயிலேயே சீவி பொரித்து எடுப்பார். உப்புத் தண்ணீரும் தெளிப்பார்.நான் இன்னும் செய்து பார்த்ததில்லை.

angelin said...

என் விருப்பமான ஸ்நாக்ஸ் .நான் மாத்திரம் அங்கிருந்தா கடாயோடு தூக்கிட்டு ஓடிருப்பேன்
.இங்கே அந்த வாழை கிடைக்காது .ஆப்பிரிக்க வாழையில் ட்ரை செய்றேன் .

usman said...

my all time favourite snack

Asiya Omar said...

Thanks Usman.Ours too.