Friday, January 13, 2012

மாசித் துவையல்

தேவையான பொருட்கள்:
மாசி - சிறிய துண்டு
மிளகாய் வற்றல் - 3
சின்ன வெங்காயம் - 4
அல்லது பெரிய வெங்காயம் -பாதி
புளி - புளியங்கொட்டை அளவு
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

மாசி மற்றும் மிளகாய் வற்றலை எடுத்துக் கொள்ளவும்.மாசியை சிறிது தூளாக உடைத்து கொள்ளவும்.

பின்பு மிக்ஸியில் போட்டு மிளகாய் வற்றல்,உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.மூன்று டீஸ்பூன் மாசித்தூளை எடுத்துக் கொள்ளவும்.

மாசித்தூள்,தேங்காய் துருவல், உப்பு,புளி,வெங்காயம் எடுத்து கொள்ளவும்.

மிக்ஸி சிறிய ஜாரில் மேற்சொன்ன பொருட்களை போட்டு துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.காரம் தேவைப்படுவோர் ஒரு வற்றல் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.


சுவையான மாசித்துவையல் ரெடி.

இதனை ப்லைன் சாதம் ரசம் அப்பளத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். கொஞ்சம் சாதம் வழக்கத்தை விட அதிகம் வடித்து கொள்ளுங்கள். மாசியை பொதுவாக சம்பல் செய்வது வழக்கம்.மாசித்துவையல், சம்பல், சாதம் தவிர அரிசி மாவு ரொட்டிக்கு சூப்பர் காம்பினேஷன்.

மாசிச் சம்பல் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.

--ஆசியா உமர்.




8 comments:

Jaleela Kamal said...

ஆஹா காலை டிபனுக்கு மருந்து சோறுக்கு வைத்து சாப்பிட அருமையக இருக்குமே..

எனக்கு ரொம்ப பிடிக்கும், காலை டிபனுக்கு பெரிமா வீட்டில் அடிக்கடி செய்வாரக்ள். அந்த நேரம் நான் இருந்தால் கண்டிப்பா எனக்கு அவங்க வீட்டில் தான் டிபன்..

Asiya Omar said...

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி ஜலீலா.

நேற்று தற்செயலாக துபாய் வந்திருந்த பொழுது எங்க மைனி(ஜ) நம்பருக்கு போக வேண்டிய போன் கால் உங்களுக்கு வந்து விட்டது.அதன் பின்பு தான் உங்களை சந்திக்கலாமா என்று யோசித்தேன்.அல்லாஹ்வின் நாட்டம் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.நீங்கள் சென்ற பின்பு தான் ஜலீலாவா எங்களுக்கு தெரியுமேன்னு எல்லாரும் சொன்னாங்க.மகிழ்ச்சியாக இருந்தது.

SANKARALINGAM said...

சத்தான உணவு.

Asiya Omar said...

கருத்திற்கு மிக்க நன்றி சங்கரலிங்கம்.

சிநேகிதன் அக்பர் said...

எனக்கு பிடித்த உணவு. பகிர்வுக்கு நன்றி.

angelin said...

ஊர் நினைவு வருது.உங்க முந்தைய பதிவு மாசிசம்பல் இல்தான் நான் முதலில் கமென்ட் எழுதினேன் 2010 இல் /நாட்கள் ஓடுது .
என் மகளுக்கு மிகவும் பிடிக்கும் இம்முறையில் செய்து தருகிறேன்
பகிர்வுக்கு நன்றி

Asiya Omar said...

தம்பி அக்பர் வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஏஞ்சலின் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஹேமா said...

எனக்குப் பிடித்த மாசித் துவையல்.பிட்டுக்கு ரொம்பப் பொருத்தமா சுவையாய் இருக்கும் !