Wednesday, January 18, 2012

சிக்கன் முள்ளங்கி தாள்ச்சா - Chicken Raddish Thalcha

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - கால் கிலோ
பருப்பு - 100 கிராம்
எலும்பு சிக்கன் துண்டு - கால் கிலோ
தக்காளி - 100கிராம்
வெங்காயம் - 100கிராம்
பச்சை மிளகாய் - 1
மல்லி,புதினா கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
கறி மசாலாத்தூள் அல்லது கலந்த மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு.
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.நறுக்கி ரெடி செய்து கொள்ளவும்.

ஊறிய பருப்பை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.

முக்கால் பததில் வெந்த பருப்போடு,சிக்கன் துண்டுகள், நறுக்கிய வெங்காயத்தில் பாதி,தக்காளி,பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி புதினா சிறிது, இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,கறிமசாலா தேவைக்கு சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து வதக்கவும்.


கலந்து விட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.
வெந்த சிக்கன் முள்ளங்கி தால்ச்சா இப்படி இருக்கும்.உப்பு சரி பார்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போட்டு தாளித்து மீதி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.இளஞ்சிவப்பாக வெங்காயம் சிவந்ததும் ரெடியான தாள்ச்சாவில் சேர்த்து கலந்து விடவும்.

சுவையான சிக்கன் முள்ளங்கி தாள்ச்சா ரெடி.
இதனை ப்லைன் சாதம்,கீரைஸ்,தேங்காய்ச் சோறு
பிரியாணி,சப்பாத்தி,ஆப்பம்,இட்லி,தோசை எதற்கும் தொட்டு சாப்பிடலாம்.

பொதுவாக மட்டன்,கத்திரிக்காய் அல்லது வெறும் கத்திரிக்காய் போட்டு தாள்ச்சா செய்வோம்.நான் சிக்கன்,முள்ளங்கி போட்டு செய்திருக்கிறேன்.இதே முறையில் சிக்கனோடு கத்திரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.கத்திரிக்காய் சேர்த்து செய்தால் சிறிது புளி கரைத்து சேர்க்கவும்.

-ஆசியா உமர்.



16 comments:

Kavitha said...

Super Delicious!!!
Must try...

Mahi said...

Present! New combo Asiya Akka!

athira said...

சூப்பராக இருக்கு. நாங்கள் வாழ்க்கையில் சிக்கின், மட்டினுக்குள் காய்கறி சேர்த்ததே இல்லை, சிலவேளைகளில் தக்காழி மட்டும் சேர்த்ததுண்டு. பலநேரம் உருளைக்கிழங்கு சேர்ப்பதுண்டு.

இப்படியெல்லாம் சேர்த்துச் செய்ய விருப்பம், ஆனால் சாப்பிடமாட்டார்களோ எனப் பயம்.

Asiya Omar said...

கவிதா கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

மகி மிக்க மகிழ்ச்சி.நன்றி.

அதிரா வாங்கோ!எங்க வீட்டில் அனைவருக்கும் முள்ளங்கி என்றால் பிரியம்.அதனால் முள்ளங்கியை நான் அதிகமாக சமையலில் உபயோகிப்பது உண்டு.எது செய்து பார்ப்பதாய் இருந்தாலும் கொஞ்சமாய் முதலில் செய்து பாருங்க.

FOOD NELLAI said...

வகை வகையா தினம் சொல்றீங்க.

எம் அப்துல் காதர் said...

முள்ளங்கிலேயும் தால்ச்சா போடலாமா? டேஸ்டா இருக்குமா சகோ!!

S.Menaga said...

சிக்கனுடன் முள்ளங்கி சூப்பர்ர் காம்பினேஷன்!!

சிநேகிதி said...

முள்ளங்கி சிக்கன்.. சேர்ந்த தாள்ச்சா செய்துபார்க்கும் ஆவல் வருகிறதே

Asiya Omar said...

சங்கரலிங்கம் சார் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

சகோ.அப்துல் காதர்,நாம முள்ளங்கி பருப்பு செய்வதில்லையா? அது போல் தான் இதுவும்,எங்களுக்கு பிடித்திருந்தது.
கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.

மேனகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஹேமா said...

பருப்புக்குள்ள சிக்கனா..புதுசா இருக்கே.ஆனால் நல்ல சத்துள்ள கூட்டுணவு.நன்றி ஆசியா !

ஜெய்லானி said...

’நம்ம’ ஊரு பக்கம் போட்டதா நினைவு இல்லை . டேஸ்ட் செய்ததும் இல்லை .டிரை செய்து பார்க்கனும் .

ஜெய்லானி said...

//athira said...

சூப்பராக இருக்கு. நாங்கள் வாழ்க்கையில் சிக்கின், மட்டினுக்குள் காய்கறி சேர்த்ததே இல்லை, சிலவேளைகளில் தக்காழி மட்டும் சேர்த்ததுண்டு.//

பூஸ் டைரக்டா எலியை சாப்பிடுவதை மறந்திட்டேனே ...ஹி..ஹி... :-)))))

Asiya Omar said...

சகோ.ஜெய்லானி வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
எங்க ஊர் பக்கமும் செய்ததில்லை.
சும்மா முயற்சி செய்தது தான்.

Jaleela Kamal said...

இப்ப எல்லாரும் மட்டனுக்கு பதில்
சிக்கன் சேமியா , சிக்கன் மக்ரூனி

இது முள்ளங்கி சிக்கன் சேர்த்து புதுமையாக செய்து இருக்கீங்க ஆசியா

Asiya Omar said...

கருத்திற்கு நன்றி ஜலீலா.வருகைக்கு மகிழ்ச்சி.

Sumi said...

I have madePrawns curry with Raddish , but have not tried with chicken.Sounds like a super good idea. First time here. Love it.