Monday, January 30, 2012

மஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy



தேவையான பொருட்கள்;
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா - சிறிது
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -4
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்துடன்,தக்காளி,தேங்காய்,முந்திரி சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி,நறுக்கி வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்,வதக்கவும்.

அத்துடன் மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.சிறிது வதங்கட்டும்.

அத்துடன் நறுக்கிய காளான் சேர்க்கவும். வதக்கவும்.

காளானுடன் மல்லித்தூள்,சீரகத்தூள்,மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.

சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிவந்தவுடன் அரைத்த வெங்காயம்,தக்காளி,தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.

கலந்து விட்டு கொதிக்க விடவும்.சிம்மில் வைத்து குருமா கொதிக்கட்டும்,நன்கு அரைத்து விட்ட தேங்காய் வாடை மடங்க வேண்டும். காளானில் ஒரு கடுப்பு இருக்கும்,அதனால் உப்பு பார்த்து சிறிது சேர்க்கவும்.காரமும் ஏற்றுக் கொள்ளாது, குறைவாக தேவைக்கு காரம் சேர்த்தால் சரியாக இருக்கும்.


சுவையான சத்தான காளான் குருமா ரெடி.

சப்பாத்தி,பரோட்டா,நாண்,ஆப்பம்,தோசை,இட்லி,சாதம் வகைகளுடனும் பரிமாறலாம். இந்த கிரேவி சிக்கன்,மட்டன் குருமா மணம் இருக்கும்.


பத்து நிமிடத்தில் சாஃப்ட் சப்பாத்தி செய்ய கால் கிலோ கோதுமை மாவோடு கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர், தேவைக்கு உப்பு, 2டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும்.பின்பு அதனை 6 உருண்டையாக உடனே உருட்டி, மாவு போட்டு சப்பாத்தியாக தேய்த்தால் சாஃப்ட் சூப்பர் சப்பாத்தி விரைவில் ரெடி.

--ஆசியா உமர்.

27 comments:

ஸாதிகா said...

எனக்கு பிடித்த காய்.அருமையாக சைட் டிஷ் செய்து காட்டி இருக்கீங்க ஆசியா.பகிர்வுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

க்ரேவி நல்லா வாசனையாயிருக்கு.. பகிர்வுக்கு நன்றி.

எம் அப்துல் காதர் said...

நீங்கள் எழுதியுள்ள குறிப்பே சூப்பரா இருக்கு சகோ.சாப்பிட்டால் இன்னும் கூடுதல் சுவையாய் இருக்கும் போல! மகன் ஊரிலிருந்து, லீவில் வந்திருக்கார். இன்று இரவு உணவு இதை தான் தயார் செய்யச் சொல்லணும். வாழ்த்துகள்.

Kumari Kumari said...

ரொம்ப நல்லா இருக்கு பா செய்து பார்க்கிறேன்

athira said...

சூப்பராக இருக்கு ஆசியா, மஸ்ரூம் எங்கட வீட்டில எல்லோருக்கும் பிடிக்கும்.

பாட்சாவை எங்காவது கண்டனீங்களோ?:)))

Kalpana Sareesh said...

wow super yummy korma n mushroom is one of my fav

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

பிள்ளைகளுக்கு பிடித்த ஒன்று.பகிர்வுக்கு நன்றி தோழி.

FOOD NELLAI said...

சத்தும், சுவையும்.

ஹேமா said...

நானும் காளான் விரும்பிச் சாப்பிடுவேன்.இந்த முறையில் சமைத்துப் பார்க்கவேண்டும் !

ராமலக்ஷ்மி said...

படங்கள் சீக்கிரம் செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. குறிப்புக்கு நன்றி ஆசியா.

vanathy said...

சூப்பர் ரெசிப்பி. மஷ்ரூம் வாங்கி செய்து பார்க்கணும்.

S.Menaga said...

குருமா கமகமன்னு வாசனையா இருக்கு...

விச்சு said...

போட்டோவைப் பார்த்தே ஷ்ஷ்ஷ் ஆ..ஆ..ஆ. சூப்பர்.

Asiya Omar said...

ஸாதிகா
அமைதிச்சாரல்
சகோ.அப்துல் காதர்
குமாரி
அதிரா
கல்பனா
ஆயிஷாபேகம்
சங்கரலிங்கம் சார்
ராமலஷ்மி
வானதி
மேனகா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கண்டிப்பா ட்ரை பண்றேன். ரெசிபிக்கு நன்றி.

Priya said...

Kurma vaasana inga varaikum varuthu, asathala irruku kurma..

Mahi said...

க்ரேவி நல்லாஇருக்கு ஆசியாக்கா! சப்பாத்தியை விட சாதத்துக்கு ஊற்றி சாப்பிட்டா சூப்பரா இருக்கும்ணு (எனக்குத்) தோணுது! ;):P

கோமதி அரசு said...

மஷ்ரூம் சமைத்து பார்த்தது இல்லை.
உங்கள் மஷ்ரூம் குருமா பார்த்தவுடன் சமைக்க தோன்றுகிறது ஆசியா.

Kanchana Radhakrishnan said...

ரொம்ப நல்லா இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

வாவ்.. பாக்கவே டெம்ப்டிங்... செஞ்சு பாக்கறேன்... மஷ்ரூம்ல எனக்கு ரெம்ப பிடிச்ச விஷயம் என்னனா, கட் பண்ற வேலை சுலபம்...:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

செய்து பார்த்து விட்டேன்.. நன்றாக இருந்தது. தேங்க்ஸ். :)

Jay said...

lovely presentation with gr8 flavors..;)
Tasty Appetite

veedu said...

"அன்பு சகோதரி அவர்களே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!

Umm Mymoonah said...

Super delicious gravy, thank you for linking with Any One Can Cook :)

Saratha said...

எனக்கு பிடித்த காளானை நல்ல கலர்புல்லாக செய்து காட்டி இருக்கீங்க .

mymoon said...

AKKA KAALAN SAMAICHATHEY ILLA NAAN...ATHA EPDI VAANGURATHU,CLEAN PANRATHUNU TERIYAMA VAANGURATHU ILLA ATHA PATHI ETHACHUM TIPS KUDUNGAKA PLZ...UNGA KURUMA SAMKANUMNU THONUTHU
NAA INGA SUPERMARKETSLA PAARTHURKEN BUT VARIETY ELLAM TERIYATHU AKKA.

Asiya Omar said...

மைமூன்,பட்டன் மஷ்ரூம் வாங்குங்க,காம்பை நீக்கிவிட்டு கழுவிக்கோங்க,பெரியதாக இருந்தால் பாதியாக வெட்டி அதனை ஸ்லைஸ் செய்யலாம் அல்லது ஒரு மஷ்ரூமை நான்காக கட் செய்தும் சமைக்கலாம். தேட்ஸ் ஆல்.