Sunday, January 22, 2012

மட்டன் ஓட்ஸ் கட்லெட் / Mutton Oats Cutlet

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - கால் கிலோ
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
தயிர் - 1டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
மிள்கு,சீரகம்,சோம்பு பவுடர் - தலா கால்டீஸ்பூன்
வறுத்து பொடித்த ஓட்ஸ் - 3டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா - சிறிது
எண்ணெய் ,உப்பு - தேவைக்கு.


எலும்பில்லாத மட்டன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடிகட்டி,2டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட்,சில்லி பவுடர் 1டீஸ்பூன்,தயிர் - 1டேபிள்ஸ்பூன்,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.அத்துடன் கரம் மசாலா,மஞ்சள் தூள், மிளகு,சீரக,சோம்பு தூள் அனைத்தும் தலா கால்ஸ்பூன் சேர்த்து கலந்து பிரட்டி வைக்கவும்.

மசாலா கலந்த மட்டனை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்க்காமல் நான்கு விசில் வைத்து எடுக்கவும்.வெந்த மட்டனில் தண்ணீர் ஊறி நிற்கும். இப்படி கறி சுருள வற்ற வைக்கவும்.


மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.


அரைத்த மட்டனுடன், லேசாக வறுத்து பொடித்த ஓட்ஸ் - 3டேபிள்ஸ்பூன்,முட்டை -1 ,அரைத்த வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி,புதினா விழுது சேர்க்கவும்.
எல்லாம் கலந்தால் கெட்டியாக இருக்கும். உப்பு சரி பார்க்கவும்.

விரும்பிய வண்ணம் கட்லட்டை சேப் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காயவும், ரெடி செய்த கட்லட்டை போட்டு மிதமான தீயில் சிவற பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த கட்லெட்டை டிஸ்யூ பேப்பரில் வைத்து எடுக்கவும்.

சுவையான மட்டன் ஓட்ஸ் கட்லெட் ரெடி.
இதனை ஸ்நாக்ஸாகவும்,பார்ட்டியில் ஸ்டார்டராக விரும்பிய சாஸ் வகையுடன் பரிமாறலாம். அல்லது ஃப்ரைட் ரைஸ்,பிரியாணி,வெரைட்டி ரைஸ், ப்லைன் ரைஸ்,தால்,ரசம் உடனும் பரிமாறலாம்.

எப்பவும் கறிவடை,கட்லெட் செய்யும் பொழுது பொட்டுக்கடலை மாவு ,முட்டை சேர்ப்பது வழக்கம்,ஓட்ஸ் சேர்த்து பார்த்தேன்,கட்லெட் சூப்பராக எண்ணெய் குடிக்காமல் வந்தது. ஓட்ஸ் டேஸ்ட் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.

---ஆசியா உமர்.


22 comments:

ஸாதிகா said...

ஆஹா..அருமையான கட்லெட்.அழகாக செய்து காட்டி இருக்கீங்க தோழி.உடனே சமைத்து சாப்பீடத்தூண்டுகிறது.

விச்சு said...

போட்டோவுடன் நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள் அருமை.

Rathnavel said...

வாழ்த்துகள்.

சுவனப்பிரியன் said...

வாழ்த்துகள்.

Asiya Omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

விச்சு கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

ரத்னவேல் ஐயா வாழ்த்திற்கு நன்றி.

சுவனப்பிரியன் வாழ்த்திற்கு நன்றி.

எம் அப்துல் காதர் said...

செய்முறையே அசத்துது! அருமையா இருக்கும்போல!! செய்து பார்த்திட சொல்வோம்!!

athira said...

ஓட்ஸ் உடன் மட்டினோ? அவ்வ்வ்வ்.. சூப்பராகத்தான் இருக்கும், நல்ல முயற்சி. பார்க்கவே சுவையாக இருக்கு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா.. ரொம்ப அருமையா செய்திருக்கீங்க ஆசியாக்கா. செய்து பார்த்திடுவோம். இதுல மட்டனுக்கு பதிலா சிக்கன்ல செய்யலாமா..

நன்றி பகிர்வுக்கு.

Asiya Omar said...

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு நன்றி.
அடடா!இது பார்க்க மட்டும் தான்,சும்மா படம் காட்டுறது.
எங்க வீட்டில் அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்டுகுவாங்க.

அதிரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சகோ.ஸ்டார்ஜன் கருத்திற்கு நன்றி.சிக்கனில் தாராளமாக செய்யலாம்.உங்களுக்கு இந்த முறை பிடிக்குமான்னு தெரியலையே!

Jaleela Kamal said...

மட்டனுடன் ஓட்ஸ் நல்ல கிரிஸ்பியாக இருக்குமே.
கறி வெந்து செய்வதால் சுவை கூடுதல் இல்லையா?

Asiya Omar said...

ஆமாம் ஜலீலா,கருத்திற்கு நன்றி.

ஹேமா said...

நல்லாயிருக்கும்போல.படங்களைப் பார்க்கவே வாயூறுது !

vanathy said...

பார்க்கவே சூப்பரா இருக்கே.

சிநேகிதி said...

படங்களை பார்க்கும் பொழுதே சுண்டி அழைக்கிறது...

Chitra said...

yummy........yummy ......yummmmmmmmmy!

Asiya Omar said...

ஹேமா

வானதி

ஸ்நேகிதி

சித்ரா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Jay said...

great combo of flavors...your family members are lucky to taste these goodies..;)
Tasty Appetite

Asiya Omar said...

Thanks Jay for Valuable comments.:))..

S.Menaga said...

படங்களை பார்க்கும்போதே சுவைக்க தோனுது...

Asiya Omar said...

மேனகா மிக்க நன்றி.

Priya said...

Unga cutletaa pakkura pothey rendu yedukalam'nu irruku,super o super..

Asiya Omar said...

ப்ரியா, கட்லெட் உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.