Wednesday, February 29, 2012

வெண்டைக்காய் சாம்பார் / Bhindi /Okra Sambar

தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - 300 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி -1
மல்லி,கருவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - கால்டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால்டீஸ்பூன்
சீரகம் அல்லது சீரகத்தூள் - கால்டீஸ்பூன்
பூண்டு - 4 பல்(விரும்பினால்)
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு, வெந்தயம் - தலா அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு.

சாம்பார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி வைப்போம்.அதில் இது ஒரு முறை.

முதலில் பருப்பை குக்கரில் தேவைக்கு தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி,பூண்டு,
சீரகம்,பெருங்காயப்பொடி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.


வெண்டைக்காயை கழுவி துடைத்து சிறிது பெரிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெண்டைக்காயை 2 நிமிடம் ஓவனில் வைத்து எடுத்து சமைத்தால் சமைக்கும் பொழுது வழு வழுப்பு இருக்காது.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

புளித்தண்ணீர் விட்டு கொதிவரவும் சாம்பார் பொடி சேர்க்கவும்.மூடி நன்கு கொதி வரட்டும்.

வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.

கலந்து விட்டு நறுக்கிய மல்லி இலை தூவவும். நடுக் கொதி வரட்டும்.அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

சுவையான வெண்டைக்காய் சாம்பார் ரெடி.

வெறும் சாதத்துடன் வெண்டைக்காய் சாம்பார், அப்பளம் என்று பரிமாற அமோகமாக இருக்கும்.


--ஆசியா உமர்.


20 comments:

Mahi said...

/2 நிமிடம் ஓவனில் வைத்து எடுத்து சமைத்தால்/மைக்ரோவேவ் (அ) கன்வென்ஷனல்? :)

நான் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி சாம்பார் வைப்பதுண்டு..எப்பவாவது! ;) சூப்பரா இருக்கு சாம்பார்!

En Samaiyal said...

வெண்டைக்காய் சாம்பார் நல்லா இருக்கு ஆசியா . எனக்கு வெண்டைக்காய் ரொம்ப புடிக்கும்

விச்சு said...

இப்பவே சாதத்தோட சாம்பாரும் சேர்த்து சாப்பிடனும்போல இருக்கு.

Asiya Omar said...

மகி,மைக்ரோவேவில் தான் வைத்து எடுக்க வெண்டும்,பொரியல் செய்யும் பொழுது இரண்டு நிமிடம் வைத்து எடுத்து செய்தால் பொரியலும் சூப்பராக இருக்கும்.
மிக்க நன்றி மகி.

Asiya Omar said...

என் சமையல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

விச்சு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

வெண்டைக்காய் சாம்பார் மணக்குது ஆசியா.

கோவை2தில்லி said...

வெண்டைக்காய் சாமபார் மணம் இங்கேயே வருகிறது. படங்களுடன் செய்முறை ரொம்ப நல்லா இருக்குங்க.

Shiva Bhaskar said...

ஆன்டி,
சாம்பார் பொடி செய்வது எப்படி. அடிப்படை வீட்டு மசாலா பொடியும் சாம்பார் பொடியும் ஓன்றா அல்லது வேறு வேறா. சாம்பார் பொடி செய்ய தேவையான பொருட்கள் என்ன.

நன்றி

Asiya Omar said...

கோமதியக்கா மிக்க நன்றி.

கோவை2தில்லி மிக்க நன்றி.

சிவ பாஸ்கர் வருகைக்கு நன்றி.நான் இங்கு ரெடிமேட் சாம்பார் பொடி உபயோகித்தேன்.வீட்டு அடிப்படை மசாலாவில் என்னென்ன சேர்க்கிறார்கள் என்பதை பொருத்து இருக்கிறது.
சாம்பார் பொடி செய்ய மல்லி,மிளகாய் வற்றல்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,வெந்தயம்,மஞ்சள்,பெருங்காயம்,இவை அத்தியாவசியமான பொருட்கள்.

ஸாதிகா said...

வெண்டைக்காய் சாம்பாருக்கு காயை நான் டீப் பிரை சேர்ப்பேன்.நீங்கள் வதக்கி சேர்த்து இருக்கின்றீர்கள்.இனி இந்த முறைதான்.

அமைதிச்சாரல் said...

சாம்பார் மணக்குது ஆசியா..

S.Menaga said...

நானும் மதியம் வெண்டைக்காய் சாம்பாரும் வாழைக்காய் வறுவலும் தான் சாப்பிட்டேன்.சூப்பர் சாம்பார்!!

Kokila said...

okra sambar really good.

Ongoing Events Mar 1st to Marc 31st 2012:
Foodies Nest
Dish it out-Bread/Burger/Veg Sandwich and Veg Salad

Kokila said...

okra sambar really good.

Ongoing Events Mar 1st to Marc 31st 2012:
Foodies Nest
Dish it out-Bread/Burger/Veg Sandwich and Veg Salad

athira said...

சுவையான சாம்பார்..

//பிடித்திருந்தால் கருத்து சொல்லுங்க..//

பிடிச்சிருக்கு.

எம் அப்துல் காதர் said...

aஆஹா நமக்கு பிடித்தமான ஐட்டம்.

Asiya Omar said...

கோகிலா வருகைக்கு மிக்க நன்றி.

அதிரா கருத்திற்கு மகிழ்ச்சி.

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு மகிழ்ச்சி.

மாதேவி said...

சுவையான வெண்டைக்காய் சாம்பார் ஆசியா.

Jaleela Kamal said...

வெண்டைக்காய் சாம்பார் அருமை, சாம்பார் என்றாலே மிக்ஸ்ட் வெஜ் தான் அதில் இரண்டு வெண்டைக்காயும் உண்டு அடிக்கடி செய்து பருப்பு வெண்டைக்காய் தான்.

priyasaki said...

வெண்டைக்காய்சாம்பார் செய்து பார்த்தேன் ஆசியா.ரெம்ப நல்லா + டேஸ்டியா வந்திருக்கு.லேட்டாக வருகைதந்தமைக்கு மன்னிக்கவும். ப்ளாக்கில் போடுறேன்.