Sunday, February 5, 2012

பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் / Moongdal sago payasamதேவையான பொருட்கள் ;
பாசிப்பருப்பு - 250 கிராம்
ஜவ்வரிசி - 100 கிராம்
வெல்லம் - 600 கிராம்
தேங்காய்ப் பால் - ஒரு காயில்
உருகிய நெய் - 3டேபிள்ஸ்பூன்
(உறைந்து இருந்தால் குறைத்து எடுக்கவும்)
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - கால் கப்
உலர் திராட்சை - கால் கப்
உப்பு - 2 பின்ச்
பாசிப்பருப்பை மணம் வரும்படி வறுத்து கொள்ளவும்.

தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

ஜவ்வரிசியை ஒரு 2-3 மணி நேரம் ஊற வைக்கவும் பின்பு அதனை வேக வைத்தால் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சி கொள்ளவும்.


பாசிப்பருப்பை குக்கரில் தேவைக்கு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து அணைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெந்த பாசிப்பருப்பு, வடிகட்டிய காய்ச்சிய வெல்லம்,வெந்த ஜவ்வரிசி,தேங்காய்ப்பால்,ஏலக்காய்ப் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு இரண்டு பின்ச் சேர்ப்பதால் இனிப்பு எடுபடும்.

கொதி வந்தவுடன் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும்.கலந்து விடவும்.
சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் ரெடி.

பாயாசம் ஊற்றுவது போல் கெட்டித்தனமை அவரவர் விருப்பம்.சிறிய சிறிய கப்களிலோ அல்லது டம்ளரிலோ விட்டு பரிமாறவும்.மகன் ஊரில் இருந்து வந்திருப்பதால் ஒரு சின்ன ஃபேமிலி கெட்டுகெதர் அதற்கு செய்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பே இந்த குறிப்பை அறுசுவையில் ஏற்கனவே சிறிய மாற்றத்துடன் பகிர்ந்து இருக்கிறேன்.

தேங்காய்ப்பாலிற்கு பதில் தேங்காயை துருவலாகவோ அல்லது நறுக்கி வறுத்தோஅல்லது பாதி காயை கொரகொரப்பாக அரைத்தோ விடலாம்.பால் எடுப்பதாய் இருந்தால் ஒரு காயில் எடுத்து சேர்க்க வேண்டும்.ஏலக்காயை முழுதாக லேசாக தட்டியும் போடலாம்.

நீங்கள் செய்யும் அளவிற்கு தகுந்தபடி பொருட்களின் அளவை பார்த்து கொள்ளவும்.


வலையுலக நட்புகள் அனைவருக்கும் இனிய மீலாதுநபி வாழ்த்துக்கள்.

-- ஆசியா உமர்.

23 comments:

ராமலக்ஷ்மி said...

/வலையுலக நட்புகள் அனைவருக்கும் இனிய மீலாதுநபி வாழ்த்துக்கள்./

தங்களுக்கு நட்புகளுக்கும் நானும் என் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

இனிப்பான குறிப்புக்கு நன்றி. பாசிப்பருப்பு ஜவ்வரிசி இரண்டும் சேர்த்து செய்ததில்லை. செய்து பார்க்கிறேன் ஆசியா.

அமைதி அப்பா said...

வாழ்த்துகள்!

எம் அப்துல் காதர் said...

ஆஹா, உடனே செய்து குடிக்கணும் போல இருக்கு சகோ + வாழ்த்துகள்!

கோமதி அரசு said...

வலையுலக நட்புகள் அனைவருக்கும் இனிய மீலாதுநபி வாழ்த்துக்கள்.//

பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் அருமை ஆசியா.

தேங்காயை பல்லு பல்லாய் நறுக்கி நெய்யில் வறுத்து போடலாம்.

ஹேமா said...

மணக்க மணக்கப் பாயாசம்.இலகுவாகவும் இருக்கிறது.நன்றி !

Asiya Omar said...

ராமலஷ்மி

அமைதி அப்பா

சகோ.அப்துல் காதர்

கோமதியக்கா

ஹேமா

வாழ்த்திற்கும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

S.Menaga said...

எனக்கு பிடித்த பாயாசத்தில் இதுவும் ஒன்று,அப்படியே குடிக்கனும் போல இருக்கு...இனிய மீலாதுநபி வாழ்த்துக்கள்!!

athira said...

விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்க ஆசியா...

http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

Asiya Omar said...

மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

ஆகட்டும் அதிரா,சுட்டி காட்டியமைக்கு நன்றி.எனக்கு ரீடிங் லிஸ்ட் அப்ப அப்ப காணாமல் போகும்,இதனால் நிறைய விஷயம் லேட்டாக தெரிய வருவதுண்டு.

Chitra said...

yummy பாயாசம்..... நான் சிறிது, துருவிய இஞ்சியும் நெய்யில் வதக்கி சேர்ப்பேன். :-)

Ramani said...

படங்கள் நாவில் எச்சில் ஊறவைக்குது
பகிர்வுக்கு நன்றி
இனிய மிலாது நபி நல்வாழ்த்துக்கள்

Asiya Omar said...

நன்றி சித்ரா.நல்ல டிப்ஸ் சொல்லியிருக்கீங்க.வருகைக்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

ரமணி சார் வாங்க.வாழ்த்திற்கு நன்றி.

ஸாதிகா said...

பாசிப்பருப்புடன் ஜவ்வரிசி போட்டு பாயசமா?வித்தியாசம்தான் தோழி.

Kalpana Sareesh said...

arumaiyaanaa kheer .. vazthukkal..

கீதா லட்சுமி said...

Yummyoyummy...

FOOD NELLAI said...

காலம் தாழ்ந்தாலும் வாழ்த்துக்கள்.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Yumm n super Good.Luv it Asiyakka

Asiya Omar said...

ஸாதிகா ஒரு முறை செய்து பாருங்க.கருத்திற்கு நன்றி தோழி!

கலபனா சரீஷ் மிக்க நன்றி.

கீதாலட்சுமி மிக்க நன்றி.

சங்கரலிங்கம் சார் மிக்க நன்றி.

மைகிச்சன்ஃப்லேவர்ஸ் மிக்க நன்றி.

கோவை2தில்லி said...

பாசிப்பருப்பும், ஜவ்வரிசியும் சேர்த்த அருமையான பாயசம்.... பகிர்வுக்கு நன்றிங்க.

Princy Vinoth said...

asiya the recipes are beautiful.i can read tamil but very slowly...thats why commenting in english!

அமைதிச்சாரல் said...

எங்கம்மா அடிக்கடி செய்யும் பாயசம் இது. குடும்பத்துல எல்லோருக்கும் பிடிச்சதால இது எங்க குடும்பப் பாயசம் :-)

தேங்காய்ப் பால் சேர்த்தாலும்கூட கொஞ்சூண்டு பல்லு பல்லா நறுக்கி நெய்யில் வறுத்துப் போட்டா இன்னும் தூக்கும்.

மாதேவி said...

இனிய மீலாதுநபி வாழ்த்துக்கள்.

சுவைத்தது பாயாசம்.