Friday, February 10, 2012

பேச்சிலர்ஸ் தக்காளி எலுமிச்சை ரசம்./ Bachelor's Tomato Lemon Rasam

தேவையான பொருட்கள்:
தக்காளி -2
எலுமிச்சை - 1
பச்சை மிள்காய் - 1
மல்லி கருவேப்பிலை - சிறிது
மிளகு - 1டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பூண்டு - 4பல்
பெருங்காயப் பொடி - கால்டீஸ்பூன்
மஞ்சப்பொடி - கால்டீஸ்பூன்
எண்ணெய் - 2டீஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
தக்காளியை நன்கு கழுவி ஒரு ரசம் வைக்கும் பாத்திரத்தில் எடுத்து கொண்டு கொதிக்கும் நீரை விடவும்.ஒரு நிமிடம் கழித்து மேல் தோலை உரித்து விடவும்.உரித்த தக்காளியை கையால் நன்கு பிணைந்து கொள்ளவும்.அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து ,மஞ்ச பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.விரும்பினால் ஒரு பச்சை மிளகாய் கிள்ளி போடலாம்.


மிக்ஸி கப்பில் மிளகு சீரகம் பூண்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த பொடியை கொதிக்கும் தக்காளி கரைசலில் போடவும்.ஒரு நிமிடம் கொதிக்கட்டும்.

நறுக்கிய மல்லி இலை,எலுமிச்சை பிழியவும்.உப்பு சேர்க்கவும், அடுப்பை சிம்மில் வைக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.

அடுப்பை அணைக்கவும்.கலந்து விட்டு சிறிது மூடி வைக்கவும்.


சுவையான தக்காளி எலுமிச்சை ரசம் ரெடி.

எளிதில் செய்யக் கூடியது.சுட சுட சாதம் ஃபிஷ் ஃப்ரை அல்லது சேனை அல்லது உருளை ஃப்ரையுடன் சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.துபாயில் வாழும் எங்க ஊர் பேச்சிலர்ஸ் என் குறிப்புக்கள் பார்த்து செய்து சமைத்து அசத்துவதாக என்னிடம் பகிர்ந்ததால் அவர்களுக்கு தகுந்த ஈசி குறிப்புகளும் இனி கொடுக்க உள்ளேன்.


--ஆசியா உமர்.


18 comments:

Ramani said...

பேச்சிலரஸ் என்ன மனைவி ஊருக்குப் போனால்
எம் போன்றோருக்கும் இது அவசியம் பயன்படும்
பயனுள்ள சமையல் குறிப்பு
படங்களுடன் செய்முறை விளக்கமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

அருமையான ரசம்.நானும் எப்பொழுதும் இதே முறையில் தான் வைப்பேன்.

revathi said...

Arumaiyaana rasam... ennakum ithu uthavum..:))
Reva

Anonymous said...

ஆசியா சுவையான ரசம் . என் ப்ளாக் க்கு போல்லோவேர் ஆகி இருக்கீங்க. உங்களை போல அனுபவம் மிக்க பதிவாளர்கள் என் தளத்துக்கு வருகை தருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி

விச்சு said...

இன்னைக்கு மதியம் தக்காளி எலுமிச்சை ரசம்தான்.

Jaleela Kamal said...

ரசம் என்றாலே எனக்கும் என் பையனுக்கும் கொள்ளை பிரியம், நானும் அடிக்கடி செய்வது தான்


சுட சுட பார்க்கவே உடனே வெரும் சாதம் மசால் வடையுடன் சாப்பிடனும் போல் இருக்கு

கோவை2தில்லி said...

சூடான மணக்கும் ரசம்...... அப்பளத்துடன்.....ஆஹா.....

athira said...

நல்ல ரசம். நாங்கள் ரசத்தை எப்பவும் கப்பிலே குடித்துத்தான் பழக்கம், உணவில் சேர்ப்பதில்லை.

Mahi said...

புளி இல்லாத ரசமா..சூப்பரா இருக்கு ஆசியாக்கா!ஒரே மாதிரியா ரசம் வைப்பதுக்கு பதிலா இப்படி இன்ட்ரஸ்டிங்கா செய்துபார்க்கலாம். :) நன்றி!

ஜெய்லானி said...

ஆஹா...இதே டைப்பிலதான் சில சமயம் வீட்டிலே செய்தும் அசத்துவதுண்டு :-)

கோமதி அரசு said...

ஆசியா , சுவையான ரசம்.

உங்களுக்கு என் வலைத்தளத்தில் விருது.

பெற்றுக் கொள்ளுங்கள் அன்புடன்.

Asiya Omar said...

ஸாதிகா

ரேவதி

என் சமையல்

விச்சு

ஜலீலா

கோவை2தில்லி

அதிரா

மகி

ஜெய்லானி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

கோமதியக்கா மிக்க நன்றி.இதோ வந்து அன்பான விருதை பெற்று கொள்கிறேன்.மகிழ்ச்சி.

ஹேமா said...

எனக்கு இந்த ரசம் மிகவும் பிடிக்கும் மல்லியும் சேர்த்துக்கொள்வேன் !

FOOD NELLAI said...

நல்ல ரெசிப்பி.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

பேச்சிலர் வாழ்க்கையில் பல நாள் இப்படித்தான் பொழுது கழிந்தது.
உபயோகமான பதிவு.

கோவை2தில்லி said...

உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

http://kovai2delhi.blogspot.in/2012/02/blog-post.html