Monday, February 13, 2012

உளுந்து ஜாமுன் / பானி பூரியுடன் ....? Urad dal jamun / Panipuri


உளுந்து ஜாமுன் பானிப்பூரியுடன் என்ன விஷேசம்னு யோசிக்கிறீங்களா, வாங்க வாங்க...

தேவையான பொருட்கள்;
உளுந்து - அரை கப்
சீனி - ஒரு கப்
எண்ணெய் - தேவைக்கு
சாஃப்ரான் - விரும்பினால் பின்ச்.
உப்பு - பின்ச்.

உளுந்தை தண்ணீரில் 5 மணி நேரம் ஊறப் வைக்கவும்.

ஊறிய உளுந்தை தண்ணீர் சிறிது தெளித்து,பின்ச் உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து எடுக்கவும்.


வாணலியில் எண்ணெய் காய வைத்து மீடியம் நெருப்பில் சிறு உருண்டையாக அரைத்த உளுந்து மாவை உருட்டி போடவும்.நிதானமாக பொரியட்டும்.

சர்க்கரை பாகை ரெடி செய்து கொள்ளவும்.ஒரு கப் சர்க்கரைக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து பாகு தண்ணீர் போல் காய்ச்சவும்.இனிப்பு அதிகம் பிரியப்பட்டால் அரை கப் சர்க்கரை கூட சேர்த்து கொள்ளலாம்.


பக்குவமாக பொரித்ததை சர்க்கரைப் பாகில் போடவும்.விரும்பினால் பாகில் சாஃப்ரான் ஒரு பின்ச் சேர்க்கலாம்.சிவறாமல் கோல்டன் கலரில் பொரித்து எடுக்க வேண்டும்.சர்க்கரைப்பாகில் போட்ட ஜாமுனை ஃபோர்க்கால் குத்தி விடவும்.சர்க்கரை இலகுவாக உறிஞ்ச ஏதுவாய் இருக்கும்.

சுவையான, சத்தான உளுந்து ஜாமுன் ரெடி. உளுந்த காலையில் ஊறபோட்டு மதியம் அரைத்து உடனே பொரித்து சர்க்கரைப்பாகில் போட்டு மாலை வரை ஊற வேண்டும்.நன்றாக ஊறினால் சாஃப்டாக இனிப்பாக சூப்பராக இருக்கும்.இனிப்பு சாப்பிட்டாச்சு,காரம் சாப்பிட வேண்டாமா?பானி பூரி ரெடியாக இருக்கு.


பானி பூரி செய்ய:
பூரி ரெடிமேடாக கிடைத்தது வாங்கி விட்டேன்.நீங்களும் ரெடிமேட் பூரி வாங்கிக் கொண்டால் வசதியாக இருக்கும்.பூரி உள் வைக்க
இரண்டு உருளைக்கிழங்கு வேக வைத்து,தோல் உரித்து சிறிது உப்பு சேர்த்து சிறிய துண்டாக மசித்து கொள்ளவும்.
50 கிராம் பச்சைப்பயறை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து சாஃப்டாக வேக வைத்து அதனையும் எடுத்து கொள்ளவும்.
50கிராம் கொண்டைக்கடலை அதனையும் ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
காராபூந்தி - ஒரு கையளவு
ஓமப்பொடி - ஒரு கையளவு
அலங்கரிக்க நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை சிறிதளவு.சன்னா சாட் எல்லாவற்றையும் கலந்து செய்ய பொரியும் தேவை.

தேவையான பொருட்கள்;
பானி செய்ய :
புதினா - ஒரு கைப்பிடி
மல்லி - பாதி கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரைடீஸ்பூன்
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா - அரை டீஸ்பூன்
புளி - கொட்டை பாக்களவு.
உப்பு - தேவைக்கு.

இனிப்பு புளிப்பு சட்னி செய்ய:
பேரீச்சை பழம் - 6
உலர் திராட்சை - 1டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு நெல்லியளவு
பொடித்த வெல்லம் - 2டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு




பானி செய்ய புதினா,மல்லி,மிளகாய்,சீரகம்,உப்பு,வெல்லம் ,புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.அதனை ஒரு பாத்திரத்தில் 3கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்ததை வடிகட்டவும்.

பானி ரெடி.சாட் மசாலா கலந்து வைக்கவும்.

இனிப்பு புளிப்பு சட்னி செய்ய பேரீச்சை,உலர்திராட்சை,புளி ஊற வைக்கவும்.

ஊற வைத்த வற்றுடன்,உப்பு,மிளகாய்த்தூள்,வெல்லம்.சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.அரைத்தவற்றை வடிகட்டவும்.

வடிகட்டியதை ஒரு பாத்திரத்தில் விட்டு கொதிக்க வைக்கவும்.

கொதித்து வற்றி இப்படி திக்காக இனிப்பு புளிப்பு சட்னி இருக்க வேண்டும்.

இப்ப எல்லாப் பொருட்களையும் ரெடி செய்து கொள்ளவும். பூரி,
வேக வைத்த உருளைக்கிழங்கு,பச்சைப்பயறு,கொண்டைக்கடலை,பானி,இனிப்பு புளிப்பு சட்னி,ஓமப் பொடி,காராபூந்தி,சாட் மசாலா,நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை
பூரியை நொறுக்கி போட்டு எல்லவற்றையும் கலந்து இப்படி செய்தால் சன்னா சாட் சாப்பிடலாம்.

பானி பூரி செய்ய் பூரியை சிறிதாக உடைத்து உருளைக்கிழங்கு,பச்சைப்ப்யறு,இனிப்பு புளிப்பு சட்னி,பானி, ஓமப்பொடி,காராபூந்தி சேர்த்து அப்படியே சாப்பிட வேண்டியது தான்.இது என் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ்.எத்தனை நாள் தான் கடையில் வாங்கி கொடுப்பது.நானே செய்து கொடுத்து அசத்தியாச்சு.
சுவையான பானி பூரி ரெடி...

சரி இந்த பானிபூரியும் உளுந்து ஜாமுனும் ...?
உங்கள் எல்லோருக்கும் தான்.

இன்றுடன் என் வலைப்பூ ஆரம்பித்து இரண்டாவது வருட நிறைவு.கொண்டாடத்தான் இந்த பகிர்வு.
இன்று வரை என் வலைப்பூவை பார்வையிட்டு, என்னுடன் கருத்துக்களை
பகிர்ந்த, வருகையளித்த அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும் என்
மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

--ஆசியா உமர்.



25 comments:

Mahi said...

ஆசியாக்கா,இன்னும் பலவருடங்கள் வெற்றிகரமாக வலையுலகில் வலம்வர வாழ்த்துக்கள்! :)

புதுவிதமான ஜாமூன்..சூப்பரா இருக்கு! பானிபூரியும் சூப்பர்.நான் பானியை கொதிக்கவிட்டதில்லை.செய்தும் பலநாளாச்சு.ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்க! :):)

angelin said...

ஆஹா !!!!! பார்க்கவே ஆசையா இருக்கு .ரெண்டு டிஸ்ஷும் சூப்பர்
.இரண்டாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் .
செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்

athira said...

உஸ்ஸ்ஸ் யப்பாஆஆஆஆ... இத்தனை குறிப்புக்கள் ஒரே பதிவில்....மயங்கிட்டேன்.

முதலாவது உழுந்து ஜாமூன், முன்பு அங்கின செல்வியக்கா குறிப்பைப் பார்த்துச் செய்திருக்கிறேன் சூப்பர்.

ஏனையவை புதுசு எனக்கு. அந்த பேரீச்சை சேர்த்த சட்னி செய்ய வேண்டும், பிடிச்சிருக்கெனக்கு.

athira said...

வலைப்பூ ஆரம்பித்து 2 வருடமாகிட்டுதோ? இப்ப என்றதுபோல இருக்கு.

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு வருடம் நிறைவு - வாழ்த்துகள் சகோ..

இனிப்பும் காரமும் எடுத்துக் கொண்டேன்... உளுந்து ஜாமூன் கேள்விப்பட்டதில்லை - ஆதியிடம் சொல்கிறேன்..

Sangeetha Nambi said...

OMG ! 2 Yrs Completed ! Congrats and My hearty wishes ! Keep Rocking!

Aruna Manikandan said...

congratulations!!!!!
Both the recipes are simply delicious :)

சிநேகிதன் அக்பர் said...

அட்டகாசம்!

FOOD NELLAI said...

சுவையும் சத்தும் நிறைந்த உணவு.

ஸாதிகா said...

பிடித்த ஐட்டம்.இப்பொழுது பானி பூரிக்கு ரெடி மிக்ஸ் வந்து விட்டது.குளிர்ந்த நீரில் கரைத்தால் போதும்.

இரண்டு வருடமாகி விட்டதா?வாழ்த்துக்கள்!

கோவை2தில்லி said...

இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துகள்......

உளுந்து ஜாமுன், பானி பூரி இரண்டும் ருசித்தாயிற்று.....பிரமாதம்.

Sabitha said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

வாழ்த்துக்கள் சகோ.தெளிவான விளக்கங்களோடு அழகான புகைப்படங்களை பார்க்கும் போதே சாப்பிட்ட உணர்வு ..:)

S.Menaga said...

இனிப்பும் காரமும் விருந்து கொடுத்து அசத்திட்டீங்க....2 வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

படத்தை பார்க்கும் போதே வாய் ஊருதே....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சமையல் திலகம் நீங்கள்

Jay said...

yummy & inviting..;)
Tasty Appetite

ஜெய்லானி said...

இதை எல்லாம் செய்ய எவ்வளவு டைம் பிடிச்சதுன்னு சொல்லி இருந்தால் தேவலாம் :-)

//Mahi said...

ஆசியாக்கா,இன்னும் பலவருடங்கள் வெற்றிகரமாக வலையுலகில் வலம்வர வாழ்த்துக்கள்! :)//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட் :-)

Kanchana Radhakrishnan said...

இனிப்பும் காரமும் super.இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துகள்.

Asiya Omar said...

வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
மகி
ஏஞ்சலின்
அதிரா
சகோ.வெங்கட் நாகராஜ்
சங்கீதா நம்பி
அருணா மணிகண்டன்
சகோ.அக்பர்
சகோ.சங்கரலிங்கம்
ஸாதிகா
கோவை2தில்லி
சபிதா
மேனகா
சகோ.ராஜபாட்டை
ஜெய்
சகோ.ஜெய்லானி
காஞ்சனா ராதாகிருஷ்ணன்

அனைவரின் வருகைக்கு மீண்டும் நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எனக்கு நூறு கருத்துகளுக்குச் சமம்.மிக்க மகிழ்ச்சி.

ஹேமா said...

என்னல்லாம் செய்றீங்கப்பா.உழுந்தில செய்த உணவுதான் பிடிச்சிருக்கு.
நிச்சயம் சூப்பார இருக்கும்.புளிப்பு இனிப்பு சட்னியும் !

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் ஆசியா


உளுந்து ஜாமூன் நல்ல இருக்கு

நானும் அதிரா சொல்வது போல் அருசுவை பார்த்து செல்வி அக்காவின் கல்கண்டு வ்டை செய்து இருக்கேன்

பானி பூரி என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்தது.

இரண்டும் சூப்பர் ஸ்நாக்ஸ்

Asiya Omar said...

ஹேமா கருத்திற்கு மிக்க நன்றி.

ஜலீலா வாழ்த்திற்கு மகிழ்ச்சி.நான் ஊரில் தோழி ஒருவர் சொன்ன ஐடியாவில் செய்து பார்த்தது இது.செல்வி அக்கா குறிப்பின் லின்க் இருந்தால் கொடுங்க.எப்படி செய்திருக்காங்கனு பார்க்க ஆவல்.நானும் நீங்க சொன்ன பின்பு தேடிப்பார்த்தேன்,என் கண்ணில் அந்தக் குறிப்பு அகப்படவில்லையே.

ravi said...

Akka,வலைப்பூவில் 3வது ஆண்டை தொடங்கியிருக்கும் உங்களுக்கு எனது மனதார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் பற்பல ஆண்டுகள் இருந்து சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

i want to share how i feel about your blog as a viewer.
I found your blog very useful.Whenever we ask any doubts in the recipe,we get spot and immediate reply from you and this is the speciality in your blog and it helps and encourages us to make it.We,bachelors are grateful to you to have such a nice blog and help us.

sorry for the late wishes as i saw this page only today.

Asiya Omar said...

மிக்க நன்றி ரவி.உங்கள் நண்பர் குழுவிற்கு இந்த அக்காவின் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து விடவும்.

sam said...

asiyaomar madam,
blogல் இரண்டாவது வருடத்தை நிறைவு செய்து 3 வது ஆண்டை தொடங்கியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
சில நாட்களுக்கு முன்பு என் roommate birthday க்கு ஏதாவது sweet செய்யலாம் என்று தேடியபோது உங்கள் sheer kuruma பார்த்தேன். picture பார்த்தவுடனே கண்டிப்பாக நல்லா இருக்கும்,இதை செய்வோமென்று தோன்றியது. எனக்கு அதில் ஒரு சந்தேகமிருந்தது.உடனே பதில் கிடைத்தால் நன்றாகயிருக்குமே உடனே செய்து பார்ப்பதற்கு என்று தோன்றியது.அதேபோல் உங்களிடமிருந்து உடனே பதில் வந்தது மிகவும் சந்தோஷமாயிருந்தது.நாங்களும் sheerkuruma ருசியாக செய்து birthday enjoy பண்ணிணோம்.quick response from your side.
சமையலில் அனுபவமுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் எங்களைப் போன்றவர்களுக்கும் பதிலளித்து சமையலில் ஊக்கப்படுத்துகிறீர்கள்.மிகுந்த நன்றி.

தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்,இப்போதுதான் இந்த பதிவை கண்டேன்.மீண்டும் வாழ்த்துக்கள்.