Saturday, February 18, 2012

துருவிய கேரட் கோஸ் பொரியல்

தேவையான பொருட்கள்:
கேரட் - 150 கிராம்
கோஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
விரும்பினால் - இஞ்சி பொடியாக நறுக்கியது ஒரு டீஸ்பூன்
மல்லி, கருவேப்பிலை -சிறிது
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு, உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

கேரட் துருவிக் கொள்ளவும்,கோஸ்,மல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும், மிளகாயை கீறிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,உ.பருப்பு, பச்சை மிளகாய்,இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

கேரட்,கோஸில் தண்ணீர் ஊறி வற்றி வரும்.

கேரட்,கோஸ் விரைவில் வதங்கி விடும்.தேங்காய் துருவல் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான துருவிய கேரட் கோஸ் பொரியல் ரெடி.

பேச்சிலர்ஸ் ஈசியாக செய்யக் கூடிய சத்தான பொரியலும் கூட. செய்து பாருங்க.

--ஆசியா உமர்.

14 comments:

ஸாதிகா said...

கேரட் கோஸை துருவிய விதமே அருமையாக உள்ளது.

Asiya Omar said...

நன்றி ஸாதிகா.இந்த ஈசி குறிப்பு பேச்சிலர்ஸ் -க்காகத்தான் கொடுத்தேன்.கருத்திற்கு மகிழ்ச்சி.

angelin said...

கோசும் கேரட்டும் சேர்த்து இதுவரை செய்ததில்லை .உங்க ரெசிப்பி பார்க்க அருமையாக இருக்கு .இன்னிக்கே செய்திடறேன்

கோவை2தில்லி said...

இம்முறையில் தான் நானும் செய்வேன். தாளிக்கும் போது சிறிதளவு பெருங்காயம் சேர்ப்பேன். அது வாசனையை தரும்.

அமைதிச்சாரல் said...

கலர்ஃபுல் பொரியல். பச்சைப்பட்டாணி சேர்த்தா மூவண்ணப்பொரியல்ன்னே சொல்லலாம் போலிருக்கு :-)

Kanchana Radhakrishnan said...

அருமையாக இருக்கு.

Asiya Omar said...

ஏஞ்சலின் செய்து பாருங்க.மிக்க நன்றி.
அருமையாக இருக்கும்.எங்க வீட்டில் தினமும் இப்படி ஈசி பொரியல் ஒன்றும் இருக்கும்.

Asiya Omar said...

கோவை2தில்லி மிக்க நன்றி.இனி பெருங்காயம் சேர்த்து செய்து பார்க்கிறேன்.

அமைதிச்சாரல் பீன்ஸ் அல்லது பட்டாணி சேர்த்தால் இஞ்சி துருவி சேர்ர்ப்பேன். மூவ்ர்ணப் பொரியல் தான்.கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

காஞ்சனா நீங்க வெஜ் எக்ஸ்பர்ட் ஆச்சே.மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மிக அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும்

என் மாமியார் எப்போதும் துருவி தான் செய்வார்கள்.

முட்டைகோஸ் வாயு ஆகையால் சிறிது பெருங்காயம் (அ) சோம்பு ( அ) இஞ்சி சேர்கக்னும்.

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜலீலா.

சிநேகிதன் அக்பர் said...

அருமை. எங்களுக்காகவே சொன்னது போல இருக்கு ரொம்ப ஈசியா :)

athira said...

சூப்பர்..நான் சிலநேரம் இப்படியும் செய்திருக்கிறேன், கரட்டுக்குப் பதில் பானிப்ஸ்ஸ் சேர்த்திருக்கிறேன்.

Asiya Omar said...

நன்றி அக்பர் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

அதிரா வருகைக்கு நன்றி.பானிப்ஸ்ஸ் என்னன்னு புரியலையே.